வியாழன், 16 டிசம்பர், 2010

இறுதிநாள்!!!!!

சிறீலங்காவின் போர்க்குற்றங்களை ஆராயும் முகமாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழு முறைப்பாடுகளை ஏற்று கொள்ளும் இறுதி நாள் இன்றாகும்.இந்தநிலையில்...

இந்த நிபுணர் குழு எப்போது தமது அறிக்கையை பான் கீ மூனிடம் கையளிக்கும் என நேற்றைய ஐக்கிய நாடுகளின் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பட்டுள்ளது.


இன்னர் சிற்றி பிரஸ் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது. பான் கீ மூனின் நிபுணர் குழு தமது விசாரணைகளை ஆரம்பித்த திகதி, மற்றும் அதன் விசாரணை முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களும் வெளியிடப்படவில்லை என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.


இந்தநிலையில் தற்போது விடுமுறைக்காலம் ஆரம்பமாகவுள்ளமையால் முறைப்பாடுகளின் முடிவில் நிபுணர் குழு பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கைக்கு தாமதம் ஏற்படுமா? என்ற கேள்வியையும் இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பியது


இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்கி, நிபுணர் குழு தமது பணிகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்து முடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


இந்த விடயத்தில் இராஜதந்திர விடயங்கள் உள்ளடங்கியுள்ளமையால், கவனமான செயற்பாடு அவசியம் எனக்குறிப்பிட்ட அவர், நிபுணர் குழுவின் முறைப்பாடுகளை பெறும் காலம் இன்று முடிவடைவது தொடர்பாகவும் அது அறிக்கை சமர்ப்பிக்கும் தினம் தொடர்பாகவும் அறிந்து கூறுவதாக நெசர்கி குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக