ஞாயிறு, 13 ஜூன், 2010

கூட்டமைப்பின் மூடுமந்திரம் அது தமிழினத்திற்குச் செய்துவரும் துரோகம்?!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவுடன் நடாத்திய பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதாகக் கூறுகின்ற போதும் அப்பேச்சுவார்த்தையில் உருப்படியான எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூட்டமைப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.




இப்பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கடும்போக்குடன் நடந்துகொண்டதாகவும் எந்தவிதமான உடன்பாட்டிற்கும் இருதரப்பும் வரவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மீழ்குடியேற்றம்,புனர்வாழ்வு,அபிவிருத்திப்பணி என்பனவற்றிற்கு அரசிடம் பணமில்லை என்று மகிந்த கூட்டமைப்பினரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகத் தெரியவருகின்றது.


அதேவேளை அரசிடம் நிதியில்லை என்று கூறியதை வெளியே விமர்சிக்கவேண்டாம் எனவும் மகிந்த கூட்டமைப்பினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.வெளிநாடுகளிடம் கடன்பெற்று வீடுகள் கட்டிக்கொடுக்கமுடியாது எனவும் வெளிநாடுகளில் கடன்பட்டால் அது சிங்கள மக்களின் கடனாக மாறும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.கூட்டமைப்பின் தலைவர் ஒரு கருத்தைக்கூற அதன் உறுப்பினர்கள் வெவ்வேறுபட்ட கருத்தைக்கூற இச்சந்திப்புக் குறித்துத் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்பகரமான நிலை தோன்றியுள்ளது.


இவையெல்லாவற்றையும் உற்று நோக்கும்போது இப்பேச்சுவார்த்தை வழமைபோன்று அரசின் ஒரு இழுத்தடிப்பு நாடகமே என்றும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுடன் வெளிப்படையாக நடந்து கொள்ளாதது அவர்கள் மீது சந்தேகத்தைத் தோற்றுவித்துவருவதாகவும் தாயக மக்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக