ஞாயிறு, 13 ஜூன், 2010

போர்வெற்றிக்கொண்டாட்டம் என்றவுடன் இயற்கை தனது திருவிளையாடலை ஆரம்பிக்கின்றது

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கத்தினால், தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்றின் வேகம் தீவிரமடைந்துள்ளதாக வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய காலநிலையானது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் ஒரு சில தினங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் எனவும் திணைக்கள அதிகாரி எம். வசந்தகுமார்  தெரிவித்தார்.மத்திய மலை நாட்டின் மேற்குப் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும். மேல், சப்பிரகமுவா, மத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும்,வடக்கு , கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேல் திசையில் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்று, அடுத்து வரும் இரு தினங்களில் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக