புதன், 2 ஜூன், 2010

‘அகதா புயல்’தாக்கியதில் கவுதமாலாவில் 152பேர் பலி!


தென் அமெரிக்காவில் உள்ள கவுதமாலா நாட்டில் ‘அகதா புயல்’ தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது, 100பேர் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் இழந்தனர். கடும் மழையினால் கிராமங்களில் உள்ள மக்கள் புதையுண்டு போயினர்.
இதில் ஏற்பட்ட பெருவெள்ளம் நகரின் சாலையொன்றின் நடுவே ராட்சத பள்ளமொன்றை ஏற்படுத்தியுள்ளது. அது ஒரு முழு கட்டிடத்தையும் விழுங்கியுள்ளது. இந்த பள்ளம் ஒரு முழுவடிவிலான வட்டம் போல் உள்ளது. ஒரு மூன்றடுக்கு கட்டிடத்தின் ஊடே அது தோன்றியதில் அந்த முழு கட்டமும் பள்ளத்தில் வீழ்ந்து காணாமல் போய்யுள்ளது. எத்தகைய முன்னறிவுப்பும் இன்றி திடீரென்று அந்த பள்ளம் தோன்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புயல் காரணமாக நிலச்சரிவுகள் பல இடங்களிலும் ஏற்பட்டது. பாலங்கள் உடைந்து விழுந்தன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவுகளில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டும் 60 ஆகும். 90 பேரை காணவில்லை. அவர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டார்களா என்பது தெரியவில்லை.மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய முடியாதபடி, பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதனால் உட்புற பகுதிகளில் உள்ள கிராமங்களை அவர்களால் அடைய முடியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக