வியாழன், 16 டிசம்பர், 2010

அவசரகாலச் சட்டம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள், குறிப்பாக வடக்கில் உள்ளவை தளர்த்தப்பட வேண்டும்!-ரொபேர்ட் ஓ பிளேக்

வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுமாறு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அவசரகாலச் சட்ட விதிகளில் மேலும் தளர்வுகள் ஏற்படுத்தப்பட வேண் டும் எனவும் தெரிவித்துள்ள அது, விரைவில் வடக்கில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளது.



அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங் களுக்கான துணை அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு நேற்று நேர்காணல் ஒன்றை வழங்கினார். அதிலேயே அவர் அமெரிக்காவின் மேற்கண்ட கருத்துக்களை வலியுறுத்தினார்.


அவர் தொடர்ந்து கூறுகையில்,


இன்னமும் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களது மொத்த விவரம், ஏற்கனவே விடுவிக்கப்பட்டவர்களது விவரம் மற்றும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளவர்களின் விவரம் என்பவற்றை இலங்கை அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளவர்களின் விவரங்கள் முறையான விதத்தில் வெளியிடப்படுவதே அவர்களது குடும்பங்கள் அமைதியுடன் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும் என்று வலியுறுத்திய அவர், இடம்பெயர்ந்த மக்களில் அனேகமானோர் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பதையும் சுட்டிக் காட்டினார்.


அவசரகாலச் சட்டம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள், குறிப்பாக வடக்கில் உள்ளவை தளர்த்தப்பட வேண்டும். அதேசமயம், புதிய தலைமுறைத் தலைவர்கள் உருவாகி வருவதற்கு வசதியாக வடக்கில் தேர்தல்களை அரசு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார் பிளேக்.


கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, போர்க் குற்றங்களை விசாரிக்கும் பொறிமுறையாவதற்கான சாத்தியங்கள் இருந்தால் அதற்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக