வியாழன், 16 டிசம்பர், 2010

லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம் ஒத்தி வைப்பு

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்க்ஷ், தமது இலங்கைக்கான விஜயத்தை ஒத்தி வைத்தள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. இந்த விஜயத்துக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்து, அவர் இந்த விஜயத்தை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் லியாம் பொக்ஸின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நீடிக்கும் நோக்கில், இலங்கை தாக, லியாம் பொக்ஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவார்த்த நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக அவர் நாளைய தினம் இலங்கை வரவிருந்தார். எனினும் லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம் தொடர்பில், பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் வில்லியம் ஹேக் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதேவேளை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், வொசிங்கடனில் உள்ள இராங்க திணைக்களத்துக்கு அனுப்பி ரகசிய தகவல்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தினால் வெளிப்படுத்தப்பட்டதன் பின்னர், லியாம் பொக்ஸ் இந்த விஜயத்தை கைவிட்டுள்ளதாக த கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் வெளிநாட்டு அமைச்சர் வில்லியம் ஹேக்குடன், லியாம் பொக்ஸ் பேச்சு நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் அடுத்த ஆண்டும் மீண்டும் லியாம் பொக்ஸ் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவரது பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக