சனி, 17 ஜூலை, 2010

பிணையில் விடுதலை!?

வேலணை அரசினர் வைத்தியசாலை குடும்பநல மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அந்த வைத்திய சாலை டாக்டரான பிரியந்த செனவிரத்ன நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல யாழ். மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணை நேற்று ஊர்காவற்றுறை நீதி மன்றத்தில் பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு முன்னிலையில் இடம்பெற்ற போது, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ். செலஸ்ரீன் பிணை மனுத்தாக்கல் செய்தார்.


இந்த மனுவை ஆராய்ந்த நீதிவான், சம்பவம் தொடர்பான மரண விசாரணை இன்னமும் பூர்த்தியாகாத நிலையில் பிணை வழங்க முடியாது எனத் தெரிவித்து பிணை மனுவை நிராகரித்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது அரச சட்டவாதி எஸ். சூசைதாசன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மன்றில் பிரசன்னமாகி இருந்தனர்.
நீதிமன்றத்தால் பிணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து சந்தேக நபரின் சட் டத்தரணி யாழ். மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்கக் கோரி மனு ஒன்றை நேற் றுப் பிற்பகல் தாக்கல் செய்தார். சந்தேக நபருக்கு பிணை வழங்க ஆட் சேபம் இல்லை என அரச சட்டவாதி நீதி பதியிடம் தெரிவித்தார்.
அந்த மனுவை ஆராய்ந்த மேல் நீதி மன்ற நீதிபதி எஸ். பரமராஜா நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்க உத் தரவிட்டார்.
இருவரின் தலா ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிபதி உத்தர விட் டார். அதைத் தொடர்ந்து இரத்தினபுரியில் இருந்துவந்த சந்தேக நபரின் தாயின் சகோதரிகள் அவரை பிணையில் எடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக