சனி, 17 ஜூலை, 2010

ஈழ மாதாவின் இதயத்துடிப்பு நின்றுவிடவில்லை இன்றைக்கும் சாட்சியாக இன்னும் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. தமிழீழ உறவுகளே!!!!........கலங்காதீர் நாங்கள் நெருப்புக்குள் குளித்தவர்கள். இருப்பிழந்து போகமாட்டோமென்று ..............

ஈழ மாதாவின் இதயத்துடிப்பு நின்றுவிடவில்லை இன்றைக்கும் சாட்சியாக இன்னும் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. தமிழீழ உறவுகளே!!!!........கலங்காதீர் நாங்கள் நெருப்புக்குள்
குளித்தவர்கள். இருப்பிழந்து போகமாட்டோமென்று ...............ஜனனங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.காடு எமது கெரில்லா போரின் முக்கிய பகுதி எமது போராட்டம் அதிக நெருக்கடிக்குள்ளான
போதெல்லாம் அதனை அழிய விடாது வளர்த்த பெருமை காடுகளுக்கேயுண்டு. இவ்வாறு தான் நான்காம் கட்ட ஈழப்போரின் போதும் என்றுமில்லாதவாறு அம்பாறை மாவட்ட வனம் ஆற்றிய பங்கு

அளப்பரியது.
2005ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து வன்னியிலிருந்து குறிப்பிட்ட தொகை போராளிகள் அம்பாறை மாவட்டத்திற்க்கு அனுப்பப்பட்டதுடன் வட,தென் தமிழீழ போராளிகள் இணைந்து செய்த
தாக்குதல்களும், பெற்ற வெற்றிகளும்.பெருமளவில் வெளியே தெரியாதவை குறிப்பாக 4ம் கட்ட ஈழப்போரின் போது அம்பாறை மாவட்டத்தில் நின்று பணியாற்றிய போராளிகளின் வேகம் குன்றாத
தியாகத்தினூடாக பெற்ற வெற்றி என்பது மிகப் பெரியது. இந்த வெற்றிகளுக்கு காரணமாக ஒவ்வொரு வீரர்களினதும், வீராங்கனைகளினதும் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு, தியாகம் நிறைந்த
வீரம் என்பன இருந்தன.
2006ம் ஆண்டின் பிற்பகுதி தொடக்கம் 2009ம் ஆண்டின் நடுப்பகுதி வரை சிங்கள படைகளுக்கு குறிப்பாக சிறிலங்கா விசேட அதிரடிப்படை,சிறிலங்கா சிறப்பு படையணி ஆகியவற்றிற்க்கு பெரும்
அச்சுறுத்தலாக விளங்கியது அம்பாறை மாவட்ட புலியணிகள். வன்னி தலைமையுடனான தரைவழித்தொடர்புகள் எதுமின்றி குறைந்த தொகை போராளிகளாக நின்று கொண்டு அம்பாறை,
அம்பாந்தோட்டை, மொனறாகலை. ஆகிய மூன்று பெரும் மாவட்டங்களிலும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த காலப்பகுதியில் அங்கு நின்று களமாடிய போராளிகள் அனுபவித்த துயரங்கள்,சுமந்த
கடினங்கள் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாதவை.எந்தவொரு அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் 4ம் கட்ட ஈழப்போர் காடுகளுக்குள்ளே ஆரம்பமாகியது. 50கிலோ மீற்றறிற்க்கும் குறையாத
தூரத்திலிருந்து உணவு, மருந்து பொருள்களை பெறுவது தொடக்கம் அனைத்தும் தோள்களிலே சுமந்தே இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தன. எந்த வேளையிலும் காடுகளில் இறங்கி தேடுதல் நகர்வுகளை
மேற்கொள்ளும் இராணுவ படையணிகளிடம் சிக்காது மனித நடமாட்டத்திற்கான எந்தவொரு தடையத்தையும் எற்படுத்தாது இரண்டரை வருடகாலம் களமாடி வரலாறு படைத்த அந்த மாவீரர்,
போராளிகளினது தியாகங்கள் நிறைந்த அர்ப்பணிப்புக்கள் நிச்சயம் பதிவு செய்யபடவேண்டியவை..
தாக்குதல் திட்டங்கள் விரிவடைய அம்பாறை சிறப்பு தளபதியான கேணல் ராமுடன் தாக்குதல் அணியொன்று அம்பாந்தோட்டை மாவட்டத்திற்க்கு நகர்த்துபட, மற்றைய அணி கேணல் நகுலனுடன்
அம்பாறை மாவட்டத்திலேயே நிலை கொண்டது.இதே போல மகளிர் தாக்குதல் அணியும் இரு இடங்களிலும் நின்று பணியாற்ற தொடங்கியது. இதனை தவிர மொனறாகலை மாவட்டத்திலும் தாக்குதல்
மேற்கொள்ள எற்பாடுகள் செய்யபட்டன.
04ம் கட்ட ஈழப்போரின் முக்கிய தாக்குதல்களில் ஒன்றாக 25/05/2007 அன்று லெப் கேணல் பவமாறன் தலைமையில் வக்குமுட்டியா பகுதியில் கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ள பட்டு 07 ற்க்கு அதிக
மான படையினர் கொல்லப்பட்டனர். அதேபோலவே 05/06/2007 ,12/09/2007,13/09/2007 ,14/09/2007 ஆகிய தினங்களில் எம்மவர்களால் தாக்குதல்கள் நிகழ்த்தபட்டு அதிகமான படையினர் கொல்லப்பட்டனர்.
எமது தாக்குதல் தீவிரமடைந்த காலப்பகுதியில் தான்15/09/2007 அன்றைய தினம் தவறுதலான வெடி விபத்தில் லெப் கெணல் பவமாறன். லெப் கெணல் அரியானி உட்பட 05 போராளிகள்
வீரச்சாவடைந்தனர்..
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்க்கு நகர்த்தபட்ட அணிகள் முன்னெப்போதும் பழக்க படாத காட்டில் சிங்களப் படைகளின் குகைகளை மோப்பம் பிடித்து தாக்குதலிற்க்கு தயாராகி 15/10/2007 கேணல் ராம்
தலைமையில் மாணிக்க கங்கை பகுதியில் கல்கஸ்மங்கடவ இராணுவ மினி முகாம் முற்றாக அழிக்கப்பட்டு பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றபட்டன.
சிறிய அணியாக நின்று பெரும் படை முடக்கத்தை எற்படுத்தி கொண்டிருந்த வீரர்களின் நாமங்கள் என்றும் எம் மனங்களில் பதியபடவேண்டியவை. கேணல் பரமானந்தம், லெப் கேணல் மேககாந், லெப்
கேணல் சுவர்ணா, மேஜர் பரியசீலன், போன்ற இன்னோரன்ன விலைமதிப்பற்ற உயர் விதைகளை சுமந்து நிற்கிறது அந்த வனம்.. எம் அண்ணன் சொல்வது போல "சண்டையில் கொல்பவன் வெல்வான்,
வேவில் காண்பவன் வெல்வான்" என்பதற்கிணங்க களமுனைகளை நுட்பமாக வெற்றியை நோக்கி நகர்த்திய தளபதிகளின் செயற்திறன்களும், அதனை புரிந்து கொண்டு மனவலிமையைப் பெரிய
ஆயுதமாக்கி சமராடிய மாவீரர்களது தியாகங்களும், அனைவராலும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எமது அவா..........
எமது தேசத்தின் உயிர் மூச்சு நின்று விடவில்லை.என்பதை புரிந்து கொண்டால் நாம் செல்லவேண்டிய நீண்டதூரபயணம் என்பது தெளிவாகும். பயணம் நீண்டது என்பது மட்டுமல்ல எல்லோரது
பாதங்களும், ஒன்றுபட்டு நடக்க தயாராக வேண்டும் என்பது முக்கியமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக