ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

கப்டன் மொறிஸ்

நான் போர்முனையில்
குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்
மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்
உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...!
என்றான். அவன்தான் மொறிஸ்.
நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன. சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீதுமேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான். பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு. முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையால் அச்சுறுத்தல்

தமது நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளதா? என்பதில் இந்தியா தற்போது அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட "லஹ்ர் ஈ தொய்பா" அமைப்பின் ஒருவர் தாம் இலங்கையில் பயிற்சி பெற்றதாக தெரிவித்தமையை அடுத்தே இந்த அக்கறை ஏற்பட்டுள்ளது.முதலில் இந்தப் போராளிக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சிகளை வழங்கி யிருப்பார்களா? என்ற சந்தேகத்தை இந்தியா கொண்டிருந்தது.எனினும் பின்னர் அது நிரூபிக்கப்படாத நிலையில் இலங்கையின் படையினர் மீது இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளது.

கல்வியங்காடு சந்திரசேகரப்பிள்ளையார் குளத்தினுள் ஆயுதம்கள் படையினர் தேடுதல்

கல்வியங்காடு சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வீதியிலுள்ள குளம் ஒன்றில் ஆயுதம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கல்வியங்காடு சந்திரசேகரப் பிள்ளையார் ஆலய வீதியிலுள்ள குளத்தினுள் ஆயுதம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாகவும் இதனையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு குளத்தை இறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 10 நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நீர் இறைக்கும் பணி நடைபெறுவதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.