வியாழன், 13 மே, 2010

தமிழ்த்தேசியம் தமிழ்மக்கள் அனைவருக்கும் சொந்தம்.

தங்கள் இணையத்தளத்தை மதிப்புக்குரிய பிரபல எழுத்தாளர் தமிழ்த்தேசிய எழுத்தாளர் சிவராம் தொடங்கிய காலம் தொட்டு வாசித்தறிந்தவன் என்ற முறையில் சில விடயங்களையிட்டு கருத்துரைக்க விரும்புகின்றேன்.
 நாடு கடந்த தமிழிழ அரசு என்ற கருத்துருவாக்கத்தை உருத்திரகுமார் அவர்களை இணைப்பாளராகக் கொண்ட சபை அறிவித்த காலத்தில் தமிழ்த் தேசியத்தின் பால் அக்கறை கொள்ளாதவராக இருந்துவிட்டு அக்கருத்தை பிழையான கருத்தென்று வாதிட்டவர்களில் முதலாம் இடம் தங்களுக்கு உரியது. இரண்டாம் இடம் கனடாவில் உலகத்தமிழர் பத்திரிகைக்குரியது. . கருத்தைக் கருத்தால் மோதவேண்டுமே ஒழிய அதனைக் குழப்பியடிக்கக் கூடாது. நாடு கடந்த தமிழீழ அரசிற்கு சமாந்தரமாக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை கொண்டு வந்தீர்கள் நாங்களும் அத்தீர்மானம் புதிய சந்ததியின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்வது நல்லம் என்ற உயரிய தமிழ்த் தேசிய சிந்தனையைக் கொண்டு வாக்களித்தோம். தாங்கள் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை தலையில் வைத்துப் புகழ்ந்துவிட்டு, பின்பு நாடு கடந்த தமிழீழ அரசிற்கு கல் எறிந்தீர்கள், இன்றும் எறிகின்றிர்கள் பலனற்ற ஒன்றெனப் பறை சாற்றினீர்கள். மக்களவை என்னும் புது வித்தையைக் காட்டினீர்கள் கனடியத் தமிழ்க் காங்கிரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று தோற்றுவிட்டீர்கள்.நாடு கடந்த தமிழீழ அரசு பத்திரிகை மீது கனடாவில் தங்கள் அறிவுரைப் படி நடக்கும் கூட்டத்தினர் கண்டபடி கல் எறிந்தார்கள். அனைத்துத் தடைகளையும் மீறி நா-க-த-அ என்ற புதிய கருத்துருவாக்கம்,பத்திரிகை வெளியீடு நடைபெற்றது. “தங்களைத் தாங்களே தமிழ் தேசிய தேசிய வாதிகள்” என்னும் கூட்டத்தாரின் எதிர்ப்பையும் மீறி வளர்ந்தது. ஒன்றும் செய்ய முடியாத இவர்கள் நா-க த அரசு என்ற கருத்துருவாக்கத்தை எப்படியாவது சிதறடிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் போட்டியிட்டு வென்றார்கள் மக்கள் நாடு கடந்த தமிழ்ஈழ அரசு என்ற கருத்தை மதித்துத்தான் அவர்களை தெரிவு செய்தார்கள். அவர்களின் தகுதி, அவர்களின் சுயநோக்கம்,பின்பக்கம் பற்றி நன்றாக விசாரித்து அறியாது இவர்கள் தான் நா-க-த-அ புதிய கருத்துருவாக்கத்திற்கு உருத்திரகுமார் அவர்ளோடு நின்று பாடுபடப்போகின்றார்கள் என நினைத்து தான் வாக்களித்ததார்கள். காலம் பதில் சொல்லப்போகின்றது. தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஒரு கட்சியை ஆரம்பித்து நல்ல பாடம் படித்தீர்கள். கஜேந்திரகுமாரும்,கஜேந்திரனும் பத்மினியும் மாத்திரம் தான் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றுவாhகள் என்று சொல்லி களத்தில் வாழ்ந்த மக்களுக்கே நீங்கள் அந்நிய மண்ணில் இருந்து கொண்டு அறிவுரை சொன்னீர்கள். மக்கள் த.தே.கூட்டமைப்பை தெரிவு செய்தார்கள் தங்களால் தமிழ்த் தேசியவாதிகள் என்று பட்டம் ச10ட்டப்பட்டவர்கள் ஆனந்தசங்கரியிலும் குறைந்த வாக்குகள் பெற்றதை நீங்கள் மறுக்க முடியுமா? ஈழநாடு(பரிஸ்),தமிழ்நெற், கனடா உலகத்தமிழர் பத்திரிகை, ரிவிஐ, சிரிஆர் போன்ற ஊடகங்களின் “நாங்கள் தான் தமிழ்த் தேசியத்தின் முதுகெலும்புகள்” என்ற பம்மாத்து கதைகள் கிளித்தெறியப்படும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. சென்ற கிழமை தமிழ்நெற் ஆசிரியர் குழுவினால் எழுதப்பட்ட ஆசிரியத்தலையங்கத்தின் தமிழாக்கத்தை உலகத்தமிழர் பத்திரிகையில் பிரசுரிக்க முடியுமா? ஆங்கிலம் தெரியாத மக்களும் தமிழ் நெற்றின் உள்நோக்கத்தை அறியவேண்டாமா?இனியாவது இறுமாப்பற்று ஒற்றுமையாக நடப்போமா நாங்கள் தயார் நீங்கள் தயாரா? இவ்வண்ணம் சிவநேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக