ஞாயிறு, 13 ஜூன், 2010

தமிழீழத்திற்கான போர் மீண்டும் தொடங்கும்- சிங்கப்பூர் முன்னால் பிரதமர்

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும் தற்போதைய அரசவை ஆலோசகருமான லீ குவான் யூ. அந்நிய நாடுகளைப்பற்றி அதிகம் கருத்துச் சொல்ல மாட்டார்!


அத்திபூத்த மாதிரி அவர் சொன்னால்
அதை அத்தனை உலக நாடுகளும் படுகவனமாகக் காதில் வாங்கிக்கொள்ளும்! உலக நாடுகள் அத்தனையும் உற்றுப்பபார்க்கின்ற அளவுக்கு சிங்கப்பூரை சூப்பர் ஸ்பீடில் முன்னேற்றிக் காட்டிய இவரின் தற்போதைய மன ஓட்டங்களைப்பற்றி லீ குவான் யூவுடன் ஓர் உரையாடல் என்று வெளியாகியுள்ள ஒரு சமீபத்திய புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பல்வேறு விடயங்கள் குறித்து லீ குவான் யூவுடன் தான் பேசியதை.. டாம் ப்லேட் என்ற அமெரிக்கப் பத்திரிக்கையாளர் எழதியுள்ளார். புத்தகத்தின் ஒரு பகுதி இலங்கை அரசின் அராஜகங்களை அப்பட்டமாக சுட்டிக்காட்டுகிறது. சிங்கப்பூரின் பிதாமகன் உதிர்த்த வார்த்தைகள் தமிழீழத் தமிழரின் மரண ஓலங்களுக்கு மருந்து போடுவதாக இருக்கின்றது.


இனி புத்தகத்தில் இருந்து...


இலங்னையில் போர் முடிந்து அமைதி நிலவுகிறது என்று எங்காவது படித்தால் சிரிப்புதான் வருகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பை இலங்கை இராணுவம் எதிர்த்து வென்றிருந்தாலும் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்திருப்பது அநியாயாம்.


நான் ராஜபக்ஷேவின் சில பிரச்சாரங்களையும் மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கின்றேன். அதை அலசிப் பார்க்கும் போது அவரை ஒரு சிங்களத் தீவிரவாதி {எக்ஸ்ரீமிஸ்ட்} என்றே கருத வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவரின் மனதை மாற்றுவது எளிதான காரியம் அல்ல.


மக்கள் அனைவரும் வாக்களிக்கப்படும் சதந்திரம் அளிக்கப்படுவதால் மட்டுமே இலங்கையை ஒரு குடியரசு நாடு என கூறிவிட முடியாது. அந்த நாட்டில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை இருக்கிற அதே அளவு தமிழர்களுக்கும் தரப்பட வேண்டும். அந்த நாட்டு வரலாறைப் புரட்டிப் பார்த்தால் அப்படி இல்லை. ஜஃப்னாவின் தமிழர்களுக்கு சிங்களவர்கள் இழைக்கும் கொடுமைகளைப் பார்த்தாலே இது புரியும். எனக்கென்னவோ சிங்களவர்கள் தாழ்வு மனப்பான்மையாள்தான் தமிழர்களை விரட்டுகின்றனர் என்று தேன்றுகின்றது. சிங்களவர்களைவிட தமிழர்கள் அதிக செயல்த்திறன் கொண்டவர்கள். அப்படி ஒரு நிலையில் நான் இருந்திருந்தால் அவர்களை எதிர்த்து இயல்பாகவே கொதித்து எழுந்திருப்போன். என்று தமிழர்களின் குரலாக அந்தப் புத்தகத்தில் லீ குவான் யூ ஒலித்திருக்கிறார்.


மேலும் அந்தப் புத்தகத்தில் சிங்கப்பூரைப் பொறுத்தவரை இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக பல இன மக்கள் பாடுபட்டு வந்தாலம் சீனர்களையும் இந்தியர்களையும்போல அயராது உழைப்பவர்களைப் பார்ப்பது அரிது. அதற்கான மனநெருடல் கொண்டு... இந்த நாட்டில் வாழ மற்ற இனத்தவர்களுக்கு உரிமை இல்லை என தடையா போடுகிறோம்? நொடிக்கு 10 சாதிக் கலவரம் என்று வெடிக்கும் பல நாடுகளை ஒப்பிடும் போது எவ்வித சண்டையம் சச்சரவும் இன்றி எல்லா இனத்தவரும் இங்கே அமைதியாக வாழ முடிகின்றது எனக்கு சந்தோஷம் அளிக்கின்றது. என்று சிறந்த தலைவனுக்குறிய செருக்கோடு பெருமிதம்கொள்ளும் லீ குவான் யூ.


நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழர்களின் இந்தத் தோல்வி தற்காலிகமானதே. அவர்கள் வெகு நாட்களாக அமைதியாக இருக்க மாட்டார்கள். கூடிய விரைவில் இலங்கை அரசுக்கு எதிராக அவர்கள் போர் தொடுப்பார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று கணித்திருப்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன.


இவரது கணிப்புகள் நச்சென்று நிஜமாகிவிடுவதுதான் இதற்குக் காரணம் புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் இரண்டு தலைமுறை அமெரிக்க ஜனாதிபதிகள் லீ குவான் யூவின் அறிவுரைகளைக் கருத்தில்கொண்டு நன்மை பெற்றது உண்டு. சீனாவின் எதிர்கால வளர்ச்சியை முன்கூட்டியே சொன்னதும் இந்தத் தலைவர்தான். இதனாலேயே சீனாவின் புகழ்பெற்ற தலைவர் டெங்க் சியாவுபிங்க் தனது மிகப்பெரிய முடிவுகளை எல்லாம் இவரிடம் ஆலோசித்த பின்னரே எடுத்தார். அப்படிப்பட்டவரின் கணிப்பை ஒதிக்கித் தள்ளிவிட முடியாது. என்று அழுத்தமாக அடிக்கோடுட்டுச் சொன்னதும் இங்கே கவனிக்கத்தக்கது.


சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால அரசியலில் பெரும்பான்மையான மந்திரிகள் இலங்கைத் தமிழர்களே. சட்டசபையில் அவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் லீ குவான் யூவுக்கு அவர்கள் மீது ஒரு தனிப்பட்ட பற்று எப்போதும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக