ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு

வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரத்திற்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன. மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதும் குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடை செய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்செய்யப்பட இருக்கின்றன என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார். உண்மையாக கல்வி கற்க வருவோரை இலக்கு வைத்து இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், தொழில் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரிட்டன் வருவோருக்காகவே இந்த நடவடிக்கை என்றும் கூறினார். தோல்வியில் முடிவடைந்த சிக்காகோ விமானக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதம மந்திரி கோர்டன் பிரவுணின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஜோன்ஸன் மேலும் தெரிவித்தார். மேற்படி நத்தார் தின குண்டு வெடிப்பை நடத்தியதாக கூறப்படும் உமர் பாரூக் அப்துல் முதலாப் லண்டனில் கல்வி கற்றவர் என்றும் பிரிட்டனிலிருந்து சென்ற பின்னர் யேமனில் அல்குவைதா இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர் என்றும் பிரதமர் கூறியதன் பின்னர் இந்த மதிப்பீட்டுக்கு உத்தரவிடப்பட்டது. 2008 / 2009ம் ஆண்டு காலத்தில் பிரிட்டன் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் மாணவ விசாக்களை வழங்கியது. தற்போதைய நடவடிக்கையால் வெளிநாட்டு மாணவ விசாக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையலாம் என்று தெரிவித்த உள்துறை அலுவலக பேச்சாளர், எவ்வாறாயினும் பல்லாயிரக்கணக்கில் வீழ்ச்சி ஏற்படும் என்று வெளியான அறிக்கைகளை நிராகரித்தார். ஒரு சில வாரங்களுக்குள் அமுல் செய்யப்படவிருக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாக சட்டம் ஒன்று இயற்ற வேண்டிய தேவை இல்லை. நேபாளம், வட இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட மாணவ விசாக்கள் அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் அந்நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்படும் மாணவ விசாக்கள் இடைநிறுத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் மேற்படி புதிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உச்சவரம்பை உயர்த்துதல் பிரிட்டனுக்கு வரவிரும்பும் மாணவர்களுக்கான தகைமையில் 40 புள்ளிகளை பெறவேண்டும் என்ற தேவையை கடந்த வருடம் பிரிட்டன் அறிமுகம் செய்தது. ஆனால் பயங்கரவாதிகளும் ஏனையோரும் இதன் மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்து விடுவார்களெனக் கூறி பல விமர்சனங்கள் எழுந்தன. தற்போது கல்வி கற்கும் நோக்கத்தை தவிர்த்து வேலை செய்யும் முக்கிய நோக்கத்துடன் பிரிட்டன் வருவோரை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார். தற்போதைய தீர்மானத்தின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளாவன: * ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் தற்போதுள்ள ஆரம்ப மட்ட அறிவிலும் பார்க்க ஜி சி எஸ் ஈ (G C S E) தரத்திற்கு சிறிது குறைந்த மட்ட அறிவையேனும் பெற்றிருக்க வேண்டும். * பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த கற்கைநெறிகளை பின்பற்றுவோர் தற்போதுள்ள 20 மணிநேர வேலைக்கு பதிலாக இனிமேல் 10 மணி நேர வேலை செய்வதற்கே அனுமதிக்கப்படுவார்கள். * 6 மாதங்களுக்கு குறைந்த கற்கைநெறிகளுக்காக வருவோர் அவர்களில் தங்கியிருப்போரை அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பட்டப்படிப்பு நெறிகளுக்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவோருடன் வரும் அவர்களில் தங்கியிருப்போர் பிரிட்டனில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். * இவற்றுக்கு மேலாக, மாணவர்களை அனுமதிக்கும் கல்வி நிறுவனங்கள் அதி உயர் நம்பக தன்மையைக் கொண்ட அனுசரணையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அங்கு பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவதற்கான விசாக்கள் வழங்கப்படும்.

விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி

இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... ....எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டரை அழித்த விடுதலைப்புலி உறுப்பினர் ஆகிய இருவரைத் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதிவான் சம்பா ஜானகி ராஜரட்ண நேற்று முன்நாள் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார். சீனாவிடமிருந்து மிகவும் இரகசியமாக பெற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்களும் தோட்டாக்களும் கொரிய பிரஜைகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 கப்பல்களில் பகுதி பகுதியாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன எனவும், ஏவுகணைக் கூடு ஒன்று விடுதலைப் புலிகளின் முகாமொன்றிலிருந்து மீட்கப்பட்டு தற்போது இரத்மலான விமானப்படைகளின் முகாமில் வைக்கப்பட்டுள்ளது எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு கப்பல் மூலம் ஆயுதங்களைக் கொண்டுவறந்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் தொண்டைமானாறு எம். இராஜேந்திரன் கருணாகரன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு ஹெலிகொப்டரை அழித்ததார் எனக் கூறப்படும் அருளானந்தன் நிஷாந்தன் ஆகிய இரண்டு விடுதலைப்புலி உறுப்பினர்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆயுதக் கொள்வனவின் பின்னர் அவற்றை விநியோகிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய விடுதலைப்புலிகளைக் கண்டறிய வேண்டியுள்ளதால் சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். பின்னர் வேண்டுகோளுக்கு அனுமதியளித்த நீதிவான் எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைகளின் நிலைமை குறித்து மீண்டும் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக புனிதி இளைஞர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரதனஜோதி தேரர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை நெருக்கடியான நிலைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் சில ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமது குழுக்கள் மீது தாமே தாக்குதல் நடத்தி அந்தப் பழியை அரசாங்கத்தின் மீது சுமத்துவதற்கும் சிலர் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தலின் பின்னர் பல்வேறு பிரதேசங்களில் ஊடகவியலார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது அரசாங்கத்திற்கு எதிரான ஓர் அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமே இதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் பேராதரவைப் பெற்றிருந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசியலில் ஈடுபடுத்தி அவரை அரசியல் அநாதையாக எதிர்க்கட்சிகள் மாற்றியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தங்களது நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கில் சரத் பொன்சேகாவை சில சக்திகள் பகடைக் காய்களாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழ் அகதிகளை பத்திரிக்கையாளர்கள் முன் நிறுத்துவாரா டி.ஜி.பி.?

செங்கல்பட்டில் சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் நேற்று முன் தினம் இரவு 150க்கும் மேற்பட்ட காவல் துறையினர் உட்புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று வெளியான செய்தி ‘உண்மைக்கு புறம்பானது’ என்று கூறி தமிழ்நாடு காவல் துறையின் தலைமை இயக்குனர் லத்திகா சரண் அறிக்கை விடுத்துள்ளார். தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனராக முதன் முதலாக பொறுப்பேற்ற ஒரு பெண் காவல் அதிகாரி என்ற பெருமை பெற்ற லத்திகா சரண் விடுத்துள்ள அறிக்கையின் கடைசி பத்தி இதுதான்: “காவல் துறையினர் இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. இச்சம்பவத்தில் இலங்கைத் தமிழர்கள் எவரும் கடுமையான காயம் அடைவில்லை” இலங்கைத் தமிழர்கள் மீது காவல் துறையினர்தான் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என்று கூறும் லத்திகா சரணின் அறிக்கை, அடுத்த வாக்கியத்திலேயே “எவரும் கடுமையான காயம் அடைவில்லை” என்று கூறி முடிக்கிறார். இதுதான் பொய் செல்வதில் உள்ள நெருக்கடியே! அங்கு நடந்ததாக ஒரு கதையை கூறி, காவல் துறையினர் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கதையைக் கொண்டுவந்து, அவர்களைத் தாக்கியவர்கள் முகாமில் அடைப்பட்டுக்கிடக்கும் அகதிகளே என்று கூறிவிட்டு, அதற்காக அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றெல்லாம் தனது அறிக்கையில் கூறும் காவல் துறை தலைமை இயக்குனர், ஒரு நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு, நடவடிக்கை எடுக்க வந்த 150 காவலர்களைத் தாக்குவதற்கு எங்கிருந்து பலம் வந்தது என்பதையும் கூறியிருக்க வேண்டும். தமிழக காவல் துறையின் கியூ பிரிவின் கண்காணிப்பில் இருக்கும் அந்த ‘சிறப்பு முகாமில்’ எங்கிருந்து ஆயுதங்கள் வந்தன என்பதையும், அப்படி ஆயுதங்கள் இருந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதையும் காவல் தலைவர் கூற வேண்டும். 02.02.2010 அன்று காலை முதல் ஈழத் தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்களில் பலர் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். தாங்கள் எதற்காக போராடுகிறோம் என்பதை வெளியில் நின்ற ஊடகவியலாளர்களுக்கு தெரிவிப்பதற்காக, அவர்களின் பலர் மரத்தின் மீது ஏறி நின்று ஊடகவியலாளர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் தங்கள் கோரிக்கைகளை முழங்கியுள்ளனர். அது வீடியோவில் பதிவாகி உள்ளது. காவல் தலைமை இயக்குனர் லத்திகா சரண் தனது அறிக்கையில் கூறியிருப்பதுபோல, உள்ளே சென்ற காவலர்கள் மீது தாக்குதல் நடந்தது என்றால் அது அங்கு கூடி நின்ற ஊடகவியலாளர்களுக்கு தெரியாமல் எவ்வாறு நடந்திருக்க முடியும்? மாலை வரை ஊடகவியலாளர்கள் அங்கே இருந்திருக்கிறார்கள். ஆனால் தாக்குதல் - திட்டமிட்டத் தாக்குதல் - இரவு 9 மணிக்குத்தான் தொடங்கியுள்ளது. உள்ளே பூட்டிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த நிலையில், 150க்கும் அதிகமான காவலர்கள் முகாம் சுவரேறி உள்ளே குதித்துச் சென்றுத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் பல மணி நேரங்கள் நடந்துள்ளது. அப்பட்டமான, ஈவுரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்! அவர்கள் அறையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து துவம்சம் செய்துள்ளது காவல் துறை. துணிமணிகளை கிழத்தெறிந்துள்ளது. இதெல்லாம் வெளியே தெரியாமல் இருக்கத்தானே 9 மணிக்கு மேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது? கண்மூடித்தனமாகத் தாக்கிவிட்டு, அந்த உண்மை வெளியே வந்துவிட்டப் பிறகு, தாக்கப்பட்டவர்களே தாக்கினார்கள் என்று அறிக்கை விட்டு மறைக்கிறார் காவல் துறைத் தலைவர். கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்து அவர்களை வேலூர் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

டக்ளசை போன்று நக்கி பிளைக்க சம்மந்தமில்லாத சம்மந்தன் முடிவு

32 வருடங்களுக்கு மேலாக தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்று தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கடந்த 32 வருடங்களாக போராடி வந்துள்ளனர்,போராடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் இது வரையில் பல லச்சம் மக்களையும் தெய்வங்களுக்கு நிகரான மாவீரர்களையும் தமிழீழ தனி நாட்டிற்காக வித்திட்டுள்ள இந்த நிலையில் தமிழீழ தனி அரசை நாம் ஒரு போதும் ஆதரித்ததில்லை என்று சம்மந்தமில்லாத சம்மந்தன் நேற்று தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சம்மந்தமில்லாத சம்மந்தன் கருத்து தெரிவிக்கையில்.. தமிழீழம் என்ற நாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல்,தனி நாடு கேட்டு சிங்கள நண்பர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் நோக்கமும் எமக்கு இல்லை என்று சிங்கள அரசுற்கு நாம் நக்கிப்பிளைக்க தயார் என்பது போல் தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்த சம்மந்தம் இல்லாத சம்மந்தன். தமிழீழ விடுதலைப் புலிகள் கை காட்டியதாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு கட்சியை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது தலைமையின் செயற்பாடுகள் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளதால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற ஆரம்பித்துள்ளது. இவரின் இந்தக் கருத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிழவு படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுவதோடு வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக அல்லது பல பிரிவுகளாக பிரியும் வாய்ப்பும் உள்ளதாகவே பலர் கருதுகின்றனர்

தலைவர் பிரபாகரன், ரணில் மற்றும் ஜெ.வி.பி. ரகசிய கூட்டணி...?

லண்டனில் இலங்கை தூதரகம் முன், இலங்கையின் சுதந்திர..?! தின விழா கொண்டாட்டத்தின் போது இலங்கை தேசிய கொடியினை எரித்து, அல்லது எரிக்க முயன்ற சில இலங்கைவாசிகள் மீது லண்டன் காவல் துறை நடவடிக்கை எடுத்து ஒருவரை கைது செய்து, மற்றவர்களை களைந்து செல்லுமாறு ஆணை பிறப்பித்தது..! இது குறித்து கருத்துக்களை வெளியிட்ட,வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லகம இவ்வாறு கூறினார். வெளிநாடுகளில் உள்ள, இலங்கையில் இருந்து வெளியேறிய அகதிகளாக குடியேறிய ( இதை இந்த அமைச்சர் மறை பொருளாக குறிப்பிடுகிறார்...ஏன் ? வெளிப்படையாக சொல்ல வேண்டியது தானே..! ) சிலர் இலங்கை தேசியக் கொடியை எரிக்க முயன்றனர்..இவர்களுக்கு துணையாக ஜெ.வி.பி யினரும், ரணில் கட்சியை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர் என்ற ஒரு பெரிய குற்றச்சாட்டை சுமத்துகிறார் இந்த வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லகம. மேலும் கூறுகையில், இந்த இருவரும் ( ஜெ.வி.பி. மற்றும் ரணில் கட்சியினர் ) பிராபாகரன் கூட ரகசிய கூட்டு வைத்துள்ளனர் என்றும் தெரிவித்து விட்டு வழக்கம் போல், இவ்வாறு கூறினார். இந்த மூவரும் சேர்ந்து இலங்கையின் ஒற்றுமைக்கும், சுதந்திரத்திற்கும், தேசிய நலனுக்கு எதிராகவும் செயல்படுகின்றனர்

அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் நவீன ஏவுகணையான 'அக்னி-3' இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அது தனது இலக்கைத் துல்லியமாக தாக்கியது.ஒரிசா கடலோரத்தில் உள்ள வீலர்ஸ் தீவில் இச்சோதனை இன்று நடத்தப்பட்டது. அணுஆயுதம் பொருத்தக்கூடிய வசதியுள்ள இந்த ஏவுகணை 3000 கி.மீ. வரை பாய்ந்து செல்லும் ஆற்றல் பெற்றதாகும். இந்த ஏவுகணை இந்தியாவின் சொந்தத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் விமானங்கள் மோதல்

நியூயார்க்:அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாயினர்.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் பவுல்டர் விமான நிலையத்திலிருந்து ஒரு இருக்கை கொண்ட விமானம், மூன்று பயணிகளை கொண்ட கிளைடர் விமானத்தை இழுத்து கொண்டு நேற்று முன்தினம் பறந்தது. பவுல்டர் நகரத்தின் வடக்கு பகுதியில் இந்த விமானங்கள் சென்று கொண்டிருந்த போது, நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் திடீரென வந்து ஒரு இருக்கை கொண்ட விமானத்தின் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஒரு இருக்கை மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட விமானங்கள் வெடித்து சிதறின.இந்த விபத்தில் மூன்று பேர் பலியாயினர். கிளைடர் விமானத்தில் இருந்த பைலட்டும், ஒரு பெண் பயணியும் அவரது குழந்தையும் பாரசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கி விட்டனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள பல தீவுகளில் இன்று கடுமையான நில நடுக்கம்

தெற்கு ஜப்பானில், கடற்கரையில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் உள்ள மியாகோஜிமா தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பூகம்ப ஆய்வியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் தாக்கத்தை பக்கத்து தீவுகளில் கடுமையாகவும், தைப்பீ உள்ளிட்ட நகரங்களில் லேசாகவும் மக்கள் உணர்ந்துள்ளனர். பல இடங்களில் கட்டிடங்கள் ஆட்டம் கண்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 3.10 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 என பதிவானதாக ஜப்பான் பூகம்ப ஆய்வியல் மையம் தெரித்தது. அமெரிக்க புவியயல் ஆய்வு மையத் தகவலின் படி இந்த நிலநடுக்கம் 6.4 என பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை

நாடு இல்லாத அகதி நாய்களுக்கு

என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா.. செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படை அதிகாரி ஒருவன் குரலில்தான் எத்தனை கம்பீரம், எத்தனை சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை? இதுதான் தமிழகக் காவல்துறை ஈழத்தமிழ் மக்கள் மீது அடிக்கும்போது பேசியவார்த்தைகள். வாழ்ந்த வீடும் இழந்து, வாழ்வதற்கு இருந்த நம்பிக்கைகளும் இழந்து உப்புச் சப்பற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தங்கள் வாழ்க்கையின் நிரந்தர அடையாளமாய்ச் சுமந்து திரியும் ஈழத் தமிழ் அகதிகள் கடைசியில் தமிழகத்திலேயே வைத்து தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குயது மட்டுமன்றி கடுமையான கண்டணத்திற்குரியது. ஒவ்வொரு தமிழனும் வெட்க்கித் தலைகுனியவேண்டிய ஒன்று. ஒரு உணர்ச்சிமிக்க இந்தியன் புலம்பல்: இந்த தேசத்தில், நீங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு நாங்கள் பத்ம பூஷனோ, இல்லை பத்மஸ்ரீயோ கொடுத்துக் கொண்டாடி இருப்போம், நீங்கள் பாவம் வாழ வழியின்றித் தொப்புள் கொடி உறவுகளைத் தேடி வந்தீர்கள், இங்கே பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளையும் நீங்கள் உங்கள் உறவுகள் என்று கருதி விட்டீர்கள், அவர்களுக்கு கூட்டணி தர்மங்களையும், ஆட்சிக் கட்டில்களையும் காப்பாற்றும் மிக உன்னதமான பணி இருக்கிறது. இந்திய இறையாண்மையை அலுங்காமல் பாதுகாக்கும் அளப்பரிய பணிக்கு இடையூறாக உங்கள் போராட்டம் இருக்குமேயானால் இப்படித்தான் அடிப்பார்கள், அது முள்ளிவாய்க்காலோ இல்லை செங்கல்பட்டோ எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம், வேறுபாடின்றிப் பேரினவாதத்தின் தடிகள் இப்படித்தான் இறங்கும். அதிரடிப்படைத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு மாவட்ட அளவில் இருக்கும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும், மிகுந்த உணர்வுப் பூர்வமான சிக்கல்கள் நீடிக்கும் ஒரு ஏதிலிகளின் சிறப்பு முகாமில் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கு உறுதியாகத் தமிழக அரச தலைவர்களின் வாய்மொழி உத்தரவாவது பெறப்பட்டிருக்க வேண்டும், என்கிற நிலையில் இது அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்றே கருத இடமிருக்கிறது. நீங்கள் ஏழைகளுக்கு வழங்கும் அரிசியைக் கடத்திப் பிழைப்பு நடத்தும் ஒருவராக இருந்தால் உங்களை நாங்கள் ஏற்றுமதியாளர் என்று சிறப்புச் செய்து விரைத்த காவல்துறை வணக்கம் வைப்போம், நீங்களோ பாவம் உழைக்கவும், பொருள் ஈட்டவும் வழி இல்லாத ஈழத் தமிழர்களாய்ப் போனீர்கள், உங்களை அடித்துத் துவைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நீங்கள் மணல் கொள்ளை நடத்தி மானம் கேட்ட வாழ்வு நடத்தும் மதிகெட்டவராக இருந்தால் உங்களுக்கு சாமரம் வீசி வரவேற்கும் கைகளாக நாங்கள் இருந்திருப்போம், நீங்களோ பாவம், பிழைக்கவே வழி இல்லாத பஞ்சப்பரதேசிகள் ஆனீர்கள், உங்களை எப்படி நாங்கள் விட்டு வைப்போம் உரிமைகள் கேட்க. இவை எல்லாம் போக நீங்கள் தமிழர்களாய் அல்லவா போனீர்கள், தமிழர்களுக்கு வாக்களிக்க உரிமையுண்டு, தேர்வு செய்ய உமைரியுண்டு, ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்வதற்கு அவர் பணம் அல்லவா கொடுக்கிறார், சோற்றுப் பொட்டலங்களுக்கு வோட்டுப் போடும் சோரம் போன நமக்கு யாரையும் கேள்விகள் கேட்கும் அதிகாரமெல்லாம் எதற்கு? யாரையும் குறை சொல்லிப் புலம்பிக் கொண்டு திரிவதில் எந்தப் பயனும் இல்லை உறவுகளே, இனி ஒவ்வொரு ஈழத் தமிழ்க் குடிமகனும் அவனுடைய குழந்தைகளும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு காணும் நிலை பெறப்பட வேண்டும், காலம் வழங்கிய அநீதியைத் துடைத்து வரலாற்றில் வெற்றி பெற்ற இனமாக மாறும் வெறியோடு உழைப்பதும் திட்டமிட்டு ஒருவருக்கொருவர் உதவும் நோக்கோடு பயணம் செய்வது பயன் தரும். புலம் பெயர்ந்த மக்கள் நடத்தும் பகட்டு விழாக்களைக் குறைத்து, ஈழத்தின் பெயரில் வாழ்க்கையும் அரசியலும் நடத்தும் போலி வேடதாரிகளைப் பல இலட்சம் செலவு செய்து அழைப்பதை விடுத்து இனி வருங்காலங்களில் பொருளாதார ரீதியில் வலுவிழந்து காணப்படும் உறவுகளை கைதூக்கி விடுவதிலும், கல்வி மற்றும் சமூக ரீதியில் இளைய தலைமுறையை மேன்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதிலும் தான் முகாம்களில் வாடும் ஏதிலிகளின் வாழ்க்கை உள்ளடங்கி இருக்கிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் 83ம் ஆண்டு துவங்கியது. யாழ்ப்பாண நகரில் துவங்கி

இலங்கை உள்நாட்டுப் போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்புகிறது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும், உற்பத்திப் பொருட்களை விற்க முடியாமல் திணறிய நிலை மாறியுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் 83ம் ஆண்டு துவங்கியது. யாழ்ப்பாண நகரில் துவங்கி, தொடர்ந்து தமிழர்கள் வசிக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களுக்கு பரவியது. போர் தீவிரத்தால் யாழ்ப்பாணம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இலங்கை ராணுவம் நடத்திய கடும் தாக்குதலுக்குப்பின், 1995ம் ஆண்டு யாழ்ப்பாண நிர்வாகம் அரசு கட்டுப்பாட்டில் வந்தது. உள்நாட்டுப் போர் தமிழர் வசிக்கும் பிற பகுதிகளிலும் தீவிரமடைந்திருந்ததால், யாழ்ப்பாண வாசிகள் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. துப்பாக்கிகளுக்கு பயந்து துன்பத்துடன் வாழ்ந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. யாழ்ப்பாணம், 1995ம் ஆண்டிலேயே ராணுவக் கட்டுப்பாட்டில் வந்த போதும், அவ்வப்போது ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மோதல் நடந்து கொண்டு தான் இருந்தது. புலிகளின் கொரில்லா தாக்குதலும், புலிகளை ஒழிப்பதாகக் கூறி ராணுவம் நடத்திய தாக்குதலாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அடிக்கடி நகரை விட்டு வெளியேறி அகதியாக தங்கி, மீண்டும் யாழ்ப்பாணத்துக்குள் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. பெரும்பாலான நாட்கள் ஊரடங்கில் கழிந்தன. யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், இலங்கையின் மற்ற பகுதிகளுடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் ஏ 9 நெடுஞ்சாலை மூடப்பட்டது. இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதி புலிகள் வசமும், மற்றொரு பகுதி ராணுவ வசமும் இருந்தது. இதனால், யாழ்ப்பாணத்துடனான தரை வழி போக்குவரத்து, முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. இயல்பு வாழ்க்கை முடங்கியது. இலங்கையின் மற்ற பகுதிகளுக்கு, யாழ்ப்பாணம் வாசிகள் செல்வது மிகக் கடினமானதாக இருந்தது. இது பற்றி யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த வியாசர் கூறியதாவது: வெளியூர் செல்ல வேண்டும் என்றால் ஒரு வாரத்துக்கு முன்பே திட்டமிட வேண்டும். அனுமதி கோரி, ராணுவ அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நாம் தெரிவிக்கும் காரணம் ராணுவ அதிகாரிகளுக்கு திருப்தியளித்தால் தான் விண்ணப்பத்தை பரிசீலித்து, அனுமதியை வழங்குவர். அதன் பின், விமானத்திலோ, கப்பலிலோ டிக்கெட் வாங்க வேண்டும். கப்பலில் என்றால் திரிகோணமலைக்கும், விமானத்தில் என்றால் கொழும்புக்கும் பயணம் செய்யலாம். பயணத்துக்கு எட்டு மணி நேரத்துக்கு முன்பே ராணுவத்திடம் பெற்ற அனுமதியை உள்ளூர் போலீசாரிடம் பதிவு செய்து, எப்போது திரும்புவோம் என்பதையும் சொல்ல வேண்டும். விமானத்துக்கு என்றால் பலாலி விமான தளத்துக்கும், கப்பல் என்றால் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் செல்ல வேண்டும். அதுவும் ராணுவ கண்காணிப்புடன்தான் செல்ல முடியும். தனி வாகனத்தில் சென்றால், ராணுவத்தினர் தான் ஓட்டிச் செல்வர். விமானத்தில் உடனே கொழும்பு சென்றுவிடலாம். கப்பலில் மூன்று நாட்கள் பயணம் செய்து திரிகோணமலையை அடையலாம். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங் கள் புலிகளிடம் இருந்ததால், கப்பல் பயணம் சர்வதேச கடல் எல்லை வழியாகத்தான் நடந்தது. எனவே, பயண நேரம் அதிகம். திரிகோணமலை துறைமுகத்தில் இறங்கி, அங்குள்ள போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். செல்ல வேண்டிய இடத்தையும், மீண்டும் திரும்பி வரும் நாளையும் பதிவு செய்துவிட்டு நாம் செல்லலாம். நாம் சந்திக்கும் நபர் இருக்கும் இடம் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் நமது விவரத்தை தெரிவிக்க வேண்டும். கடந்த டிசம்பர் மாதத்தில் கூட இதே நிலைதான் இருந்தது. அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டபின்தான், இது கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு வியாசர் கூறினார். இந்த நடைமுறைகளால், உற்பத்தி பொருட்களை விற்பது, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. வளர்ச்சி இன்றி யாழ்ப்பாணம் முடங்கியது. “கறுத்த கொழம்பன்’ என்ற அதிசுவையான மாம்பழ ரகம் யாழ்ப்பாணம் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே விளைகிறது. அவற்றை விற்க முடியாததால், விளைந்த இடத்திலே அவை உதிர்த்து நாசமான சோகமும் ஏற்பட்டது என்கிறார் தென்மராச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயி. கொழும்பில் இந்த மாம்பழத்துக்கு இப்போதும் கடும் கிராக்கி. விவசாய உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காததால் இந்த நிலை. அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் திண்டாட்டம் ஏற்பட்டது. வெளியூரில் இருந்து பொருட் கள் வரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், கடைகள் வெறிச்சோடின. தரைவழி புலிகள் வசம் இருந்ததால், யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம், எரிபொருள், உணவுப்பொருட்கள் போன்றவை கிடைப்பதில் கடும் சிக்கல் இருந்தது. மின்சாரம் அதாவது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தான் வினியோகிக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் இன்றி நகரம் இருண்டு கிடந்தது. போரில் பாதிக்கப்பட்ட பலர் நகரத்தை விட்டு வெளியேறி, அகதியாக வாழ்ந்தனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர், யாழ்ப்பாணம் நகரில் இருந்து வெளியேறியுள்ளதாக யாழ்ப்பாணம் நகர சபையின் புள்ளிவிவரம் கூறுகிறது. யாழ்ப்பாணம் நகரில், குண்டுகளால் சிதைந்த பல கட்டடங்களைக் காண முடிந்தது. யாழ் கோட்டைக்குள் இருந்து ராணுவம் குண்டு வீசியதால், அதைச்சுற்றிய பகுதிகள் முற்றாக சிதைந்து போயுள்ளன. நல்லூரில் புலிகளின் ஆயுதக் கிடங்கு தகர்க்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. புலிகள் முகாமிட்டிருந்த இடங்களில் எல்லாம், ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன் அணிவகுத்து நிற்கின்றனர். பெரிய பனை மரங்களை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி, பதுங்கு அறைகள் அமைத்துள்ளனர். ” இவை புலிகள் அமைத்த பதுங்கு அறைகள். அவற்றை ராணுவம் கைப்பற்றியபின், தங்கள் பதுங்கு அறையாக பயன்படுத்துகின்றனர்’ என்றார் முளாயைச் சேர்ந்த சிவயோகலிங்கம். யாழ்ப்பாணம் நகரில் தகர்ந்து கிடக்கும் வீடுகளில் பல, ராணுவ கட்டுப்பாட்டில் தான் உள்ளன. “இலங்கைப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்த பனை மரங்கள், குண்டு தாக்குதல்களுக்கு இலக்காகி வேதனையை சுமந்து நிற்கின்றன. போரில் ஏராளமான பனைமரங்கள் அழிந்து விட்டன,’ என்று வாலிகாமத்தைச் சேர்ந்த ஒருவர் வருத்தத்துடன் கூறினார். அன்றாட வாழ்வில் நெருக்கடி, உற்பத்தியில் பாதிப்பு, பொது வளங்களை கையாள்வதில் பின்னடைவு, அடிப்படை தேவைகள் நிவர்த்தி செய்வதில் சுணக்கம் என அனைத்து நிலையிலும் யாழ்ப்பாணம் செயலிழந்திருந்தது. கடந்த டிசம்பர் மாதம் வரை இதே நிலைதான். இலங்கையில் அதிபர் தேர்தல் அறிவிப்புக்குப்பின், யாழ்ப்பாணத்தின் மீதான கட்டுப்பாடுகள், கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கத் துவங்கியுள்ளனர். ராணுவத்தின் பிடியில் இருந்து யாழ்ப்பாணம் முற்றாக விடுபடாவிட்டாலும், மாற்றங்கள் தெரிகின்றன. யாழ்ப்பாணத்துடனான பிரதான நெடுஞ்சாலை ஏ 9 திறக்கப்பட்டுள்ளதால், இலங்கையின் மற்ற பகுதிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகரித்துள்ளதால், நகரில் விரைவான மாற்றங்கள் தெரிகின்றன. ஊரடங்கு உத்தரவில் வருந்திய யாழ் நகரம்: ராணுவ ஊரடங்கில் தான் யாழ்ப்பாணம் பெரும்பாலும் இயங்கியது. ஊரடங்கின் போது மக்கள் வெளியில் நடமாடமுடியாது. தவறி வெளியில் வருபவரை, விசாரணைக்காக ராணுவம் அழைத்துச் சென்று விடும் அல்லது தேசிய அடையாள அட்டையை பறித்து சென்று விடுவர். அதை திரும்ப வாங்குவதற்குள் படாத பாடு பட வேண்டும் என்றார் திருநெல்வேலி கந்தையா. அவர் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவின் போது நான் பட்ட அவதியைச் சொல்லி மாளாது. என் மகளுக்கு உடல்நலம் குன்றியதால், பக்கத்துத் தெருவில் உறவினரை அழைக்க, இரவில் சென்றேன். ராணுவம் என்னை பிடித்துக் கொண்டது. எவ்வளவோ சொல்லியும் விட மறுத்துவிட்டனர். பின்னர் எனது அடையாள அட்டையை பறித்து சென்றுவிட்டனர். மறுநாள் உரிய விளக்கம் சொல்லி அடையாள அட்டையை பெற சென்றேன். அங்கு நீண்ட நேரம் காக்க வைத்தனர். முட்டிப்போட்டு நிற்க வைத்து, பின்னர் எழுதி வாங்கிக் கொண்டு அடையாள அட்டையை தந்தனர். இது போன்ற நிலைமைகளை சமாளித்துத்தான் இங்கு வாழ்கிறோம். இவ்வாறு கந்தையா கூறினார். அவசரத்துக்கு இரவில் வெளியில் செல்ல வேண்டும் என்றால், லாந்தர் விளக்கை ஒரு கையிலும், வெள்ளைக் கொடியை மறு கையிலும் பிடித்துக் கொண்டு, அருகில் உள்ள ராணுவ முகாமுக்கு செல்ல வேண்டும். பின்னர், அவர்கள் துணையுடன், வேண்டிய இடத்துக்கு செல்லலாம். இதுதான் நடைமுறையாக இருந்தது

இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் டாலர் இராணுவக் கடனுதவி

இலங்கை ஜனாதிபதியாக இரண்டாவது முறை தேர்தெடுக்கப்பட்ட பிறகு தனது அதிகாரபூர்வமான முதல் பயணமாக ரஷ்யா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள், இந்த பயணத்தின் போது 300 மில்லியன் டாலர்கள் அளவுக்கு ஆயுதக் கொள்வனவுகள் செய்யும் நோக்கில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளத்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் நடைபெற்ற போர் முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த அளவுக்கு ஆயுதக் கொள்வனவு எதற்கு என பலதரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதன் பின்புலத்தில் போருக்கு பின்னர் இந்த இராணுவ உடன்பாட்டின் நோக்கம் என்ன என்று இலங்கையிலிருக்கும் இராணுவப் பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார். அதில் தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் என்பது 300 மில்லியன் டாலர்கள் கடனுக்கான உடன்பாடுதான் என்றும் அந்தக் கடனுதவி ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இராணுவ உபகரணங்கள், அதாவது புலிகளுடனான இறுதி யுத்தத்துக்கு முன்னர் வாங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை பழுதுபார்க்கவும், மேம்படுத்தும் வகையிலேயே வழங்கப்படவுள்ளது என்றும் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு பலகோடி மதிப்பிலான நிலக்கரி ஆஸ்திரேலியாவில் இருந்து ஏற்றுமதி

சீனாவுக்கு பலகோடி டன் நிலக்கரியை விற்பனை செய்யும் உடன்படிக்கையில் தாம் கைச்சாத்திட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் சுரங்கத் தொழில் அதிபர் கிளைவ் பால்மர் தெரிவித்துள்ளனர். ரிசோர்சஸ் ஹவுஸ் என்ற தனது நிறுவனம் சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை வென்றுள்ளதாகவும், ஆண்டொன்றுக்கு சுமார் 40 மில்லியன் டன் நிலக்கரியை தாங்கள் விற்பனை செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஏற்றுமதி திட்டத்தை செயற்படுத்த ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியில் மிகப்பெரிய சுரங்கத்தொழில் மையம் ஒன்று அமைக்கப்படும் என்றும், நிலக்கரியை ஏற்றுமதி செய்ய 500 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சீனாவின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை வளங்களை பெற சீனா முயற்சித்து வருகிறது.

தேசத்திற்கு தொழில் நுட்பம்

யாழ் தீவுப்பகுதிகள் மற்றும் தலை மன்னார் பகுதிகள் பாக்கு நீரிணையின் ஒடுக்கமான பகுதிக்குள் வருகின்றன. இந்த பாக்கு நீரிணையானது வட கிழக்காக வங்காள விரிகுடாவினுள் விரிகின்றது. தென்மேற்காக இந்து சமுத்திரத்தினுள் திறக்கின்றது. இவ்விரு திறந்த நீர்பரப்புகளும் நமது தீவுப்பகுதிகளை அண்டி ஒடுங்குகின்றன. இது ஒரு புனலின் ஒடுக்கமான பகுதிக்கு ஒப்பிடலாம். இவ்விரு திற‌ந்த‌ பாரிய‌ நீர் ப‌ர‌ப்புக‌ளை இணைத்து ந‌ம‌து தீவுப் ப‌குதிகளிற்கூடாக கடல் நீரோட்டம் ஓடுகிறது. இந்த‌ சமுத்திர நீரோட்டமானது ஆண்டு முழுவதும் ஓடுகின்றது. இந்த நீரோட்டங்களால் கடத்தப்படும் சக்தி அளவற்றது. சேது சமுத்திர திட்டம் வெற்றி பெற்றால் இந்த நீரோட்டத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும். ஆறுக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்தி மின் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌டுவ‌து அறிந்த‌தே. இந்த‌ ச‌முத்திர‌ நீரோட்ட‌ங்க‌ள் இப்ப‌டியான‌ ஆறுக‌ள் ப‌ல‌வ‌ற்றிற்கு ச‌மான‌மான‌வையாகும். இதிலிருந்தே இவ‌ற்றின் மின் உற்ப‌த்தி வ‌லு என்ன‌ என்று க‌ணித்துக் கொள்ள‌லாம். தீவுப்பகுதிகளிற்கிடையேயான ஒடுங்கிய கடற்பரப்புகள் இந்த இயக்கச் சக்தியை மின் சக்தியாக மாற்றக் கூடிய விசிறிகளைப் (Turbines) பொருத்தகூடிய தளங்களை வளங்கும். இந்த திட்டம் பற்றி போதுமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நமது தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செயக்கூடிய வளம் எம்மிடம் உள்ளது.

கிளிநொச்சியில் இரண்டு தமிழ் பெண்கள் ஸ்ரீலங்காப்படையினரால் படுகொலை

கிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் இரண்டுபெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பபட்டுள்ளார்கள். இவர்களது உடலங்களை மக்கள் இனம்காட்டியுள்ளதுடன் உடலங்களை ஸ்ரீலங்கா காவல்துறையினர் எடுத்துசென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண்கள் இருவர் படுகொலை செய்யபட்டு கிணற்றில் வீசப்பட்டதை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இன்னிலையில் படுகொலை செய்யபட்ட பெண்கள் யார் என இனம்காணமுடியாது உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்

தேர்தலில் ஒன்றிணைந்து செயற்பட்ட எதிரணிக் கட்சிகளின் தேர்தல் கூட்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிளவுபடும் நிலை

எதிரணிக் கட்சிகள் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது குறித்த சர்ச்சை இடம் பெறுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.தே.க. யானைச் சின்னத்தில் போட்டியிடுவதில் மிக உறுதியாக இருக்கின்றது. ஜே.வி.பியை அடுத்த தேர்தலில் கூட்டணியில் இணைத்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ள ஐ.தே.க., தேர்தலுக்குப் பிறகு ஜே.வி.பி.யை சேர்த்துக் கொள்ளுவது குறித்து ஆலோசிக்கலாமெனத் தெரிவித்துள்ளது. எதிரணியின் சரத் பொன்சேகா தரப்பு அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தயார் நிலையிலிருந்தபோதும் அந்த சின்னத்திற்கு உரியவரான ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க அனுமதியளிக்க மறுத்ததையடுத்து கழுகு சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிரணியில் பிளவு அதேவேளையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முற்றாக நிராகரித்துள்ளார். இதன் காரணமாக ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பதினான்கு கட்சிகளில் ஐந்து கட்சிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்காக பிரிந்து நின்று செயற்படுவதெனத் தீர்மானித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெனரல் சரத் பொன்சேகா வீட்டில் நீண்ட நேரம் இடம்பெற்ற கலந்தாலோசனையின் பின்னரே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜெனரலின் நெருங்கிய வட்டாரங்கள் வீரகேசரி வார வெளி யீட்டுக்குத் தெரிவித்தன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமைக்கப் பட்ட அதே கூட்டணியே நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்வது. அன்னப் பறவைச் சின்னத்திலேயே தேர்தல் களத்தில் குதிப்பது, தன்னையே பிரதான வேட்பாளராக கொண்டு தேர்தலுக்கு முகங்கொடுப்பது ஆகிய மூன்று ஆலோசனைகளையும் ஜெனரல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்திருந் தார். இந்தக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்த ரணில் விக்கிரமசிங்க மாற்று ஆலோசனை களையும் முன்வைத்தார். ஆனால், ரணிலின் அனைத்து ஆலோசனைகளையும் ஜெனரல் பொன்சேகாவும் முற்றாக நிராகரித்து விட்டார். தானே பிரதான வேட்பாளராகக் களமிறங் குதல், யானைச் சின்னத்திலேயே தமது கட்சி ஊடாகப் போட்டியிடல், ஜெனரல் சரத் பொன் சோகாவுக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் முக்கிய பதவி யொன்றினை வழங்குவது போன்ற ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோச னைகளையே ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். சமரச முயற்சி தோல்வி இவ்வாறான முரண்பாடுகளைக் களைந்து இவர்களுக்கிடையில் சமரசத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய தலைவர்கள், குறிப்பிட்ட இருதரப்பினரையும் சமரசப்படுத் தும் வகையில் கடந்த புதன், வியாழக் கிழமைக ளில் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. சரத் குழு கழுகு சின்னத்திலேயே போட்டியிட முடிவு இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத் தில் புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திராவின் தலைமையில் நடைபெற்ற மந்திராலோசனையில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் 14 கட்சி களில் ஐந்து கட்சிகள் எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன் சேகாவுக்கு ஆதரவாகச் செயற்படுவதென்றும் கழுகு சின்னத்தில் போட்டியிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. ஐ.தே.க ஜே.வி.பி.இணைப்பு இல்லை இது இவ்வாறிருக்க எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக் குள் ஜே.வி.பி.யையும் இணைத்துக் கொண்டு போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன் வைக்கப்பட்ட ஆலோசனைகளையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார். அவ்வாறு ஜே.வி.பி.யினரையும் இணைத்துக் கொள்ளும் போது அவர்களுக்கான வேட் பாளர் பட்டியலில் இட ஒதுக்கீட்டில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வருமென ரணில் தெரிவித்துள்ளார். அதுமட்டு மன்றி இரு கட்சிகளின் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டிய தாக வும் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி. யினை இணைத்துக் கொள்வதால் தமிழ் பேசும் மக்க ளின் வாக்குகளையும் தமது முன்னணி இழக்க நேரிடலாமெனவும் அவர் சுட்டிக்காட் டியதாக நம்பகமான செய்திகள் தெரிவிக் கின்றன. நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேவை ஏற்படின் ஜே.வி.பி.யையும் இணைத்து அர சொன்றினை அமைப்பது குறித்து ஆலோசிக் கலாமெனவும் ரணில் தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இட ஒதுக்கீட்டில்ஐ.தே.க. ஜ.ம.மு இடையில் இழுபறி இதேவேளை ஜனநாயக மக்கள் முன்ன ணிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை பங்கிட் டுக் கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதா கவும், ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத் திலே நேற்று முன்தினமிரவு ரணில், பொன் சேகா, மனோ, ரவூப், கரு ஜயசூரிய, ரவி கருணா நாயக்க ஆகியோர் கலந்துகொண்ட பேச்சு வார்த்தைகளின் இடையில் மனோ கணே சன், ரவூப் ஹக்கிம் ஆகியோரது கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு ஆசனம் மாத்திரமே கொழும்பு மாவட்டத்தில் ஒதுக்கப்படுமென ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்தபோது அதை கோபத்துடன் இடை மறித்த மனோ கணேசன் தாம் இங்கு வந்தது ஆசனங் களை பற்றி பேசுவதற்காக இல்லை என்றும், தமது கட்சியின் பங்களிப்பு இருந்திருக்கா விட்டால் கொழும்பு மாநகரத் தின் ஐந்து தொகுதிகளிலும் ஜனாதிபதித் தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியாதென்றும் கூறிவிட்டு கூட்டத்திலிந்து இடை நடுவில் வெளியேறியதாக வெளிவந்த செய்தி தொடர் பில் ஜ.ம.மு தலைவர் மனோ கணேசனை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் கூறியதாவது, இச்செய்தி உண்மையானது தான். சரத் பொன் சேகாவை தொடர்ந்தும் எமது கூட்டணி யில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்று நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது,கொழும்பு மாவட் டத்தில் எமது கட்சி சார்பாக கூட்ட ணியிலே போட்டியிடும் வேட்பாளர் தொகை பற்றிய கருத்து பேசப்பட்டமை துரதிர்ஷ்டவசமானதா கும். இதை பேசுவதற்காக நாம் அங்கு போகவில்லை. நேற்று முன்தினம் காலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரின் அழைப் பின் பேரில் அவரை நான் சந்தித்தபொழுது, ஜே.வி.பி.யின் வேட்பாளர்களை கூட்டணி வேட்பாளர் பட்டியலிலே உள்வாங்குவதற்கு உள்ள இயலாமையையே தாம் அவ்விதம் குறிப்பிட்டதாகவும், எமது கட்சியின் வேட் பாளர் தொகை பற்றி கருத்துக் கூறவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க என்னிடம் விளக்கி கூறினார். எனவே, இத்துடன் இவ்விவகாரம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது. எனினும் சிலமணி நேரங்களுக்கு முன்னாலே நடைபெற்ற இந்த கடைசி கலந்துரையாடலின் போது ஐ.தே.க தலைவரிடம் நான் தெரிவித்த கருத்துகளை ஊடகங்களின் மூலமாக தமிழ் மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமையென எண்ணுகின்றேன். எமது கட்சியான ஜனநாயக மக்கள் முன் னணி கடந்த மூன்று வருடங்களில் துரித வளர்ச் சியை கண்டுவிட்ட ஒரு தேசிய தமிழ் கட்சி யாகும். எமது இன்றைய வளர்ச்சிக் கட்டத்தை ஐ.தே.க புரிந்துகொண்டு எமக்குரிய அந் தஸ்தை வழங்கவேண்டும். எதிர்வரும் தேர்த லில் நாம் நாடு முழுக்க பல்வேறு மாவட்டங் களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். எனவே, நாம் இன்று ஓர் கொழும்புக் கட்சி அல்ல. ஆனால் கொழும்பு மாவட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவருக்கும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். தலைநகர தமிழ் மக்கள் எனக்கு தொடர்ந்து வாக்களித்து, எமது கட்சிக்கு தந்துவரும் உற்சாகத்தினால்தான் இன்று நாம் நாடு முழுக்க தேசிய ரீதியாக செயற்பட முடிகின்றது. எனவே என்னை வாழ வைக்கும் தலைநகர தமிழ் மக்களை நான் ஒருபோதும் மறந்துவிடமாட்டேன். கொழும் பிலே வாழும் இந்தியவம்சாவளி மற்றும் வடக்கு, கிழக்கு சார்ந்த அனைத்து தமிழ் மக்களும் தமிழர்கள் என்ற இன அடிப்படை யில் எமது கட்சியுடன் உணர்வு பூர்வமாக அணிதிரண்டு உள்ளார்கள் என்பதை பெரும் பான்மை கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் சுமார் 25 உறுப் பினர்கள் தமது கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, ஆளுங்கட்சியுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டுள் ளார்கள். ஐ.தே.க.வுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் வந்த மலையக கட்சிகளும் இன்று அரசுடன் ஒட்டிக்கொண்டி ருக்கின்றன. ஆனால் நாம் உறுதியுடன் பல்வேறு சவால்களை சந்தித்தபடி ஐ.தே.க கூட்டணியில் தொடர்ந்தும் இருந்துகொண்டி ருக்கின்றோம். இதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். எனவே ஐக்கிய தேசிய கட்சி எமக்கு கடமைப்பட்டிருக்கின்றது. அரசியல் சவால்கள் என்ற ஆற்றை கடக்கும் வரைக்கும் அண்ணன், தம்பி எனக்கூறிவிட்டு ஆற்றைக் கடந்தபின் அதாவது நாடாளுமன்ற தேர்தலின் போது நீ யாரோ நான் யாரோ என ஐ.தே.க கூறுமானால் நாம் அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். கொழும்பு மாவட்டத்திலேயுள்ள ஒரு சில ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை இன அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளின் மீது பேராசை இருக்கின்றது. எமக்கு இரண்டு இடங்களை கொடுத்துவிட்டு தமிழர்களின் மூன்றாவது விருப்பு வாக்கை கவர்ந்துகொள்வது இவர்களது முதல் திட்டம். அது சரிவராவிட்டால் தமிழ் வாக்காளர்களின் மூன்று விருப்பு வாக்குகளுக்கு எதிராக நான்கு அல்லது ஐந்து தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி எமது மக்களின் விருப்பு வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்பது இவர்களது இரண்டாவது திட்டம். அதாவது தமிழ் மக்களின் கட்சி வாக் குகள் யானை சின்னத்திற்கு வந்து குவிய வேண்டும். ஆனால் தமிழர்களின் விருப்பு வாக்குகள் சிதறடிக்கப்பட்டு உரிய தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடாது என்ற இந்த கபடத்தனமான இனவாத ஐ.தே.க அரசியல் வாதிகளை பற்றி எமக்கு தெரியும். தமது சுயநல நோக்கங்களுக்காக இவர்களுக்கு துணை போகும் சில தமிழர்களையும் எங்களுக்குத் தெரியும். இவர்களை இனிமேலாவது திருந்துங் கள் என நாம் கூறுகின்றோம். பல்லாயிரக் கணக்கான தமிழ் விருப்பு வாக்குகள் பெரும் பான்மை வேட்பாளர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் ஒரு நூறு சிங்கள வாக்குக ளைக்கூட இவர்களால் எங்களுக்கு பெற்றுத்தர முடியாது. இந்த ஒரு வழிப்பாதை மோசடி அரசியலுக்கு நாம் இடங்கொடுக்க மாட்டோம். கொழும்பு மாவட்டத்தில் மூன்று தமிழ் எம்.பி.க்களை நாம் உருவாக்குவோம். ஏனென் றால் தமிழர்களுக்கு துன்பம் வந்தால் அது எனக்குத்தான் வலிக்கின்றது. எனவே எனக்கு துணையிருப்பதற்கு இன்னும் இரண்டு எம்.பி.க்களை நாம் பெறவேண்டும். இது இன வாதம் இல்லை. எங்களது உரிமை. அடுத்த வர்களின் உரிமைகளில் நாம் ஒருபோதும் அபகரிக்க மாட்டோம். அதேவேளையில் எங் களது உரிமைகளில் ஓர் அங்குலத்தையேனும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எனவே ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்கு உரிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு கிடைக்கவேண்டும். எங்கள் தன்மானத்தை விட்டு விட்டு வேட் பாளர் ஆசனங்களுக்காக நாங்கள் எவரிடமும் மன்றாடுவோம் என்று கிஞ்சித்தும் கருதவேண் டாம் என நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன் னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

மகிந்தா மன்றாட்டம்

அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் -111 இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் நட்பை பெறுவதற்கு நாம் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அதனை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என மகிந்த மாட்டினிடம் தெரிவித்துள்ளார்.நாம் அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களத்துடன் தொடர்பில் உள்ளோம் எனவே அதற்கு தேவையான உதவிகளை செய்ய முயற்சிகளை மேற்கொள்வோம் என மாட்டின் மகிந்தாவிடம் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கு அமெரிக்கா உணவையும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.எனினும் சிறீலங்காவுக்கான எல்லா உதவிகளையும் அமெரிக்கா வழங்குமான என கேட்கப்பட்டபோது அதனை நாம் எதிர்பார்க்க முடியாது, எனினும் அதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுஅமைப்புக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகளை மாட்டின் சந்தித்திருந்தார். அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளதாவது போர் அடிமட்ட மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பெருமளவான மக்கள் பதிப்படைந்துள்ளனர். நான் வடக்கிற்கு சென்றிருந்தேன், எனது குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கும் சென்றிருந்தனர். நான் மல்லாவிக்கும், கிளிநொச்சிக்கும் சென்றிருந்தேன் அங்குள்ள மக்கள் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். அவர்களிடம் போரின் அச்சம் அகலவில்லை. எனினும் போர் நிறைவுபெற்றது அவர்களுக்கு மகிழ்ச்சியானதே தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதனை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது தொடர்பாக அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபடும்படி குடும்பத்தினர் வற்புறுத்தினர்

தற்கொலை குண்டுதாக்குதல்கள் வாடிக்கையாகி வரும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணப்பகுதியிலிருந்து ஒரு பஷ்டூன் இனச் சிறுமி, தன்னைத் தற்கொலைக் குண்டுதாரியாகுமாறு நிர்ப்பந்தித்த தனது குடும்பத்தினரிடமிருந்து தப்பி வந்து தனது கதையை பிபிசியிடம் கூறியிருக்கிறார். இவரது கருத்துக்களை பக்கச்சார்பற்ற வகையில் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், பாகிஸ்தான் போலிசார் இவரது இந்தக் கதை உண்மையாக இருக்கக்கூடும் என்று தாங்கள் நம்புவதாகவும், அவர் அளிக்கும் தகவல்கள் மிகவும் பயனுள்ளவை என்றும் கூறுகின்றார்கள். “நீ தற்கொலை குண்டுதாரியாகி இறந்தால், எங்களை விட முன்னதாக சொர்க்கத்துக்கு போவாய்” என்று அந்தப் பெண்ணின் சகோதரனும் தந்தையும் கூறியுள்ளனர். இவரது இளைய சகோதரியும் இந்த மாதிரி தற்கொலை குண்டுதாரியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது

இளைஞர்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தந்தையும், தாத்தாவும் 16 வயது பெண்ணை குழி தோண்டி உயிருடன் புதைத்தனர். துருக்கியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.தென்கிழக்கு துருக்கியில் உள்ளது காடா நகரம். அங்கு வசிப்பவர் அய்கான். அவருக்கு 9 குழந்தைகள். அவர்களில் ஒருத்தி 16 வயது மதினா மெமி. இவளை கடந்த 40 நாட்களாக காணவில்லை என அக்கம்பக்கத்தினரிடம் இருந்து போலீசுக்கு தகவல் சென்றது. சந்தேகம் அடைந்த போலீசார், தந்தை, தாத்தாவிடம் விசாரித்தனர். இருவரும் சேர்ந்து வீட்டின் பின்பகுதியில் 6 அடி ஆழ குழி தோண்டி மதினாவை உயிருடன் புதைத்த கொடுமை தெரிய வந்தது. இதையடுத்து மதினாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. குழிக்குள் உட்கார்ந்த நிலையில் பின்னால் கைகள் கட்டப்பட்டு மதினா உடல் இருந்தது. ‘‘எங்கள் எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்து இளைஞர்களுடன் மதினா பேசி வந்ததால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்று பயந்தோம். அதனால், அவளை உயிருடன் புதைத்தோம்’’ என்று இருவரும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக தீடீரென புத்தர் சிலை முளைத்துள்ளது

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள காளி கோயில் அரச மரத்தின் கீழ் திடீரென புத்தர் சிலை முளைத்துள்ளது. வெள்ளை நிறத்திலான சிறிய புத்தர் சிலை நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்ப்பட்டுள்ளது. எனினும் இன்று அச்சிலையைக் காணவில்லை என உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. யாழ் குடாநாட்டில் சிறீலங்கா அரசாங்கம் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை அழிக்கும் நவடிக்கை ஆரம்பித்துள்ளது என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு

அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு அமையப்போகிறது? சுதந்திரதின உரையில் சிறீலங்கா ஜனாதிபதி கூறியவை தொடர்பில் உருப்படியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா? இலங்கையின் 62 ஆவது சுதந்திரதினம் கண்டி மாநகரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி அன்று பிரித்தானிய கொலனித்துவவாதிகள் தமக்கு விசுவாசமான இலங்கையின் நிலவுடைமை வழிவந்த மேட்டுக்குடியினரின் கைகளில் இச் “சுதந்திரத்தைக் கையளித்துச் சென்றனர். இந்த சுதந்திரம் யாருக்கு யாரால் ஏன் வழங்கப்பட்டது என்று ஒரு கேள்வி எழுப்பி அதற்கு விடைதேடி எழுத முற்பட்டால் பக்கம் பக்கமாக எழுத முடியும். விவசாயிகளும் தொழிலாளர்களும் மீனவர்களும் பிற பின் தங்கிய மக்களும் மட்டுமன்றி அரசாங்க, தனியார் துறைகளைச் சேர்ந்த நடுத்தரவர்க்க மக்களும் இச் சுதந்திரத்தின் கீழ் எவற்றை அனுபவித்து வந்திருக்கிறார்கள் என்று சிந்திக்கும் போதே இச்சுதந்திரத்தின் போலித் தன்மையைக் கண்டுகொள்ள முடியும். சொத்து சுகம் வாய்ப்பு வசதிகளைப் பெற்றவர்களும் அவர்களின் பிரதிநிதிகளாக நின்று அவர்களுக்கும் அவர்களது சொத்து சுக வாழ்வுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் கொடுத்து வந்த ஆளும் வர்க்க சக்திகளுக்கு சுதந்திரம் என்பது நூறுவீத அர்த்தமுடையதாகும். ஆனால், சாதாரண மக்கள் எனப்படும் தொண்ணூறு வீதத்தை உள்ளாக்கிய இனம், மதம், மொழி, பால், பிரதேசம் கடந்து உழைக்கும் மக்களாக வாழ்ந்து வரும் மக்களுக்குச் சுதந்திரம் என்பது பெற்றுக்கொடுத்தவை அற்பமானவைகளேயாகும். இதனாலேயே சுதந்திரம் என்பதன் பயன்கள் ஒருசிலரது கைகளிலும் வீடுகளிலும் களிநடனம் புரிய ஏகப் பெரும்பான்மையோரின் வீடுகளிலும் அன்றாட வாழ்விலும் முகாரி இராகத்தின் கீழ் தரித்திர வாழ்வாக இருந்து வருகிறது. இத்தகைய சுதந்திரத்தின் 62 ஆவது நினைவாக நடத்தப்பட்ட கண்டிச் சுதந்திரதின விழா முற்றிலும் புதிய சூழலில் நடத்தப்படுவதாக மகிந்த ராஜபக்ஷ தனது சுதந்திரதின உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது யுத்தம் முடிவுற்ற பயங்கரவாதத்தை அழித்த பின் நடைபெறும் முதலாவது சுதந்திர தினம் என்பதே அவர் குறிப்பிட்ட புதிய சூழலாகும். அதுமட்டுமன்றி, ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஐம்பத்தியெட்டு வீத வாக்குகளைப் பெற்று அடுத்த ஆறு வருடங்களுக்கான ஆணையையும் பெற்றுக்கொண்டார். அது மட்டுமன்றி மேலும் ஒரு வருடத்தை உயர் நீதிமன்றம் மூலமும் பெற்று ஏழு வருட தனிநபர் சர்வாதிகார நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகி உள்ளமையும் புதிய சூழலே ஆகும். இவற்றுடன் கூடவே விரைவில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வர இருக்கிறது. அத்தேர்தல் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை விட உணர்ச்சியும் கொந்தளிப்பு நிறைந்த தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் ஒருவரைத் தேர்ர்வு செய்வதாகவும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதாகவும் இருந்தது. ஆனால், 228 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் போட்டியிடும் தேர்தலாகும். முதலாளித்துவ ஜனநாயகத் தேர்தல் மரபின் படியும் இலட்சணத்தின் வாயிலாகவும் பணம், பதவி, ஊர், சாதி, இன, மத, மொழி வெறிச் கூச்சல்கள் தாராளமாகத் தலைவிரித்தாடும். அதனால் வன்முறைகள் தலைவிரித்தாடும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆயிரத்தைத் தாண்டிய வன்முறைச் சம்பவங்களும் ஆறுபேர் வரை உயிர் பறிக்கப்பட்ட நிகழ்வுகளும் சோகமாக இடம்பெற்றன. இவை பாராளுமன்றத் தேர்தலில் பல மடங்காக உயர வாய்ப்பு உண்டு. நமது அதிகாரம் நமது ஆதிக்கம் என்ற ரீதியில் ஆளும் தரப்பு சகலவற்றையும் செய்யவே செய்யும். ஜனநாயகம் கருத்துரிமை ஊடக சுதந்திரம் ஏன் மனித உரிமைகள் கூட ஆளும் தரப்பினருக்குரியவையாகவே இருந்து வந்துள்ளன. 1977/1994 காலத்தின் பதினேழு வருடகால ஐக்கிய தேசியக் கூட்சியின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி எவ்வாறு இடம்பெற்றன என்பது மறதியாலோ அல்லது அறணைத்தன அரசியல் நாகரிகத்தாலோ மறக்கப்பட்டு விட்டது. வரலாற்றுப் பார்வையுடனும் யதார்த்தத்தின் வாயிலாக உண்மைகளைக் கண்டறிந்து கடந்த காலத்திலிருந்து படித்தறிந்து அரசியல் சிந்தனை செய்வது நமது நாட்டில் அருகிவிட்டது. அதற்கான சூழல் வராது தடுப்பதில் ஆளும் வர்க்க சக்கார் என்போர் எல்லாத் தரப்பிலும் இருந்து வருகிறார்கள். அதற்கேற்ற சமூகச் சூழலைத் தக்க வைப்பதில் உள்நாட்டு,வெளிநாட்டு சக்திகள் முனைப்புடனும் நுணுக்கமான வழிமுறைகளிலும் செயல்பட்டு வருகிறார்கள். * இதில் மஞ்சள் உடைதரித்தோர், வெண்ணுடை உடுத்தியோர்,முக்குறி வைத்துப் பொட்டுப்புனை பூசி நிற்போர், கோட்டுச் சூட்டுக் கழுத்துப் பட்டி அணிந்தோர், கறுப்பு வெள்ளைத் தோல் படைத்தோர் எல்லோருமே ஒன்றாகிக் கருத்துருவில் சங்கமமாகி நின்று வருகிறார்கள். இத்தகையோர் தான் சுதந்திரத்தின் பங்காளிகளும் பயனாளிகளுமாக இருந்து வருகிறார். ஆனால், மக்கள் தான் பாவத்தையும் சிலுவையையும் சுமப்பவர்களாக்கப்பட்டுள்ளனர். இதில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் வேறுபாடு கிடையவேகிடையாது. * இவை ஒரு புறமிருக்க ஏழுவருடத்திற்க்கு அசைக்க முடியாத அதிகாரத்தைப் பெற்றுள்ள மகிந்த ராஜபக்ஷ தேர்தல் வெற்றிக்குப் பின் கண்டியில் சுதந்திரதின உரையை நிகழ்த்தியிருக்கிறார். அந்த உரை தன்னடக்கமான அம்சங்களாகக் கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை வழங்கியிருப்பதாகச் சில அரசியல் அவதானிகள் கருத்துக் கூறினர். சிங்களத்தில் மட்டுமன்றி தமிழிலும் பின் இயல்பாகப் பேசுவது போன்று பேசியதையும் அவதானிக்க முடிந்தது. அப்பேச்சில் வன்மத்தையோ அன்றி வக்கிரத்தையோ அவதானிக்க முடியவில்லை என்பது கவனத்திற்குரியதாயினும் சிறுபான்மைத் தேசிய இனங்களைக் கண் மூடிக்கொண்டு தனது வழியில் இணங்கி வருமாறு கேட்டுக் கொண்டதையும் மகிந்த ராஜபக்ஷ வின் பேச்சில் காணமுடிந்தது. இனிமேல் பிரிவினைவாதம், இனவாதம், பயங்கரவாதம் வேண்டாம். நாம் ஒரு தாய் பிள்ளைகள். சிறுபான்மை இனம் என எவரும் இல்லை. சமாதானம், சமத்துவம், புரிந்துணர்வு, அபிவிருத்தி ஆகியவற்றுக்கு ஒன்றுபட வேண்டும். ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எல்லா இன மக்களும் சமம், எல்லோருக்கும் சமவுரிமை கிடைக்கவேண்டும். இவையே தமது எதிர்பார்ப்பு என்றும் கூறி இருந்தார். மேற்போக்காகப் பார்க்கும் எவரும் மகிந்த ராஜபக்ஷ கூற்றில் குறைகாண மாட்டார்கள். ஆனால், அவற்றுள் பொதிந்துள்ளவற்றுக்கு வெவ்வேறு வியாக்கியானங்கள் இருக்கவே செய்யும். இது எதிர்ப்பு அரசியலுக்கானவை மட்டுமன்றி, யதார்த்த நிலைகளுக்கும் அர்த்தம் தருபவையாகும். நாட்டின் முப்பது வருட யுத்தத்திற்கும் அதற்குக் காரணமான பிரிவினை வாதத்திற்கும் அல்லது பயங்கரவாதம்,இனவாதம் என்பனவற்றுக்கும் அடிப்படையாக அமைந்த காரணத்தை அல்லது காரணங்களை மகிந்த ராஜபக்ஷ தனது சுதந்திரதின உரையில் சுட்டிக் காட்டவில்லை. அவ்வாறு சுட்டியிருந்தால் பேரினவாத மாயைக்குள் சிக்குண்ட சிங்கள மக்களுக்கு ஒரு சிறுபொறி அறிவூட்டலாக இருந்திருக்கும். அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மட்டுமன்றி, எதிர்த்தரப்பின் ஆளும் வர்க்கக் கட்சிகளோ கூட கூற முன்வரமாட்டார்கள். ஏனெனில் அவர்களது அரசியல் உயிர் மூச்சு அதிலேயே தங்கியுள்ளது. சுதந்திரதின உரையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை முன்னெடுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ தனது நிறைவேற்று அதிகாரத்தை இன,மத,மொழி,பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் எவ்வாறு முன்னெடுக்கப் போகிறார் என்பது அதிமுக்கிய சவாலாகும். இச்சவாலானது தனியொரு முனையில் மட்டுமன்றி, பல்வேறு முனைகளிலும் காணப்படுகின்றன. அதில் முக்கியமான இரண்டு விடயங்கள் அடிப்படையானதாகவும் பிரதானமானதாகவும் உள்ளன. 1. ஒன்று வர்க்க அடிப்படையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வும் பாரிய இடைவெளியுமாகும். 2. இரண்டாவது யுத்தம் முடிந்து விட்டது. ஆனாலும் விடுதலைப் புலிகள் ஒழிப்பு என்பது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு என்பனவற்றுக்குக் காரணமாக அமைந்துள்ளதும் இன்றும் பிரதானமாகவும் இருந்து வருவது தேசிய இனப்பிரச்சினையாகும். இவ்விரு பிரச்சினைகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வுக்கும் அவரது தலைமையிலான அரசாங்கத்திற்குப் பாரிய இரண்டு சவால்கள் என்பதுடன் மூன்றாவது பெரும் சவாலாக இருப்பது வெளிநாட்டுக் கொள்கையாகும். ஏனெனில் கடந்த நான்கு வருட மகிந்த சிந்தனை ஆட்சியின் கீழ் மகிந்த ராஜபக்ஷ பின்பற்றிய வெளிநாட்டுக் கொள்கையானது அமெரிக்க ஐரோப்பிய மேற்குலகிற்கு கசப்பானவையாகவே அமைந்து கொண்டன. அதேவேளை, கிழக்கு உலகு மற்றும் ரஷ்யா சார்ந்தும் இருந்தமை தற்செயலானவையல்ல. குறிப்பாக இந்தியா,சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு,மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை அரவணைத்து வந்தமையும் காணக்கூடியதாக இருந்து வந்தது. இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் மகிந்த ராஜபக்ஷ தென்னமெரிக்க நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர்களின் வரிசையில் வைக்கக்கூடியவர் என யாரும் எடைபோட முடியாது. ஏனெனில் தத்தமது நாடுகளின் இன்றைய இழிவுகளுக்கும் வளங்கள் கொள்ளை போவதற்கும் காரணமானவர்கள் முன்னைய கொலனிய ஏகாதிபத்தியவாதிகளும் இன்றைய நவகொலனிய பல்தேசிய நிறுவன உரிமையாளர்களும் தான் என்பதை தென்னமெரிக்க நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் அடித்துக் கூறி வருகின்றனர். அதுமட்டுமன்றி,தமது நாட்டையும் மக்களையும் ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து மீட்டெடுக்க சபதமேற்று குறிப்பாக தொழிலாளர்கள்,விவசாயிகளை உழைக்கும் மக்களது வாழ்க்கைத் தரத்தின் உயர்வுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டும் வருகிறார்கள். அத்தகையதொரு நிலைப்பாட்டை மகிந்த ராஜபக்ஷ தனது எதிர்வரும் ஏழாண்டுகளில் முன்னெடுக்க முன்வரப்போவதில்லை. மேற்குலகத்திற்கும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் வளைந்து கொடுக்கும் அதேவேளை, இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்திற்கு முற்றிலும் அடிபணிந்த போக்கையே அவர் பின்பற்றுவார் என்பது முன்னைய அனுபவங்கள் மட்டுமன்றி, தற்போதைய போக்கும் வெளிப்படுத்துகிறது. “நக்குண்டார் நாவிழந்தார் என்பது அனுபவ முதுமொழி. மகிந்த ராஜபக்ஷவின் வீரம்,துணிவு,விவேகம்,செயற்திறன் என்று கூறப்படுவதற்குப் பின்னால் புதுடில்லி ஆளும் வர்க்கத்தின் அரசியல் இராணுவ மூளைகள் இருந்து வந்தன. அத்தகையவர்களின் பங்களிப்புடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது உண்மை. ஆனால், அடுத்து அதற்கான பிரதியுபகாரம் அதே மூளைகளுடன் சேர்த்து பொருளாதார மூளைகளால் கோரப்படப் போகின்றன. * இது இனிமேல் மட்டும் இடம்பெறும் ஒன்றல்ல. ஏற்கனவே, பிராந்திய மேலாதிக்கத்திற்கான பிராந்திய பொருளாதாரப் பிடி இலங்கை மீது இந்தியாவால் இறுக்கப்பட்டு வந்த ஒன்றேயாகும். இருப்பினும் அதனை முழுமைப்படுத்துவதற்கு யுத்தமும் புலிகள் இயக்கமும் இந்தியாவிற்கான தடைகளாக இருந்து வந்தன. இப்போது அவை தகர்க்கப்பட்டு விட்டது. இனிமேல் ஏ9 வீதியாலும் வங்கக் கடலாலும் அரபிக் கடலாலும் வடக்கு,கிழக்கின் வளங்கள் இந்தியப் பெரு முதலாளிகளாலும் ராட்சத நிறுவனங்களாலும் வாரிச் சுருட்டிச் செல்லப்படும். அவற்றுக்கு அபிவிருத்தி, மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு என்றெல்லாம் பெயர்சூட்டி விடயங்கள் முன்னெடுக்கப்படும். கிழக்கே அனல் மின் நிலையம் முதல் வடக்கே சீமெந்து தொழிற்சாலை வரை திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் முதல் மன்னார் எண்ணெய் அகழ்ந்தெடுத்தல் வரை விடயங்கள் பொருளாதாரச் சுரண்டல்களின் பரப்பளவு நீண்டு அகன்று செல்ல ஆரம்பித்து விட்டன. ஏற்கனவே, கூறப்பட்ட ஒரு கூற்றான “இலங்கை,இந்தியாவின் கொங்கொங் ஆக மாற்றப்படுகிறது என்பதில் சந்தேகம் வர முடியாது. அப்படி ஒருவருக்கு வருமானால் அத்தகையவர் ஒன்றில் அறிவிலியாக அல்லது முட்டாளாக மட்டுமே இருக்க முடியும். * இத்தகைய பரிதாபத்திற்குரியவர்கள் பரப்புரை செய்த மற்றொரு அடிமுட்டாள் கருத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் போர்க் கப்பலில் இருந்தும் விமானங்களில் இருந்தும் ஏனைய தரைச் சுடுகலன்களிலிருந்தும் வெளிவந்த குண்டுகள் தமிழ் மக்கள் மீது பூமாலைகளாகவும் உருத்திராட்ச மாலைகளாகவும் சந்தன,குங்குமங்களாகவுமே வீழ்ந்தன என்றும் சீன,பாகிஸ்தானிய குண்டுகளாலேயே தமிழ் மக்கள் பல்லாயிரம் பேர் வரை மடிந்தனர் என்றும் கூறும் பிரகிருதிகளை இப்போதும் இலங்கையில் அதிலும் தமிழ்த் தரப்பில் காணுகின்றோம். * இங்கே கூறக் கூடியது நாடுகளோ,ஆட்சிகளோ பற்றி அக விருப்பு,வெறுப்புக்கு அப்பால் என்ன சொன்னார்கள், என்ன செய்தார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நெஞ்சுக்குப் பொய் இன்றி நேர்மையாக எடுத்துரைக்கும் கருத்தும் கண்ணோட்டமுமே அதிமுக்கியமானதாகும். இவை நாடு,மக்கள், தேசிய இனங்கள், அவற்றின் எதிர்காலம் என்பன பற்றிய பரந்த அக்கறையிலும் ஆர்வத்திலும் இருந்து பிறக்க வேண்டும். அன்றி பழைமைவாத மேட்டுக்குடி உயர்வர்க்க கருத்தியலிலும் நடைமுறையிலும் இருந்து பிறக்க முடியாததொன்றாகும். எனவேதான் மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு அமையப்போகிறது என்பது முக்கியமானதாகிறது. அவர் 62 ஆவது சுதந்திரதின விழாவில் பேசியவை வெறும் சப்பிரதாய பூர்வமான பேச்சுகளின் ஒன்றோ அல்லது அவற்றுக்குரிய சரியான அர்த்தம் நிறைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா? பொறுத்திருந்து நோக்குவதைவிட வேறு எதைத்தான் உடன் எதிர்வுகூறலாகக் கூற முடியும். யாவற்றுக்கும் நாட்டு மக்களே இறுதியில் தீர்ப்புக் கூறும் சக்தி படைத்தவர்கள் என்பது மட்டும் சத்தியம்.

நினைத்து பார்க்க முடியாதளவு போர்ப்பேரழிவுகளுக்கு மத்தியில் வன்னி பிரதேசம்

வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள போர்ப் பேரழிவுகள் அங்கு வாழ்ந்த மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன. வன்னிப் பகுதியின் எந்தத் திசையை நோக்கினாலும், மனதால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு அது நாசமடைந்திருப்பதையே காணமுடிகிறது. போரினால் உண்டாகியுள்ள அதீத அழிவுகளைப் புனரமைப்பதும், புனர்வாழ்வு பெறுவதும் அந்த மக்களுக்குத் தாங்க முடியாத பளுவைச் சுமத்தியுள்ளது. இவ்வாறு கவலை தெரிவித்திருக்கிறார் ஜனவரி மாத இறுதியில் வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்திருந்த யாழ்.ஆயர் அதி வண. தோமஸ் சௌந்தரநாயகம். யாழ்.ஆயர் அதிவண. தோமஸ் சௌந்தரநாயகம் கடந்த மாதம் 29 ஆம் திகதி படையினரின் அனுமதியுடன் வன்னி சென்றிருந்தார். கிளிநொச்சி, மாங்குளம், ஒட்டிசுட்டான், புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்த அவர் அங்கு மீளக்குடியமர்ந்த மக்களின் நிலைமை களைக் கேட்டறிந்தார். தாம் சென்ற பகுதிகளில், மிகக் குறிப்பாக மாத்தளன் பகுதியில் ஏற்பட்டுள்ள அழிவுகள், கொடூரங்கள், காணப்படும் எச்சங்கள் தமது மனதை உலுக்கியதாக அவர் பெரும் கவலையுடன் தெரிவித்தார். எங்கும் பேரழிவு. அவற்றைக் கண்டு மனம் திணுக்குற்றது. புனர்வாழ்வும், புனர் நிர்மாணமும் மிகப் பாரிய அளவில் தேவைப்படும். மக்கள் தமது ஆயுள்கால சேமிப்புக் களை இழந்துவிட்டார்கள். அவர்கள் தமது வாழ்க்கையை மீள அமைப்பது பெரும் சுமையாக இருக்கப்போகிறது. கிராமங்கள் புதர் மண்டிக்காணப்படுகின்றன. வயல்கள் வனங்களாக மாறிவிட்டன. தேவாலயங்கள் அழிந்துவிட்டன. கடவுளர் திருவுருவங்கள் சேதமாகிக்காணப்படுகின்றன. நெல்வயல்களில் முள் பற்றைகள் மேலோங்கி வளர்ந்துள்ளன. கால்நடைகளை காண்பது அரிதாக உள்ளது. வீடுகள் சின்னாபின்னமாகி விட்டன. எரிந்துள்ள பஸ்கள், வான்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் வீதிகளை மூடி குவிந்துள்ளன. இந்தப் பிரதேசங்களில் மீள்வாழ்வை தொடங்குவது சாத்தியமாகுமா என்று மனம் பேதளித்தது. யாழ். ஆதீனத்துக்கு உட்பட்ட 17 பங்குகளைச் சேர்ந்த 110 தேவாலயங்கள் பயன்படுத்த முடியாதவாறு சேதமாகிவிட்டன. அவற்றில் பலவற்றில் புதர் மண்டிக்கிடப்பதையே காணமுடிந்தது. மொத்தத்தில் இந்தப் பகுதிகளில் தேவாலயங்களை திரும்பக் கட்டுவதும், மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதும் அவர்களால் தாங்கவொண்ணாத சுமையாகவே இருக்கப்போகின்றது என்று விவரித்தார் யாழ். ஆயர்..

ஒரு அழிவின் முடிவில் மறு அழிவின் ஆரம்பம்…

யாழ்ப்பாணம் தமிழர்களின் கலாசாரத் தலைநகரம். மூன்று தசாப்த கால யுத்தத்தின் கோரங்களை இன்றும் சாட்சியங்களாகிக் கொண்டுள்ள நகரம். தனிப்பட்ட மற்றும் அலுவலகத் தேவைகள் கருதி யாழ் குடாவிற்கான நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் நான் வாழந்த சொந்த மண்ணில் இருந்து பிடுங்கி வீசப்பட்ட பின்னர் குறிப்பிடக் கூடிய வகையில் நீண்ட நாட்கள் அங்கு தரித்திருக்க கிடைத்த இந்த வாய்ப்பு இன்னும் சில காலத்திற்கு ஞாபகங்களை தாலாட்டும். பதினைந்து வருடங்களில் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடப்பட வேண்டியவை. வீதிகள் தோறும் மரங்கள் வளர்க்கின்றார்களோ இல்லையோ மரங்களை தறித்து அடுக்கி காவல் அரண்களை அமைக்க தவறவில்லை. யுத்தம் முடிந்து விட்டதற்கான எந்த சுவடுகளும் இன்றி இன்னும் யுத்தம் பற்றிய கவலைகள் மிச்சமிருக்கின்ற ஒரு பிரதேசமாகவே குடாநாட காட்சி தருகின்றது. வீதிகள் தோறும் காவலிருக்கும் பச்சை உடைக்காரர்களை காணும் போது ஆத்திரத்திற்கு பதிலாக கவலை படத் தோன்றுகின்றது. அவர்களை தாண்டிப் போவதற்கும் அவர்களின் பிரசன்னங்களை இட்டு கவலைப்படாதிருக்கவும் அங்குள்ள மக்கள் பழக்கப்பட்டு விட்டார்கள். யுத்தத்தின் வலிகளை சுமந்து நிற்கும் தலை தறிக்கப்பட்ட மரங்களும் எங்கள் மனிதர்கள் வாழந்த சிதிலமாகிப் போன வீடுகளும் காலத் துயரின் நீட்சிகளை சொல்லி நிற்கின்றன. சாம்பலில் இருந்து உயிர் கொள்ளும் பறவைகளாய் இடிபாடுகளில் இருந்தும் எழுந்து நிற்க முற்பட்டுள்ளது எங்களின் நகரமும் அதன் மக்களும். உலகமயமாக்கலும் அதனோடு சேர்ந்த கிராமங்களை நகரங்களாக்கும் நாசங்களும் அங்கும் தொடங்கி விட்டது தான் இப்போடு சுடுகின்ற பிரச்சினையாகி மாறி வருகின்றது. இன்னும் கொஞ்சம் ஆண்டுகளின் பின்னர் பச்சை விரித்து படுத்துக் கிடக்கும் எங்களின் வயல் நிலங்களையும் பனித் துளிகள் பரவிக்கிடக்கும் தோட்டங்களையம் படங்களில் மட்டுமே நாம் காணவேண்டிய நிலை வந்து சேரும் என்பது வருத்தத்திற்குரிய உண்மை. இப்போது தென்னிலங்கையில் இருந்து படையெடுக்க ஆரம்பித்துள்ள பெரு நிறுவனங்கள் தங்களுக்காக நிலங்களை வளைத்துப் போடும் எத்தனிப்புகளை துரிதப்படுத்தியுள்ளன. ஆர்பிகோ , டி.எஸ்.சே என பல முன்னணி நிறுவனங்கள் நில வேட்டையில் ஈடுபட மறுபுறம் பணம் படைத்தவர்களும் யாழ் மண்ணை விலை வாங்கி வருகின்றனர். கொஞ்ச நாளில் வயல் நிலங்களில் எல்லாம் தொழில் சாலைகள் எழுந்து நிற்கும் சுற்றுச் கூழலை மாசுபடுத்தம் அசுத்தக்காற்றும் ஏ9 வழியாக யாழ் மண்ணை வந்து சேரும். தென்னிலங்கையின் தேவைகளுக்கான நுகர்வுப் பொருட்களுக்கான உற்பத்தி கூடமாக யாழ் மண் விரைவில் மாறிப் போகும் என்பது தான் நான் கண்ட காட்சிகள் மற்றும் சந்தித்த மனிதர்கள் தெரிவித்த தகவல்கள் எனக்கு உணர்த்தி நிற்கின்ற உண்மை. கடந்த கால போர்ச் சூழலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்து தமது வாழ்வினை மீளக் கட்டியெழுப்ப முனையும் குடாநாட்டு மக்களின் பொருளாதாரா மேம்பாட்டை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளை எதிர் கொள்வதற்கு குடாநாட்டு மக்களை தயார்ப்படுத்தப் போவது யார் என்ற கேள்வி எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. அபிவிருத்தி என்ற பதம் மிகவும் அச்சுறுத்தலானது என்பது இப்போது தான் எனக்கு புரிகின்றது. அண்மையில் தென்னிலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோர் மற்றும் பாரிய நிறுவனத் தலைவா்கள் கலந்து கொண்ட வாத்தக மகாநாடு இந்த அச்சுறுத்தலை மேலும் அதிகரித்துள்ளது. விழ விழ எழுந்து வரும் எம்மவர்களை இனி எப்போதும் எழுந்து விடாதபடிக்கு அடித்துப் போடப்போகின்றதா இந்த அபிவிருத்தி என்ற கேள்வி இயல்பாகவே எழுவது தவிர்க்க முடியாததாகின்றது. தமிழ் மக்களின் ஆயுத யுத்தம் கசப்பான முடிவினை கண்டு நிற்கும் ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பிக்கின்றது இந்த புதிய யுத்தம். ஒரு அழிவின் முடிவில் மறு அழிவின் ஆரம்பம்.

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தில் ஆவணங்களை கண்டுபிடிப்பாம்

வன்னியில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை போலீசின் சிறப்பு அணி கண்டுபிடித்துத் தேடுதல் நடத்தியுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த இந்த மறைவிடத்திலிருந்து தாம் வகைப்படுத்தப்பட்ட பல தகவல்களைக் கொண்டுள்ள கோப்புகள் பலவற்றையும், 56 சி.டி க்களையும் பெருமளவான புதியவகை ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக போலீஸ் மேலும் கூறியுள்ளது. தலைவருக்கு அருகில் இருந்த ஆறு பேர் தற்போது தமது விசாரணையின் கீழ் உள்ளதாகவும், அவர்கள் கொடுத்த தகவல்களை அடுத்தே மேற்படி ஆவணங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவாம். மேற்படி கோப்புகளில் தலைவர், மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சகாக்களின் விவரங்கள் உள்ளதாகவும் எனவே இத்தகவல்கள் போலீசும், பாதுகாப்புப் படையினரும் தற்போது மேற்கொண்டுவரும் விசாரணைகளுக்கு மிகவும் உதவியாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது. நிலத்துக்குக் கீழ் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் 17 தற்கொலைதாரி அங்கிகள், 7000 ஜொனி நிலக்கண்ணிகள், 300 கிலோ சி-4 வெடிமருந்துகள், 8 கிளைமோர்கள் மற்றும் ஒரு தொகுதி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த மறைவிடத்துக்கு அண்மையாக ஆயுதங்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை இருந்ததற்கான அத்தாட்சிகள் காணப்பட்டதாகக் கூறியுள்ள போலீஸ், ஆனால் அந்த தொழிற்சாலை படையினர் கைகளுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக அது புலிகளால் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அதாவது இவர்களின் தகவல்படி முள்ளிவாய்க்கால் என்றழைக்கப்படும் ஒரு சிறிய பகுதியில் தலைவர் எங்கு மறைந்திருந்தார் என்பதைக் கண்டுபிடிக்க சுமார் 9 மாதங்கள் எடுத்திருக்கிறது. இவ்வாறான தகவல்களை வெளியிடுவதன் மூலம் இலங்கை அரசு வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் புலிகளின் ஆதரவாளர்களை முடக்கவே நிணைப்பதாகத் தோன்றுகின்றது.

உலகில் வாழும் தமிழர்கள் தம்மை பாதுகாக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் சிங்கப்பூர் பிரதிநிதி

உலகத்தமிழர்கள் தம்மை எவரும் தொடுவதற்கு அனுமதிக்க முடியாதவாறு ஒன்றுபட்டு நிற்க வேண்டும். சென்னையில் நேற்று ஆரம்பமான உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சிங்கப்பூரைச் சேர்ந்த சிவகாமிதேவி மேற்கண்டவாறு தெரிவித்தார். உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நேற்று தமிழகம், கோவையில் ஆரம்பமானது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகள் உட்பட பலநாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இரு தினங்கள் இடம்பெறும் இந்த மாநாட்டை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே.கிருஷ்ணசாமியால் ஒழுங்கு செய்யப் பட்ட இந்த மாநாட்டை மலேசியாவின் பினாங் பிரதி ஆளுநர் பி.ராமசாமி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை பாதுகாப்பதற்காகவே இந்த அமைப்பு உரு வாக்கப்பட்டுள்ளது என்று ராமசாமி ஊடக வியலாளர்களிடம் கூறினார். இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை உலகில் எந்த நாட்டிலும் வாழும் தமிழர்களுக்கும் ஏற்படக்கூடாது. இதனை ஒரு பாடமாக கொண்டு உலகத்தமிழர்கள் தம்மை எவரும் தொடுவதற்கு அனுமதிக்க முடியாதவாறு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று சிங்கப்பூரில் இந்து வந்த பிரதிநிதி சிவகாமிதேவி தெரிவித்தார். கூடுதலான பெண்கள் எம்முடன் இணைந்து உரிமைக்காக போராடவேண்டும். இந்த மாநாடு உலகில் உள்ள சகல தமிழர்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப்புலிகளின் படங்கள் கொண்ட கண்காட்சியும் மாநாட்டில் இடம் பெற்றது. மாநாடு இன்றும் தொடர்ந்து நடை பெறவிருக்கிறது.