சனி, 29 மே, 2010

“நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்!

திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி!!!!!
முள்ளிவாய்க்கால் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம்
குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில் முன்வைக்கிறார்...................................

வதை முகாம்களும், பெண் வாழ்வும்


நாற்பது வயதுக்குள்தான் இருக்கும் அந்தப் பெண்மணிக்கு. இப்போது அவரைப் பார்க்க அறுபது வயது முதிய பெண் போல தோற்றமளிக்கிறார். ஈழத்தின் வடபகுதி அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தவரின் வாழ்வை வன்னி மீதான பேரினவாத யுத்தம் குலைத்துப் போட்டு விட்டது. ஒரு வழியாக அவர்கள் இங்கே கரைசேர்ந்திருக்கிறார்கள்.
நான் அவர்களைச் சந்திக்கச் சென்றது ஒரு பண்டிகை நாளில் எங்கும் ஒரே வாண வேடிக்கைச் சத்தம்

உறங்கிவிட்டதா எம் உணர்வுகள்? எம்மை வழி நடத்தியவர் கண்ட யாகங்கள் எத்தனையோ ?......

வையகம் எங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் என்ற பெருமை எமக்குண்டு.
நாம் சென்ற இடமெங்கும் நமது அடையாளங்களை கலை பண்பாட்டு விழுமியங்களையும் அத்தோடு தேசத்தைவிட்டு வந்துவிட்டோம் எங்கள் வாழ்க்கையை மட்டும் பார்த்திடுவோம் என்ற குறுகிய நோக்கமற்றவர்கள் நாம் எனபதற்க்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தற்போது மட்டும் ஏன் இந்த மௌனம்?

வெசாக் அனுஷ்டிப்பின் உட்பொருள்.......................?

வெசாக் பண்டிகை நாடு பூராகவும் கொண்டாடப்படுகின்றது. தென்பகுதியை விட வடபுலத்தில் வெசாக் பண்டிகைக் கொண்டாட்டம் களைகட்டியிருப்பது கண்டு எதுவுமே புரியாமல் திகைத்து நிற்கும் பரிதாபம் மட்டுமே தமிழ் மக்களிடம் மிஞ்சியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் – சம்பிக ரணவக

உலகெங்கும் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சரும் ஹெல உறுமய கட்சியின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக ரணவக கேட்டுள்ளார்.பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடரர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உதவிவரும் மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்துவதன் மூலமே உலகப் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசின் பய்ஙகரவாத ஒழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மன்னிப்புச் சபையின் அறிக்கைகளையும் கண்டனங்களையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட தலைமையினாலேயே நாடு விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இலங்கையில் இயங்கும் வேறும் சில தன்னார்வ நிறுவனங்களும் பயங்கரவாதத்திற்கு உயிரூட்ட முனைவதாகவும் இது குறித்து அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட ரணவக நாட்டு மக்களும் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

உள்ளே மின்னலாய் வெட்டி உயிர்தின்கிறது ஓரினத்தின் ஓலம்;

மறக்கமுடியாத அந்நாட்களின்
இழப்பில் புதையுண்ட எம்
விடுதலையின் வேகத்தை
மீட்டெடுத்துவிடும் துணிவில் தான்
இரவு பகல் கடக்கின்றோம்;


அம்மா என்றழைக்கும்

எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை =பாலித்த கோகன்ன

இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுட்டுக்கொலைப்படமாட்டார்கள் என்று தாம் எந்த உறுதிமொழியையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாருக்கு வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித்த கோகன்ன தெரிவித்துள்ளார்.


சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் போர்க்கைதிகளாக நடத்தப்படுவார்கள் என்று தனக்கு சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய மற்றும் பாலித்த கோகன்ன ஆகியோர் தனக்க உறுதிமொழியளித்ததாக விஜய் நம்பியார் அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்தமை குறித்து பாலித்த கோகன்னவிடம் இன்னர் சிற்றி பிரஸ் செய்திநிறுவனம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துவிட்டதாகவும் ஏனையோர் இருவரிடமும் (மகிந்த மற்றும் கோத்தபாய) இது தொடர்பில் கருத்தை கேட்டறியும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ற செய்தியை நீங்கள் வெளியிடலாம் என்றும் கோகன்ன தெரிவித்தார் என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்று தன்னிடம் உறுதியளித்ததாக விஜய் நம்பியார் தெரிவித்த ஏனைய இருவரான மகிந்தவிடமும் கோத்தபாயவிடமும் கருத்தை கேட்டறியும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், அவர்களின் அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் நியூயோர்க் சென்றிருந்த சமயம், அவரிடம் இது குறித்து கேட்டறிவதற்கு முற்பட்டபோது -பீரிஸை இன்னர் சிற்றி பிரஸ் செய்தி நிறுவனம் சந்திப்பதற்கு கோகன்ன அனுமதிக்கவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.தேசிய ஊடாக கழகத்திற்கு சென்ற சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அங்கு ஊடகவியலாளர்களை சந்திக்காமல் வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.வோஷிங்டனில் அமைந்துள்ள தேசிய ஊடக கழகம் 2009 ஆம் சுதந்திர ஊடகவியலாளருக்கான தனது விருதினை படுகொலை செய்யப்பட்ட சிறிலங்காவின் சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவுக்கு வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழினத்தின் அடையாளம் தேசிய தலைவர்!!

2009ஆம் ஆண்டு மே திங்கள் 17ஆம் தேதி தமிழீழ வரலாற்றின் ஒரு அத்தியாயம் நிறைவு செய்யப்பட்டு புதிய அத்தியாயம் தொடங்கியது. தேசிய இன போராட்ட வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு இழப்பு வேறு எந்த இன விடுதலை போராட்டத்திலும் நிகழ்ந்தது கிடையாது. சற்றேறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தங்களுடைய இன்னுயிரை தேச விடுதலைக்கான விதைகளாக தமிழீழ மண்ணிலே தூவினார்கள்.