வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தல்.. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்றுனர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன்

இலங்கைத் தீவில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையையும், தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதலும் , சிங்களம் தமிழின மக்கள் மீது கொண்டுள்ள இனவஞ்சம் இலங்கை தீவின் எல்லைகளினையும் தாண்டி தமிழக மக்களையும் நோக்கி நீண்டிருப்பதானது இலங்கையின் எல்லைதாண்டிய ஒடுக்கு முறையின் கொடூர முகத்தினையும், அது தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வினையுமே நிதர்சனமாக வெளிப்படுத்துகிறது.


கடற்கரும்புலி மேஜர் சந்தனா

அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.

எல்லாம் போயிற்று ,எல்லார் உயிரும் என்னைப் போல
இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்வாழாது போயினர்.....?
வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்பெயரிட்ட பிள்ளைகளும்
துணைவந்த துணைவிகளும்தனித்துப் போயினர்......
ஒரு நேர உணவிற்கும்ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்
எவரையெல்லாமோ இறைஞ்சி....எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான
இயலாத் துயரோடு இன்னும் நம்புகிறார்கள்....என்னை, உன்னை   ,
 எம் எல்லோரையும்....

தமிழ் இளைஞர்கள் கைது.

கண்டி மாவட்டம், அலவத்துகொட பிரதேசத்தில் வவுனியாவை சேர்ந்த நான்கு தமிழ் இளைஞர்களை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர் .கண்டியில் நடைபெற்று வரும் பௌத்தர்களின் எசல பெரஹராவை பார்ப்பதற்காக இவர்கள் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய அடையாளப்படுத்தல் ஆவணங்களை கொண்டிருக்காமை காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்கிளப்பில் யுவதியொருவர் காணாமல் போயுள்ளார்..

பொன்னம்பலம் - சாந்தகுமாரி வயது 28 கரையாகண் தீவு , கன்னங்குடா மட்டக்கிளப்பு. எனும் முகவரியை கொண்ட யுவதி காணமல்போயுள்ளார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது வன்னி இடப்பெயர்வின் மூலம் இடம்பெயர்ந்து அண்மையிலேயே தன் தாயாருடன் சொந்த இடத்தில் மீள்குடியேற்றபட்ட போதிலும் இராணுவ புலனாய்வாளர்களினதும் ,

புலிகளுக்கு வாகனங்கள் விற்பனை நால்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுமதி வாய்ந்த வாகனங்கள், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு புலிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட ஐந்து வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.