புதன், 2 ஜூன், 2010

புலி வீரம்


தமிழன் இறுதி இராசதானி வன்னி
அது கொடிகட்டி பறந்த வானம்கோலோட்சி இருந்த நிலமும்
படைசூழ தமிழன் திமிரோடு வாழ்ந்த மண்ணும்தமிழன் வரலாறு காட்டிய அரசும்


வீழ்த்தப்பட்டு ஓராண்டு ஆனது மே18ம் நாள்
இது சிங்களத்தின் வீரத்தால் நிகழ்ந்த நிகழ்வல்லதமிழன் துரோகத்தால் நடந்த நிகழ்வு
ஈழம் கிடைக்காமல் போனதற்குஇனத்துரோகிகளே மூலப்பொருள்
சிங்களத்தின் வீரமுமல்ல தமிழர்களின் பலவீனமுமல்ல
நந்திக்கடல் ஓரத்தில் குந்தியிருந்த பல்லாயிரம் உயிர்கள் கொத்துக் கொத்தாகப் போனதற்கும்
தமிழன் ஈகத்தின் மாசல்ல துரோகத்தின் பொருளேஈழத்தின் கதியே துரோகத்தின் விதியே
தமிழன் வீழ்ந்தான் முள்ளிவாய்க்காலில்
அழிந்தது தமிழ் வரலாறு ஓய்ந்தது தமிழ் வீரம்உறங்கியது புலி வீரம்
தமிழ் வீரம் என்றால்அது புலிவீரம் தமிழனென்றால் அது புலி
புலியைக் கண்டல்ல தமிழனைக் கண்டே அஞ்சி நடுங்கியசிங்களம் வென்றது எப்படி காட்டிக்கொடுக்கும்காக்கைவன்னியர் பரம்பரை ஈழத்தமிழர்களில்இருக்கும்வரை தமிழன் வெல்லமாட்டான்
கொள்கைக்கு அப்பால் பணத்திற்குப் பின்னால்தமிழன் இருக்கும்வரை தமிழன் வெல்லமாட்டான்
தனிப்பட்ட புகழுக்குப் பின்னால் தமிழன் இருக்கும்வரை தமிழன் வெல்லமாட்டான்
வீழ்ந்தோம் என்று நினைத்தோம் மே பதினெட்டைமீண்டும் எழுவோம் என்று நினைப்போம் மே பதினெட்டைதோற்றோம் என்று நினைத்தோம் மே பதினெட்டை
இனி என்றோ ஒரு நாள் வெல்வோம் என நினைப்போம் மே பதினெட்டை
ஈழத்து இராசதானி அழிந்தது உண்மைதான்என்றோ ஒரு நாள் மே பதினெட்டில்
ஈழத்து இராசதானி உதயமாகும்
இது நிட்சயம் இது சத்தியம் என்று சபதமெடுத்துக்கொள்ளடா தமிழா
பேருக்கும் புகளுக்கும் வேண்டாம் உரிமைக்குரல்
இனி உணர்வோடும் உடலோடும் உயிரோடும் இனத்தோடு மண்ணோடு
ஒன்றாய் நின்று எடுத்துக்கொள்ளடா சபதம்
பதறப் பதற துடிக்கத் துடிக்க இனவிடுதலைக்கு நாம் கொடுத்த விலைகள்
கொஞ்ச நஞ்சமல்ல கணக்குப் பார்க்க முடியவில்லை
ஊனை உருக்கி உயிரைக்கொடுத்து உழைத்த உழைப்பல்லவா இந்த விடுதலை
வாங்கிய லஞ்சத்தாலும் போட்ட எலும்புத்துண்டாலும் நாசமாக்கிவிட்டோமல்லவா
எல்லாம் போச்சு வாழ்ந்த வாழ்க்கையும் போச்சு ஆண்ட நிலமும் போச்சு
ஆட்சியும் போச்சு இன்று தமிழன் நிலத்தில் சிங்களவன் சொந்தம் கொண்டாடுகின்றான்
அன்னியன் குந்தியிருந்து கொட்டமடிக்கிறான் கூடியிருந்து பாட்டுப் பாடுகிறான்
சிங்களவன் கொண்டாட்டம் தமிழர் வீதியெல்லாம் சமைக்கிறான் படுக்கிறான்
ஆடுகிறான் பாடுகிறான் எம்மைப்பார்த்து வெற்றிக்கழிப்பில் நையாண்டிச்சிரிப்பு
நக்கல்ப்பார்வை ஏளனப்புன்னகை பார்க்க ரத்தம் கொதிக்கிறது நெஞ்சம் குமுறுகிறது
புலி வீரம் உறங்கியதால் சிங்களம் எங்கள் மண்ணில் நின்று கொக்கரிக்கிறது
புலிகள் வீரத்தோடு வாழ்ந்தார்கள் புலிகள் வீரத்தோடு வீழ்ந்தார்கள்
கொள்கை தடம்புரளவில்லை இறுதி மூச்சு உள்ளவரை
இறுதிவரை முடியும் என்ற உறுதியுடன் களத்தில் நின்று வீழ்ந்தார்கள்
சோரம்போனதில்லை தமிழன் வீரத்தின் மானத்தைக் காத்தார்கள்
தலைவன் கொள்கை மாறவில்லை தமிழரை வழிதவற விடவில்லை
பலர் குற்றம் சுமத்தினர் புலிகளின் இராஜதந்திரம் பிழைத்துவிட்டதாக
புத்தன் போதித்த வழியில் சிங்களம் தமிழனுக்கு எதுவும் தராது
இது நடைமுறைச் சாத்தியமில்லை என்பதைத் தலைவன் அன்றே சொன்னான்
அதுவே இன்று உண்மை தமிழா நீ ஒன்று சேர்ந்து அடித்துப்பெற்றால் தான் உண்டு
இல்லையேல் எதுவுமில்லை இதுதான் உண்மை எம்மீது இரக்கங்கொண்டு
எதுவும் தரமாட்டான் எந்தச்சிங்களவனும் இதுதான் தலைவன் நோக்கு
தலைவன் கொள்கை ஒன்றுபடு தமிழா மேபதினெட்டில்
நீ வெல்வாய் இது உறுதி.


நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக