வியாழன், 4 பிப்ரவரி, 2010

கிளிநொச்சியில் இருந்து பரந்தன் மனித நடமாட்டமற்ற பகுதியாக உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிளிநொச்சிக்கும் பரந்தனுக்கும் இடையில் பயணம் செய்த ஒருவர் அப்பகுதி எவ்வாறு காட்சியளிக்கிறது என்பதைத் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். தமிழீழத்தின் இதயமாக விளங்கிய கிளிநொச்சி நகரில் இப்போது மக்கள் நடமாட்டம் அற்ற நிலை காணப்படுகிறது. கட்டடங்களோ ஆளரவம் அற்ற பேய்வீடுகளாக உள்ளன. ஆங்காங்கே கைவிடப்பட்ட மாடுகள் கூட்டம் கூட்டமாக நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதிலிருந்தே அங்கு நடந்துள்ள இன அழிப்பு நன்கு புலப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான குற்றமான இந்த இன அழிப்பைச் செய்தவர்கள் அதை மறுத்து வருகின்றபோதும், அவர்கள் அதை மறைத்து, இன அழிப்பு குறித்து பேசத் தடைவிதித்து, பல வழிகளில் தமது என்ணத்தை நிறைவேற்றி வருவதாகவே ஈழத்தில் உள்ள மற்றும் புலம்பெயர் தமிழர்களின் கருத்தாகும். தற்போது நடந்துவரும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், அபிவிருத்தி ஆகியனவும் கூட இன அழிப்பின் ஒரு திட்டமே. சர்வதேசநீதியான பொருத்தமான ஒரு தீர்வை விடுத்து சில அரசாங்கங்கள் தமது சொந்த திட்டங்களை தமிழீழத்தில் அமுல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன. அதுவும் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசுடன் சேர்ந்து இத்திட்டங்களை அமுல்படுத்துவதானது ஜனநாயகத்தை அவர்கள் மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது தமிழர் வட்டாரங்கள் கூறுகின்றன.

சிங்கக் கொடியை ஏற்றுமாறு ஈ.பி.டி.பி யாழ் மக்களை அச்சுறுத்தல்

சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு சிங்க கொடிகளை வியாபார நிலையங்களிலும் பொதுநிறுவனங்களிலும் மட்டுமல்லாது ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்றுமாறு ஈபிடிபியின் ”தொண்டர்கள்” வற்புறுத்தி வருவதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெறவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாளை சிறிலங்காவின் பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில் தமிழர் தேசங்களில் தமது சிங்கள மேலாண்மையை காட்டுவதற்கான முயற்சிக்கு ஈபிடிபி தொண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை யாழ் குடாநாட்டில் குறிப்பிட்டளவு வாக்குகளை கூட மகிந்தவுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையினால், தென்னிலங்கை அரசியற் கட்சிகள், ஈபிடிபியை ஒரு பொருட்டாக கருதவேண்டியதில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவும், அதனால் தான் தற்போது சுதந்திர நாளை அனைத்து இடங்களிலும் கட்டாயப்படுத்தி கொடி ஏற்றிவைத்து தனது பலத்தை காட்ட ஈபிடிபி முற்படுவதாகவும் மேலும் தெரியவருகிறது.

உதயன்", "சுடர் ஒளி" ஆசிரியருக்கு கிஷோர் எம்.பி. கொலை மிரட்டல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர்"உதயன்", "சுடர் ஒளி" பத்திரிகைகளின் ஆசிரியருக்குத் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக உதயன் பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. இச்சம்பவம் நேற்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், முன்னதாக நேற்றுக்காலை 11 மணியளவில் 024 2222068 என்ற வவுனியா தொலைபேசி இலக்கத்திலிருந்து "சுடர் ஒளி" கொழும்பு அலுவலகத்துடன் தொடர்புகொண்ட சிவநாதன் கிஷோர், ஆசிரியர் வித்தியாதரனை விசாரித்துள்ளார் என்றும், அச்சமயம் அவர் ஆசிரிய பீடத்தில் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தமக்கு எதிராக "உதயன்", "சுடர் ஒளி"யில் விமர்சனச் செய்திகள் பிரசுரிக்கக்கூடாது என்ற தொனியில் ஆசிரிய பீட உறுப்பினருக்கு அவர் அறிவுறுத்தியிருக்கின்றார். தாம் எதையும் பகிரங்கமாகவே செய்பவர் என்றும், மற்றவர்களைப் போல எதையும் ஒளித்துக்கொண்டு போய் அரசுடன் சேர்ந்து செய்பவரல்லர் என்றும் அவர் குறிப்பிட்டார். தம்மைப் பற்றிச் செய்தி வெளியிடுவதை நிறுத்தும்படியும் இறுக்கமான தொனியில் அவர் கூறினார். இந்த விடயம் குறித்து ஆசிரியர் அலுவலகத்துக்கு வந்த பின்னர் அவரிடம் கூறும்படி ஆசிரிய பீட பணியாளர் அவருக்குத் தெரிவித்தார் என உதயன் தெரிவித்துள்ளது. மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மீண்டும் மாலை 5.13 மணியளவில் 024 2222706 இலக்கத் தொலைபேசியில் இருந்து அவர் தொடர்புகொண்டார். அவரது கோரிக்கையின்படி ஆசிரியர் வித்தியாதரனுக்கு அவரது இணைப்பு கொடுக்கப்பட்டது. தம்மைப்பற்றிய செய்திகள் தருபவர் யார், தன்னைப்பற்றி செய்திகளை தனது முன் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்ற கடுந்தொனிப் பீடிகையுடன் உரையாடலை ஆரம்பித்தார் கிஷோர். "பகிரங்கப் பொது வாழ்வுக்கு வந்தவர்கள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் செயற்படுவோர் பற்றிய செய்திகள், தகவல்கள் வெளியிடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறுவது அவசியமல்ல. அதைத் தடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரமும் இல்லை; உரிமையுமில்லை. செய்திகள் தவறாக இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்யுங்கள்" என்று பதிலளித்தார் ஆசிரியர். அதற்கு "உன்னைக் கொலை செய்யச் செய்திருக்க வேண்டும். கொல்லுவதற்கு ........"என்று அவர் மிரட்டும் தொனியில் பேச்சைத் தொடர்ந்தும், "தொலைபேசி உரையாடல் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றது. உங்களுக்கு விரும்பிய மிரட்டலை எல்லாம் கூறுங்கள்" என்றார் ஆசிரியர். அவ்வளவுதான். தொலைபேசி இணைப்பு உடனே சட் என்று துண்டிக்கப்பட்டது. இந்த மிரட்டல் குறித்து உரிய தரப்புகளிடம் முறைப்பாடு செய்ய "உதயன்", "சுடர் ஒளி" நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகங்களின் உதவாத [ ஊடக ] தர்மமும் பிண்ணனியும்

இது பற்றி நாம் பல தடைவைகள் விவாதித்திருந்தாலும் மீண்டும் இது குறித்த ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய புறச்சூழல்களினால் இது பலரை சங்கடப்படுத்தும் என்பதால் பல தடவைகள் எழுத முற்பட்டு எழுதாமல் விட்டதை எழுதலாம் என்றிருக்கின்றேன். அண்மையில் தேசிகன் என்பவர் மின்னஞ்சலில் கடுமையாக சாடியிருந்தார் அவருக்கும் இது பதிலாக அமையும் பொதுவாகவே எல்லா ஊடகங்களும் தத்தம் நலன், இனம் சார்ந்ததாகவே இயங்குகின்றன இது சர்வதேச ஊடகங்களிலிருந்து உலக வல்லரசுகளினது ஊடகங்கள் வரை பொருந்தும் இது தான் உலக நியதியாக இருந்தும் உலகத்தால் கைவிடப்பட்ட , புறக்கணிக்கப்பட்ட , பயங்கரவாதிகளாக்கப்பட்ட எமது ஊடகங்கள் மட்டும் ஊடக தர்மம் என்னும் உதவாத தர்மத்தைக் கட்டிக் கொண்டு அழுகின்றன. அது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை ? மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள் புறக்கணிப்பு , கருத்துக்களங்களில் சர்வதிகார தணிக்கைகள் , திணிப்புக்கள் எதுவும் பயன் அளிக்காத பட்சத்தில் நாம் சுத்துமாத்துக்கள் என்று வலைப்பூவை ஆரம்பித்தோம் இந்த ஊடகங்களினது இருட்டடிப்புக்களை அம்பலப்படுத்த வேறு வழியிருக்கவில்லை இந்த வலைப்பூவினால் அம்பலப்படுத்தப்பட்ட பச்சோந்தித்தனங்கள் பெரியளவு மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று சொல்லாவிட்டாலும் பலரது மறுபக்கத்தையும், பச்சோந்தித் தனங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தோம். அது இனி தமிழ்த்தேசியத்தில் தொடரும் இதற்கு எமக்கெதிரான எதிரான பின்னூட்டல்கள் மட்டும் பகிரங்கமாக வந்தன மாறாக ஆதரவானவை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று மின்னஞ்சல்களாக வந்தன இது ஒன்றைத் தெளிவாகக் காட்டுகின்றது ஒருவரும் எதிர்வினையாற்ற பகிரங்கத்தில் விரும்பவில்லை என்பது தான் பட்டும் படாமல் எழுதுவதை மட்டும் சொந்தப் பெயரிலும் , முகம் அறிந்த பெயரிலும் எழுதுவது இப்போது வழக்கமாகிவிட்டது எதிர்மறையான கட்டுரைகளை ஆய்வுகளை முகம் அறியாத பெயர்களிலேயே எழுதுகின்றார்கள். இதற்கு புதிது புதிதாக வரும் பெயர்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம் ஆனால் இவர்கள் ஒன்றும் புதிய ஆய்வாளர்கள் இல்லை அதே குட்டையில் ஊறிய மட்டைகளே ஆனால் வேறு பெயர்களில் அதை விடக் கேவலம் என்னவென்றால் முன்னாள் புலிகளின் கூட்டம் செய்வது தான் யாரையாவது திட்டுவதென்றால் இவர்களுக்கு பெயர் அறிந்த இணையங்கள் இருந்தாலும் வலைப்பூக்களில் தான் திட்டுவார்கள் தாம் யாரென்று தெரிந்தால் நாளை தமிழர்களிடம் பிச்சை கேட்க முடியாது அல்லவா தமிழ் ஊடகங்களில் முகம் அறிந்த ஆய்வுகள் செய்பவர்கள் நிச்சயமாக இவற்றுக்கு கட்டணம் அறவிடுவார்கள் இந்த ஆய்வாளர்களைப் பொறுத்தமட்டில் தமது பெயர் கேட்டுப்போகாத வகையிலேயே இவர்களின் ஆய்வுகளும் இருந்து வருகின்றன. ஆனாலும் இவர்கள் எவரிலும் தூரநோக்கு இருப்பதாகத் தெரியவில்லை பெரும்பாலான ஆய்வுகள் பிசுபிசுத்துப் போய்விட்டன அதனால் தான் இவர்களே வேறு பெயர்களில் ஆய்வுகளை எழுதிவருக்கின்றார்கள் போலும் ஆனால் ஒரு துர்ப்பாக்கியம் என்வென்றால் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கிய 30 வருட ஆயுதப்போராட்டத்தின் பிரச்சாரத்தை 30 வருடமாக அந்த இனத்திற்கே பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றோம் என்பது தான். ஆனால் போராட்டம் அழிக்கப்பட்டும் இன்னும் பிரச்சாரம் மட்டும் ஓயவில்லை ஆனால் முன்னெப்போது இல்லாத முரண்பாடுகளும் , துரோகங்களும் , விலை போவதும் , ஊடுருவல்களும் , சதிகளும் இப்போது அரங்கேறி வருகின்றது தமிழர்களின் தலைமையின் பிரசன்னம் இன்மை, உறுதிப்படுத்தக் கூடிய தலைமையகம் இன்மையால் ஏற்பட்ட வெற்றிடத்தால் முன்னேப்போதும் இல்லாத பிரச்சாரம் இப்போது தேவைப்படுகின்றது. முரண்பட்ட ஆய்வுகளை தெரிந்தும் உறுதிப்படுத்த முடியாமையால் பிரசுரித்து வந்திருக்கின்றோம் இப்படியான வெறுமையைத் தொடர வேண்டுமா ? இதனைத் தெளிவு படுத்தும் வகையில் நமது ஊடகங்களும் , அமைப்பாளர்களும் செயற்படுகின்றனவா ? அது குறித்த ஒரு பதிவாகவே இதனை இடுகின்றோம் இதுவரை வந்த ஆய்வுகள், பின்னணிகள், சம்பவங்களை வைத்து முடிந்தவரை எல்லா ஊடகங்களையும் அதற்கு நீண்ட தேடல்கள் தேவையாக இருப்பதால் முடிந்தவரை அம்பலபடுத்த முயற்சிக்கின்றோம் தற்போதுள்ள வெறுமை நிலையில் தமிழ் ஊடகங்கள் பெரும் வரலாற்றுத் தவறிழைப்பதாகவே படுகின்றது கடந்த காலத்தினை திரும்பிப் பார்த்தால் 1. புலிகளின் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெளிவு படுத்தாமல் உசுப்பேத்தி மக்களை வெற்றி மாயைக்குள் வைத்திருந்து தோற்கடித்தது 2. மே 2009 இல் ஏற்பட்ட தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கும் அதன் பின்னரான உளவியல் ஊடக யுத்தத்திலும் சிதைக்கப்பட்ட தமிழர்கள் 3.கேபி இன் வரவும் அதன் பின்னணியில் நடந்த சதிகளும், துரோகங்களும் , ஊடுருவல்களும், விலைபோனவைகளும் மூடி மறைக்கப்பட்டதும் , மெளனமாக இன்று வரை இருப்பதும் 4. நாடுகடந்த அரசின் உருவாக்கமும் அதன் பின்னணியும் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்தாமை 5.வட்டுகோட்டை மீள் வாக்கெடுப்பில் நடாத்தப்பட்ட துரோகங்களின் பின்னணிகளை அம்பலப்படுத்தாமை 6.இலங்கைத் தேர்தலில் ஒருமித்த, தூரநோக்கில்லாமல் , தெளிவில்லாமல் எல்லோரையும் குழப்பியமை 7.இலங்கைத் தேர்தல் முடிவுகளை வைத்து மீண்டும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற வகையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை தொடர்வது 8. இவை எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் பெயரில் வெளிவரும் அறிக்கைகளையோ, அல்லது புதிது புதிதாக வரும் இணையம் ,தலைமைச்செயலகம் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்தாமை , அல்லது மெளனம் காப்பது இந்த முண்ணனி ஊடகங்கள் எல்லாமே புலம் அமைப்பாளர்களுடனும் புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்ட இணையங்களும், அமைப்பாளர்களும் அப்படி ஒன்று நடந்ததாக அலட்டிக்கொள்ளக் கூட இல்லை ஆனால் உறுதிப்படுத்துவதற்கு தலைமைச் செயலகம் இல்லையே என்றால் இது குறித்த செய்திகளை விகடனும், நக்கீரனும் இந்தியாவிலிருந்து ஆய்வு செய்கின்றார்கள் எப்படி ? இது என்ன எப்படி இருக்கின்றது என்றால் கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வைகுண்டம் போய் சிவனை காட்டப்போவது போல் இருக்கின்றது இதை பாணியிலே தான் எமது தமிழ் ஊடகங்கள் ஆய்வுகளும் செய்கின்றன இவர்களின் ஆய்வுகளும் செய்திகளும் இந்த வகையில் தான் பார்க்கவேண்டியிருக்கின்றது வலைப்பதிவர்களாகிய நாங்கள் இந்த ஊடகங்களை பிரதி பண்ணுவர்களே அவை இவை மீதுள்ள அபிமானத்தை நம்பிக்கையை வைத்துத் தான் உறுதிப்படுத்தி அல்ல

இலங்கை வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே சுதந்திர தின நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷ

இலங்கையின் ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன். அரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்ய மாட்டேன்” என இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திர தின வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். “இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மன்னர்களே. 30 வருட காலத்தில் இந் நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. அந்த நிலைமையை நான் முற்றாக மாற்றியமைத்தேன். வடக்கு கிழக்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் அப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றோம். அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தமிழில் உரையாற்றுகையில், “இன்று எமது சுதந்திர தினம். நம் எல்லோருக்கும் சந்தோஷமான நாள். 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாத நிலைமை இப்போது இல்லை. அப்படியான சூழ்நிலையில் இன்று நாம் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகின்றோம். இன்று நாம் பிரச்சினைகள் எதுவுமின்றி நிம்மதியாக வாழ முடியும். பாதுகாப்பாக வாழ முடியும். காலம் முழுவதும் நாம் சந்தோஷமாக வாழ முடியும். அதுதான் மிக மிக முக்கியம். இது நமது தாய் நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். இந்நாட்டு மக்கள். நாம் அனைவரும் சகோதரர்கள். சம உரிமையோடு கௌரவத்துடன் நாம் வாழ வேண்டும். எல்லோருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் அதுதான் சமத்துவம், சம நிலை. ஒரே நாடு, ஒரே மக்கள் என்றவாறு நாம் வாழ வேண்டும். தாய் நாட்டை நீங்கள் எப்போதும் மறக்க வேண்டாம் இந்நாட்டில் சிறுபான்மை என்று யாரும் இல்லை. அபிவிருத்தி பாதையில் நமது தாய் நாட்டை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அபிவிருத்தியில் முக்கிய கேந்திர ஸ்தானமாக எமது நாடு திகழ வேண்டும்” என்றார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் இடம் பெறும் சுதந்திர தின வைபவம் என்பதாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடம்பெறும் மிக முக்கியமான வைபவம் இது என்பதாலும் உள்நாட்டு, சர்வதேச மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விடுதலை வீரர்கள் சமாதி

ஆறடி நிலத்தில் மீளாத்துயில் கொள்பவர்கள் விடுதலை வீரர்கள் சமாதி அது எங்கள் விடுதலை விலை நிலங்கள் இல்லாதொழிக்கும் நயவன்சகர்களுட்ன் கூட்டு சேர்ந்த தேச விரோதிகள் அன்று உன்னை காக்க வெடியை வெடித்தவர் நினைவு தூபி உனது கண்ணுக்கு தெரியவில்லையா? எட்டப்பா எட்டி நின்று பார் உறங்கவில்லை எமது தேச குருவிகள் சிறகு அடித்து பறக்க சற்று சயனம் கொள்ளுகிறார்கள் எழுந்து விடுவார்கள் உங்கள் சங்கு அறுக்க எட்டப்பா எட்டி நின்று பார் காட்டி கொடுப்பதும் தாயை கூட்டி கொடுப்பது உனது செயல் எலும்பை தின்னும் எச்சில் நரியே சிங்கள வெறியனின் வாழ் பிடிக்கும் குள்ள நரியே கல்லறைகள் விழித்து எழும் காவியம் படிக்கும் காவியத்தலைவன் வருவான் உனக்கு தருவான் தர்மத்தின் அடி சினங்கள் வெறியன் சிதறுவான் நீ ஓடுவாய் உன் மரணவாசலை நோக்கி

வா தலைவா வா

எட்டப்பனால் எட்ட போனது ஈழம் எட்டி பிடிக்க வா தலைவா எங்கள் விடுதலை இங்கு இல்லையா எங்கே தலைவா பறந்து வா கடலேறி வந்தாய் கரும்புலி படையோடு வந்தாய் வானேறி வந்தாய் முப்படையும் தந்தை வல்லரசுகள் வல்லுறாய் பறந்து எமது நியத்தை அழித்தனர் விடுவோமா விடுதலை தாகத்தை விரைந்து மீட்க வா தலைவா வா விரமகனே விடுதலை தலைவா உன் வழி தொடர அணியாய் காத்திருக்கிறோம் வா தலைவா வா ஓவரு தமிழனும் புலியாவோம் விட்ட நிலம் பிடிப்போம் விடுதலை வீரரவோம் தலைவனே தமிழ்த்தாய் மகனே இடியென வருவாய் இழந்த இடங்களை மீட்டு தமிழீழம் அமைப்போம்

செல்லப்பிராணிகளுடன் அடக்கம் : பிரிட்டனில் இப்படியும் வினோதம்

பிரிட்டனில் எஜமானர் களையும் அவர்களின் செல்லப் பிராணிகளையும் இறந்த பின் ஒரே இடத்தில் புதைக்கும் வினோதமான நடைமுறை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பழங்காலத்தில் எகிப்தில் வசித்தவர்கள் ஒரு விசித்திரமான நடைமுறையை பின்பற்றினர். தாங்கள் இறந்தவுடன் தங்களுக்கு அருகிலேயே ஆசையாக வளர்த்த செல்லப் பிராணிகளையும் புதைக்கும் நடைமுறை தான் அது.தற்போது, பிரிட்டனில் அந்த நடைமுறை மீண்டும் உயிர் பெற்றுள்ளது. பிரிட்டனில் பூனை, நாய், குதிரை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்போர் மிகவும் அதிகம். இங்கு ஆண்டுதோறும் 15 லட்சம் செல்லப் பிராணிகள் இறக்கின்றன. இவற்றில் பெரும் பாலானவற்றை அவற்றின் எஜமானர்கள் தோட்டங்களில் புதைத்து விடுவர். சமீபகாலமாக பெரும்பாலான எஜமானர்கள், தாங்கள் இறந்து விட்டால், அதே இடத்திலேயே, தாங்கள் ஆசையாக வளர்க்கும் செல்லப் பிராணிகளையும் புதைக்க வேண்டும் என, விரும்புகின்றனர். இதற்கென, பிரிட்டனில் பிரத்யேகமான மயானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி, முன் கூட்டியே பதிவு செய்துவிட்டால், அதற்கான ஏற்பாடுகளை, மயான பராமரிப்பாளர்களே செய்து விடுவர்.இதன்படி, எஜமானர் இறந்த சில காலம் கழித்து, அவரின் செல்லப் பிராணி இறந்து விட்டால், அவரை புதைத்த இடத்திலேயே செல்லப் பிராணியும் புதைக்கப்படும். இதற்கான பிரத்யேகமான மயானத்தை பராமரித்து வரும் பென்னி லல்லி என்பவர் கூறுகையில்,"செல்லப் பிராணி களையும், அவற்றின் எஜமானர் களையும் ஒரே இடத்தில் புதைக் கும் வசதியுடைய மயானத்தை 2003ல் துவங்கினேன். இதுவரை ஏராளமானோர், தங்களது செல் பிராணி களுக்கு அருகில் புதைக்கப் பட்டுள்ளனர். மேலும், பலர் முன் பதிவு செய்துள்ளனர்' என்றார்.

அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிக்கும் அல்-கய்டா : ஒபாமா

அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதில் அல்-கய்டா உலகளவில் முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ‘யூ டியூப்’ (YouTube) இணையதளத்திற்கு ஒபாமா அளித்துள்ள பேட்டியில், “அல்-கய்டா போன்ற குறிப்பிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு எதிராகவே நாங்கள் (அமெரிக்கா) போர் தொடுத்து வருகிறோம். அமெரிக்கா, நட்பு நாடுகள், ராணுவ தளங்கள், தூதரக அலுவலகங்கள் என உலகம் முழுவதும் அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். ஆனால் இத்தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் குறிப்பாக முஸ்லிம்களும் உயிரிழக்கின்றனர் என்பதுதான் சோகமான விடயம். எனவே அல்-கய்டாவை ஒழிப்பதே எங்கள் முக்கிய இலக்கு. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து தரப்பிலும் போராடுவதே அமெரிக்காவின் பணி. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஸ்திரமான முறையில் போராடி வருகிறோம். தற்போது ஏமன், சோமாலியா நாடுகளில் தங்களின் செயல்பாடுகளை விரிவாக்கியுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை நேச நாடுகளின் உதவியுடன் ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்

ஜூலைக்குள் அமெரிக்காவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் : உளவுத் துறை எச்சரிக்கை

வருகிற ஜூலை மாதத்திற்குள் அமெரிக்காவில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ தலைமை அதிகாரி லியோன் பானெட்டா, அமெரிக்க சென்ட் சபையின் புலனாய்வு கமிட்டி முன்னர் ஆஜராகி, நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்த புலனாய்வு தகவல்களை எடுத்துரைத்தார். அப்போது அவர், " ஒஸாமா பின்லேடனும் அவரது கூட்டாளிகளும் பிடிபடும் வரை அல்லது கொல்லப்படும்வரை அமெரிக்கா மீதான அல் - காய்தாவின் தாக்குதல் இலக்கு நீடித்துக்கொண்டுதான் இருக்கும். அடுத்த மூன்று அல்லது ஆறு மாதங்களில் நிச்சயம் அல் - காய்தா இயக்கம் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த முயற்சிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பின்லேடன் அமெரிக்காவில் பரவலாக தனிநபர்களை அமர்த்த்தியுள்ளார்.அவர்கள் தொடர்ந்து பின்லேடனுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்" என்றார்.

செயற்கைகோளை ஏவியது ஈரான்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைகோளை ஈரான் இன்று வெற்றிகரமாக ஏவியது. கவோஸ்கார் 3 என்ற இந்த செயற்கைகோள், ராக்கெட் மூலம் வெற்றிகரமாக இன்று ஏவப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியான அல் - ஆலம் செய்தி வெளியிட்டுள்ளது. பால்பாட்டில் வடிவத்திலான ராக்கெட், 100 கிலோ எடைகொண்ட செயற்கைகோளை விண்ணை நோக்கி வெற்றிகரமாக சுமந்து சென்று, சுற்று வட்டப்பாதையில் விட்டதாக அத்தொலைக்காட்சி செய்தி மேலும் தெரிவிக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐயாக்களே!

வாக்குத் திருவிழா முடிந்தது போக்குக் காட்டிப் பிடிக்க முனைந்த வாக்குகள் யாவும் வராமல் போனதால் சிறிலங்கா மீண்டும் வழமைக்குத் திரும்பியது! மீண்டும் எங்கும் சோதனைச் சாவடி ஓமந்தையில் தனிதனித் தனித்தனியாக உடற் பரிசோதனைக் கெடுபிடி எடுபிடிகள் ராச்சியத்தில் எதுவுமில்லை என்பதை நன்றாக உணர்ந்துகொண்ட ராயபக்ஸயாக் கூட்டமது தமிழ் மக்களைத் தினந்தோறும் கசக்கிப் பிழிந்து காழ்ப்புணர்வைக் காட்டி சிங்களத்து வாக்குகளை முழுவதுமாய் பெறுவதற்காய் வகுக்குமினித் திட்டங்களை… திட்டங்களில் முதற்பலியாவது தமிழினமே சம்பந்தருக்குமென்ன சரத்துக்குமென்ன சாவதும் அழிவதும் யாரோ எவரோதானே! தமது கோரிக்கையை ஏற்றதாய் கொக்கரிக்கும் அரசியல் கடைவிரிக்கும் அரசியல் வியாதிகளே குண்டுச் சட்டிக்குள் குதிரை யோட்டுகின்ற பண்டைய அரசியலை பாதுகாத்து வளர்ப்பதற்கு பாவிகளாம் தமிழினத்தை பலியிட வேண்டாமே புலிகள்தடையென்ற பழையகதை இல்லாத புதிய சூழலுக்குள் பதவிகளைத் தேடாது எம்மையழிப்பதற்கு கூட்டிணைந்த உலகமிதை என்ன முடிவு என்று கேட்பதற்குத் துணியாது வடவரை நம்புவதும் தென்னவரை தொழுவதும் புதியதொரு அரசியல் பிழைப்பாகிறதோ ஐயா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐயாக்களே

வலிமை கொண்ட தோளினாய் போ போ போ

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதுபற்றிய ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர்களில் அனேகர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்வரும் காரணங்களைத் தவறாது குறிப்பிடுகின்றனர். சக இயக்கங்களை அழித்தமை, மாற்றுக் கருத்துக்களில்லாத இறுகிய ஒற்றைத் தன்மை, முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை, ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமை, உலகின் புதிய ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளாமை என்பவைகளாகும். இவை, கண்ணி வெடிகளிற்குப் பயந்து அங்கும் இங்கும் விலகாத ஒரு நேர்கோட்டுத்தன்மை கொண்டவையாகவே இருக்கிறது. உலகின் புதிய ஒழுங்கு தவிர்ந்த ஏனையவை, ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் அவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடாத செயற்பாடுகள்தான். விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள்மீது அக்கறை கொண்டிருந்தாலும், அவ்வக்கறை இராணுவ அமைப்பிற்கு மேலான நிலையில் வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், இவைகள் நீதியை விரும்புபவர்களின் கவனத்திற்குரியனவாக இருப்பவைகளே தவிர, சர்வதேச ஆதிக்க அரசுகளின் உண்மையாக கவனத்துக்குரியவை அல்ல. இவற்றில் ராஜீவ் காந்தியின் கொலை ஒரு விதிவிலக்கு. உண்மையில் இக் கொலைக்கு இந்தியா தனது வல்லாதிக்கக் கனவுகளின் பின்னணியிலேயே அதிக அழுத்தம் கொடுத்தது. அது விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு தானாக அவர்கள் மடியில் விழுந்த கனி. அக் கொலை நடைபெற்றிருக்காவிடினும், இந்தியா அவர்களை அழித்தே இருக்கும். வேறு காரணங்களைத் தேடியிருக்கும் என்றே நான் கருதுகின்றேன். ஏனைய சக இயக்கங்கள், மாற்றுக் கருத்துக்கள், முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் போன்றவைகள் வல்லாதிக்க சத்திகளின் உண்மையான, நேர்மையான கவனத்துக்குரியவைகளாக இருந்தால், இன்றைய உலக நாடுகளில் அனேகமானவை அழிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கவேண்டும் அல்லது ஒவ்வொரு நாடும் தனக்குத்தானே குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும். நீதியின் நிமித்தம் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டிருந்தால், அதே நீதியின் நிமித்தம் ஒவ்வொரு நாடுகளும் தற்கொலை செய்துகொள்ளும் அரசுகளாக மாறியிருக்கவேண்டும். அதுவே அவர்களிற்குரிய தகுதியும் நீதியுமாகும். வல்லரசு நாடுகள் அதுவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவை உலக வளங்களின்மீது தீராக் காதல் கொண்ட நாடுகள் என்பதை புதிதாகச் சொல்லிவைக்க வேண்டியதில்லை. வல்லாதிக்க நாடுகள் விடுதலைப் புலிகளின் அழிவுக்கான வரையறைகளை ஏன் வகுத்துக்கொண்டது? இதற்கான வேரினை 08-04-1990ல் அனிதா பிரதாப்பிற்கு பிரபாகரன் அளித்த செவ்வியில் கண்டுகொள்ளலாம். 'எமது மக்களின் சுதந்திரத்திலும், விடுதலையிலும் எந்த ஒரு சக்தி தலையிடுவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம்'. 'எந்த ஒரு அன்னிய சக்தியும் எங்கள் பிரச்சனையில் தலையிட்டு எங்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும், நாங்கள் தொடர்பான முடிவு எடுப்பதையும் நாங்கள் விரும்பவில்லை'. அன்னிய சக்திகள் என்பது, ஈழத்தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து சாதுரியமாக உள் நுழைந்துகொண்ட பின்னர், தமது பொருளாதார நலன்களுக்குரிய தளமாக, தமிழீழ மண்ணைப் பாவிப்பதை நோக்காகக் கொண்ட எல்லா நாடுகளும்தான். திருமலையின் புல்மோட்டையில், முன்பு இலங்கை அரசின் அனுமதியுடன் 'இல்மனைட்' கனிமப் பொருளுக்குரிய மண்ணை சேகரித்துக்கொண்டிருந்த யப்பானியரை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தியமையை இங்கு நினைவுகூரலாம். விடுதலைப் புலிகளது தலைவரது மேற்கூறிய தன்மையை மாற்றுவதற்காக 'பெரியண்ணன்' இந்தியா உட்பட அனேக நாடுகள் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளிலும் மறைமுகமான ஆசை வார்த்தைகளிலும், பயமுறுத்தல்களிலும் முயற்சித்தது. இதற்கு 1987ல் புது டில்லியின் 'அசோகா விடுதியில்' இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்கும்படி, பிரபாகரனுடன் இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் மேற்கொண்ட உரையாடல்களே சாட்சி. தமிழர் உரிமை சார்ந்து பிரபாகரன் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லையென்பதை பின்னர் டிக்சிற் முதலமைச்சர் எம்.ஜி. ஆருக்கு இவ்வாறு கூறினார். ”தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றனர். ஆனால் இவர்கள் மட்டும் இதை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர வேறு எதையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள்போல் தெரிகிறது....” 2002ல் சந்திரிகா பண்டாரநாயக்காவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்காவை பிரதமராகவும் கொண்ட சிறிலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்பின், அமெரிக்காவில் நடைபெற்ற நிதியுதவும் நாடுகள் மகாநாட்டில் விடுதலைப் புலிகள் அழைக்கப்படாமையினால், ரோக்கியோவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகள் மகாநாட்டில் பங்கு கொள்ள விடுதலைப் புலிகள் மறுத்துவிட்டனர். இந்த முடிவை மாற்றி, அவர்களை அந்த மகாநாட்டில் பங்குபற்ற வைக்க அனைத்து நாடுகளும் வற்புறுத்தியபோதும் அவர்கள் உறுதியாக மறுத்தமையையும் பின்னர் 2003 ஜுலையில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம் ”எந்த வல்லாதிக்க சக்திக்கும் அடிபணியாமல் எமது குறிக்கோளில் உறுதியாகவுள்ளோம்;. இதற்காக நாம் எவ்வாறான சக்திக்கும் முகம்கொடுத்து வருகிறோம். இனிமேலும் முகம் கொடுக்கவும் தயாராகவுள்ளோம்." என்று கூறியதையும் நினைவு கூரலாம். இது அனைத்துலக நாடுகளிற்கும் தெளிவாக ஒன்றை உணர்த்தியது. பிரபாகரன் எந்த சக்திகளிற்கும் வளைந்து கொடுக்கக்கூடியவர் அல்ல என்பதைத்தான். இந்த அழுத்தமான விட்டுக்கொடாமை என்பது மேற்கத்தைய, ஏன் இன்றைய கீழத்தேசங்களிலும் 'இராஜதந்திரம்' என்ற அரசியல் சொல்லின் அர்த்தத்துடன் முற்றும் முரண்படுகிறது. குறிக்கப்பட்ட நோக்கை அடைவதற்கு எப்படியும், எல்லா விதங்களிலும் எல்லா அறநெறிகளிற்கும் மாறான வழிமுறைகளிற்கூட செயற்படலாம் என்பது இந்த இராஜதந்திர விதிகள். இந்த தந்திர வழிகள் மூலம் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியாது போய்விடின், நேரடியாக ஆயுத பலத்தின்மூலம் தம் நோக்கினை அடைந்து கொள்ளலாம். இதுவே நியாயம் அல்லது உலகின் ஒழுங்கு. இந்தக் கருத்தை தமது கட்டுப்பாட்டிலுள்ள தகவல் வெளிப்பாட்டுச் சாதனங்கள் ஊடாக உருவாக்கிக்கொள்வார்கள். இந்த வழிமுறைக்கு, மாறிவரும் புதிய ஒழுங்கின் வல்லாதிக்கப் போட்டியின் நெளிவு சுழிவுகளிற்கு ஏற்ப, பிரபாகரனின் அழுத்தமான விட்டுக்கொடாமை உவப்பானதாக இல்லாமல் போனது மாத்திரமல்ல, அது ஆபத்தான அடையாளமாகவும் காணப்பட்டது. ஏனெனில் வல்லாதிக்க நாடுகளின் நலன்களிற்கான சுரண்டலின் பகுதியாக பிரபாகரனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களைக் கொண்டுவரமுடியாது என்பதை உணர்த்தின. இந்த விட்டுக்கொடாமை, தமிழர் வாழ்வு சார்ந்த அகம், புறம் என்ற அடிப்படையில் மானம், வீரம் என்ற தொன்மைக் கருத்தமைவுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். கொண்ட கொள்கை வழுவாமை வீரத்தின் குறியீடாகவும், சந்தர்ப்பவாதம் துரோகத்தனமாகவும் கருதப்பட்டது. உயிர்வாழ்தல் மானத்துடன் தெடர்புடையதாக தமிழ் இலக்கியங்களில் பதியப்பட்டு இருந்தது. 'மயிர் நீர்ப்பின் உயிர் வாழாக் கவரிமான்' ஒரு முக்கிய குறியீடாகத் தமிழர் வாழ்வில் நிலை பெற்றது. புறமுதுகு காட்டாது மார்பில் காயத்துடன் போர்க்களத்தில் மடிவதொன்றே மகத்துவமுடையது. இவைகள் தமிழர் வாழ்வில் நீக்கமற நிறைந்திருந்தது. அத்துடன் மார்பில் காயத்துடன், வீரமுடன் மடிபவர்கள் நடுகைக் கற்கள் மூலம் வணக்கத்திற்குரியவர்களாகவும் ஆக்கப்பட்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் இந்த தமிழர் மாண்பு சார்ந்த கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டவர் என்பதற்கு சோழர் புலிக்கொடியும், அவர் தனக்குத் தேர்ந்துகொண்ட கரிகாலன் என்ற புனைபெயரும் போர்க்களத்தில் மடிபவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் என்பதை சுட்டும் மாவீரர் துயிலும் இல்லங்களும் மிக எளிமையான சாட்சியங்களாகும். இவை அவரது அரசியல் கருத்தமைவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்ற கருத்து இலகுவில் புறக்கணிக்கக்கூடியவையல்ல. இந்தத் தமிழர் மாண்பின் சாரம், மேற்கின் இராஜதந்திர அர்த்தங்களுக்குள் வளைந்து காரியத்தைச் சாதிக்கும் தன்மையைத் தொடர்ந்தும் தாமதப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் தமது வளர்ச்சிப் போக்கில் ஒரு கெரில்லாப் போராட்ட அமைப்பு என்பதையும் தாண்டி, உலகம் அதுவரையிலும் எந்த விடுதலைப் போராட்ட அமைப்பிலும் காணமுடியாத வகையில் கடற்படை, விமானப்படை என்ற பூரண அர்த்தத்தில் கொள்ளாவிடினும் விமானத்திலிருந்து தாக்கும் திறன் ஆகியவற்றைத் தம்முள் கொண்டிருந்ததோடு ஓர் அரசிற்குரிய அனைத்துக் கட்டமைப்பையும் கொண்டிருந்தனர். இந்த அசுர வளர்ச்சி விடுதலைப் போராட்டங்களை எதிர்கொண்ட அனைத்து நாடுகளிற்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகளின் அரசிற்குரிய பரிமாணம் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளிற்கும் முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதுதான் அந்த அச்சம். பல விதங்களிலும் மேற்கின் அரசியல் அமைவிற்கு முரணாக இருந்த விடுதலைப் புலிகளை எப்படி அழிக்கலாம் என்ற அவர்களின் கவலைக்கு மருந்தாக அமைந்ததுதான் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல். இரட்டைக் கோபுரத் தாக்குதலிற்குப் பின்னர் அனைத்து அரசியல் நிலைமைகளும் தலைகீழாக மாறியது. விடுதலைப் போராளிகளாகக் கருதப்பட்ட அனைவரும் சடுதியாக பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டார்கள். தேசிய இனம் என்ற வரையறைக்குள் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்தவர்கள், தேசிய இனம் என்ற சொல்லிற்குப் பதிலாக சிறுபான்மையினம் என்ற சொல்லைப் பாவிக்கத் தொடங்கினர். இதன்மூலம் தேசிய இனத்திற்கு அளிக்கப்பட்டுவந்த வரையறைகள், உரிமைகள் இல்லாதொழிக்கும் நிலை உருவாகியது. தத்தம் நாடுகளில் தேசியப் பிரச்சனையின் போராட்டங்களை எதிர்கொண்ட அனைத்து நாடுகளும் இந்த ஒற்றை ஒழுங்கிற்குள் மிக மகிழ்;ச்சியாக இணைந்து கொண்டனர். விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு 'எந்தப் பேயோடும் இணைந்து கொள்ளும்' இலங்கையின் பொது அரசியற்போக்கிற்கு 'வாராது போல்வந்த மாமணி'ச் சூழ்நிலை இது. ”அமெரிக்கா தனது பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளைச் சேர்த்துக் கொண்டது, சர்வதேச அளவில் புலிகளைப் பலவீனப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் முதன்மையான பங்காற்றியிருக்கிறது' என ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் உப நிரந்தரப் பிரதிநிதியும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவருமான பீற்றர் போர்லிக் கூறியதை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சர்வதேசச் சூழலை, தமிழ் ஆய்வாளர்கள் கருதியதற்கு மாறாக, உலக மாற்றங்களை விடுதலைப் புலிகள் நன்றாகவே உணர்ந்திருந்தனர் என்றே கொள்ளவேண்டும். அதனால்தான் அவர்கள் தாமாகவே முன்வந்து பேச்சுவார்த்தைக்குரிய கதவினைத் திறந்தார்கள். இரட்டைக் கோபுர தாக்குதல் நடைபெற்ற ஆண்டையும் (11-09-2001) விடுதலைப் புலிகளின் சமாதான முன்னெடுப்பிற்கான யுத்தநிறுத்த அறிவிப்பு ஆண்டையும் (24-12-2001) கவனித்தால் இது நன்கு புரியும். இரு தரப்பையும் சம தரப்பாக ஏற்றுக்கொண்டு பேச்சு வார்த்தைக்கு ஆதரவளித்த மேற்குலகம், அரசிற்குச் சார்பான நிலைப்பாட்டை உடனே எடுக்கத் தொடங்கியது. அதன் முதற்படிதான் முன்னர் குறிப்பிட்ட அமெரிக்க மகாநாட்டிற்கு விடுதலைப் புலிகள் அழைக்கப்படாமை. சம தரப்பென்ற வகையில் விடுதலைப் புலிகளும் அழைக்கப்படவேண்டும் என்ற கருத்தை இலங்கை அரசு முன்வைத்திருந்தால் அரசின் நம்பகத் தன்மையையாவது அது உறுதிப்படுத்தியிருக்கும். ஆனால் அவர்கள் அதற்கு மாறாக உள்ளுர மகிழ்ச்சி அடைந்தமை, அவர்களது வழமையான நம்பகத் தன்மையின்மையையே உணர்த்தியது. சமாதான காலத்தில் 14-06-2002 ல் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற் புலிகள் 12 பேர் கடற்படையினரால் கொல்லப்பட்டனர். இது ஒரு பாரதூரமான விளைவாகவும், இதனால் ஏற்படும் விடுதலைப் புலிகளின் சீற்றம், யுத்த நிறுத்தத்தையே முடிவுக்குக் கொண்டுவரும் எனவும் பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 1987ல் விடுதலைப் புலிகள், இந்திய இராணுவத்தினருடன் பொருதிக்கொண்டதற்கும் இதை ஒத்த சம்பவமே காரணமாயிருந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளலாம். இதேபோன்ற முறிவு ஏற்படாமைக்கு, இந்த பொறியை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பதுதான் காரணம். சுமாதானப் பேச்சு வார்த்தைகளின்போது இரு தரப்பும் நியாயமான தீர்வின் அடிப்படையில் ஈடுபடவில்லை என்பது, அக்காலத்திலேயே பலராலும் உணரப்பட்டது. பேச்சுவார்த்தையை புலிகள் முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த அரசும், அரசு முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களை புலிகளும் ஏற்படுத்த முனைந்த வேளைகளில், இந்தியா உட்பட வல்லரசு நாடுகள், புலிகளை முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களிற்காகக் காத்திருந்தது. உதவி வழங்கும் ரோக்கியோ மகாநாட்டில் விடுதலைப் புலிகள் பங்குபற்ற மறுத்தமை அவர்களிற்கான அபாயத்தை முன்னறிவித்தது. அக்கால அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா ரொக்கா ”இன நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான சமாதான முயற்சிகளின் சிறந்த நலன்களாகவும், தமிழ் மக்களின் நலன்களிற்காகவும், ஏன் தங்களின் நலன்களிற்காகவும் விடுதலைப் புலிகள் ரோக்கியோ மகாநாட்டில் பங்குபற்ற வேண்டும்” என்றார். இதில் 'தங்களின் நலன்' என்ற வார்த்தை, விடுதலைப் புலிகளின் முதுகைத் தடவுவதற்கல்ல என்பதை அனைவரும் அறிவார். அதேவேளை அமெரிக்காவின் பிரதி ராஜாங்க அமைச்சர் றிச்சட் ஆமிரேஜ் ”பேச்சுவார்த்தைக்கு வராத ஒரு குழு சர்வதேசத்தை மிரட்டும் தொனியில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். இதனோடு பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களை, குறிப்பாக பாதுகாப்பு வலயம் போன்றவைகளின் இழுத்தடிப்புக்கள், அரசால் மறுக்கப்பட்ட இடைக்காலத் தீர்வு போன்றவைகள் தமிழீழத்தில் வீசப்போகும் பெரும் புயலுக்கான கருமேகங்களின் திரட்சியானது. இக் கருமேகங்களின் பின்புலத் திரட்சியில் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் Project Beacon உருவாகியது. இத்திட்டம் இலங்கையுடன், இந்தியா உட்பட பல வல்லரசு நாடுகளின் உதவியுடனும் நல்லாசியுடனும் 2005ல் ஒஸ்லோவில், உருவாக்கப்பட்டது. 2006ல் இருந்து 2009 வரையுமான காலப்பகுதிக்குள் மூன்று கட்டங்களாக விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவது, யுத்தத்தில் பொதுமக்கள் படுகொலைகள் கட்டற்றுப் போகும்போது புலம்பெயர் நாட்டு மக்கள் கிளர்ந்தெழாதவாறு முக்கியமானவர்களைக் கைதுசெய்தல், மக்கள் பீதியடைந்து விடுதலைப் புலிகளிற்கு எதிராக திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும், தொடர் குண்டுவீச்சில் தமிழர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தல், போன்ற உப திட்டங்களும் அதனுடன் இணைந்திருந்தது. இதன் பின்னர் இந்தியா சீனா இரசியா பாகிஸ்தான் போன்ற முக்கிய ஆசிய நாடுகளினதும், வல்லரசுகளின் உதவியுடனும் 25-05-2006ல் தொடங்கிய போர் 18-5-2009ல் விடுதலைப் புலிகள் சிதறடிக்கப்பட்டபின் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றிக்கு சில நாடுகள் அளித்த அதீத வாழ்த்துக்கள், விடுதலைப் புலிகளின் அழிவை அவர்கள் எந்தப் பின்னணியில் விரும்பியிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்தும். இந்த இனப்படுகொலையின் வெறியாட்டத்தின் பின், கிட்டத்தட்ட மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை, இலங்கை அரசு வதைமுகாமில் மிருகங்களாக அடைத்து வைத்துவிட்டு, தமிழர்களை வெற்றிகொண்டதைக் கொண்டாடிய விதம், பல நாடுகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியபோதிலும், வெற்றி மமதையில் இருந்த பேரினவாத அரசிற்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. வெற்றியின் பின்னர் சர்வதேச நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தியாகூட வெளியிட்ட அறிக்கைகளில், இவர்களின் உதவிக்கும் நெறிப்படுத்தலுக்கும் வெற்றிக்கும் பிரதிபலிப்பாக சில வாக்குறுதிகளை இலங்கை அளித்திருந்ததாக அறியமுடிகிறது. அது விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர் அரசு ஒரு அரசியல் தீர்;வுத் திட்டத்தை முன் வைக்கும் என்பதுதான். ஏனெனில் இந்தியா, அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் அனைத்தும் ஒரே விடயத்தை இலங்கை அரசிற்கு திரும்பத்திரும்ப வலியுறுத்திக்கொண்டு வருகிறார்கள். அது அரசு வாக்குறுதி அளித்தபடி இனப் பிரச்சனைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வுத்திட்டத்தை விரைவாக முன்வைக்க வேண்டும் என்பதுதான். இத்திட்டம் இந்தியாவால் முன்வரையப்பட்ட 13வது அரசியல் சீர்திருத்தச் சட்டமும் அதற்கு அப்பாலும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இக்காலங்களில் இலங்கை ஜனாதிபதியும் அவரது கட்சி அங்கத்தவர்களும் வெளியிட்ட முக்கியமான சில கருத்துக்கள் இவை ”இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒன்று இல்லை. அனைவரும் இலங்கையரே” ”அவர்கள் (தமிழர்கள்) எது வேண்டுமென்று நினைக்கிறார்களோ அது அவர்களிற்கு கிடைக்காது” ”விடுதலைப் புலிகள் அழிந்தபிறகு தமிழர் பிரச்சனையென ஒன்றும் இல்லை” ”முதலில் மீள்குடியேற்றம் அதன்பிறகே அரசியல் தீர்வு” மீள்குடியேற்றத்திற்கு மூன்றுமாத காலஅவகாசம் பின்னர் கண்ணிவெடி அகற்றுதல் என்ற பேரில் உத்தேசமாக ஐந்து வருடங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றது. நிவாரணப் பணியாக பணம் வரும் வாசலாக அகதிகள் இருப்பதனால், அகதிகள் குடியேற்றத்தை அரசு முதன்மைப்படுத்தாது. அடுத்த ஆண்டும் மக்களைப் பராமரிக்க மேலும் 225 மில்லியன் டொலர்கள் தேவையாக இருப்பதாக இலங்கை அரசு கோரியுள்ளது இதனை உறுதிப்படுத்தும். இந்த உண்மையை ஐ.நா.சபை உணரும் காலம் இன்னும் கனியவில்லைபோலும். இறுதி யுத்தத்தின்போது 400 போராளிகள்தான் இருக்கின்றார்கள் என்று அறிவித்த அரசு பின் அதன் எண்ணிக்கையை மேலும் 10000 மாக உயர்த்திக் கொண்டது. இந்த எண்ணிக்கை அரசின் தேவைகளிற்காக காலத்திற்குக் காலம் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டே போகும். அரசின் மேற்கூறிய அறிக்கைகளும் காலம் கடத்தல்களும், கடந்த அறுபது ஆண்டுகாலமாக ஈழமக்கள் கடந்துசென்ற வழியில் சர்வதேசம் வருவதற்கான கதவு திறக்கப்படுகின்றது என்பதை குறிக்கின்றது. மீள்குடியேற்றத்தின் பின்னர் அரசியல் தீர்வு என்பதனால் இப்போது ஐ.நா.சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மீள் குடியேற்றம் பற்றி உரத்துக் குரல் கொடுக்கின்றனர். இதுவும் அரசின் காதுகளில் விழுவதாக இல்லை. இதன் அதிருப்தி வெளிப்பாடுகள் பல்வேறு விதங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டது. பல்வேறு தடவைகள் கோரிக்கை விட்டுக் களைத்துப்போன ஐ.நா.பொதுச் செயலாளர் நாயகம் பான்.கி.மூன் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனாய் நியுயோர்க்கில் நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்காவிடம் ”மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்தத் தவறினால் கசப்புணர்வதான் தீவிரமடையும்” என்று கூறியுள்ளார். இதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு ஆணையாளர் பெனிற்றா பெரேரோ வால்ட்டனர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்சவைச் சந்தித்து ”இடம் பெயர்ந்த மக்கள் மிகத் துரிதமாக மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல் இந்திய அரசியல் ஆய்வாளர் கேணல் ஹரிகரன் ”சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போதெல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள், செய்வார்கள். முன்னர் இனப் பிரச்சனைகளிற்கு தீர்வாக சமஷ்டி பற்றி பேசினார்கள். இப்போது அதைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்று எதிர்காலத்தில் இதுவும் அரசியலிலிருந்து காணாமல் போய்விடும். சிறிலங்கா தமிழர் விடயத்தில் பாராமுகமாய் இருந்தால் கடந்த முப்பது வருடங்களில் அது சுற்றிவந்த சுழற்சியை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டியிருக்கும்” என்கிறார். இப்போது மீண்டும், தீர்வுத் திட்டத்திற்கான அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ”பொதுத் தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுத் திட்டம் வெளியிடப்படும்” என்கிறார். இதன் தொடர்ச்சியாக சர்வதேசம் சில தெளிவான நிலைப்பாடுகளை உணர்த்த முன்வரும்போது, தமிழர்களின் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமா? அல்லது சீனாவின் பின்னணியின் பலத்தில் 'உனக்கும் பெப்பே உனது அப்பனுக்கும் பெப்பெ' என்பதான இலங்கையின் இயல்பான மனநிலை வெளிவருமா? அல்லது மேற்குலகின் பொருளாதாரத் தேவைகள்தான் முதன்மைப்படுத்தப்படுமா? இக் கேள்விகளே முக்கியமானது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் GSP + வரிச் சலுகை தற்காலிகத் தடையுடன் நீள்கிறது. இப்போதைய அதன் தற்காலிக நிறுத்தமும் அதைப்பெற அரசு எடுக்கும் அதிதீவிர முயற்சியும், அமெரிக்காவினால் வெளியிடவிருந்த சிறிலங்காவின் மனித உரிமை மீறல் அறிக்கையும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சரின் அமெரிக்க பயணத்துடன் மெல்ல பின்தள்ளப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டுவிட்டது. மீண்டும் அமெரிக்கா தன் சுயநல அடிப்படையில் இலங்கையைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்து இருக்கிறது. இந்தியாவும் பெரிய அழுத்தம் எதனையும் இலங்கை அரசிற்கு கொடுக்கப் போவதில்லை. இந்த ஆதரவான போக்கு அல்லது இதற்கு எதிரான கடுமையான போக்கு ஆகியவற்றின்மூலம், அர்த்தமுள்ள தீர்விற்குப் பதிலாக ஏதாவது ஒன்று, தீர்வு என்ற பெயரில் தமிழர்முன் வைக்கப்பட, இந்தியா, மேற்குலகின் அரசியல் நலன்கள் முதன்மைப்படுத்தப்படலாம். இறுதியில் யார்யாருடைய நலன்களிற்காக அழிக்கப்படுவதும், பயன்படுத்தப்படுவதுமான ஒரு இனமாக ஈழத்தமிழர்கள் ஆகிப் போனார்கள்.

போரின் சாட்சியாகின்றார்’ ஆகிறார் பொன்சேகா?

இலங்கை அதிபர் தேர்தலின் முடிவுகளைப் புரிந்துகொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய்க் கிடக்கின்றன இலங்கை எதிர்க்கட்சிகள். ‘சபாஷ், சரியான போட்டி’ என்று கடைசிவரை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்த ஒன்று, இப்படி ஒரேயடியாகப் புஸ்வாணமாகி, ஒருபக்க ஆட்டாமாகிப் போய் முடிந்தது எங்ஙனம்? அதிபர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வளவு சுலபமாக வெல்லக்கூடிய வகையில் முடிவு வெளிவருவதற்கான மந்திர தந்திரம் எங்கு அரங்கேறியது? – என்பவையெல்லாம் தெரியாமல் விழி பிதுங்குகின்றது எதிரணித் தரப்பு. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா வெல்வார் எனக் கடைசி வரையில் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலில் இரண்டு மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்று மஹிந்த ராஜபக்ஷவே மிகச் சுலபமாக வெற்றிவாகை சூடுவதற்கான காய் நகர்த்தல் எப்படி இடம்பெற்றது, எதிரணிக்கு ஆப்பு எங்கு வைக்கப்பட்டது என்பதில் மர்மம் நீடிக்கவே செய்கின்றது. இது உண்மையில் மக்களின் தீர்ப்பு அல்ல என்று எதிரணித் தரப்பில் முணுமுணுக்கப்பட்டாலும் தவறு எங்கு என்பதை அத்தரப்பினால் சுட்டிக்காட்ட முடியாத நிலைமையே நீடிக்கின்றது. அவ்வளவு தூரம் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் கனகச்சிதமாக முடிக்கப்பட்டிருக்கின்றன. தேர்தலன்று இரவு வாக்குகள் எண்ணப்படும் சமயத்தில், எதிரணிப் பொது வேட்பாளரும், ஏனைய முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் கொழும்பு நகரில் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த சமயம் இலங்கை ராணுவத்தின் பல நூற்றுக்கணக்கான சிப்பாய்களினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சர்வதேசக் கவனத்தை ஈர்த்தமை தெரிந்ததே. அப்படி பொன்சேகாவும் அவரது அணியினரும் போய்ச் சிக்கிக்கொண்டமைக்கு அவரது தரப்பில் வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், இத்தேர்தலில் தமக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வெற்றியே இப்படி அவரை அரசுத் தரப்பின் வலையில் கொண்டுபோய் வலிய விழவைத்தன என்கின்றன விஷயமறிந்த வட்டாரங்கள். வாக்களிப்பு முடிந்த அன்றிரவு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சமயம், தன்னையும் தனது மெய்ப்பாதுகாவலர்களையும், தனது அலுவலகத்தில் வைத்துச் சுற்றி வளைத்துக் கைது செய்ய ராகபக்ஷ தரப்பு நடவடிக்கை எடுத்தது என்றும், அது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்ததால்தான் இந்த ஓட்டலுக்குள் வந்து புகுந்துகொண்டார் எனவும் இப்போது புருடா விடுகிறார் பொன்சேகா. ஆனால் இது ‘திருடன், தலயாரி வீட்டில் ஒளிந்த’ கதையாகும். ஏனென்றால், இலங்கை அதிபரின் உத்தியோகபூர்வ இல்லமான ஜனாதிபதி இல்லத்துக்கும் அவரது ஜனாதிபதி செயலகத்துக்கும் மிகமிக அருகில் – அதியுயர் பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசத்தில் அமைந்திருக்கும் Cinnamon Lake Side Hotel ல் போய்த் தஞ்சம் புகுவதாகக் கூறுவது, தானே வம்பை விலை கொடுத்து வாங்கும் வேலையின்றி வேறில்லை. கொழும்பு நகரில் ராஜதந்திரிகள் உட்படப் பலரும் தங்கியிருக்கும் மிகப் பாதுகாப்பான பல ஓட்டல்கள் இருக்கையில், ஜனாதிபதி மாளிகைக்கும் ஜனாதிபதி செயலகத்துக்கும் மிகவும் அருகிலும், விமானப்படைத் தலைமையகத்துக்கு நேரே முன்னாலும் அமைந்திருக்கும் இந்த ஓட்டலுக்குள் பொன்சேகா போய் அன்றிரவு புகுந்து கொண்டதற்கு ஒரு காரணம் உண்டு. அதுவும் தனியாக அவர் அங்கு செல்லவில்லை. அந்த ஓட்டலின் இரண்டாவது மாடித் தளத்தில் பல டசன் அறைகளை ஒன்றாக ‘புக்’ பண்ணி, ஒதுக்கியபடி, தமது ஆதரவாளர்கள் பலருடன் அன்றிரவு அங்கு குடிபெயர்ந்திருக்கிறார் பொன்சேகா. முன்னாள் ராணுவத் தளபதியான அவர், படையில் தம்முடன் முன்னர் பணியாற்றி, இப்போது படைகளை விட்டு விலகி அல்லது விட்டோடி இருக்கும் பல டசன் முன்னாள் ‘கமாண்டோக்கள்’ சகிதமாகவே அங்கே அன்றிரவு நுழைந்திருக்கின்றார். இந்தத் தேர்தல் வெற்றி மீதான உறுதியே அவரை இப்படிச் செய்ய வைத்திருக்கின்றது. இத்தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வென்றாலும் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை அவருக்கு விட்டுக்கொடுக்க மாட்டார் என்ற பேச்சு தேர்தலின் இறுதிக்கட்ட வேளையில் பரபரப்பாக அடிபட்டது. அத்தகைய சூழல் உருவானால் – தேர்தல் முடிவுகள் தமக்கு சாதகமாக வரும் சமயத்தில் ஆட்சியைத் தம்மிடம் விட்டுத்தர ராஜபக்ஷ குடும்பத்தவர்கள் மறுத்தால் – அதிகாரத்தை மடக்கிக் கைப்பற்றும் எண்ணத்துடனேயே அதிபர் மாளிகைக்கும், செயலகத்துக்கும் மிக நெருக்கமான ஓட்டலுக்குள் ஆள், அணி அம்போடு பொன்சேகா நகர்ந்திருக்கின்றார். நள்ளிரவில் தேர்தல் முடிவுகள் தமக்குச் சார்பாக வெளியாகத் தொடங்கினால் அருகில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்குள்ளும், செயலகத்துக்குள்ளும், அதிரடியாக நுழைந்து அதிகாரத்தைத் தேவைப்பட்டால் பலவந்தமாகவேனும் பிடுங்கிக் கொள்வதே பொன்சேகா அணியின் திட்டமாக இருந்தது. வழமையாக ஜனாதிபதி தங்கியிருக்கும் ஜனாதிபதி மாளிகையை, மஹிந்த ராகபக்ஷ அதிகம் பயன்படுத்தியதில்லை. தாம் பிரதமராக இருந்தபோது பயன்படுத்திய அலரி மாளிகையே தனக்கு வசதியானதும், வாய்ப்பானதும், அதிர்ஷ்டமானதும் எனக் கருதுவதால் என்னவோ ஜனாதிபதி மாளிகையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலரி மாளிகையையே தமது உத்தியோகபூர்வ இல்லமாக மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்தி வருகின்றார். எனவே, ஜனாதிபதி இல்லத்தை ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி பயன்படுத்தாத இந்த நிலைமையைத் தேவைப்பட்டால் வசமாகப் பயன்படுத்தலாம் என்பது பொன்சேகா அணியினரது அப்போதைய திட்டமாக இருந்தது. ஆனால், தேர்தல் காலம் முதல் பொன்சேகா தரப்பின் ஒவ்வொரு நகர்வையும் தனது உளவுப் பிரிவினர் மூலம் மிகத் துல்லியமாக அவதானித்து வந்த கோத்தபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மாளிகைக்கு மிக நெருக்கமாக உள்ள ஓட்டலுக்குள் பொன்சேகா அணி புகுந்ததை அறிந்ததும் மின்னலென நடவடிக்கைகளை எடுத்தார். அதிபருக்கு விசுவாசப் படையணி ஒன்று கனரக வாகனங்கள், ஆயுதங்கள் சகிதம் ஓட்டலை முற்றாகச் சுற்றி வளைத்தது. பல நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்ட துருப்பினர் ஓட்டலுக்குள் நுழைவோர், வெளியேறுவோர் எல்லோரையும் நோண்டி எடுத்தனர். வெளியில் இருந்தபடி ஓட்டலுக்குள் இடம்பெறும் நகர்வுகள் ஒவ்வொன்றும் நோட்டம் விடப்பட்டன. முன்னாள் ராணுவத் தளபதியான ஜெனரல் பொன்சேகா தமக்கு ஆதரவான சில படை அணிகள் மூலம் ராணுவச் சதி ஒன்றை மேற்கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அதிபரின் மாளிகைக்கு அருகில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்து கொண்டிருப்பதால் அவரை அதிபருக்கு விசுவாசமான படையினரின் சுற்றி வளைப்பில் தாங்கள் வைத்திருக்கிறோம் என்ற தகவல் ராஜதந்திர வட்டாரங்களுக்கு அரசுத் தலைமையால் நள்ளிரவே கசிய விடப்பட்டது. தேர்தல் முடிவுகள் விடிகாலையில் அதிபர் ராஜபக்ஷவுக்கு ஆதரவான விதத்தில் வெளியாகத் தொடங்கியபோதுதான் படைத்தரப்பின் முற்றுகைக்குள் தம்மைத் தாமே சிக்கவைத்துக் கொண்டுள்ளோம் என்ற யதார்த்தம் பொன்சேகா அணிக்கு உறைக்கத் தொடங்கியிருக்கின்றது. அதன் பின்னர் முன்னாள் ராணுவத் தளபதி என்ற முறையில் தமக்குக் கிட்டியிருந்த மெய்ப்பாதுகாவலர்கள், காவல் வாகனங்கள் எல்லாவற்றையும் பறிகொடுத்து, ‘வெறுங்கையுடன் இலங்கை புக்கும் இராவணன்’ போல பொன்சேகா ஓட்டாண்டியான நிலையில் வீடு திரும்ப வேண்டியவரானார். அதிகாரக் கனவோடு ஜனாதிபதி மாளிகைக்குப் பக்கத்தில் இருக்கும் ஓட்டல்வரை முன்னேறிய பொன்சேகாவை அதற்கு அப்பால் நகரவிடாது, அவரது கனவைக் கலைக்கும் விதத்தில் தேர்தல் முடிவுகள் இப்படியானது எங்ஙனம் என்பதுதான் அவருக்கு இன்னும் புரியவில்லை. தேர்தல் சமயத்தில் இலங்கைத் தமிழர்களின் ஏகோபித்த தலைவரான இரா.சம்பந்தனோடு அவர் உடன்பாடு கண்டதும், அந்த இணக்கத்தின் மூலம் புலிகள் இயக்கம் மீள எழுச்சி பெறவும், தமிழருக்கு ஈழத்தை வழங்கவும் பொன்சேகா எழுத்தில் சம்மதித்துவிட்டார் என்று அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அரச ஊடகங்கள் மூலம் பெரும் எடுப்பில் மேற்கொண்ட இனவாதப் பிரசாரமும், பௌத்த சிங்கள இனவாதத்தில் ஊறித் திளைத்துக் கிடக்கும் தென்னிலங்கையில் ஆழமாக வேலை செய்திருக்கின்றன என்கிறார்கள் அவதானிகள். தமிழர்கள், முஸ்லிம்கள், இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் என இலங்கையின் சிறுபான்மை இன மக்கள் வசிக்கும் இடமெங்கும் ஜெனரல் பொன்சேகா பெரு வெற்றியீட்டியமைக்கும், ஏனைய இடங்களில் எல்லாம் – பெரும்பான்மைச் சிங்களவர்களால் – பெரிய அளவில் தோற்கடிக்கப்பட்டமைக்கும் இந்தப் பேரினவாதப் பிரசாரமும் அத்தகைய கருத்தியல் சிந்தனைக்குள் சிங்கள மக்கள் சிறைபட்டுக் கிடக்கின்றமையுமே காரணம் என்பதை இதுவரை அந்தப் பேரினவாதத்துக்காகத் தமது ரத்தத்தையும் சிந்திப் போர் புரிந்த பொன்சேகா இப்போதுதான் உணர்ந்து கொள்ளத் தொடங்கியிருப்பார் என்கிறார் தமிழர் தலைவர் ஒருவர்.- சரி. இனி பொன்சேகாவின் நிலைமை என்ன? * ‘ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். அதுமாதிரியே பொன்சேகா அதிகாரத்துக்கு வந்தாலும், அதிகாரத்துக்கு வராவிட்டாலும் அதிபர் மஹிந்த தரப்புக்கு தலையிடி கொடுக்கும் சிக்கல் நபரே என்பது மறுக்கப்படக் கூடியதல்ல. நாட்டுக்காகப் போராடி, யமலோகத்தின் வாசலை இரண்டு தடவைகள் தட்டிப்பார்க்கும் அளவுக்கு செத்துப் பிழைத்து வந்த தம்மைத் தேர்தல் காலத்திலும், பின்னரும் எவ்வளவு கேவலமாக ‘ராஜபக்ஷ அண்ட் பிரதர்ஸ் கம்பெனி’ நடத்தி வந்தது என்ற செமகடுப்பில் இருக்கும் பொன்சேகாவைத் தேர்தல் சமயத்தில் அரசுத் தரப்பால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட குளறுபடிகள், தேர்தல் தோல்வி பற்றிய அறிவிப்பு போன்றவை எல்லாம் மனப் புகைச்சலின் உச்சத்துக்கே கொண்டுபோக வைத்துவிட்டன என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள். தமக்குரிய பாதுகாப்பு அனைத்தையும் அரசுத் தலைமை வாபஸ் பெற்றுவிட்டமையால், நடுவீதியில் நிற்கும் தாம் வேறு வழியின்றி மாற்று மார்க்கமாக, தற்காலிகமாக வெளிநாடொன்றில் போய்த் தங்கப்போவதாக பொன்சேகா ஏற்கனவே கோடி காட்டியிருக்கின்றார். அப்படி பொன்சேகா வெளிநாட்டுக்கு வெளியேறினார் என்றால் ராஜபக்ஷ சகோதரர்களுக்குப் பெரிய ஆப்பு – பேராபத்து – காத்திருக்கும் என்று கூறப்படுகின்றது. வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது பல்லாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கண்மூடித்தனமாகக் கொன்றொழித்த குற்றத்துக்காக சர்வதேச குற்றவியல் நீதி விசாரணை என்ற கத்தி இலங்கை அரசுத் தலைமையின் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையானது. நடந்து முடிந்த தேர்தலில் பொன்சேகா வென்று ஆட்சிக்கு வந்திருந்தால், இக்குற்றங்களின் பெயரால் மஹிந்த ராஜபக்ஷ அணியை அப்படியே பிடித்துக் கொண்டு போய் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஒத்துழைத்திருப்பார் அல்லது கண்டும் காணாதவர் போல நடந்து அத்தகைய நடவடிக்கைக்கு உதவி புரிந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது தேர்தலில் தோற்றுவிட்ட அவரை இதற்குப் பின்னராவது தாஜா செய்து சமாளிப்பதை விடுத்து, அவருக்கு மேலும் வெறுப்பூட்டும் விதத்தில் நடந்து கொள்கின்றது மஹிந்த தரப்பு. ஏற்கெனவே தேர்தல் பிரசார சமயத்தில் இந்தப் போர்க்குற்ற விவகாரங்கள் பற்றிய ஒரு சில தகவல்கள் தம் வாயால் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வெளியிட்டு, சிங்கள மக்கள் மத்தியில் அதற்காக செமையாக வாங்கிக் கட்டிக் கொண்டவர் பொன்சேகா. அவர் இப்போது வெளிநாடு போனால் அந்த யுத்த சமயத்தில் அரங்கேறிய போர் அட்டூழியங்கள், அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள், அராஜகங்கள் பற்றியெல்லாம் சர்வதேசத் தரப்புகளுக்குப் போட்டுக் கொடுத்து, ‘அப்ரூவர்’ ஆகி, மஹிந்த அரசை குறிப்பாக மஹிந்தரையும் அவரது சகோதரர்களையும் – சர்வதேசச் சிக்கல்களில் மாட்டி வைத்துவிடுவார் என்ற கருத்து நிலவுகின்றது * சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஈழத் தமிழர் நலன் சார்ந்த இயக்கங்கள், சர்வதேச யுத்தக் குற்றங்களைத் தடுக்கும் விஷயங்களில் உறுதியாக நிற்கும் ஆர்வலர்கள் போன்றோரைப் பொறுத்தவரை பொன்சேகா இப்போது பொன் முட்டை இடக்கூடிய வாத்து. அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு எதிராக பொன்சேகா கொண்டிருக்கும் சீற்றத்தை – பழிவாங்க வேண்டுமென்ற வெறுப்புணர்வை – சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான வாய்ப்பாக மாற்றச் செய்வது இத்தரப்புகளின் சமயோசிதத்தில் தான் தங்கியுள்ளது. அதற்கு அமெரிக்காவின் முழு ஆசீர்வாதமும் உண்டு என்கின்றன சம்பந்தப்பட்ட வட்டாரங்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. தேர்தலில் தோல்வியுற்ற ஜெனரல் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேற மஹிந்த அரசு அனுமதிக்குமா என்பதுதான் அது. அதில்தான் எல்லாமே தங்கியுள்ளது என்பதும் மறுக்கக் கூடியதல்ல.

எச்சங்களாகவே இன்றும் தமிழர் தலைமைகள்

தமிழ்த் தேசிய இனத்தின் ஒட்டுமொத்த அரசியல் குத்தகையாளர்களாகவும் மேய்ப்பர்களாகவும் தாமே இருக்கவேண்டும் என்பதில் ஆதிக்க அரசியல் நடத்திவந்த தலைமைகளின் எச்சங்களாகவே இன்றும் தமிழர் தலைமைகள் இருந்து வருகின்றன தமிழ் மக்கள் உணர்த்தியிருக்கும் உண்மைகளை தமிழ்த் தலைமைகள் புரிந்து கொள்ளுமா? இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஆறாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது. ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்துவந்த மகிந்த ராஜபக்ஷவும் இராணுவத் தளபதியாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவும் பிரதான வேட்பாளர்களாகக் களமிறங்கி நின்றனர். இலங்கையின் இரண்டு ஆளும் வர்க்கக் கட்சிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தத்தமக்குரிய கூட்டாளிக் கட்சிகளை அணி சேர்த்து நின்று பிரசாரப் போரில் ஈடுபட்டுவந்தன. இதற்காக இரு தரப்பிலும் செலவு செய்யப்பட்ட பணம் சுமார் 500 மில்லியனைத் தாண்டியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இத்தகைய தேர்தல் செலவுகளுக்குப் பின்னால் இலங்கையின் முன்னணிக் கோடீஸ்வரர்கள், இலட்சாதிபதிகள், வர்த்தக நிறுவனத்தினர் எனப் பற்பல பேர் இருந்து வந்துள்ளமை முதலாளித்துவ ஜனநாயகத்தில் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. அதியுயர் ஜனநாயகம் பேசும் அமெரிக்காவிலும் பாரத புண்ணிய பூமியிலும் ஜனநாயகத் தேர்தல்களில் பணநாயகம் வகிக்கும் பாத்திரம் பற்றி யாரும் பெரிய அளவில் அலட்டிக் கொள்வதில்லை. அப்படியிருக்க இலங்கையில் இதெல்லாம் சிறிய விடயங்களாகவே காணப்படுகின்றன. இவ்வாறான சூழலில் நடந்து முடிந்த தேர்தலில் ஜனாதிபதியாக மீண்டும் மகிந்த ராஜபக்ஷ அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறார். இருப்பினும், அவர் எதிர்பார்த்தளவான 65 வீத வாக்குகளைப் பெற முடியாமல் போனமை உள்ளார்ந்த ஒரு மனக்குறை என்பது காணக்கூடியதே. போர் வெற்றி , புலிகள் அழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு என்பனவற்றின் அடிப்படையில் 65 இற்கும் 70 இற்குமிடையிலான அமோக வாக்குகளைச் சிங்கள மக்களிடமிருந்து பெற்று இது வரையிலும் இல்லாததும் எதிர்காலத்தில் பெற முடியாததுமான ஒரு மகத்தான வெற்றியைப் பெறவே மகிந்த ராஜபக்ஷ முயன்றார். அதனாலேயே இரண்டு வருடங்கள் முன்பாகத் தேர்தலை நடத்தினார். அவர் ஏற்கனவே சந்திரிகா அம்மையார் 1994 இல் பெற்றிருந்த அதியுயர் வீதமான 62 வீதத்தைத் தாண்டிச் சென்று ஒரு சாதனையை நிலைநாட்டவும் பெரு முயற்சி செய்தார். ஆனால், சிங்கள மக்கள் அந்தளவிற்கு முன்வரவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் கூறியுள்ளன. 57.88 வீதமான வாக்குகளே கிடைத்தன. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி மூலமான சரத் பொன்சேகா பெற்ற வாக்குகள் 40.15 வீத வாக்குகளாகவே உள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வாக்குகளில் இருந்து சுமார் ஏழு வீத வாக்குகளை மகிந்த ராஜபக்ஷ இம்முறை கூடுதலாகப் பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது. போர் வெற்றி, புலிகள் அழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு என்பனவற்றைத் தமது சாதனையாகவும் அடுத்து நாட்டை அபிவிருத்தி செய்வது என்ற இலக்கை முன்வைத்ததிலும் அடுத்த பதவிக் காலத்தை அதே மகிந்த ராஜபக்ஷவிடம் கொடுக்க வேண்டுமென்பதில் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அத்துடன் அரசாங்கத்துடன் இருந்துவந்த கட்சிகள் மகிந்தாவைத் திரும்பவும் கொண்டு வருவதில் ஒருமுகமாக இருந்தும் வந்துள்ளன. அவற்றுக்குரிய இலக்கு அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலேயாகும். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கிய கூட்டின் மீதான மக்களின் நம்பிக்கை அதிக அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை. அது ஒருவகையான தோற்றப்பாடே தவிர, சரத் பொன்சேகா முன்வைத்த “நம்பிக்கையான மாற்றம்’ என்பதற்கான வலுவுள்ள அடிப்படைகளை மாற்றுக்கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி.,மனோகணேசன், மங்கள சமரவீர போன்றோர் கூறியவற்றை மக்கள் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளவில்லை. அதனால், இதே கூட்டணிக்குள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டும் நிலைக்கும் வந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் அதிருப்தியே காணப்படுகிறது. எவ்வாறாயினும் ரணில் தொடர்ந்த தோல்வியின் சின்னம் என்பதிலிருந்து தப்பி சரத் பொன்சேகா மீது அதனைச் சுமத்தியுள்ளமையையும் காணமுடிகிறது. நடந்து முடிந்த தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களில் யார் வென்றாலும் ஒன்றுதான் என்பதே இலங்கை அரசியல் பரப்பில் காணப்படும் யதார்த்தமாகவுள்ளது. ஆனால், ஒவ்வொரு கட்சியும் எடுத்த அரசியல் நிலைப்பாடானது அவர்களது வங்குரோத்துத் தனமான சந்தர்ப்பவாத அரசியலையும் அதனூடாகத் தமது உழைக்கும் மக்களுக்கு விரோதமான உயர் வர்க்க நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளமை கவனத்திற்குரியதாகும். அந்த வகையில் ஜே.வி.பி.தனது தொழிலாளி வர்க்க துரோகத்தனத்தையும் சந்தர்ப்பவாத சரணடைவையும் வெட்டவெளிச்சமாக்கிக் கொண்டது. இவர்களது சந்தர்ப்பவாத பாராளுமன்ற சாக்கடை அரசியல் போக்கு ஏற்கனவே நிகழாத ஒன்றல்ல என்றபோதிலும், இரண்டு கிளர்ச்சிகளின் போதும் சுமார் 1 1/2 இலட்சம் சிங்கள மக்களைப் பலிகொடுத்துவிட்டு இன்று அதற்குக் காரணமான ஆளும் வர்க்கக் கட்சிகளோடு பச்சையிலும் நீலத்திலும் நிற்கின்ற கேவலத்தை மக்கள் உணராமல் இல்லை. அதனாலேயே இவர்களது சிவப்பு வெளிவேஷத்தால் கவரப்பட்டு எஞ்சியிருந்து வந்த சிங்கள முற்போக்கு இடதுசாரி இளைஞர்கள் மிக வேகமாக ஜே.வி.பி.யை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர் என்பது இடம்பெற்றுவரும் ஒன்றாகும். சில வருடங்கள் முன்பு வரை தாமே மூன்றாவது சக்தி என்றும் மாற்று அரசியல் தலைமை என்றும் மார்தட்டி வந்த ஜே.வி.பி. தலைமை இன்று இரண்டு ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் கட்டித் தழுவித் தம்மைத் தாமே கரைத்து வரும் காட்சி தற்செயலானதொன்றல்ல. * இதே அவல நிலையைத்தான் தமிழ்த் தேசியவாதத் தரப்பிலும் காணமுடிகிறது. தமிழ்த் தேசிய இனத்தின் ஒட்டுமொத்த அரசியல் குத்தகையாளர்களாகவும் மேய்ப்பர்களாகவும் தாமே இருக்கவேண்டும் என்பதில் ஆதிக்க அரசியல் நடத்திவந்த தலைமைகளின் எச்சங்களாகவே இன்றும் தமிழர் தலைமைகள் இருந்து வருகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப் பழம்பெருமை பற்றியும் வீரப் பிரதாபங்கள் பற்றியும் வெறும் உணர்ச்சி கிளப்பி அவற்றினூடாகப் பாராளுமன்ற சுகம் கண்டவர்கள் தமிழ்த் தலைமைகள். இத்தனைக்கும் பின்பாவது எந்தவொரு தமிழ்த் தேசியவாதக் கட்சிக்கும் நாட்டினதும் தமிழ்த் தேசிய இனத்தினதும் வடக்கு, கிழக்கினதும் யதார்த்த நிலைமைகளைப் படித்தறிந்து மக்களின் மன உணர்வுகளைப் புரிந்துணர்ந்து தூரநோக்குடைய அரசியல் முடிவுகளை எடுத்து நிற்க முடியவில்லை. * நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கின் தமிழ் மக்களாகிய நாம் அழிந்து கெட்டுநொந்து முட்கம்பி வேலிகளுக்குள் இன்னும் இருந்து வரும் சூழலில் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமலும் திரும்பியவர்கள் மாட்டுக்கொட்டிலிலும் கேவலமான இருப்பிடங்களில் வாழ்ந்து வரும் நிலையில் எங்களை இந்நிலைக்கு உள்ளாக்கிய இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு எவ்வாறு எந்தக் கையால் எந்த முகத்தோடு சென்று வாக்களிக்கமுடியும் என்ற நியாயமான கேள்வியைத் தமிழ் மக்கள் எழுப்பியிருந்தனர். அந்தக் கேள்விக்கான விடையைத் தமிழ் மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தகுந்த விடையாகவும் அளித்துள்ளனர்.இது யுத்தத்திற்குப் பின்பாக நடைபெற்ற இரண்டாவது தடவையான தேர்தலில் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். * தமிழ் மக்களின் உணர்வுகளையும் அவர்களது புண்பட்ட மனங்களையும் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளுக்குப் புரிந்து கொள்ளும் திறமையோ மனநிலையோ இருக்கவில்லை.எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பதைத் தமிழ் மக்கள் இத் தேர்தலில் மீண்டும் ஒருமுறை அடித்துக் கூறியுள்ளனர்.1820 வீத வாக்குகள் மட்டுமே இடப்பட்டிருக்கிறது.நாங்கள் சொன்னால் நீங்கள் வாக்களிக்க வேண்டியதுதான்.அடுத்த பேச்சுக்கு இடமிருக்கக் கூடாது என்றவாறான தமிழர் ஆதிக்க அரசியல் நிலைப்பாட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனின் அகங்காரத் தொனி மிக்க அரசியல் முடிவும் எடுத்துக்காட்டியது.அந்த முடிவுக்கு முகத்தில் கரி பூசியது போன்றே தமிழ் மக்கள் தமது நிராகரித்த முடிவை வெளிப்படுத்திக் கொண்டனர். மேற்படி தேர்தலில் தமிழ் மக்கள் தவறாது வாக்களித்து தமது ஜனநாயக உரிமையை நிலைநாட்டவேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் வற்புறுத்தல்கள் ஆணைகள் அழுத்தங்கள் விடப்பட்டு வந்தன.வாக்களிப்பதற்குரிய ஜனநாயக சுதந்திரம் போன்றதே வாக்களிக்காமல் இருப்பதற்கும் உரியதாகும் என்பதை இந்த வற்புறுத்தலாளர்கள் அறியாமல் விட்டது தற்செயலானதொன்றல்ல. தமிழ் மக்கள், மத்தியில் இருந்து மெத்தப்படித்தவர்கள் மேட்டுகுடிப் பெரியவர்கள்,பேராசிரியர்கள்,மதத்தலைவர்கள்,ஊடக நிறுவனச் சொந்தக்காரர்கள் எனப் பற்பலர் அறிக்கை மேல் அறிக்கை விட்டு பகிஷ்கரிப்பு வேண்டாம் என்றனர்.பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டும் அறிக்கை விடுத்தனர்.அரசியலில் வனாந்தரத்தில் இருந்து தமிழ் மக்களை வெளியே வரவேண்டும் என அமெரிக்க ஊடகத்தின் ஊடாகவும் உருகி வேண்டினர்.இந்த அரசியல் வனாந்திரத்திற்குத் தமிழ் மக்கள் இட்டுச் சென்றவர்கள் யார் என்பதை மெத்தப் படித்த இக் கனவான்கள் அறியாது விட்டாலும் தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். சொல்லுவார் சொன்னாலும் கேட்பாருக்கு மதியென்ன என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ் மக்கள் தகுந்த பதில் அளித்திருக்கிறார்கள். இதேவேளை,தமிழ் மக்கள் தூரநோக்குடைய அரசியல் மார்க்கம் ஒன்றைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கவேண்டிய தருணம் வந்திருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.பகிஷ்கரிப்பு நிராகரிப்பு என்பது யதார்த்தத்தையும் சூழலையும அரசியல் தந்திரோபாயத்தையும் கொண்டு அவ்வப்போது தீர்மானிக்கவேண்டிய அரசியல் முடிவே அன்றி அதுவே நிரந்தரமான ஒரு வழிமுறையாகிவிடவும் முடியாது.எனவே, இதுவரையில் ஆதரவு கொடுத்து வந்த தமிழ்த் தேசிய வாதத் தலைமைகள் தமிழ் மக்களுக்குச் சரியான மார்க்கம் காட்டத் தவறியமையால் புதிய மார்க்கத்தில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றித் தமிழ் மக்கள் குறிப்பாக இளந்தலைமுறையினர் சிந்திக்க முன்வரல் வேண்டும். கடந்த காலத்தில் பாராளுமன்ற அரசியலிலும் ஆயுதப் போராட்டக்களத்திலும் பெற்ற கசப்பான அனுபவங்கள் உரிய பட்டறிவாகக் கொள்ளப்படவேண்டும் என்பது தமிழர் அரசியலில் ஒரு முன் நிபந்தனையாகிறது. * நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் அடுத்த ஆறு வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கப் போகிறார். அத்துடன், மேலும் இரண்டு ஆண்டுகள் சேர்க்கப்படலாம் என்றும் அது உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நாடும் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டு வந்த தேசிய இனங்களும் கடுமையான சவால்களை எதிர்நோக்கவே செய்வர்.ஏனெனில் எப்பொழுதும் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கீழான இரண்டாம் தவணையிலான ஆட்சி அதிகாரமானது மிகக் கடுமையானதாகவே இருக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாகும்.எனவே,ஆளும் வர்க்க சக்திகளும் அவர்களது கட்சிகளும் தமக்குரிய அரசியல் வியூகங்களையே வகுத்து பாராளுமன்றப் பதவிகளுக்காகச் செயற்படுவார்கள். ஆனால், நாட்டின் உழைக்கும் மக்களும் தமிழ்,முஸ்லிம்,மலையகத் தமிழ்த் தேசிய இனங்கள் தமது கோரிக்கைகளை உறுதியான சரியான அரசியல் மார்க்கத்தில் முன்னெடுக்கவேண்டியது அவசியத் தேவையாகிள்ளது.இதில் பேரினவாத அரசியல் ஒரு புறமாகவும் தமிழ்க் குறுந்தேசியவாத அரசியல் மறுபுறமாகவும் நின்று மக்களைப் பிளவுபடுத்தி வெறும் பாராளுமன்றப் பதவிகள் பெறும் குறுகிய பழைய நிலை புதுப்பிக்கப்படுவதை மக்கள் நிராகரிக்கவேண்டும். அதற்கு உள்ள ஒரே வழி மாற்று அரசியல் மார்க்கத்தை உருவாக்கி நம்பிக்கை தரும் பாதையில் பயணிப்பதேயாகும்.செக்கு மாட்டுப் பாதையிலான அரசியலை கழற்றிவிட்டு தூரநோக்கிலான ஐக்கியப்பட்ட புதிய அரசியல் பாதையில் காலடி எடுத்து வைக்கவேண்டும்.

சிறிலங்காவில் அடுத்து என்ன நடக்கும்?

இலங்கையில் அடுத்து என்ன நடக்கும் என தமிழர்கள் காத்திருக்கிறார்கள் என்கிறது அமெரிக்க ஏடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி, குடியரசு அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி எனத் தொடர்ந்து வெற்றிப் பாதையிலேயே சவாரி செய்து கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச – தற்போது, தலைமுறை தலைமுறையாகப் பற்றி எரியும் இனப் பிரச்சினையைக் கையாள்வதில் கொஞ்சம் அழுத்தங்களுக்கு உள்ளாகிறார் போல் தோன்றுகிறது. அரசியல் வாழ்வின் ஓரத்திற்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களைப் பலப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் சிங்களத் தேசியவாதிகளைக் கோபப்படுத்தக்கூடும். இத்தகைய நிலையில் நாட்டில் உண்மையான அமைதியை ஏற்படுத்தக் கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பம் வீணடிக்கப்பட்டு விடும் என்று அவதானிகள் பலரும் அஞ்சுகின்றனர். இவ்வாறாக அமெரிக்காவில் வெளியாகும் வோஷிங்டன் போஸ்ட் [Washington Post] ஏடு தெரிவித்துள்ளது. Fisnik Abrashi மற்றும் Krishan Francis ஆகியோர் அதில் மேலும் எழுதியுள்ளதாவது: இந்த வருடத்திலேயே பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் – தாங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் சுயாட்சி மற்றும் சம உரிமைகளைக் கோரும் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசுவதற்குத் அடுத்த நாடாளுமன்றம் அமையும் வரை காத்திருக்கப் போவதாக மகிந்த ராஜபக்ச கோடிகாட்டி உள்ளார். சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் குறித்த தமிழ் பேசும் மக்களின் பயத்திற்குத் தீர்வு காணப்படவில்லை என்றால், இன முரண்பாடுகள் ஆழத்தில் புதைக்கப்பட்டு அதிலிருந்து வன்முறை இன்னும் வீரியத்துடன் மீண்டும் வெடித்துக் கிளம்பக் கூடும் என எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இனிமேல் கிடையாது. அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்குத் தடையாகப் ‘பயங்கரவாதம்’ இருக்கின்றது என இனி நியாயப்படுத்த முடியாது” எனக் கூறினார் சக்திவேல் பாலகிருஷ்ணன். மாற்றுக் கொள்கைகளுக்கான அபிவிருத்தி நிலையத்தின் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் அவர் [an analyst with the research group Center for Development Alternatives ]. தனி நாட்டுக்காகப் போராடிய தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கும் சிங்கள மேலாண்மை அரசுக்கும் இடையிலான போரால் கடந்த கால் நூற்றாண்டு காலமாக இந்து சமுத்திரத்தின் அழகிய இந்தத் தீவு நுகரப்பட்டுள்ளது. அரச நடத்திய தாக்குதல்களில் போராளிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். இந்த வெற்றி நாட்டுக்கு அமைதியையும் ராஜபக்சவுக்குப் பெருமையையும் தேடித் தந்தது. அதன் பின்னர் ராஜபக்ச மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், போராளிகளின் முன்னாள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசித்த மக்களுக்கு சாவுகளையும் அழிவுகளையும் கடும் துன்பங்களையும் தான் இந்தப் போர் கொடுத்தது. போரின் கடைசி நாட்களில் மட்டும் 7,000 தமிழ் மக்கள் உயிரிழந்தனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது. இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அரசினால் ஏற்படுத்தப்பட்ட போர்க் கைதிகளைத் தடுத்து வைப்பதற்கு நிகரான தடை முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 100,000 பேர் இன்னும் அங்கேயே உள்ளனர். போராளிகளுடன் தொடர்புடையவர்கள், அவர்களைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தில் 11,000 பேர் தனியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிங்கள – தமிழ் இனங்கள் இடையிலான பிளவு இன்னமும் அப்படியே இருக்கின்றது என்பதைக் கடந்த வாரம் நடந்து முடிந்த குடியரசு அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டின. அவர் மீண்டும் வெற்றி பெற நாடு முழுவதும் ஆதரவு இருந்த போதும் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளான தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அவர் தோல்வி அடைந்தார். “தான் சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; எனவே தனக்கு வாக்களிக்காத தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைப் புறந்தள்ளி விடலாம் என்கிற எண்ணங்கள் எழுவதை அவர் (மகிந்த) தடுத்து நிறுத்த வேண்டும்” என சண்டே லீடர் பத்திரிகை கடந்த ஞாயிறன்று எழுதி இருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் கொள்கைகளை நிராகரித்து அவருக்க எதிராகத் தமிழர்கள் வாக்களித்தார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். “தாங்கள் வேறான ஒரு மக்கள் இனம் எனச் சொல்கிறார்கள் தமிழர்கள். எனவே அவர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று தேவை” என்றார் சுரேஷ். “தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் (சிங்களவர்கள்) நிச்சயம் தயாராக வேண்டும்” என்பது அவரது கருத்து. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு, அங்குள்ள 9 மாகாணங்களும் தன்னாட்சி உரிமையை ஓரளவு அனுபவிப்பதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளது. அப்படி இருந்த போதும் வடக்கு-கிழக்கு மாகாணத்தின் உரிமைகள் அதிகாரம் மிக்க பெரும் கையான மத்திய அரசால் அபகரிக்கப்படுகிறது எனச் சொல்கிறார்கள் விமர்சகர்கள். இரண்டாவது தடவையாகத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கருத்துத் தெரிவித்த ராஜபக்ச, தான் சிறிலங்கா மக்கள் அனைவரினதும் அதிபராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் தமிழர் பிரச்சினைக்கு சிறிலங்காவிற்குள்ளேயே தயாரிக்கப்படும் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் சொன்னார். ஆனாலும் அதற்காக இந்த வருடத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். எப்படி இருந்தாலும், தமிழர்களால் ஆழப்படுகின்ற, தன்னாட்சி உரிமை கொண்ட பிராந்தியம் ஒன்று சாத்தியம் இல்லை என்று ராஜபக்சவின் தேர்தல் கொள்கை அறிக்கை தெளிவுபடுத்துகிறது. “பிரிக்கப்பட முடியாத ஒரே நாடு” என்பதே அவரது முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. நாடு முழுவதும் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவதன் ஊடாக இன நல்லிணக்கத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசு குறிப்பிடுகின்றது. வடக்கு – கிழக்கில் காணப்படுவது இனப் பிரச்சினை அல்ல என்றும், அதனை அங்கு காணப்படும் ஒரு இயல்பான பொருளாதாரப் பிரச்சனையாகவே தாம் பார்ப்பதாகவும் அரசு மேலும் கூறுகிறது. முன்னர் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் போர் காரணமாக மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள உட்கட்டுமானங்கள் மிகப் பழமையானவை. புற்றீசல் போல் – எங்கும் – சிறிதும் பெரிதுமான படை முகாம்கள் தமது பகுதிகளில் காணப்படுவதாகத் தமிழர்கள் குறைப்படுகிறார்கள். சில இடங்களில் தனியார் காணிகளும் முகாம்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் தாண்டி தமிழ் மக்களின் உடனடித் தேவை மனிதார்ந்த உதவிகள் தான். அவர்களது சொந்த மாவட்டங்களில் மீளக் குடியமர்த்துதல், உணவு, இருப்பிடம் என்பவை அவர்களுக்கு உடன் வழங்கப்பட வேண்டிவை. போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு அனைத்துலகத் தொண்டு நிறுவனங்கள் செல்வது வரையறுக்கப்பட்டுள்ளது. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட கிராமங்களுக்குச் செல்வதாயின் நாடாளுமன்ற உறுப்பினர்களே கூட பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும். இந்தப் பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் அபிவிருத்தி செய்யவும் நீண்ட காலம் எடுக்கும் என்கிறார்கள் அரச அதிகாரிகள். அதே சமயத்தில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து ராஜபக்ச பொதுக் கூட்டங்களில் கூறும் கருத்துக்களின் படி, “தீர்க்கப்பட வேண்டியதான இனப்பிரச்சினை அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரச்சினை இருக்கிறது என்பதை அவர் கொஞ்சம் ஏற்றுக் கொள்கிறார்” என்பது தெரிகிறது எனச் சொல்கிறது அனைத்துலக பிரச்சினைகள் ஆய்வுக் குழுவின் [International Crisis Group - ICG] அறிக்கை. இருந்தாலும், “30 வருட கால உள்நாட்டுப் போர் மூழ்வதற்குக் காரணமாக இருந்த இனப் பதற்றத்திற்குத் தீர்வு காணும் வகையில் அரசியலமைப்பு மாற்றம் அல்லது வேறு மறுசீரமைப்புக்களைச் செய்வதற்கு இதுவரை ராஜபக்ச அரசு ஆர்வம் காட்டவில்லை” என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது. எதிர் காலத்தில் என்னதான் தீர்வு காணப்பட்டாலும் அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனச் சொல்கிறார் ராஜபக்ச. தமிழர்களுக்கு எந்த மேலதிக உரிமையை வழங்கினாலும் அது, குடியரசு அதிபரின் ஆதரவுத் தளமாக இருக்கும் சிங்களத் தேசியவாதிகளுக்கு வெறுப்பூட்டும். “தமிழர்களுக்கு மேலதிக உரிமைகள் எதுவும் கொடுக்கப்படக் கூடாது” என உறுதியாகச் சொல்கிறார் 50 வயதான தர்மசிறி ராஜபக்ச. அதிபரின் ஆதரவாளர் அவர். “எல்லாப் பகுதிகளுக்கும் சமமான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அதனால் வடக்கு – கிழக்கு என சிறப்பான அதிகாரங்கள் எவையும் வழங்கப்பட வேண்டியதில்லை” என அவர் தனது கருத்தை மேலும் அடுக்குகிறார்.

ஈழம்: இன்னும் மீதம் இருக்கிறது நம்பிக்கை!

ஈழம் தொடர்பான செய்திகளில், முள்ளிவாய்க்கால் சம்பவங்களைப் பற்றிக்கூறும் அனைவரும் அதை இறுதிப்போர் என்றே வர்ணிக்கின்றனர். ஆனால் அதுதான் இறுதிப்போர் என்று யார் அறுதியிட்டு கூற முடியும்? இன விடுதலைப்போரில் சறுக்குதல்கள் மிகவும் இயல்பானவையே. ஏதோ ஒரு விதத்தில் கட்டமைக்கப்பட்ட அரசு என்ற இயந்திரத்தை, அந்த அரசின் இயல்புகள் எத்தனை முரண்பாடுகளோடு இருந்தாலும், அதனை ஏற்று – அங்கீகரிக்கும் சர்வதேசச் சூழலில், தனிப்பட்ட ஈகோ பிரசினைகளும், துரோகங்களும் அதிகரித்து வரும் சூழலில் நடைபெறும் ஒரு இன விடுதலைப்போரில் சறுக்குதல்கள் மிகவும் இயல்பானவையே. ஆனால் இந்த சறுக்குதல்களிலிருந்து அந்த இனம் கற்றுக்கொள்ளும் பாடங்களே, அந்த இனத்தின் வாழ்க்கைக்கும், விடுதலை உள்ளிட்ட வளர்ச்சிகளுக்கும் பொறுப்பாக அமையும். ஈழத்தில் அண்மையில் ஏற்பட்ட சறுக்குதல் மிகவும் ஆழமானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும் இந்த சறுக்குதலில் இருந்து தமிழினம் என்ன பாடத்தை கற்றுக்கொண்டது என்பது ஆழமான பரிசீலனைக்குரியது.மனித இனத்தின் மிகப்புராதனமான இனமான தமிழினம் அனைத்துத்துறைகளிலும் திறம் பெற்றிருந்ததை வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றைய தமிழினம் அதே திறத்துடன் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினால் வேதனைதான் மிஞ்சும். சுமார் 30 ஆண்டுகள் நடந்த ஈழ விடுதலைப்போரில் ஈழத்தமிழர்கள் எதைக்கற்றனர் என்பதைவிட தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதைக் கற்றார்கள் அல்லது எதை மறந்தார்கள் என்பதை பார்க்கலாம்.தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் ஈழம் குறித்து பேசாத மக்கள் பிரிவினரே இருக்க முடியாது: அரசியல் தலைவர்களும் இருக்க முடியாது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் இருந்த எழுச்சி இன்று ஏன் இல்லை என்ற கேள்விக்கான விடை மிகுந்த பரிசீலனைக்கு உரியது.ஈழப்பிரசினையின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் எழுச்சி, சிங்கள அரசால் இறுதிப்போர் என்று வர்ணிக்கப்பட்ட போரின்போது ஏற்படவில்லை. அதற்கான காரணங்களை பலரும், பலவிதமாக கூறக்கூடும். ஈழப்போர் நீண்டகாலம் நீடித்ததால் தமிழகத் தமிழர்களின் ஈடுபாடு குறைந்ததாக சிலர் கூறக்கூடும். ராஜீவ் காந்தியின் முடிவு காரணமாக தமிழகத்தமிழர்களின் ஆதரவை ஈழத்தமிழர்கள் இழந்துவிட்டதாக கூறக்கூடும். விடுதலைப்புலிகள் மீதான மக்களின் விமர்சனம்கூட ஈழம் குறித்து தமிழகத்தமிழர்களின் நிலையை மாற்றியிருக்கலாம் என்றும் சிலர் விமர்சிக்கக்கூடும். ஆனால் இந்த காரணங்கள் இல்லாவிட்டால்கூட தமிழகத் தமிழர்கள் ஈழப்பிரசினையில் இந்த எதிர்விளைவை காட்டியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. இதற்கு தமிழர்களின் ஆளுமையில் அல்லது உளவியலில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பரிசீலிக்க வேண்டும்.கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் தமிழ்நாடு பலவிதங்களில் முன்னேறி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மாறிவரும் உலகமய பொருளியல் சூழலுக்கு ஏற்ப தமிழ்நாட்டின் ஒரு பிரிவினர், கணிப்பொறி உள்ளிட்ட நவீன அறிவியல்துறைகளில் நிபுணத்துவம் பெற்று உலகம் முழுவதும் உள்ள கணிப்பொறி நிறுவனங்களில் முக்கிய பணியாற்றுவது வரவேற்க வேண்டியதுதான்.ஆனால் சமூகத்தில் முன்னேற்றம் என்பது பொருள் சார்ந்த ஒரு கருத்தாக மட்டுமே இருப்பது மிகப்பெரும் பின்னடைவே! அறம் சார்ந்த சிந்தனைகள் பின்தள்ளப்பட்டு, பொருளே பிரதானம் என்ற கருத்து சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் முதன்மை பெற்று வருகிறது. பொதுமக்களின், குறிப்பாக இளைய தலைமுறையினரின் முன்மாதிரி பிம்பங்களாக திகழும் அரசியல் தலைவர்கள், தொழிற்துறையினர், திரையுலக பிரபலங்கள் ஆகிய அனைவரும் அறம் குறித்த சிந்தனைகளை தவிர்த்துவிட்டு, பொருள் குறித்த சிந்தனைகளையே முன்வைக்கின்றனர். எனவே இளையதலைமுறையும், அறத்தைக் கொன்றேனும் பொருள் தேடவேண்டும் என்று புரிந்து கொள்கிறது. ஆனால் கொல்லப்படுவது அறம் மட்டுமல்ல, தங்கள் சுய ஆளுமையும்தான்! என்பது புரிவதில்லை.ஆளுமைகள் கொல்லப்படும்போதுதான் அறம் சார்ந்த பார்வைகள் பொருள் இழக்கின்றன. பதிலாக பொருளே பிரதானமாக, பொருளுக்காக எதையும் சமரசம் செய்துகொள்ளும் மனோபாவம் உருவாகிறது. இந்த நிலையில்தான் சமூகப்பார்வை என்பது முற்றிலுமாக விலகி சுயநலம் மட்டுமே முன்னால் நிற்கிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இன்னல் என்றால்கூட, விலகி நின்று வேடிக்கை பார்க்கும் மனநிலை உருவாகிறது.இந்த மனநிலை மேலும், மேலும் ஊடுருவி தன்னை பாதிக்காத எந்த பிரச்சினையும், ஒரு பிரச்சினையே அல்ல என்று முடிவெடுக்க வைக்கிறது.தமிழகத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 10 ஆயிரம் தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்வதாக மைய அரசின் தேசிய குற்ற ஆவண மையம் தெரிவித்தாலும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றி கொள்கைகளை வகுப்பதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக செய்திகள் வெளியானாலும் அது எவருடைய மனதையும் துணுக்குற வைப்பதில்லை.தமிழர்களிடம் இந்த மனநிலையை உருவாக்குவதில் தமிழ்நாட்டின் ஊடகங்கள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைந்து வருகின்றன. தமிழர்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளைவிட நடிகர், நடிகைகள் குறித்த செய்திகளும், அரசும் காவல்துறையும் திட்டமிட்டு வெளியிடும் பிற பரபரப்பு செய்திகளும் பொதுமக்கள் உண்மையான பிரசினைகள் குறித்து சிந்திக்காதவண்ணம் திசை திருப்புவதில் வெற்றி காண்கின்றன. ஆக மொத்தத்தில் எந்த ஒரு சமூக அநீதியைக் கண்டாலும், அதைக் காணாததுபோல் நடித்து சிந்தனையை வேறுபக்கம் திருப்பும் அயோக்கியத்தனமான முயற்சியில் தமிழ்ச்சமூகம் வெற்றியடைகிறது. அந்த வெற்றியில் இன்பமும் காண்கிறது. இந்த உளவியலின் நீட்சியே ஈழ விவகாரத்திலும் நடந்தது. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததில் தமிழகத்தின் அனைத்து துறையினரும் அவரவர் தகுதிக்கேற்ப போட்டிபோட்டு வேலை செய்ததாக துணிந்து கூறலாம்.உயிர்தப்பி ஓடி வரும் ஈழ அகதிகள் அனைவரையும் பயங்கரவாதிகளாக நடத்திய, நடத்தும் மத்திய-மாநில அரசு அமைப்புகள், அபயம் தேடி ஓடிவந்த அகதிகளை கால்நடைகளைவிட கீழாக நடத்தின. இவர்களுக்காக பேசுவதற்கு தமிழகத்தின் எந்த பிரதான அரசியல் கட்சியும் முன்வரவில்லை. ஈழத்தில் போர்முனையில் இருந்த போராளிகளையும், ஆயுதம் தரிக்காத சாதாரண குடிமக்களையும் சர்வதேச சட்டவிதிகளின்படி நடத்தவேண்டும் என்ற சட்டரீதியான குரலை முழுமையாகவும், உரத்தும் யாரும் எழுப்பவில்லை. இது குறித்து சர்வதேச நாடுகளிடம் முறையான கருத்துப்பரப்பலை மேற்கொள்ள வேண்டிய தார்மீக கடமையேக் கொண்ட இந்தியாவோ, இறுதி யுத்தத்திற்கு பிறகும்கூட சிங்கள இனவெறி அரசை பாதுகாக்கும் நோக்கத்தோடுதான் நடந்து கொள்கிறது. மத்திய அரசில் அங்கம் வகித்த, வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளும் இதனை வலியுறுத்தவில்லை. தமிழ்நாட்டிலோ ஈழவிவகாரத்தை கையிலெடுத்த அனைத்து அரசியல்வாதிகளுமே, தங்கள் சொந்த அரசியல் நோக்கங்களுக்கும், நலன்களுக்கும் ஏற்பவே இந்த விவகாரத்தை கையாண்டனர். இந்த கொடுமையின் உச்சத்தில் செயலாற்றியது ஆளும் திமுகவும், முதன்மை எதிர்கட்சியான அதிமுகவும். திராவிடர் கழகம் போன்ற அரசியல் சாராத சமூக இயக்கங்களும்கூட ஈழப்பிரசினையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சிந்திப்பதைவிட, தமிழகத்தின் ஆளும் கட்சியை சிக்கல்களிலிருந்து காப்பாற்றுவது குறித்தே அதிகம் யோசித்தது.ஈழப்பிரசினையை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டிய சமூகக்கடமை கொண்ட ஊடகங்களோ துரோகத்தின் மறுவடிமாக நடந்து கொண்டன, நடந்து கொள்கின்றன! சென்னை நாய்க் கண்காட்சியில் வெப்பம் தாங்காமல் நான்கு உயர் இன நாய்கள் செத்துப்போனதைக்கூட பரபரப்பு செய்தியாக ஒளிபரப்பிய தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி, ஈழத்து சோகங்களை முழுமையாக இருட்டடிப்பு செய்தது. ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக்கட்சி, உதிரிக்கட்சி என்று அனைத்து கட்சி சார்ந்த ஊடகங்களும் ஈழப்பிரசினையை முழுமையாக இருட்டடிப்பு செய்தோ அல்லது தங்கள் நிலைப்பாட்டுக்கு ஏற்ப திரித்தோ செய்தி வெளியிட்டன.இந்த விவகாரத்தில் ஊடகங்களை விமர்சித்தவர்கள்கூட பார்ப்பன ஊடகங்களின் எதிர்ப்பைத்தான் கண்டித்தனரே தவிர, தமிழர் ஊடகங்களின் துரோகத்தை இதுவரை அடையாளம் காட்டவில்லை, கண்டிக்கவில்லை. எதிரியைவிட துரோகி மோசமானவன் என்பது இந்த அறிவுஜீவிகளுக்கு தெரியவில்லை போலும்! சொந்த நலன்களுக்காக ஈழத்தமிழர் சோகத்தை திட்டமிட்டு மறைத்த பாதகர்கள் ஒரு புறமென்றால், ஆட்சி பீடத்தை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற பாதுகாப்பு உணர்வு காரணமாக இந்த விவகாரத்தை தவிர்த்த ஊடகங்களும் உண்டு. வடஇந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட தேசிய ஊடகங்களும், மிழத்திற்குள் இருந்து கொண்டே தமிழர்களுக்கு எதிராக இயங்குவதை வழக்கமாக கொண்ட ஆங்கில ஊடகங்களும் ஈழத்தமிழர் விவகாரத்தை மிகவும் வன்மத்துடனே கையாண்டன. பெரும் முதலீடுகளில் இயங்கும் இந்த ஊடக நிறுவனங்களின் துரோகத்தையாவது முதலாளித்துவப் பார்வையில் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களின் துரோகத்தை காலத்தால் மன்னிக்க முடியாது. பணியாற்றும் நிறுவனங்களுக்கு தங்கள் ஒட்டுமொத்த சிந்தனையையும், செயல்திறனையும் விற்றுவிட்டு “இன்டெலக்சுவல் இம்பொடென்ட்” ஆகிப்போன இந்த செய்தியாளர்கள், அவர்கள் பணியாற்றியிருக்க வேண்டிய பொதுத்தளத்தை முழுவதுமாக புறக்கணித்தனர். இந்தப் பிரசினையில் முழுமையாக செயல்பட்டிருக்க வேண்டிய பத்திரிகையாளர் அமைப்புகள் ஈழப்பிரச்சினை குறித்து கள்ள மவுனம் சாதித்தன. விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச்சில பத்திரிகையாளர்கள் மட்டுமே இணைய தளங்கள், வலைபதிவுகள் போன்ற மாற்று ஊடகங்களை திறம்பட பயன்படுத்தி ஓரளவிற்காவது ஈழமக்களின் சோகங்களை உலகிற்கு எடுத்து வைத்தனர். ஆனால் அவற்றிலும் மிகஅதிகமானவை தமிழில் மட்டுமே வெளியானதால் இந்தியாவில் தமிழ் அல்லாத மாநில மொழி ஊடகங்கள் இந்த செய்திகளை பிரசுரிக்க விரும்பினாலும், செய்திக்கான மூலங்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.தமிழகத்தில் ஈழப்பிரச்சினைக்காக ஓரளவிற்காவது போராடியவர்கள் வழக்குரைஞர்கள் மட்டுமே. ஆனால் சட்டரீதியாகவும், அறிவுசார்ந்தும் நடந்திருக்க வேண்டிய அந்தப்போராட்டமும், சரியான தலைமையோ, திட்டமிடலோ, கூட்டு நடவடிக்கைகளோ இல்லாததால் – அரசின் சாணக்கியத்தனமான சூழ்ச்சிக்கு இரையாகி போராட்டமே திசைமாறி நீர்த்துப்போனது.போராட்டம் என்பதையே சிந்தித்திராத கணிப்பொறித் தமிழர்களில் சிலர், இன உணர்வு பெற்று போராட முன்வந்தனர். படித்த நடுத்தர வர்க்கத்தில் பெரும் மாற்றத்தையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தியிருக்க வேண்டிய இந்தப்பிரிவினரின் போராட்ட உணர்வுகளும்கூட சிலரின் தவறான ஆலோசனைகளால் திசைமாறிப்போனது. சட்டக்கல்லூரி மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் யாரும் இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. குறிப்பாக மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள தொழில்நுட்ப மாணவர்கள் இந்த பிரசினையில் எந்த ஆர்வமும் காட்டியதாக தெரியவில்லை. இதைக் கல்விமுறையின் வெற்றி என்றுகூட சிலர் கூறக்கூடும். ஆனால் இத்தகைய கல்வியை கற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் மரபணு மாற்றியமைக்கப்பட்ட மனிதர்களாக – ஆதிக்கச் சக்தியினரின் கைப்பாவைகளாக மட்டுமே – வாழ்வதற்கு தயாரிக்கப்படுகின்றனர் என்பதை யாரும் உணரவில்லை.இதற்கு நடுவிலும் சில நல்ல அனுபவங்கள் கிடைத்துள்ளன. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளை குறிவைத்து தமிழக இளைஞர்கள் களம் இறங்கியதில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்றோருக்கு தக்க பாடமும், ப.சிதம்பரம் போன்றோருக்கு எச்சரிக்கையும் பரிசாக கிடைத்திருக்கிறது.இதைவிட முக்கியமாக பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்கள் நம்பும் அரசியல் தலைவர் மற்றும் நடிகர்களின் உண்மை முகம் தெரிந்திருக்கிறது. நல் உணர்வு கொண்ட மிகச்சில ஊடகவியலாளர்களுக்கு மாற்று ஊடகத்தை உருவாக்குவது, பயன்படுத்துவது குறித்து அனுபவமும் கிடைத்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், எதிர்காலம் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், எந்த உணர்வுமற்று இருக்கும் தமிழன் தனக்குத் தேவையான அனைத்து உணர்வுகளையும் பெறவேண்டிய நிலையை காலம் உருவாக்கும். உலகமயச்சூழலில் அனைத்து இயற்கை வளங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகமாகும் இன்றையச் சூழலில், ஈழத்தமிழன் சந்தித்த அனைத்துக் கொடுமைகளையும் வேறொரு விதத்தில் தமிழகத் தமிழனும் சந்திப்பான். அவனது மரத்துப்போன உணர்வுகளை அன்றைய சூழல் மீட்டெடுக்கும்.எந்த உலகமயச்சூழல் ஈழத்தமிழருக்கு நேற்று பெரும் இன்னலை ஏற்படுத்தியதோ, அதே உலகமயச்சூழல் நாளை தமிழ்நாட்டுத் தமிழனின் உணர்வுகளை தட்டியெழுப்பும். ஆட்சியாளர்களின் அடுக்குமொழி வசனங்களும், அவர்கள் ஊட்டி வளர்க்கும் ஆபாச கலைகளும் தங்களை ஏமாற்றுவதற்கே என்பதை தமிழ்நாட்டுத் தமிழன் உணரும் காலம் வரும்.அப்போது ஆதிக்கச்சக்திகள் எழுதும் வரலாற்றுப் பக்கங்கள் மாற்றி எழுதப்படும். ஒரு இனத்தின் வாழ்க்கையையோ, இறுதிப்போரையோ மற்றோர் இனம் தீர்மானிக்கமுடியாது என்பது உணரப்படும். முள்ளிவாய்க்காலில் நடந்தது இறுதிப்போர் என்ற சொல்லாடலை தமிழர்கள் மறுபரிசீலனை செய்வார்கள். முள்ளிவாய்க்கால்தான் இறுதிப்போரா? இல்லை, அது வேறொரு அத்தியாயத்தின் தொடக்கமா? என்பதை நாளைய ஈழத்தமிழர்கள் தீர்மானிப்பார்கள். தனி ஈழத்திற்கான தேவைகள் இருக்கும்வரை ஈழப்போர் தொடரவே செய்யும் என்பதை சிங்கள அரசும், உலக நாடுகளும் புரிந்து கொள்ளும். போரின் களம் மாறலாம், காலம் மாறலாம், போர் ஆயுதங்கள் – போர் முறைகள் மாறலாம் – ஆனால் போர் தொடர்ந்து நடைபெறும் என்பதை உலகம் உணரும். இந்தப் போரை தொடர்ந்து நடத்த ஈழத்தமிழர்கள் வந்து கொண்டே இருப்பார்கள், தமிழர்களின் உரிமைகள் குறித்து கரிசனையுடன் செயல்படுவதற்கு சன்டே லீடர் இதழ் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க போன்ற மனசாட்சியுள்ள சிங்களர்களும் கருத்துப்போராளிகளாக பிறந்து கொண்டே இருப்பார்கள். காலமாற்றத்தில் தமிழகத் தமிழனும் சினிமா, அரசியல் பித்தம் தெளிந்து, சுயநினைவு அடைந்து ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு மட்டுமல்ல: ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களுக்குமான விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு நல்குவான்.

மீளமுடியாத இரத்தக்களரிக்குள் பிரவேசிக்கும் சிங்கள ஆட்சி

இலங்கையில் என்ன நடக்கிறது என்றொரு கேள்வி இப்போது உலகரங்கில் உன்னிப்பாக எழுந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்ததுதான் இப்போதும் நடக்கிறது. ஆனால் கேள்விதான் புதிதாக உள்ளது. கொழும்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நோக்கி இராணுவம் துரத்தத் தொடங்கியுள்ள நிலையில் இக்கேள்வி எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் வீடுவீடாக இளைஞர்களையும், யுவதிகளையும் துரத்திப் பிடித்து செம்மணியில் நரவேட்டையாடிய அந்தத் தளபதியை, அவர் வளர்த்த அதே இராணுவம் இப்போது துரத்தத் தொடங்கியுள்ளது. 1979 ஆம் ஆண்டு ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்’ என்றொரு சட்டத்தை ஜே.ஆர். அரசாங்கம் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணத்தில் தனது இராணுவ ஆட்சியை முதன்முறையாக ஆரம்பித்தது. அப்போது அந்த இராணுவ ஆட்சியை பயங்கரவாத நடவடிக்கை எனப் பெயரிட்டு, பிரித் ஓதி ஆசிர்வாதம் வழங்கி சிங்கள மக்கள் ஆதரித்தனர். இவ்வாறு இராணுவ ஆட்சி பிரித்தோதலுடன் 1979 ஆம் ஆண்டு சம்பிரதாய பூர்வமாய் உதயமானது. கொழும்பில் ஜே.ஆர். ஆட்சிக்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் வளரத் தொடங்கிய பின்னணியில், அவர்களை அடக்குவதற்கென ‘இலங்கை விசேட அதிரடிப்படை’ எனப்படும் அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தமிழருக்கு எதிராக எக்கொடும் செயல்களைச் செய்தாலும் அது சிங்கள மக்களின் பேராதரவைப் பெறும் என்பதால், தமிழருக்கு எதிரான உயர்குழாத்துப் படையாக அதனை ஜே.ஆர்.ஆல் உருவாக்க முடிந்தது. அது அப்பாவித் தமிழ் மக்கள் மீது தனது இரத்தம் தோய்ந்த பயிற்சிகளையும், அனுபவங்களையும் பெற்று ஓர் இரத்தப் பூச்சியாய் வளர்ந்தது. அந்த இரத்தப் பூச்சிகள் தான் இப்போது கொழும்பில் பொன்சேகாக்களைத் துரத்துகின்றன. 1988 – 1990 காலங்களில் தெற்கில் ஜே.வி.பி. இளைஞர்களையும், யுவதிகளையும் வேட்டையாடுவதில் இந்த விசேட அதிரடிப்படை தலையாய பாத்திரம் வகித்தது. ஈரானின் ஷா மன்னனது ‘ஷவாக்’ படையின் பாணியில் இந்த விசேட அதிரடிப்படை இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனால் கட்டி வளர்க்கப்பட்டது. ஷா மன்னன் ஒரு ‘ஷவாக்’ படையை மட்டும் தன் படுகொலைகளுக்காக வைத்திருந்தார். ஆனால் இலங்கையில் அது பல்வேறு பொலிஸ், இராணுவ, புலனாய்வு, உப அமைப்புகளுக்கு ஊடாக பங்கு போடப்பட்டு மிகவும் மெருகாக வளர்க்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இலங்கையில் உள்ள அனைத்து இரகசியப் படைப்பிரிவுகளும் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளும் இதன் குட்டிகளே ஆகும். இப்போது ‘ஷவாக்’ படைப் பாணியானது விசேட படைப்பிரிவும் அதன் குட்டிகளும் என விரிவடைந்துள்ளன. தற்போது மேற்படி வகை சார்ந்த பல பிரிவுகளும் ஒன்று சேர்ந்து நுட்பமாக இயங்கக் கூடிய வளர்ச்சியைப் பெற்றுள்ளன. கொழும்பில் பொன்சேகாக்களையும், சோமவம்சக்களையும், சமரவீரக்களையும் துரத்துவதில் மேற்படி பல பிரிவுகளும் மிக நுட்பமாக ஒருங்கிணைந்து செயற்படுகின்றன. பொலிஸ் ஆகிய சிவில் ஆயுதப் பிரிவு விசாரணை நடத்த களத்தில் குதிக்கும் போது, ஏனைய உயர் தொழிநுட்ப வசதி கொண்ட விசேட அதிரடிப் படைப்பிரிவுகள் அதன் இரண்டாம் அல்லது மூன்றாம் வளையங்களை தேடுதலின் போது அமைத்துக் கொள்கின்றன. அதாவது நடுவில் முதலாவது பிரிவாக சிவில் சார் பொலிஸ் படை அரங்கத்தில் குதிக்க, மேற்படி ஏனைய படைப் பிரிவுகள் அதன் புறவட்ட வளையங்களாக அணியமைத்துச் செயற்படுகின்றன. தமிழ் மக்களுக்கு எதிராக பெறப்பட்ட பயிற்சி இங்கு நுட்பமான அனுபவங்களுடன் அரங்கேறி வருகின்றது. அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக நேரடியாகவே இராணுவம் தனது முதலாவது வட்டத்தில் பிரவேசித்துவிடும். ஆனால் சிங்கள மண்ணில் அது மிக மெருகாக இரண்டாம் அல்லது மூன்றாம் வட்டங்களில் பிரவேசிக்கின்றது. அதாவது முதலாவது வட்டத்தின் செயல் அதன் இரண்டாம் அல்லது மூன்றாம் வட்டங்களின் பின்னணியிலேயே நிகழ்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் இவை அனைத்தும் ஒருங்கிணைந்த ஓர் இராணுவ ஆட்சி செயல் வடிவங்களே ஆகும். இராணுவ ஆட்சி முறை சார்ந்து உலகிற்கு பல புதிய அனுபவங்களையும், நடைமுறை வடிவங்களையும் இலங்கைத்தீவு தனது பங்களிப்பாய் வழங்கப் போகிறது. இதற்கான முழுப்பயிற்சியும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதே நிகழ்ந்து முடிந்துள்ளன. வன்னி மீதான யுத்தமும், முள்ளிவாய்க்கால் படுகொலையும் இந்த வகையில் உலகளாவிய இராணுவ வியூகத்தில் ஒரு சங்கிலிக் கொளுக்கியாய் அமைந்துவிட்டது என்பதை எதிர்கால அரசியல், இராணுவ ஆய்வாளர்கள் தெளிவாய் குறிப்பிடுவர் என்பதில் சந்தேகமில்லை. அந்தளவிற்கு தமிழ் மக்கள் உலகளாவிய அரசியல், இராணுவ வியூகத்திற்கான ஒரு பயிற்சிக் களமாய் பயன்படுத்தப்பட்டனர் என்பது ஒரு வேதனைக்குரிய வரலாற்று உண்மையாகும். அத்தகைய பயிற்சி நடவடிக்கையில் பரிசோதகராய் களத்தில் செயற்பட்டு வந்த சரத் பொன்சேகா இப்போது அந்த பரிசோதனை வெற்றியினால் பதம் பார்க்கப்படுபவராகின்றார். சரத் பொன்சேகாவின் மீது இராணுவம் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டபோது அவர் கூறியுள்ள வார்த்தைகள் இங்கு மிகவும் கவனத்திற்குரியவை. அதாவது அவர் தங்கியிருந்த விடுதி 26 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸ், இராணுவ, விசேட அதிரடிப் பிரிவுகளினால் சுற்றி வளைக்கப்பட்ட போது ‘உண்மைக்குப் புறம்பான சக்திகள்’ தன்னையும், தனது ஆதரவாளர்களையும் சுற்றி வளைத்திருப்பதாக ஊடகங்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் அறிக்கையிட்டார். சில தினங்களுக்கு பின் அவரது வீடு சுற்றி வளைக்கப்பட்டு நான்கு மணித்தியால தேடுதலுக்கு உள்ளான போது, இலங்கையில் ‘இடி அமீன் ஆட்சி’ நிகழ்கிறது என பகிரங்கமாக குற்றஞ் சாட்டினார். தன்னுடன் துணைக்கு நின்ற 13 பேர் விசாரணைக்காக விசேட பொலிஸ் படையினரால் கூட்டிச் செல்லப்பட்டதையும், தனது கணனிகளும், ஆவணக் கோப்புகளும் படையினரால் எடுத்துச் செல்லப்பட்டமை பற்றி அவர் குறிப்பிடுகையில் அவற்றை ‘முட்டாள்த்தனமான, அபத்தமான’ செயல்கள் என சினந்து கூறியவற்றையும் சிங்கள ஊடகங்கள் முதன்மைப்படுத்தி இருந்தன. இவை தமிழ் மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நிகழ்ந்தவைதான். ஆனால் அப்போது இதனை கொழும்பு சிங்கள, ஆங்கில ஊடகங்கள் கண்டுகொள்ள மறுத்தவை மட்டுமன்றி, இத்தகைய செயல்களை பெரிதும் நியாயப்படுத்தியும், வரவேற்றும் எழுதின. எனவே அவர்களின் கண்களுக்கு இவை புதிது போல இருந்தாலும், வரலாற்றின் கண்களுக்கு தற்போது கொழும்பில் நடப்பவை ஒன்றும் புதிதல்ல. தமிழ் மக்களுக்கு நடந்தவைதான் இப்போது அங்கு தொடர்கிறது. இதுதான் வரலாற்றின் இரண்டக நிலை. தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மனம் இராணுவச் சட்டங்களுக்கும், படுகொலைக் கலாச்சாரங்களுக்கும் பழக்கப்பட்டாயிற்று. இராணுவ அட்டூழியம் என்பது தமிழருக்கு எதிரானது என்ற வகையில் சிங்கள கலாச்சாரத்தில் ஏற்றுக் கொள்ளபட்ட நீதிநெறியாயும், விழுமியமாயும் மாறிவிட்டது. இலங்கையின் சட்டப் புத்தகங்களிலும், நாடாளுமன்ற விவாதங்களிலும், அரசியல் மேடைகளிலும் ஊடகப் பரப்புக்களிலும் இத்தகைய இராணுவக் கலாச்சாரம் தமிழருக்கு எதிரானது என்ற வகையில் போசித்து வளர்க்கப்பட்டிருக்கிறது. எனவே இலங்கையின் அரசியல் அகராதியில் இராணுவம் என்பது ஒரு புனிதச் சொல். இரத்தம் என்பது புனித தீர்த்தம் எனும் அர்த்தத்தையே கொண்டதாய்க் காணப்படுகிறது. இவ்வாறு பார்க்கையில் கொழும்பில் இப்போது நடப்பது ஒன்றும் புதிதல்ல. ஒரு சிறிய வித்தியாசம் இதில் உண்டு. அதாவது இலங்கையில் தமிழருக்கு எதிராக நடந்தவையும், நடந்ததில் பயிற்சியும் அனுபவமும் பெற்றவையும் இப்போது சிங்களவர் தலையில் நிகழத் தொடங்கியுள்ளன என்பதுதான். அதிலும் விசித்திரம் என்னவெனில் செய்தவர்கள் மீதே, அது செய்விக்கப்படுகிறது என்பதுதான். இதில் இன்று ஏவுவோர் நாளை ஏவப்படுவோர் ஆகலாம். இதில் கால வேறுபாட்டைத் தவிர பொருள் வேறுபாடு இல்லை. செயற்படு பொருள் வேறுபாட்டைத் தவிர செயல் வேறுபாடு இல்லை. செயல் வேறுபாட்டில் ஒரு சிறு வித்தியாசம் இருக்கலாம். அதாவது தமிழர் மீது அது செயற்படுத்தப்பட்ட போது இருந்த மெருகை விடவும், அதன் மீதான அனுபவத்தின் பிரகாரம் மெருகு அதிகமானதாக இருக்கும். அதாவது செயல் வேறுபாடில்;லை – மெருகு வேறுபாடு மட்டுமே உண்டு. ‘அரசு என்றால் அது ஓர் ஒடுக்குமுறை நிறுவனம். இராணுவமே அந்த ஒருக்குமுறையின் முதலாவது கருவி’ என்ற புரட்சிகர மார்க்சிய தத்துவத்தைப் பயின்றோராகத் தம்மைக் கூறுவோர் ஜே.வி.பி.யினர். அந்த ஜே.வி.பி.யினர் தமிழருக்கு எதிராக, இராணுவத்தை சூரையாக்கள், வீரயாக்கள் என்று போற்றி வளர்ப்பதிலும், இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பதிலும் பெரும் முனைப்பாய் ஈடுபட்டவர்கள். அவர்கள் முதலாளித்துவ இராணுவம் என்று வர்ணிக்கும் அதே இராணுவத்தை மிக உற்சாகமாக வளர்க்க உதவியதுடன், எல்லா வகையிலும் இராணுவ அட்டூழியங்களையும், படுகொலைகளையும் முன்னின்று நியாப்படுத்தி பெரும் பிரச்சாரம் செய்தவர்கள் ஆவர். பேரினவாதம் இராணுவ வாதத்திற்கான சித்தாந்தம் என்பதை ‘புரட்சி’ பேசிய ஜே.வி.பி.யினர் கண்டுகொள்ளத் தவறினர். அவர்களால் தர்மவான்கள் எனவும் நாடு காக்கும் தியாகிகள் எனவும் போற்றிப் பெருப்பிக்கப்பட்ட அந்த இராணுவம் இப்போது அவர்களது தலைமாட்டிலும், கால்மாட்டிலும், படுக்கை அறைகளிலும், கழிப்பறைகளிலும், சாலைகளிலும், ஓரங்களிலும் அவர்களைச் சுற்றி வலைவிரித்து வருகிறது. அவர்களை இப்போது அச்சுறுத்துவது வேறு யாருமல்ல. அவர்கள் தமிழருக்கு எதிராகப் போசித்த, பாராட்டி வளர்த்த, புகழ்ந்துரைக்கப்பட்ட அவர்களின் இராணுவம்தான். அதாவது கொழும்பு 30 ஆண்டுகளுக்கு முன்னமே, 1979 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்குள் வெளிப்படையாக பிரவேசித்த போது, அதை தமிழருக்கு எதிரான யுத்தம் என்ற வகையில் ஒரு புனிதப்படையாக கண்டுகொண்ட அந்த சிங்கள மக்கள் மீது, இப்போது அந்த புனிதப்படை தன் துப்பாக்கியை நீட்டியுள்ளது. இங்கு வித்தியாசம் என்னவெனில் நேற்று தமிழருக்கு எதிராக நீண்டிருந்த துப்பாக்கி இப்போது சிங்களவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது என்பது மட்டும்தான். எனவே கொழும்பில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. சிங்களக் கண்கள் கண்டு கொள்ளத் தயாரில்லாத, மாறாக போற்றப்பட்ட இராணுவ ஆட்சி இப்போது அவர்களின் முற்றத்தில் அரங்காடுகிறது என்பதுதான். ஆனால் தமிழரைப் பொறுத்து இங்குள்ள அபாயகரமான விடயம் என்னவெனில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டாலும், அதனை தமிழர் பக்கம் திசை திருப்பி தங்கள் ஆட்சி அரங்கக் கூத்துக்களை நிறைவேற்றிவிடுவார்கள். அப்படியாயின், இனிவரப் போகும் சிங்களவர்கள் மத்தியிலான ஆட்சி அதிகாரப் போட்டி நெருக்கடிகளை தமிழரின் தலைகளில் உழுந்தாய் அரைக்க முற்படுவார்கள் என்பதே. எனவே தமிழர் எத்தகைய கானல் நீர் கனவுகளையும் காணாது முன்னெச்சரிக்கையுடன் முகம் கொடுத்தாக வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை வந்தால் அதனை தமிழர் பக்கம் திருப்பி 1958 இனப்படுகொலை, 1983 கறுப்பு யூலைப் படுகொலை போன்ற இனப்படுகொலைகளாக திசைதிருப்பி தம் கதிரையைப் பலப்படுத்துவார்கள். கல்விப் பிரச்சினை, வேலை வாய்ப்புப் பிரச்சினை என்றால் அதனை இனப்பிரச்சினையாக்கி தரப்படுத்தல்களைக் கொண்டு வருவார்கள். மற்றும் தேர்தல் வெற்றிகளுக்காக இனவாதத்தை நேரடியாகக் கக்குவார்கள். எனவே, இப்போது முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு சிங்கள ஆளும் உயர்குழாத்தின் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சமரசம் செய்ய முடியாத ஆதிக்க முரண்பாடானது, இனவாத வடிவத்தைப் பெற்று தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடாய் வடிவம் பெறவேண்டிய கட்டம் உருவாகி இருப்பதனால், தமிழ் பேசும் மக்கள் சார்ந்த எத்தகைய உரிமைகளையும், அதற்கான தீர்வுகளையும் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. * அதாவது முள்ளிவாய்க்கால் படுகொலை இனவாதத்தை இன்னொரு பக்கம் உயர்த்தியுள்ளதே தவிர, அது பண்பளவில் குறையப் போவதில்லை. இப்பின்னணியில் நின்றே கொழும்பில் அரங்கேறத் தொடங்கியிருக்கும் இராணுவ ஆட்சியை தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்க வேண்டும். அதாவது மீளமுடியாத இரத்தக் களரிக்குள் சிங்கள ஆட்சி பிரவேசிக்கிறது. அதில் தமிழ் பேசும் மக்கள் அதிக முன்னெச்சரிக்கையுடனும், முன்னனுபவத்துடனும் தங்கள் அடிகளை எடுத்து வைக்கவேண்டும். இங்கு கவனத்தில் கொள்ளத்தக்க விடயம் என்னவெனில் இராணுவ ஆட்சி அளவு ரீதியான மாற்றத்தை அடைந்துவிட்டது என்பது தான்.

பேஸ் புக் வாடிக்கையாளர்களை கண்காணிக்கும் சிறீலங்கா அரசு

பேஸ் புக் இணையத்தள சமூக வலைப் பின்னலில் உள்ள சிறீலங்கா வாடிக்கையாளர்களை சிறீலங்கா அரசு கண்காணித்து வருவதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நடந்த முறைகேடுகள் உட்பட சிறீலங்காவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சிறீலங்காவில் உள்ள பலர் பேஸ் புக்கை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சிறீலங்காவில் உள்ள பேஸ் புக் பாவனையாளர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாக அறியப்படுகிறது. பேஸ் புக் என்பது இணையத்தளம் மூலம் இயங்கும் ஒரு சமூக வலைப் பின்னலாகும், இதனூடாகப் பலசெய்திப் பரிமாற்றங்களும், புகைப்படங்களும் பரிமாறப்படுவதுடன், பல உறவினர்கள் நண்பர்கள் இதில் பின்னி இணைந்திருப்பதால், ஒருவரிடம் இருந்து மற்றவருக்குச் செல்லும் செய்திகள் நம்பகத்தன்மை உடையவையாகக் கருதப்படுகின்றது

மஹிந்தவுக்கு நோபல் பரிசு மனோகணேசன் சிபார்சு

இலங்கை வரலாற்றிலேயே எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மிக மோசமான தேர்தலை நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மோசடித் தேர்தலுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பகிஷ்கரிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் நடத்தியா ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறிப்பிடப்பட்ட வாக்களிப்பு வீதங்களுக்கு மாறாகவே மறுநாள் கூறப்பட்டன. முதல்நாள் 70 வீதமாக இருந்த வாக்களிப்புகள் மறுநாள் 80 வீதமாக மாறியது எவ்வாறு? தேர்தல் தினத்தன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை சிறுசிறு செயல்களில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி அன்றைய தினம் இரவு பாரிய வேலைகளில் ஈடுபட்டு நாட்டு மக்களின் தீர்மானத்தை மாற்றியமைத்துள்ளார். இது நமக்குக் கிடைத்த வெற்றி. அது பறிக்கப்பட்டமைக்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கிறோம். இதற்கு உரிய பாடத்தை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் கற்பிப்போம்." மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க உரையாற்றுகையில், "நாம் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். வெவ்வேறு கொள்கைகளையுடையவர்கள். நாட்டில் அராஜகத்தை ஒழித்து ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒன்று சேர்ந்திருக்கின்றோம்" என்றார். ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்ட புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சக்தி தொலைக்காட்சிஆசிரியர் ஹட்டனில் தாக்கப்பட்டார்

ஹட்டனில் சுதந்திர கொண்டாட்டத்திற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க சென்ற சக்தி தொலைகாட்சி பிரதம செய்தியாளரும் ஆசிரியருமான சிறி ரங்காவும் அவருக்கு பாதுகாப்பிற்கு சென்ற உதவி பொலிஸ் அத்தியட்சகரும் தாக்கப்பட்டுள்ளனர். இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கருணாதிலக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உதவி பரிசோதகர் காயமடைந்ததாகவும் ஆனால் சிறி ரங்கா காயம் எதுவும் இன்றி தப்பியதாகவும் கருணா திலக கூறியுள்ளார்.

தாமாக பதவி விலகுமாறு திணைக்கள தலைவர்களுக்கு உத்தரவு

அரச நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்கள் தாமாக தமது பதவியிலிருந்து விலகிச் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல்களில் மஹிந்தவுக்கு பங்களிக்காத தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினை சார்ந்து செயற்பட்டவர்கள் அனைவருக்காகவுமே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

ஊர்காவற்துறையில் EPDP இன் குண்டர் தாக்குதலை இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம் செய்கின்றது

26ம் தேதி ஜனாதிபதித் தேர்தலை அடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குண்டர்கள் கடந்த வியாழனன்று, வடக்கு இலங்கையிலுள்ள ஊர்காவற்துறையில் நடத்திய அட்டூழியங்களை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது. மிகக் குறைந்த அளவில் வாக்குப்பதிவு நடந்தது பற்றியும், ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவிற்கு ஆதரவு இல்லாதது தெளிவான நிலைமையிலும், ஒரு ஈ.பி.டி.பி கும்பல் டஜன் கணக்கான இளைஞர்களையும் முதியவர்களையும் தாக்கியதோடு, எதிர்த்தரப்பு வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அல்லது சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் விஜே டயசுற்கு வாக்களித்ததற்காக திட்டித்தீர்த்துள்ளது. ஒரு தமிழ் அரசியல் கட்சியான ஈ.பி.டி.பி. ஊர்காவற்துறையிலும் மற்றும் அயலில் உள்ள தீவுகளிலும் இராணுவத்துடன் நெருக்கமாக செயற்படும் ஒரு துணைப்படைக் குழுவை வைத்துள்ளது. இந்தக் கட்சி இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதோடு அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஒரு அமைச்சரவை அமைச்சராவார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இராஜபக்ஷ அரசாங்கம் தொடங்கியதில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக, உள்ளூர் மக்களை அச்சுறுத்துவதிலும் தொந்தரவு செய்வதிலும் இராணுவத்துடன் நெருக்கமாக இயங்கிவந்துள்ளது. ஜனவரி 28 அன்று சுமார் மாலை 5 மணியளவில், ஹை-எஸ் வான் ஒன்றில் ஊர்காவற்துறை தீவில் அம்பிகைநகர், செட்டிப்புலம், வேலனை ஏழாம் வட்டாரம், துறையூர் மற்றும் புளியங்கூடல் ஆகிய கிரமாங்களுக்கு ஈ.பி.டி.பி. யின் கும்பலொன்று பயணித்துள்ளது. இங்கு பெரும்பாலான கிராமத்தவர்கள் வறிய மீனவர்களாவர். இந்தக் குண்டர்கள் பெரிய மரப்பொல்லுகளை வைத்திருந்தனர். இந்தக் கும்பல் முதலில் கிராமத்தவர்களை வாக்காளிக்காமைக்காக குற்றஞ்சாட்டியது. தாம் வாக்களித்தமையை உறுதிப்படுத்த கையில் இடப்படும் மை அடையாளத்தை கிராமத்தவர்கள் காட்டிய போது, அதை நிராகரித்த குண்டர்கள், "நீங்கள் தேர்தலில் பொன்சேகாவுக்கு வாக்களித்துள்ளீர்கள், நீங்கள் கத்தரிக்கோலுக்கு [சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் சின்னம்] வாக்களித்துள்ளீர்கள், நாங்கள் கடந்த காலத்தில் உங்களுக்கு உதவியுள்ளோம், நீங்கள் எங்களுக்கும் அரசாங்கத்துக்கும் கைமாறு செய்யவில்லை," என திட்டினர். ஈ.பி.டி.பி. குண்டர்கள், ஒவ்வொரு கிராமமாகச் சென்று எந்தவொரு சிறிய ஆத்திரமூட்டலும் இன்றி, வீதியில் சென்ற ஆண் கிராமத்தவர்களை அடித்தனர். பல டசின் கணக்கானவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவ சிகிச்சை பெற முயன்றாலும், மேலதிக தாக்குதல்களுக்கு பயந்து மருத்துவமனைக்கு செல்லவில்லை என உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தனர். இதே காரணத்துக்காக, மருத்துவமனைக்கு சென்றவர்களும், தாக்கியவர்களின் பெயரும் அவர்களது அரசியல் தொடர்பும் தெரிந்திருந்தும் பொலிசில் முறைப்பாடு செய்யாமல் இருந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை, அதே கும்பல் அம்பிகை நகருக்கு வந்துள்ளது. உள்ளூர் மக்களின் சினத்தைப் பற்றி தெளிவாக எச்சரிக்கை அடைந்த அந்தக் கும்பலின் தலைவர், கடற்படை புலனாய்வுத்துறையினர் மக்களை சுடுவதற்கு தீட்டியிருந்த திட்டத்தை தவிர்க்கவே தனது குண்டர்கள் இத்தகைய வன்முறையை மேற்கொண்டதாக கேலிக்கூத்தாக கூறியுள்ளார். உண்மையில், ஊர்காவற்துறையில் கடற்படை புலனாய்வுத்துறையின் ஒரு இணைந்த பகுதியாகவே ஈ.பி.டி.பி. இயங்குகிறது. வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் வந்த ஈ.பி.டி.பி. யினர், வடக்கின் பிரதான நகரான யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை நடக்கவுள்ள ஆர்ப்பாட்டம் ஒன்றில் கிராமத்தவர்கள் பங்கேற்க வேண்டும் என கோரியுள்ளனர். சிலர் ஏன் என கேள்வியெழுப்பிய போது, அவர்களை கேள்விகள் கேட்க வேண்டாம் என கூறியதோடு வியாழக்கிழமை நடந்த குண்டர் மற்றும் வன்முறைத் தாக்குதலையும் அவர்களுக்கு நினைவூட்டியுள்ளனர். சனிக்கிழமை ஈ.பி.டி.பி. யின் ஹர்த்தால் அல்லது பொது கடையடைப்பு என்பது, யாழ்ப்பாணத்தில் அராசங்கத்துக்கு குறைந்த வாக்குகளே கிடைத்ததால், தான் பதவி விலகப் போவதாக நாடகம் நடத்திய கட்சி தலைவர் தேவானந்தாவுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். ஈ.பி.டி.பி. கடைகளை மூடுமாறும் போக்குவரத்து சேவைகளை நிறுத்துமாறும் அழுத்தம் கொடுத்தது. பாதுகாப்பு படைகள் நிலைமையை வழமைக்குத் திருப்புமாறு கேட்டவுடன் கட்சி உடனடியாக ஆர்ப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. கடந்த வார வாக்கெடுப்பு, யாழ்ப்பாணத்தில் பொன்சேகாவுக்கும் இராஜபக்ஷவுக்கும் ஒரு அழிவுகரமான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி என்ற வகையில் இராஜபக்ஷவும் அவரது உயர்மட்ட இராணுவத்தளபதி என்ற முறையில் பொன்சேகாவும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கை நாசம் செய்த யுத்தத்துக்கு பொறுப்பாளிகளாவர். கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் தோல்வியானது "சமாதானத்தையும் சுபீட்சத்தையும்" கொண்டுவரவில்லை. மாறாக, இராணுவ ஆக்கிரமிப்பை பலப்படுத்தியுள்ளது. இரு முதலாளித்துவ வேட்பாளர்கள் மீதும் அதிருப்தி கண்டுள்ள 74 சதவீதமான வாக்காளிக்க தகுதியானவர்கள் வாக்களிக்கவேயில்லை பொன்சேகாவுக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவரை ஒரு "குறைந்த தீங்காக" கருதியே வாக்களித்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் தோல்வியடைவதற்கு முன்னர் அவர்களின் அரசியல் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இப்போது கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் ஒரு இடத்தை எதிர்பார்த்து, பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது. தேர்தல் தினத்தன்று, பிரதேசத்தில் தீவிரமான பதட்ட நிலைமையை குறிக்கும் விதத்தில் யாழ்ப்பாணத்தில் பல குண்டுகள் வெடித்தன. வடக்கில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தொகுதிகளில் ஊர்காவற்துறையில் மட்டுமே பொன்சேகாவை விட இராஜபக்ஷ ஒரு குறுகிய பெரும்பான்மையை பெற்றுள்ளார். அது நிச்சயமாக இராஜபக்ஷ மற்றும் ஈ.பி.டி.பி. மீதான வெகுஜன ஆதரவினால் கிடைத்ததல்ல. ஈ.பி.டி.பி. முறைகேடான வாக்களிப்பில் ஈடுபட்டதாக பலர் எமது வலைத் தளத்துக்குத் தெரிவித்தனர். தீவின் பெரும்பகுதி கடற்படையின் இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மாவட்டத்தில் தனது கட்சி அவமானத்துக்குரிய தோல்வியை கண்ட போதிலும், இறுதியாக ஈ.பி.டி.பி. தலைவர் தேவானந்தா பதவி விலகவில்லை. அவர் யாழில் வெளிவரும் தினக்குரலுக்கு "மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டதால் அவர்கள் ஜனாதிபதிக்கு [இராஜபக்ஷவுக்கு] வாக்களிக்கவில்லை. என்னை இராஜனாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதியும் மக்கள் பிரதிநிதிகளும் கேட்டுக்கொண்டதால் நான் இராஜினாமா செய்யவில்லை." எனத் தெரிவித்ததார். ஊர்காவற்துறையிலோ அல்லது ஏனைய இடங்களிலோ தமிழர்கள் மத்தியில் ஈ.பி.டி.பி. இற்கு கணிசமான ஆதரவும் கிடையாது. அரசாங்கத்தை ஆதரிக்குமாறு மக்களுக்கு இலஞ்சம் கொடுக்கவும், அது முடியாத போது அவர்களை தொந்தரவு செய்யவும் மற்றும் குண்டர் நடவடிக்கைகளை பயன்படுத்தவும் அரசாங்கத்தின் கூலியில் தங்கியிருக்கும் அரசியல் குண்டர் கும்பல் அமைப்பாக இந்தக் கட்சி சீரழிந்து போயுள்ளது. அரசாங்கத்தின் யுத்தத்தை இடைவிடாமல் எதிர்க்கும் மற்றும் வடக்கு, கிழக்கில் இருந்து சகல பாதுகாப்பு படைகளையும் திருப்பியழைக்க கோரும் சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு குறிப்பிடத்தக்க இலக்காக இருந்து வந்துள்ளது. 2000 ஆண்டில், கடற்படையின் மீன் பிடி கட்டுப்பாடுகளுக்கு எதிராக மீனவர்கள் மத்தியில் கட்சி பிரச்சாரம் செய்த பின்னர், ஈ.பி.டி.பி. ஊர்கவாற்துறையில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மீதான சரீரரீதியான தாக்குதலுடன் அச்சுறுத்தியது. கட்டுப்பாடுகளை அமுல்படுத்த கடற்படையால் நியமிக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பி., உள்ளூரில் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்த போதும் யாரும் வரவில்லை. கூட்டமொன்றுக்கு சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் ஒருவரை ஈ.பி.டி.பி. குண்டர்கள் இழுத்து வந்ததோடு இன்னுமொருவரை சுட்டதில் அவர் கீழே விழுந்தார். சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தால் பழிவாங்கப்படுவர் என சகல உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தப்பட்டது. 2007 மார்ச் 22 அன்று, சோ.ச.க. உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் அம்பிகை நகருக்குப் பயணித்துக்கொண்டிருக்கும் போது ஊர்காவற்துறையில் காணாமல் போயினர். இதுவரையும் அவர்களைக் காணவில்லை. சோசலிச சமத்துவக் கட்சி சேகரித்த சகல ஆதராங்களும், கடற்படையினதும் மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும், இத்தகைய நூற்றுக்கணக்கான "காணாமல் போன" சம்பவங்களுக்கு பொறுப்பாளியான ஈ.பி.டி.பி. போன்ற துணைப்படை குழுக்களும் சம்பந்தப்பட்டிருப்தையே பலமாக சுட்டிக்காட்டின. (பார்க்க: "இலங்கை: சோ.ச.க. அங்கத்தவர் நடராசா விமலேஸ்வரன் காணாமல் போய் இரண்டு வருடங்கள் கடந்து விட்டன"). ஊர்காவற்துறையில் நடந்த அண்மைய தாக்குதல்கள், கடந்த வார ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இராஜபக்ஷ அராசங்கமும் அதன் பங்காளிகளும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கும் மிகப் பரந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். உத்தியோகபூர்வ முடிவுகள் இராஜபக்ஷவுக்கு பிரமாண்டமான பெரும்பான்மை கிடைத்திருப்பதாக காட்டிய போதிலும், அரசாங்கம், அரசியல் ஸ்தாபனத்தின் எதிர்ப்பிரிவினரிடமிருந்து தொடர்ச்சியான எதிர்ப்பையும் மற்றும் வாழ்க்கைத்தரம் சீரழிவது சம்பந்தமான பரந்த வெகுஜன அதிருப்தியையும் எதிர்கொள்கின்றது. அரசாங்கம் ஏப்பிரலில் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகின்ற நிலையிலும் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கோரும் வெட்டுக்களையும் உழைக்கும் மக்களின் முதுகில் திணிக்கத் தொடங்கியுள்ள நிலையிலும், அது அடக்குமுறையையும் குண்டர் நடவடிக்கையையும் நாடுவதற்கு தயக்கம் காட்டாது என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கை விடுக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்கத்தின் பிரதான பங்காளி என்ற வகையில், தயாரிக்கப்பட்டு வரும் வழிமுறைகள் பற்றி ஈ.பி.டி.பி. ஏற்கனவே எடுத்துக்காட்டியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றதாக கூறி பலர் கைது

இலங்கையில் அவசரககால சட்டத்தின் கீழ் சுமார் 40 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய எதிர்கட்சிகள் தீட்டிய சதித்திட்டத்தில் இவர்கள் தொடர்புபட்டிருந்தார்கள் என்று அரசு கூறுகிறது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ அதிகாரிகள் அல்லது படைவீரர்கள். அரசியலில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு 10க்கும் அதிகமான அதிகாரிகள் சமீபத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பட்ட சம்பவத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டபட்டன என்பதை மறுக்கும் எதிர்கட்சியினர், கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது என்றும் கூறுகிறார்கள். அரசின் ஊதுகுழலாக செயற்பட்டுவரும் டெய்லி நியூஸ் எனும் தினசரி, ஜனாதிபதி மற்றும் இதர சிலரை கொலை செய்ய முயன்றார்கள் என அது கூறும் செயற்பாட்டில், இவர்கள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

டெங்கு காய்ச்சல்: பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அமைச்சு கடும் அறிவுறுத்தல்!

டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் சுற்றாடலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கு ஜிசியி வழங்கப்பட்டள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு பணிப்பாளர் டாக்டர் நிமல்கா பன்னிலஹெட்டி நேற்றுத் தெரிவித்தார்.இதேநேரம், டெங்கு காய்ச்சலிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதற்குத் தேவையான அறிவூட்டல் நடவடிக்கைகள் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த நாட்களில் எவருக்காவது இரண்டு நாட்களுக்குக் காய்ச்சல் காணப்படுமாயின் தாமதியாது மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவதுடன் நீராகாரத்தையும் உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.வடமாகாணம் உட்பட நாட்டின் சில பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்திருப்பது தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடகீழ் பருவபெயர்ச்சி மழை வீழ்ச்சியை தொடர்ந்து யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. என்றாலும், இதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்திருக்கும் பிரதேசங்களில் இரசாயனபுகை விசிறவும், மக்களுக்கு அறிவூட்டவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நுளம்புகள் பெருகக் கூடியவகையில் சுற்றாடலைக் கொண்டிருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் இதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவது அவசியம். என்றாலும் நுளம்புகளால் பரப்பப்படுகின்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. சுற்றாடலை நீர்தேங்க முடியாதபடி சுத்தமாகவும், உலர்நிலையிலும் வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்பு என்றார்.

வவுனியாவில் தமிழ்ப்பெண் உட்பட நால்வர் படுகொலை

வவுனியா நெள்ளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் காயம் அடைந்த ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிங்களக் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள நெள்ளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்தினை தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். இதேவேளை வவுனியா புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்க பாணப்பட்டார். ஏ09 வீதி புளியங்குளம் பகுதியினை சேர்ந்த 30 அகவையுடைய பாலச்சந்திரன் தங்கதேவி என்பவரே மர்மமான முறையில் இறந்துள்ளார். சிறீலங்காப்படையினரின் கட்டுப்பாட்டு பகுதிகளில் தமிழ்மக்களின் மர்மக் கொலைகள் அண்மைய காலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.