வியாழன், 16 செப்டம்பர், 2010

இராணுவ உறவைப் பலப்படுத்த சீனா-இலங்கை அரசு தீர்மானம்!

இராணுவ உறவுகளைப் பலப்படுத்துவதற்கு சீனாவும் இலங்கையும்  இணங்கியுள்ளன. இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) பிரதம பொது அதிகாரிகளின் தளபதி சென்பிங்டேவுக்கும் இடையிலான சந்திப்பின்போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.

கிழக்கில் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.

ஒருவர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர் மட்டக்களப்பு, திருச்செந்தூரைச் சேர்ந்த முனுசாமி நரேந்திரன் (வயது  30) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனமொன்றில் வீட்டுக்கு வந்தவர்கள் இவரை வெளியே அழைத்துச் சென்று பலவந்தமாக வானில் தூக்கிப் போட்டுச் சென்றுள்ளனர் என  பொலிஸ் நிலையத்திலும், கடத்தப்பட்வரின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபை யின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப் பட்டமையும்,  கணவரை விடுதலை செய்யாவிட்டால் தானும் குழந்தைகளும் மாநகரசபை முன்னால் தீக்குளிப்பர் என அவரது மனைவி அறிவித்திருந்தமையும் தெரிந்ததே.

திலீபனுடன் மூன்றாம் நாள் 17-09-1987

காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது...... முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது "பல் விளக்கி முகம் கழுவவில்லையோ?" "இல்லை வாஞ்சியண்ணை... வேண்டாம்." கலைந்திருந்த தலைமயிரை நானே அவரருகில் சென்று வாரி விடுகிறேன். அவர் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை. "வெளிக்குப் போகேல்லையோ?" என்று மெதுவாகக் கேட்கிறேன். "போகவேணும் போலதான் இருக்கு." "சரி கீழே இறங்கி வாருங்கோ" என்று கூறிவிட்டு, மேடையை விட்டு நானே முதலில் இறங்கி, கீழே இறங்குவதற்கு உதவி செய்ய முயன்றேன். "வேண்டாம் விடுங்கோ......நானே வருகின்றேன்" என்று என் கையை விலக்கிவிட்டு தானே கீழே குதிக்கின்றார்.

விரக்தியடைந்த நிலையில் மக்கள்.. ஐ.நாவின் பிரதிநிதி நீல் பூன்

இடம் பெயர்ந்து தற்போது அங்கு திரும்பியுள்ளவர்களின் நிலைமைகளைப் பொறுத்தவரை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தின் உட்பகுதிகளில் இருக்கும் தமிழ்,  கிராம மக்களின் நிலமைகள் என்பவை அவர்கள் எந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதை பொருத்து மாறுபடுவதாக அவர் தெரிவித்தார். இவர்களில் பலர் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பியதில் மகிழ்ச்சியடைந்திருந்தாலும் அவர்கள் இன்னமும் பல சவால்களை எதிர்கொள்வதாகவும், பல தொலைதூரப் பகுதி கிராமங்களில் இருந்த மக்கள் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் நீல் பூன் தெரிவித்தார்

எழுதுதல் இலகு செய்வதே சிறப்பு.

எவரஸ்ட் சிகரம் ஏறுவோம், வாருங்கள் என்கிறார்கள் சிலர்
மரியானாவின் அடியில் இருந்துகொண்டு.
அழைப்பு விடுவது மட்டுமே அவர்களின் வேலையாம்
சிகரம் ஏறிச் சிக்குண்டவர்களும் ,இமயத்தில் இன்னும் எஞ்சியுள்ளோருமே மீண்டும் ஏறவேண்டுமாம். அதுவும் முன்பு ஏறி
முடக்கப்பட்ட பாதையால்.

நின்று பாத்தவருக்கே தெரியும் .நிலைமையின் கோரம்
பட்டவருக்கே புரியும். பாடுகளின் பாரம்.
இமயத்தில் வாழ்ந்தவர்கள் எல்லையற்ற துன்பத்தில்
சிகரம் ஏறியவர் சிதைந்தவராய் சிங்கத்துக் குகையினுக்குள்.

அக்கரையில் இருந்துகொண்டு அதிகப் பிரசங்கம்
வீட்டிற்குள் இருந்துகொண்டு வீரமாய் வசனங்கள்.
முதலில் வீழ்ந்தவரை எழ விடுங்கள்
சிக்குண்டவரை மீள விடுங்கள்எழக் கைகொடுங்கள்
மீளக் வளி சமையுங்கள்.

அதன் பின் இமயம் வந்து எவரஸ்ட் ஏற
நீங்கள் தயாரென்றால் கூப்பிடுங்கள் எங்களை
அப்போது நிட்சயம் மீண்டு நாங்கள்..அதுவரைக்கும் ஆகக்கூடியத்தை
அனைவரும் செய்யுங்கள் .அனைத்து வழிகளிலும்
இணைந்து முயலுங்கள்படுத்துக் கிடந்துகொண்டு
நடப்பவனில் குறை காணாதீர்கள் சொல்லுதல் சுலபம்
எழுதுதல் இலகு செய்வதே சிறப்பு.
எவரஸ்ட் தான் எம் இலக்கு

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்"

தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்திமூன்று வருடங்களுக்கு முன்பு  நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.
"இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும்.

திலீபனுடன் இரண்டாம் நாள்.....

16-09-1987 அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார். சிறுநீர் கழித்தார், ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். சகல தினசரிப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவில் பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.