ஞாயிறு, 13 ஜூன், 2010

யார் அந்தப் பிரபாகரனின் தம்பிகள்?

யார் அந்தப் பிரபாகரனின் தம்பிகள் என்று தமிழ்நாடு பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை நேற்று முடுக்கி விட்டுள்ளார்கள். தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரணி ரயில் தண்டவாளம் நேற்று அதிகாலை இந்திய நேரம் 2 மணியளவில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.



சென்னை நோக்கிச் சென்று கொண்டி ருந்த ரக்போர்ட் ரயிலை இலக்கு வைத்து இத் தகர்ப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால் திடீர் வெடிப்புச் சத்தம் கேட்டமையையடுத்துப் புகையிரத நிலைய அதிபர் தண்டவாளத்தைச் சென்று பார்வையிட்டார். அங்கு மூன்று அடி அகலத்திற்கு தண்டவாளம் வெடித்து உடைந்து கிடந்தது. உடனே மேலதிகாரிகளுக்கு தகவல் வழங் கினார். அவரின் சமயோசித நடவடிக்கையால் அப்போது அந்த வழியாக சுமார் 2 ஆயிரம் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ரக்போர்ட் புகையிரதம் அவசரமாக நிறுத்தப்பட்டது.


பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர் எனத் தமிழகப் பொலிஸார் தகவல் வெளி யிட்டுள்ளனர். தண்டவாளத் தகர்ப்பின் எதி ரொலியாக சென்னையிலிருந்து தென் மாகாணங்களுக்கும் தென்மாகாணங் களிலிருந்து சென்னைக்கும் பயணிக்கும் புகையிரதங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.


பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொன். மாணிக்கம் தலைமையி லான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வை யிட்டனர். அந்த இடத்தில் ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கண்டெடுத்தனர். இதில் இக் குண்டு வெடிப்பை நடத்தியது பிரபாகரனின் தம்பிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தைக் கண்டிக்கும் வகையில் இந் தத் தகர்ப்பு இடம்பெற்றுள்ளது. புலி ஆதரவு சக்திகளே இவ் வேலை யைச் செய்திருக்கின்றன என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


யார் அந்தப் பிர பாகரனின் தம்பிகள்? என்று வலை வீசத் தொடங்கியுள் ளார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக