வியாழன், 13 மே, 2010

பட்டயத்தினால் கொல்லப்பட வேண்டும்


அய்யோ...! ஜனம் பெருத்த நகரில் தனிமையாய் உட்கார்ந்திருக்கிறாளே! (கிளிநொச்சி) விதவைக்கு ஒப்பானவளே! (தமிழினம்) ஜாதிகளில் பெரியவளும் சீமைகளின் நாயகியுமாய் இருந்தவள் கப்பம் கட்டுகிறவள் ஆனாளே! (ஈழத் தமிழர்கள்) திமிங்கலங்கள் கூட கெங்கைகளை நீட்டி தங்கள் குட்டிகளுக்கு பால் கொடுக்கும். என் ஜனமாகிய குமாரத்தியோ (தமிழீழ மக்களோ) வனாந்திரத்தில் உள்ள தீக்குருவியைப் போல் குரூரமாய் இருக்கிறாளே! (முள்ளி வாய்க்காலுக்குப் பின்) (முள்வேலி முகாமிற்குள்) குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. அப்பம் கேட்கிறார்கள். அவர்களுக்கு கொடுப்பார் இல்லை. பசியினால் கொலையுண்டவர்களைப் பார்க்கிலும், பட்டயத்தால் (குண்டுவீச்சால்) கொலையுண்டவர்கள் பாக்கியவான்கள். நாங்கள், எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள். எங்கள் விடுதலை அன்னியர் வசமாகவும், எங்கள் வீடுகள் பிற தேசத்தார் (சிங்களர்) வசமாகவும் தாண்டிப் போயின. பாரம் சுமந்து எங்கள் கழுத்துகள் நோகிறது. நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை. நான் கடற்கரை மணலின் மேல் நின்றேன். அப்போது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் (ராசபக்சே) எழும்பி வரக் கண்டேன். அதற்கு ஏழு தலைகளும் (பன்னாட்டு படைகளும்) பத்து கொம்புகளும் இருந்தன. அதன் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதன் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தது. (இன ஒழிப்பு) காதுள்ளவன் எவனோ (உலகத் தமிழினம்) கேட்கக்கடவன். சிறைப்படுத்திக் கொண்டு போகிறவன், சிறைப்பட்டு போவான். பட்டயத்தினால் கொல்கிறவன், (குண்டுவீசி கொன்றவன்) பட்டயத்தினால் கொல்லப்பட வேண்டும். குறிப்பு: இது கிறித்துவ மறைநூலான விவிலியத்தில் யூத மக்கள் எழுதிய கவிதை வரிகள். அடைப்புக் குறிக்குள் இருப்பவைகள் மட்டும் நம்முடையவை. இது நமது முடக்குதலை சரியாக படம் பிடிக்கும் கவிதையாக இருப்பதால், இங்கே நாம் இதை பதிவு செய்கிறோம். தமிழினம் வெற்றி பெறும் என்பதை நாம் தொடர்ந்து நம்பிக்கையோடு செயல்படுத்துவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக