ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் மீனவர்களை தாக்கி மீன்களை பறித்துச் சென்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. இந்திய கடல் எல்லையான 9 கடல் மைல் தூரத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

தமிழ் மக்களின் பெருமூச்சு

 இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் இன்று இருப்பதைப்போன்ற படுமோசமான பலவீனமான நிலையில் அவற்றின் வரலாற்றில் முன்னொருபோதுமே இருந்ததில்லை. தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண்பதற்கு உருப்படியான அரசியல் அணுகுமுறைகளை வகுக்க இயலாமல் இந்தக் கட்சிகள் தடுமாறிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உள்நாட்டுப் போரின் பின்னரான காலகட்டத்தில் இலங்கைத் தமிழ்மக்கள் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லாமல் அரசியல் வெற்றிடத்தில் விடப்பட்டிருக்கிறார்கள்

திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சுகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.

யாழ்ப்பாணத்தில் புதிய அரசியல் கட்சி

யாழ்ப்பாணத்தில் ஜனநாயக மக்கள் கட்சி எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப் படவுள்ளது. யாழ். மாநகரசபை மேயர் பதவிக்காக ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், யாழ்ப்பாண அமைப்பாளருமான எஸ்.சத்யேந்திரா தலைமையிலேயே இந்த கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது.

சரணடைந்த போராளிகள் அனைவரையும் படையினர் 16 பஸ்களில் ஏற்றிச் சென்றனர்

இறுதிக் கட்டயுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளையும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதி என்ன வென்று தெரியாது.இவ்வாறு முன்னாள் போராளி ஒருவரின் தாயார்   தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடத்திய அமர்வில் சாட்சியம் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: