செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

எம் இளஞ்செல்வங்களின் தற்க்கொலைக்கான..........?

சுதந்திரமான வாழ்வு, கெளரவமான , கற்பதற்கேற்றதான அமைதியான சூழல் தெரிவுகள் ,அனைத்தையும் இழந்துபோன மனதின் சுமைகளோடு வாழ்வதற்க்கு
நிர்ப்பந்திக்கபடுதலே வன்னி மாணவர்களின் இன்றைய சூழல் , கொடும்போரின் வடுக்களை சுமந்த வாழ்வே வாழ்வழிக்கிறது. யுத்தத்தில் அவயங்களை இழந்து
உற்றார், உறவினர் , நண்பர்களை பிரிந்து ,சாதாரண மக்களாக எப்படி இவர்கள் வாழ்வார்கள்.
உடல் ,உள ரீதியாக பாதிக்கபட்ட மாணவர்களை வழிநாடாத்த முன் வருபவர்கள் யார் ? உதவுபவர்கள் யார் ? யாருமேயில்லை பல எதிர்கால கனவுகளுடன்
சிறகடித்து திரிந்த எம்மலர்களின் கனவுகள் சிதைந்ததும் , சிதைக்கபடுவதுமான காலம் இதுவே எனலாம்
போரின் இழப்புகளிற்குள் மீண்டெழுவதற்குள் சிங்களபேரினவாதத்தின் இராணுவ புலனாய்வு செயற்பாட்டளர்களின் விசாரணைகள் , கெடுபிடிகள் ,
சந்தேகபார்வைகள் , இராணுவ கெடுபிடிகளின் மத்தியில் எவ்வாறு தான் தங்கள் கற்றல் செயற்பாடுகளை கொண்டு செல்ல முடியும்.
யாழ் பல்கலைகழகத்தில் 325 ற்கு அதிகமான மாணவர்கள் எதுவித உதவியுமற்று , வன்னி போரின் வடுக்களை சுமந்து. சுயமான வாழ்வியக்கத்திற்குள்
தள்ளபட்டாலும் தங்களது எதிர்காலம் பற்றிய கேள்விகளுடனும், எந்நேரமும் இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணைக்கு உள்படுத்தபடுவோம் என்ற
அச்சத்திலேயே தங்களின் வாழ்வியக்கத்தை கொண்டு நகர்த்துவதை காணலாம்
அண்மையில் யாழ் பல்கலைகழக மாணவர்களான ரவீந்திரதாஸ் விக்ரர் - அருள்தாஸ் , வேலாயுதம் - திருவிழி ஆகியோர் கடிதங்களூடாக தம்
மனக்குமுறல்களை இவ்வுலகத்திற்க்கு தெரிவித்துவிட்டு தங்களை மாய்த்து கொண்ட சம்பவம் எம் மனங்களை விட்டு மறையும் முன்பே மீண்டுமொரு அவலம்
நடந்தேறியுள்ளது. வன்னி மாணவர்கள் எனும் காரணத்தால் சக மாணவர்களின் ஏளன பேச்சுக்கள்,, பேராசிரியர்களின் பாகுபடுகள்,, விசனமான பார்வைகள் ,,
அதனை தவிர இராணுவ புலனாய்வாளர்களின் விசாரணை தொந்தரவுகளின் தாக்கத்தின் பாதிப்புகளே மாணவர்களை இந்நிலைக்கு கொண்டு செல்ல
ஏதுவாகின்றது..
மாணவர்களான அருள்தாஸ்,, திருவிழி ஆகிய இருவரும் யாழ்ப்பாண அச்செழு இராணுவ முகாமிற்கு அழைக்கபட்டு புலனாய்வாளர்களால்
விசாரணைக்குள்படுத்தபட்டார்கள் என்பதும் , இருவரின் உடல்களிலுமுள்ள யுத்த தழும்புகளிற்கான காரணங்கள் ஆராயப்பட்டு , எச்சரிக்கை செய்யபட்ட பின்பே
இவ்விருவரும் இக்கோர முடிவிற்க்கு தள்ளபட்டார்கள் என அறியமுடிகிறது.
செஞ்சோலை மாணவியான புஸ்பமலர் ஜெயந்தி (சாளினி) சிறிலங்கா வான்படையால் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் மேற்கொள்ள பட்ட வான் தாக்குதலில்
அகப்பட்டு தனது தோழிகள் பலரை இழந்த சோகத்துடன் வாழ்ந்து வந்தவர். வன்னியின் கொடூரபோர் மேலும் அவரை பாதிப்புகுள்ளாக்கியது . உறவுகளை பிரிந்து ,
தான் நேசித்தவர்களை காணமுடியாத அவ் இளம் பிஞ்சின் சோகமான வாழ்வு இவ்வாறான கொடூர முடிவை எற்படுத்தியுள்ளது..
எம் எதிர்கால சிற்பிகளின் கனவுகளை நிறைவு செய்தலும் , அவர்களினை உள ரீதியான உளவுரனூட்டல் ,,மேம்படுத்தல் ,, நம்பிக்கையூட்ட உதவுதலே எம்மாலான
காலக்கடமையாகிறது.

தமிழர்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த நெடும் பயணம் ஓயக்கூடாது.......

ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதி கேட்டு நடக்கும் இளைஞனின் பயணம் 600 கிலோ மீற்றர்களையும் கடந்து முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

மேஜர் இளநிலவன்

''ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்." ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை. இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும் ஒருவன்.

15 வயதுச் சிறுமி மீது வல்லுறவு!

புத்தளம் மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவரைக் கற்பழித்தமைக்காக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்தக் கற்பழிப்புச் சம்பவம் அவருடைய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

நடந்துமுடிந்த போரின் பின்னரான அரசியலாய்வுகள், புலிகளுக் கெதிரான விமர்சனங்கள், ஒப்பீடுகளனைத்தும் இந்த இனப்பிரச்சனையின் அடித் தளத்தை விளங்கிக்கொள்ளத் தவறிவிட்டன.....

வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. அலையலையாய்ப் படிவுண்ட அதன் பக்கங்களுக்குள் ஒரு மீள முடியாத் துயரத்தின் சாட்சியாய் நாம் விசனித்திருக்கிறோம். ஒரு தேசம் தூர்ந்துகொண்டிருக்கிறது, எமதனைவரின் கனவுகளினூடு.....

முன்னாள் புலிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்ற கேள்விக்குச் சரியான விடை அரசதரப்பில்??

இறுதிப்போரில் சரணடைந்த கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய செய்திகள் இப்போது அதிகமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அரசாங்கத் தரப்பே இவர்களைப் பற்றிய செய்திகளை நாளாந்தம் கொடுக்க நினைக்கிறது.


இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் இந்த நிலை இல்லை. சரணடைந்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு அப்போது தயங்கிய அரசாங்கம் படைத்தரப்பும் இப்போது அவர்கள் பற்றிய செய்திகள் தினம் வெளிவருவதை விரும்புகின்றன.