வியாழன், 16 செப்டம்பர், 2010

இராணுவ உறவைப் பலப்படுத்த சீனா-இலங்கை அரசு தீர்மானம்!

இராணுவ உறவுகளைப் பலப்படுத்துவதற்கு சீனாவும் இலங்கையும்  இணங்கியுள்ளன. இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) பிரதம பொது அதிகாரிகளின் தளபதி சென்பிங்டேவுக்கும் இடையிலான சந்திப்பின்போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
சீன-இலங்கை இராணுவ உறவுகள் அண்மைக்கால வருடங்களில் தொடர்ச்சியான ஐக்கியமும் அபிவிருத்தியும் காணப்பட்டதாக சென் பிங்டே கூறினார்.தாய்வான், திபெத் விவகாரங்களில் சீனாவுக்கு இலங்கை ஆதரவு தெரிவிப்பது குறித்து அவர் நன்றி தெரிவித்தார். இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையிலான பரஸ்பர நட்புணர்வு பரிமாற்றங்களையும் ஒத்துழைப்புக்களையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக