சனி, 17 ஜூலை, 2010

வன்னி அவலம் மீள் பார்வை..................

எமது இறுதி கணநேரங்கள்(இங்கே அழுத்துக வீடியோ பதிவுக்கு) .............

ஈழ மாதாவின் இதயத்துடிப்பு நின்றுவிடவில்லை இன்றைக்கும் சாட்சியாக இன்னும் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. தமிழீழ உறவுகளே!!!!........கலங்காதீர் நாங்கள் நெருப்புக்குள் குளித்தவர்கள். இருப்பிழந்து போகமாட்டோமென்று ..............

ஈழ மாதாவின் இதயத்துடிப்பு நின்றுவிடவில்லை இன்றைக்கும் சாட்சியாக இன்னும் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. தமிழீழ உறவுகளே!!!!........கலங்காதீர் நாங்கள் நெருப்புக்குள்
குளித்தவர்கள். இருப்பிழந்து போகமாட்டோமென்று ...............ஜனனங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.காடு எமது கெரில்லா போரின் முக்கிய பகுதி எமது போராட்டம் அதிக நெருக்கடிக்குள்ளான
போதெல்லாம் அதனை அழிய விடாது வளர்த்த பெருமை காடுகளுக்கேயுண்டு. இவ்வாறு தான் நான்காம் கட்ட ஈழப்போரின் போதும் என்றுமில்லாதவாறு அம்பாறை மாவட்ட வனம் ஆற்றிய பங்கு

படையினர் ஊசி மருந்து செலுத்தியதில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு! பலருக்கு பாதிப்பு

வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போராளிகளுக்கு படையினர் ஒரு வகை ஊசி மருந்தினை தடுப்பு மருந்து என்ற பெயரில் செலுத்தியமையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெருமளவானோர் காய்ச்சல் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில்

தேசத்து ஆன்மா துடிக்கிறது.

நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில்

தங்கிவிட முடியாது.

விடுதலையின் மூச்சு ....

குருதி உடுத்தி வலம் வருகிறாள்
விடுதலை!வீரர் வீராங்கனையர் நெற்றியில் முத்தமிட்டு....
ஒற்றைச் சூரியனாய்க் கீழ்வானில்முகம் உயர்த்தி
வெற்றிச் சுடரொளியில் தமிழீழமுகம் மலர்த்தி
கொத்திச்செல்வேன் எனக்கொக்கரிக்கும் ராஜபட்சி
நீள் சிறகு துணிக்கநெடுவானில் வாள் உயர்த்தும்
தோழர்களுக்குத் தமிழ்மாலை சூட,

லெப். கேணல் பொன்னம்மான்

தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா....
என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.
எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.

இலங்கை சர்வாதிகாரத்தை நோக்க நகர்கிறது...!

உயிரச்சம் காரணமாக உள்ள ஊடகவியலாளர்கள் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பேச அஞ்சுகிறார்கள். ஆனால் சர்வதேச ஊடகங்களோ கண்களை மூடிக் கொண்டிருக்கின்றன............
எட்வார்ட் மோரைமர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டதாக மகிந்த ராஜபக்ச அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. ஆனால்...

இந்தப் போர் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்லை. முடியவும் இல்லை”-பகத் சிங்

பகத் சிங்கின் இந்த கூற்று ஆயுத போராட்டத்துக்கு மட்டுமல்ல, அஹிம்சை வழியிலான போராட்டங்களுக்கும் பொருந்தும். ஓவ்வொரு தனி மனிதனும், சமூகமும், இனமும் ஏன் முழு உலகமுமே போராடிக்கொண்டு தான் இருக்கிறன. என்ன அவரவரின் தேவைகளும், நோக்கங்களுமே வேறுபடுகின்றன.
இலங்கையில் சுமார் முப்பது வருடங்களாக நடைபெற்று வந்த ஆயுத வழியிலான போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. (அப்படித்தானே கூறப்படுகிறது) இந்த நிலையில்,

பிணையில் விடுதலை!?

வேலணை அரசினர் வைத்தியசாலை குடும்பநல மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அந்த வைத்திய சாலை டாக்டரான பிரியந்த செனவிரத்ன நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல யாழ். மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

19 07 2007 இல் சிங்கள பேரினவாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கின் நிலை ...................

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு மாகாணம் சிங்களப்படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 
வாகரையில் மேற்கொள்ளப்பட்ட பெரும் எடுப்பிலான தாக்குதலில் னூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் இதனை தொடர்ந்து கொக்கொட்டிச்சோலை, வெல்லாவெளி, வவுணதீவு போன்ற புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மக்கள் மீதும் மிகக்கொடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட னர் சிங்களப்படையினர்.

புனர்வாழ்வு துறை அமைச்சரின் மாபெரும் கரிசனை ....

அரசாங்கத்தின் முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி மோசமான முறையில் நடத்தப்படுவதாக முன்னாள் புலிப்போராளிகள் கூறியிருக்கும் நிலையில் இந்த விடயம் குறித்து பி.பி.சி.க்கு கடிதங்களை எழுதுவதற்குப் பதிலாக அவர்கள் தனக்கு எழுதியிருந்தால் தான் கவனத்திற்கு எடுத்திருப்பாரெனவும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார்.