சனி, 29 மே, 2010

உறங்கிவிட்டதா எம் உணர்வுகள்? எம்மை வழி நடத்தியவர் கண்ட யாகங்கள் எத்தனையோ ?......

வையகம் எங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் என்ற பெருமை எமக்குண்டு.
நாம் சென்ற இடமெங்கும் நமது அடையாளங்களை கலை பண்பாட்டு விழுமியங்களையும் அத்தோடு தேசத்தைவிட்டு வந்துவிட்டோம் எங்கள் வாழ்க்கையை மட்டும் பார்த்திடுவோம் என்ற குறுகிய நோக்கமற்றவர்கள் நாம் எனபதற்க்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தற்போது மட்டும் ஏன் இந்த மௌனம்?



புலத்தில் நாம் வாழ் வாழ்வியலில் எமது பண்பாட்டு விழுமியங்கள் சிதையும் வாய்ப்புக்களே அதிகம் எனலாம் புகலிட வாழ்விலும் போராட்ட சக்தியே எம்மை நெறிப்படுத்தி எம்மை மேம்படுத்தியது என்பதே சாலப் பொருத்தமாகும் உலகில் வாழ் மனித இனம் தனது இனத்தின் ஆணிவேரை தேட முற்படுவதை நாம் நன்கறிவோம் எமது இனத்தை தொலைத்துவிட்டோமே நமது மொழியை தொலைத்துள்ளோமே என வெட்கி நிற்பதையும் நாமறிவோம் எங்கள் தேசத்திலும் மொழியிலும் மக்களிலும் உறவுகனிலும் அதிக பட்சம் கொண்டவர்கள் எமது இனமென்றால் அது மிகையாகாது
முன்னொரு காலத்தில் இடம் பெயர்ந்து எம் மொழியை கலை பண்பாட்டு விழுமியங்கள் அத்தோடு தன் மண்ணையும் உறவுகளையும் மக்களையும் இழந்து நாம் தமிழர் ஆனால் தமிழ் பேசத்தெரியாது எனக்குமுறும் தமிழர்களையும் பார்த்த அனுபவமும படித்த அனுபவங்களும் உண்டு இவை தேடலாய்த் தொடர்கிறது இதுவே எமது தாய் மண் தாய்மொழி மேல் கொண்ட அதீத காதல் ஆகும் தமிழர் வரலாற்றை பொறித்த நூல்களில் சிலப்பதிகாரம் மணிமேகலை சிறந்த நூல்கள் என்றும் அறநெறிகளை தந்த திருக்குறள் நாலடியார் மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என வழிவகுத்து என்போம்.


உலகின் பழமை வாய்ந்த மொழிகளில் தமிழும் ஒன்று பழமைவாய்ந்த நூல்கள் பலவும் தமிழில் உண்டு அதிலும் வீரத்தை விளைவித்தியம்பும் புறநானூறும் உள்ளது. வீரம் வெற்றியாய் நிகழும்போது தோள் உயர்த்திக்கொண்டோம் தோல்வியாய் வந்துவிட்டதே என துவண்டுவிட்டோமே! நாம் படித்த காவியங்கள் கண் முன்னே நிகழ்த்திக்காட்டியவையை எண்ணத்தில் எடுத்துக்கொள்வோம் நிகழ்கால காவிய நாயகர்களின் எண்ணங்களை வென்றெடுக்க முனைப்போடு போராடவேண்டாமா ? இன்று உலகம் விழி திரும்பியுள்ளது ஆனால் நாமோ துவண்டுவிட்டோம்.
கடலில் தத்தளிக்கும் எம் உறவுகளின் நிலப்பாடுகளை எழுச்சியாய் குரல்கொடுக்க நாம் தயங்குவதேன்? புலத்து மக்களே குரல் கொடுங்கள் என்று துடிக்கும் முன்னரே இரவு பகலாய் ஒருமித்ததனை மீட்டிப்பார்ப்போம். வருடம் ஒன்றாகிவிட்டது பெரும் மனிதப் பேரழிவும் அவலமும வலுவிழந்த வாழ்வுமாய் தொடர்கிறது. தமிழர் தேசத்திலும் தேர்தல் முழக்கம் புலத்திலும் தேர்தல் ஒன்றே குறிக்கோள் இன்னல்கள் பலவற்றை கணம் கணமாய் சந்திக்கும் திறந்த வெளிச்சிறையில் வாடும் உறவுகளை மீட்பது யார்?


தேர்தல் என்பது விஞ்ஞாபனம் தான் ஒவ்வொரு நொடியிலும் எம் இனம் அங்கு படும் இடர்களில் இருந்து மீளவைக்கும் மக்கள் சக்தி புலத்தில் வாழும் நாம் தான். வீர இலக்கியம் படித்தோம் வீர நிகழ்கால வரலாற்றை படைத்தார் எழுச்சியாய் உலகுக்கு உணர்த்த உணர்வை நிறையவே எம்மிடம் தந்துள்ளனர் நாம் குறுகினால் அங்கு தாங்கொணாத்துயரில் உள்ள எம் உறவுகளின் நிலை.?


இலங்கையை ஆள்பவர்கள் இன்று அச்சம் கொள்வது புலத்து வாழ் தமிழர்களிடம். எம்மிடம் என்ன சக்தி உண்டு என்பதை எதிரியானவன் நன்கு தெரிந்துள்ளான். இதுவரை காலமும் நாம் எத்தணித்தவை தோல்விகளாகிவிட்டன என்று உறங்கிவிட்டதா எம் உணர்வுகள்? எம்மை வழி நடத்தியவர் கண்ட யாகங்கள் எத்தனையோ ? அவர் காட்டிய வழிகள் திசைகள் தந்திரோபாயங்கள் வீச்சான செயல்பாடுகள் எதை நாம் உள்வாங்கிக் கொண்டோம்!. சங்கம் வளர்த்த தமிழ் செந்தமிழ் பைந்தமிழ் எனறும் பரந்து வாழ்கிறோம் தமிழர் நாம் எனத் தமிழ் பெருமை பேசுவோமா?
பேசிப் பேசி கேட்டது படித்ததும் போதும் எம் தொப்பிள் கொடி உறவுகளை மீட்டெடுக்கத் திரளுவோம். மீண்டும் மாணவர்களே.. இளையோர்களே.... உங்கள் துரிதப் பாதையிலே எழும் சக்தியே துவண்ட இதயங்களும் துணிந்து தெருக்களில் இறங்க வைக்கும். எமது மக்களுக்காக எமது மாவீரர்களுக்காக எமது விடுதலைக்காக. உலகத்தின் கண்களை திறக்க வைத்த உங்களால் முட்கம்பிகளுக்கு சித்திரவதைப்படும் எம் நேச உறவுகளை காப்பாற்ற உலகமெங்கும் பரந்து வாழும் நாம் திறந்த மனதோடு வீதியெங்கும் இறங்குவோம் என்றால் மீண்டும் மீண்டும் மனித நேயம் கொண்டோரை தட்டி எழுப்புவோம்.
மனிதம் இல்லாது போனாலும் எமது மக்கள் சக்திக்கு உலகம் பதில் சொல்லவே வேண்டும். எமது செயல் திறன் ஒவ்வொன்றும் அனைத்து புலத்துவாழ் ஊடகங்களில செய்தியாக ஆவணங்களாக வெளிப்படுத்த வீரியம் நிறைந்த செயலில் புலப்படுத்துவோம் நாம் வாழும் தேசங்களில் எம் தமிழர்களின் பேரவலத்தை எந்த விதமாகவெல்லாம் வெளிப்படுத்த முடியுமோ அதற்கான தளம் எம் மனங்கள் தான். எங்கும் தமிழர்கள் பரந்து வாழ்ந்தாலும் இன்றும் இந்த நொடியும் எமது மக்கள் முற்கம்பிகளுக்குப் பின்னால் அவதிப்படத்தான் செய்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக