வியாழன், 16 செப்டம்பர், 2010

எழுதுதல் இலகு செய்வதே சிறப்பு.

எவரஸ்ட் சிகரம் ஏறுவோம், வாருங்கள் என்கிறார்கள் சிலர்
மரியானாவின் அடியில் இருந்துகொண்டு.
அழைப்பு விடுவது மட்டுமே அவர்களின் வேலையாம்
சிகரம் ஏறிச் சிக்குண்டவர்களும் ,இமயத்தில் இன்னும் எஞ்சியுள்ளோருமே மீண்டும் ஏறவேண்டுமாம். அதுவும் முன்பு ஏறி
முடக்கப்பட்ட பாதையால்.

நின்று பாத்தவருக்கே தெரியும் .நிலைமையின் கோரம்
பட்டவருக்கே புரியும். பாடுகளின் பாரம்.
இமயத்தில் வாழ்ந்தவர்கள் எல்லையற்ற துன்பத்தில்
சிகரம் ஏறியவர் சிதைந்தவராய் சிங்கத்துக் குகையினுக்குள்.

அக்கரையில் இருந்துகொண்டு அதிகப் பிரசங்கம்
வீட்டிற்குள் இருந்துகொண்டு வீரமாய் வசனங்கள்.
முதலில் வீழ்ந்தவரை எழ விடுங்கள்
சிக்குண்டவரை மீள விடுங்கள்எழக் கைகொடுங்கள்
மீளக் வளி சமையுங்கள்.

அதன் பின் இமயம் வந்து எவரஸ்ட் ஏற
நீங்கள் தயாரென்றால் கூப்பிடுங்கள் எங்களை
அப்போது நிட்சயம் மீண்டு நாங்கள்..அதுவரைக்கும் ஆகக்கூடியத்தை
அனைவரும் செய்யுங்கள் .அனைத்து வழிகளிலும்
இணைந்து முயலுங்கள்படுத்துக் கிடந்துகொண்டு
நடப்பவனில் குறை காணாதீர்கள் சொல்லுதல் சுலபம்
எழுதுதல் இலகு செய்வதே சிறப்பு.
எவரஸ்ட் தான் எம் இலக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக