ஞாயிறு, 13 ஜூன், 2010

எம்.ஜி.ஆர். விடுத்த அறிக்கை!

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு ஓகஸ்ட் 13-14, 1983-இல் சென்னையில் நடைபெற்றபோது ஜூலையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும், குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள், சிங்களக் கைதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழீழத்திற்கான போர் மீண்டும் தொடங்கும்- சிங்கப்பூர் முன்னால் பிரதமர்

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும் தற்போதைய அரசவை ஆலோசகருமான லீ குவான் யூ. அந்நிய நாடுகளைப்பற்றி அதிகம் கருத்துச் சொல்ல மாட்டார்!


அத்திபூத்த மாதிரி அவர் சொன்னால்

யார் அந்தப் பிரபாகரனின் தம்பிகள்?

யார் அந்தப் பிரபாகரனின் தம்பிகள் என்று தமிழ்நாடு பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை நேற்று முடுக்கி விட்டுள்ளார்கள். தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரணி ரயில் தண்டவாளம் நேற்று அதிகாலை இந்திய நேரம் 2 மணியளவில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.

போர்வெற்றிக்கொண்டாட்டம் என்றவுடன் இயற்கை தனது திருவிளையாடலை ஆரம்பிக்கின்றது

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கத்தினால், தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்றின் வேகம் தீவிரமடைந்துள்ளதாக வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் மூடுமந்திரம் அது தமிழினத்திற்குச் செய்துவரும் துரோகம்?!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவுடன் நடாத்திய பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதாகக் கூறுகின்ற போதும் அப்பேச்சுவார்த்தையில் உருப்படியான எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூட்டமைப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.

கப்டன் திவாகினி


கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள்.


இயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி.

தோல்விகளாக பதிவு செய்யப்படும் எந்த தோல்வியும் நிரந்தரமானது கிடையாது................

ஜூலை 26, 1983. வெளிக்கடைச் சிறை நம்மை அதிரவைத்தக் காலக்கட்டம். சிங்கள பேரினவாதத்தின் அடையாளம் தொடர்ந்து இதுவரை வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு நிலை வருமா? என்று எல்லோரும் அன்னார்ந்து பார்த்தார்கள். இதயம் பிழியப்பட்டது. மனம் சல்லடையாய் துளைக்கப்பட்டது. வரலாறு ஏனோ மீண்டும் மீண்டும் சுற்றி ஒரே இடத்திற்கு வருகிறது. விடுதலைக்கான போராட்டங்கள்

அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள்

போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கு மக்களிடையே சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய அச்சம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் இந்த அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்கள்.
அதற்கு அரச தரப்பில் இருந்து எந்த உறுதிமொழியும் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த ஒரு வருடத்தில் கிழக்கிலும் வடக்கிலும் சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம்.( World Day Against Child Labour)

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம் World Day Against Child Labour ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது விடயமாக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்துவதும் இத்தகைய விழிப்புணர்வுகளின் ஊடாக சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும் இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும்.


பொதுப்படையாக நோக்குமிடத்து எத்தனை சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் எத்தகைய விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாளுக்குநாள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வறுமை, பஞ்சம் போன்ற நிலைமைகள் இத்தகைய காரணியை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன.

டக்ளசின் வியாக்யான பேட்டி

புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் ஈழக் கனவினால் தமிழ் மக்களே காயப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமிழீழக் கோரிக்கையை கைவிட மறுப்பதனால், தமிழ் மக்களே பாதிக்கப்படப் போவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீபா ஒப்பந்தம் இழுபறியில் இன்னமும் கைச்சாத்தாகவில்லை

இலங்கை இந்தியாவிற்கு இடையே கைச்சாத்தாகும் நிலையில் உள்ள சீபா ஒப்பந்தம் (CEPA - Comprehensive EconomicPartnership Agreement) இன்னமும் இழுபறியிலேயே உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சீபா ஒப்பந்தத்தினை இந்தியாவுடன் செய்யும் அதே வேளை பாகிஸ்தான் சீனாவுடனும் செய்வதற்கு இலங்கை முயற்சித்து வருவதனால் இந்தியாவிற்கு அதில் உடன்பாடு இல்லை என்ற வகையில் இந்த சீபா ஒப்பந்தம் இழுபறியில் உள்ளதாக கூறப்படுகின்றது.