ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையால் அச்சுறுத்தல்

தமது நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளதா? என்பதில் இந்தியா தற்போது அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட "லஹ்ர் ஈ தொய்பா" அமைப்பின் ஒருவர் தாம் இலங்கையில் பயிற்சி பெற்றதாக தெரிவித்தமையை அடுத்தே இந்த அக்கறை ஏற்பட்டுள்ளது.முதலில் இந்தப் போராளிக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சிகளை வழங்கி யிருப்பார்களா? என்ற சந்தேகத்தை இந்தியா கொண்டிருந்தது.எனினும் பின்னர் அது நிரூபிக்கப்படாத நிலையில் இலங்கையின் படையினர் மீது இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளது.
இலங்கையில் 200 லஹ்­ர் ஈ தொய்பா அமைப்பின் உறுப்பினர்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமையை அடுத்தே இந்தியா இலங்கைப் படைத்தரப்பின் மீது தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது .இதற்காக இலங்கையில் இந்தியா தமது புலனாய்வுப் பிரிவுகளை விரிவுப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதனையடுத்து இலங்கையும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தகவல் குறித்து விரைவில் இலங்கை அதிகாரிகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக இந்திய, இலங்கை கடற்படைகளின் உயர்மட்ட தளபதிகளின் சந்திப்பு ஒன்று எதிர்வரும் 29ஆம் திகதி இரு நாட்டுக் கடல் எல்லையில் வைத்து இந்தியக் கடற்படைக்கு சொந்தமான கப் பல் ஒன்றில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக