புதன், 2 ஜூன், 2010

கப்டன் அக்காச்சி...ஒரு சகாப்தம்

வடக்கு புன்னாலைக்கட்டுவனில் இந்தியப் படையின் முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் கே.பி.தாஸ் அச்செழு அங்கிளிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அதாவது அக்காச்சி எப்படிப்பட்டவன் என்பதே அக்கேள்வி. அதற்கு அங்கிள் நல்ல போராளி அதைவிட மிகச் சிறந்த சமூகசேவையாளன் என்று பதில் கொடுத்தார். இதன் பின் அக்காச்சியின் பொதுப் பணிகள் பற்றி ஆராய்ந்த மேஜர் கே.பி. தாஸ் தான் அக்காச்சியைப் பார்க்க வேண்டும் என்றும், அக்காச்சியருகில் இருந்து தேனீர் குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

2ம் உலகப் போர் குண்டு வெடித்து 3 பேர் பலி

ஜெர்மனியின் கோட்டிங்கன் நகரில் 2ம் உலகப் போர் காலத்து குண்டு திடீரென வெடித்துச் சிதறியதில் 3 பேர் பலியானர்கள். 6 பேர் படுகாயமடைந்தனர். மத்திய ஜெர்மனி நகரான கோட்டிங்கனில், 2ம் உலகப் போர் காலத்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை செயலிழக்கச் செய்ய முயற்சித்தபோது அது திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டு வெடித்த இடத்தில் 7 மீட்டர் அளவுக்கு ஆழமான பள்ளம் ஏற்பட்டு விட்டது. இந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மிகச் சிறந்த வெடிகுண்டு நிபுணர்கள் ஆவர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து 7000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கோட்டிங்கன் நகர ரயில் நிலையமும் சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டது. இரவில் அது மீண்டும் திறக்கப்பட்டது

பேட்டை ரவுடி வேஷத்தில் இந்தியாவுக்கு வெற்றி .........



ஓராண்டு கடந்துவிட்டது… வன்னியில் எழுதப்பட்ட நம் வீரவரலாறு ரத்தம் தோய்ந்த ஈழமண் கூப்பிடும் தூரத்தில்தான் கேட்டது மரண ஓலம். உயிரை ஆயுதமாக்கிய முத்துக்குமரன்களின் இறுதியாத்திரை இந்திய அரசியலில் ஒரு துரும்பையும் அசைக்கமுடியவில்லை. வாசனைத் தைலமிட்டு சீவிச்சிங்காரித்து மலர்ச்சூடி மனிதனின் தலையில் இருப்பதால் அதுக்கு கூட மதிப்புண்டு கேட்டுபாருங்கள் கோவிலுண்டியலில் பணமாக மாறும் அதன் வித்தையை! சே என்னடா இது தமிழன் அதுவாகக் கூட இல்லையே என்று எவனுக்கும் வருத்தமில்லை.


இந்தியத்தமிழன்


ஈழத்தமிழர்கள் குறித்து போட்டிப்போட்டுக்கொண்டு அறிக்கை யுத்தங்கள் நடத்திய நம் அரசியல் தலைவர்கள், அவர்களுக்குஎந்த வகையிலும் குறையாமல் உலகத் தமிழர்கள் அனுப்பிய விசாவில் உலகமெல்லாம் சுற்றிவரும்

மீள் குடியமர்த்தல்: மறைந்திருக்கும் உண்மைகள்.

“கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற ஔவையாரின் வாக்கை நேரடியாக மெய்ப்பிப்பது போலவே இன்றைய ஈழத்தின் நிலைமை இருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பல மாணவர்கள் அரசாங்க உதவித் தொகையை மட்டுமே நம்பி தமது காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அரைகுறை உணவு, பழைய ஆடைகள்,

தேசிய தலைவர் நம் அருகில் இருக்கிறார்....!!!

விடுதலை பெருவெளியில் விரியும் மாந்த சிந்தனைகள் தமது மாறாத வடுக்களாக என்றென்றும் தம்மை ஆற்றல்வாய்ந்தவைகளாக பதிவு செய்கிறது. எந்தநிலையிலும் விடுதலையை அடக்கமுடியாது என்பதை நாம் கண்டிருக்கிறோம். கேட்டிருக்கிறோம். அதையும் தாண்டி சில நேரங்களில் ஒடுக்கிவிடலாம் என்கின்ற ஓங்கார சத்தம் கேட்கத்தான் செய்கிறது. அடக்குமுறையாளர்கள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

மக்களையும் மண்ணையும் மீண்டும் அரவணைக்கும் பொறுப்பை நாமே ஏற்போம் வாருங்கள்!



நாங்கள் நாளையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது மாற்றின ஊடகங்கள் எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட நேற்றைய கொடூரத்தைப்பற்றிய தேடல்களில் இறங்கியுள்ளது. அனைத்துலக அமைப்புக்களும், சனல் 4 தொலைக்காட்சியும் சொல்லக்கூடிய அளவிற்கு எமது பிரச்சினைகளில் அக்கறை காட்டி அரசுக்கெதிரான ஆவணங்களை சேகரித்துக்கொண்டிருக்கையில் நாம் எமக்குள் முட்டி மோதிக்கொண்டிருப்பது எந்தவகையில் பொருந்தும் என்பதை சகல தமிழ் தேசிய வாதிகளும், தமிழின உணர்வாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்

புலி வீரம்


தமிழன் இறுதி இராசதானி வன்னி
அது கொடிகட்டி பறந்த வானம்கோலோட்சி இருந்த நிலமும்
படைசூழ தமிழன் திமிரோடு வாழ்ந்த மண்ணும்தமிழன் வரலாறு காட்டிய அரசும்

ஒட்டுப்படை தலைவர் முரளிதரன் ....


அனைத்துலக தமிழினமும் ஏன் கூடவே வட இந்திய முக்கிய சினிமா நடிகர்கள் கூட புறக்கணித்த இந்திய திரைப்பட விழாவில் ஒட்டுப்படை தலைவர் முரளிதரன் தமிழ் அமைச்சர் என்று கலந்து சிறப்பித்துள்ளார்.
இன அழிப்பினை மேற்கொண்ட இரத்தக்கறை படிந்த சிறிலங்காவின் தலை நகர் கொழும்பில் இடம்பெறும் வட இந்திய சினிமா விழாவில் கலந்து கொள்ள கூடாதென அனைத்துலக தமிழர்களும் புறக்கணிக்கும் வேளையிலும் வட இந்தியாவின் முக்கிய முன்னணி சினிமா கலைஞர்கள், கேரளா, கர்னாடகா, ஆந்திர சினிமா கலைஞர்கள் உட்பட அனைவரும் இந்த விழாவினை புறக்கணித்த நிலையிலும் தமிழர்களுக்கு இழைத்த துரோகம் போதாது என முரளிதரன் என்கின்ற ஒட்டுக்குழு தலைவர் IIFA விழாவில் கலந்து கொள்கின்றார்.
இதில் ஆச்சரியம் என்னவெனில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றேன் என கூறும் ஜயலத் ஜயவர்த்தன உட்பட கட்சி பேதம் இன்றி அனைவரும் கலந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான போரை மீண்டும் நியாயப்படுத்தியுள்ளனர்

ஜப்பான் பிரதமர் ராஜினாமா!


கட்சித் தலைமையின் உத்தரவை ஏற்று ஜப்பான் பிரதமர் யூகியோ கடோயாமா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

இன்றைய செய்தித் துளிகள்..........



ஜனாதிபதியின் வருகைக்கு முன்னர் அரசியல் தீர்வுத் திட்டத்தை சமர்ப்பிக்க கூட்டமைப்பிடம் இந்தியா கோரிக்கை....தமிழ்க் கூட்டமைப்பை விரைவில் ஜனாதிபதி பேச்சுக்கு அழைப்பார் பீரிஸ் கூறுகிறார்...........பிரபாகரனின் பாடசாலை நண்பனை விடுதலை செய்யக் கோரி மனுத் தாக்கல்............

‘அகதா புயல்’தாக்கியதில் கவுதமாலாவில் 152பேர் பலி!


தென் அமெரிக்காவில் உள்ள கவுதமாலா நாட்டில் ‘அகதா புயல்’ தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது, 100பேர் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் இழந்தனர். கடும் மழையினால் கிராமங்களில் உள்ள மக்கள் புதையுண்டு போயினர்.
இதில் ஏற்பட்ட பெருவெள்ளம் நகரின் சாலையொன்றின் நடுவே ராட்சத பள்ளமொன்றை ஏற்படுத்தியுள்ளது. அது ஒரு முழு கட்டிடத்தையும் விழுங்கியுள்ளது. இந்த பள்ளம் ஒரு முழுவடிவிலான வட்டம் போல் உள்ளது. ஒரு மூன்றடுக்கு கட்டிடத்தின் ஊடே அது தோன்றியதில் அந்த முழு கட்டமும் பள்ளத்தில் வீழ்ந்து காணாமல் போய்யுள்ளது. எத்தகைய முன்னறிவுப்பும் இன்றி திடீரென்று அந்த பள்ளம் தோன்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புயல் காரணமாக நிலச்சரிவுகள் பல இடங்களிலும் ஏற்பட்டது. பாலங்கள் உடைந்து விழுந்தன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவுகளில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டும் 60 ஆகும். 90 பேரை காணவில்லை. அவர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டார்களா என்பது தெரியவில்லை.மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய முடியாதபடி, பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதனால் உட்புற பகுதிகளில் உள்ள கிராமங்களை அவர்களால் அடைய முடியவில்லை