வியாழன், 16 டிசம்பர், 2010

விடுதலைப்புலிகள் இயக்கம் மாற்று தோற்றங்களில் செயற்படுகிறது

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டாலும், அது மாற்று தோற்றங்களில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  ஆசிய – மத்திய கிழக்கு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், முழு ஆசியாவையும் அச்சுறுத்தும் இயலுமைக் கொண்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம் ஒத்தி வைப்பு

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்க்ஷ், தமது இலங்கைக்கான விஜயத்தை ஒத்தி வைத்தள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. இந்த விஜயத்துக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்து, அவர் இந்த விஜயத்தை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் லியாம் பொக்ஸின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நீடிக்கும் நோக்கில், இலங்கை தாக, லியாம் பொக்ஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எப்படி இருந்தவர் இப்படியாகிவிட்டார் !!!!!!....

எனக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தவர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவே. நாட்டையும் மக்களையும் காக்கும் தலையாய கடமையில் அவர் நீடூழி வாழ வேண்டும் என இமெல்டா சுகுமார் தெரிவித்திருந்தார்.  புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் இணையங்களை நடத்தி வருகின்றவர்கள் அரசிற்கு விரேதமானவர்கள். அவர்கள் மக்களுக்கும் விரோதமானவர்கள். அவர்கள் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்கள். இணையங்களில் அவர்கள் பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் குற்றம் சாட்டியுள்ளார்

வடக்குகிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் அல்ல: எல்லாவல மேதானந்ததேரர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயகம் அல்ல. அதற்கான எவ்விதமான சட்டபூர்வ ஆதாரங்களும் இல்லை. அவ்வாறு கூறுவதற்கு உரிமையில்லை. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயக பூமி அல்ல என்பதற்கும் அது சிங்கள மக்களால் ஆளப்பட்ட பிரதேசங்கள் என்பதற்கும் எம்மிடம் அதிகளவான சான்றுகள் உள்ளன. மேலும் வன்னி என்பது தமிழ் சொல் அல்ல. அது சிங்கள சொல்லாகும். அங்கு 1583 விஹாரைகள் இருந்துள்ளன. ஆறாவது பரகும்பா அரசனின் பிரதிநிதியான சபுமல் குமாரயாவே யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலை கட்டினார் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற மேதானந்த தேரர் தெரிவித்தார்.

தமிழரைச் செம்மணியிலும் முள்ளி வாய்க்காலிலும் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுக்குத் தமிழரையே வாக்களிக்கக் கேட்டதை நினைத்துப் பார்த்தால் ஆறறிவு பற்றிப் பேசுவது ???

இன்று தமிழரின் உரிமைப் பிரச்சினையாக ஸ்ரீ லங்காவின் தேசிய கீதத்தை தமிழில் பாடும் உரிமை மறுக்கப் பட்ட விடையம் மிகப் பெரிய அளவில் பேசப் படுகிறது. இதைப் பேசுபவர் தமிழரின்

கடவுள்தான் இனித் தமிழர்களைக் காப்பாற்றவேண்டும் -தந்தை செல்வா

10 வருட செயற்பாட்டுத் திட்டமொன்றின் கீழ் 2011இல் ‘மும்மொழி இலங்கை’ என்ற திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.இத்திட்டம்.....

இறுதிநாள்!!!!!

சிறீலங்காவின் போர்க்குற்றங்களை ஆராயும் முகமாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழு முறைப்பாடுகளை ஏற்று கொள்ளும் இறுதி நாள் இன்றாகும்.இந்தநிலையில்...

ஒரே மரத்தில் தொங்கி மூவர் தற்கொலை!!

வேலூர் அருகே ஒரே மரத்தில் தந்தையும், 2 மகன்களும் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் அருகே உள்ள கொணவட்டம். இங்குள்ள சதுப்பேரி ஏரிக்கரைக்கு இன்று அதிகாலை சிலர் சென்றனர்.

புலிகள் இல்லாத தேசத்தில் நரிகள் வாலாட்டம்!!!

யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியின் ஆறுகால் மடச் சந்தியிலுள்ள வீட்டிற்குள் நேற்று நள்ளிரவுவேளையில் புகுந்த பத்திற்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட

விடுதலைப்புலிகளால் உயிருக்கு ஆபத்து அல்ல. இவர்களால் தான் தமிழ் இனத்திற்கு ஆபத்து’-சீமான்

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்பட நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு, விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், தமிழகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படியும், மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழக போலீஸ் டி.ஜி.பி லத்திகா சரண் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள், குறிப்பாக வடக்கில் உள்ளவை தளர்த்தப்பட வேண்டும்!-ரொபேர்ட் ஓ பிளேக்

வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுமாறு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அவசரகாலச் சட்ட விதிகளில் மேலும் தளர்வுகள் ஏற்படுத்தப்பட வேண் டும் எனவும் தெரிவித்துள்ள அது, விரைவில் வடக்கில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளது.