புதன், 6 அக்டோபர், 2010

பண்டாரவன்னியன் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் கற்சிலைமடு மக்கள் கோரிக்கை

கற்சிலைமடுவில் உடைக் கப்பட்டுள்ள வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் உருவச்சிலையையும், நினைவுக் கல்லையும் மீண்டும் அப்பகுதியில் அமைக்குமாறு கற்சிலைமடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எமது வரலாற்றுச் சின்னமான அந்தச் சிலையை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் மன்னனின் சிலை எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரலாற்றுச் சான்றாகப் பேணப்படுகின்றதோ அதேபோன்றே வன்னியில் பண்டார வன்னியனின் சிலையும் பாதுகாக்கப்பட்ட வரலாறு பேணப்பட வேண்டும். எனினும் எமது வரலாற்றை மறைப்பதற்காகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகின்றதெனவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்
.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளவை வரு மாறு:
கற்சிலைமடு கிராம முன்னேற்றச் சங்க வளாகத்தில் அமைந்திருந்த பண்டாரவன்னியன் சிலை, திருவள்ளுவர் சிலை என்பன உடைத்து அகற்றப்பட்டுள்ளன. இவற்றுள் திருவள்ளுவர் சிலை மிகவும் பழைமை வாய்ந்தது. அத்துடன் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட இடமான கற்சிலைமடு பழைய குடியிருப்பில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லும் உடைக்கப்பட்டுள்ளது. இது ஒருதரப்பினரால் திட்ட மிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றே நாம் கருது கின்றோம். இதனால் நாம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம். இவை எமது வரலாற்றுப் பொக்கிஷங்கள்.எனவே இவற்றை உரிய இடங்களில் மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்  என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக