புதன், 6 அக்டோபர், 2010

அதிகளவு கைதிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை

உலகில் அதிகளவு கைதிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை திகழ்வதாக ஜனநாயகத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதில் 8000 அரசியல் கைதிகள் அடங்குவதாக ஜனநாயகத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார். சர்வதேச ஜூரிகள் பேரவையினால் இந்தப் புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ அதிகாரிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் நட வடிக்கைகள் தொடர்பில் உளவு பார்க்கப்படுவதாக சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகளின் நடவடிக்கைகள் இவ்வாறு கண்காணிக்கப்படுவதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.உளவுப் பணிகளை மேற்கொள்வதற்காக விசேட பிரிவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான உயர் இராணுவ அதிகாரிகள் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகளின் சாரதிகளாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் உளவாளிகள் கடமையாற்றி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட இராணுவக் குடியிருப்புகள், முகாம்கள்

 முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பிலிருந்து வற்றாப்பளை வரையான பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் இராணுவ குடியிருப்புகளையும், பாரிய இராணுவ முகாம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றையும்  அமைக்கும் வேலையில் அரசு ஈடுபட்டிருக்கிறது.''வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதிலும் ஒருவருக்குக்கூட நிரந்தர வீடு கட்டிக்கொடுக்கப் படவில்லை என்றும், தகரங்களினால் அமைக்கப்பட்ட தற்காலிக குடிசைகளிலேயே அவர்கள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் 

பண்டாரவன்னியன் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் கற்சிலைமடு மக்கள் கோரிக்கை

கற்சிலைமடுவில் உடைக் கப்பட்டுள்ள வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் உருவச்சிலையையும், நினைவுக் கல்லையும் மீண்டும் அப்பகுதியில் அமைக்குமாறு கற்சிலைமடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எமது வரலாற்றுச் சின்னமான அந்தச் சிலையை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் மன்னனின் சிலை எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரலாற்றுச் சான்றாகப் பேணப்படுகின்றதோ அதேபோன்றே வன்னியில் பண்டார வன்னியனின் சிலையும் பாதுகாக்கப்பட்ட வரலாறு பேணப்பட வேண்டும். எனினும் எமது வரலாற்றை மறைப்பதற்காகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகின்றதெனவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்
.