ஞாயிறு, 16 மே, 2010

தேசிய தலைவரின் ஆளுமை


நம்பிக்கையோடு நமது பயணம் அடுத்த இலக்கை நோக்கி நகர தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு நடைமுறையின் நிலையிலும் தேவைகளை முன்னிருத்தியே இயக்கங்கள் அல்லது போராட்டங்கள் நிகழ்வதாக நாம் அறிந்திருக்கிறோம். இதை பலமுறை நாம் வலியுறுத்தி இருக்கிறோம். எந்த ஒரு போராட்டமானாலும் அந்த போராட்டம் தமது தேவையை அடையும்வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இலங்கையில் சீன இராணுவத்தினர்..!

இலங்கையில் 50000ற்கும் அதிகமான சீன இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளது இவர்கள் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுக அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கேன வருகை தந்துள்ளவர்கள் என்ற போர்வையில் இலங்கையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை சீன பிரஜைகள் சுமார் 1லட்சத்து 10ஆயிரம்பேர் இலங்கையில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இதேவேளை சீன பிரஜைகள் சுமார் 1லட்சத்து 10000பேர் இலங்கையில் உள்ளதாகவும் இவர்களில் பலர் இராணுவத்தினர் என்றும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சீனா மேற்கொண்டுவரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களிலும் சீன நாட்டு பிரஜைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சீன பிரஜைகள் மூலமே தமது திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற நிபந்தனை அடிப்படையிலேயே சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகிறது இலங்கையில் சீனர்களின் அதிகரித்த எண்ணிக்கையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இந்திய பாதுகாப்பு விவகார ஆய்வாரள் ஹரிஹரன் குறிப்பிட்டுள்ளார் இலங்கையில் 50000ற்கும் அதிகமான சீன இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன இவர்கள் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுக அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வருகை தந்துள்ளவர்கள் என்ற போர்வையில் இலங்கையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி


'ஏலியன்ஸ்' என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி; ஆனால் அவர் களை, மனிதர்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது' என, பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:

சிறிலங்காவினது 'நிபந்தனையற்ற' கூட்டாளி

சிறிலங்காவில் சீனச் செல்வாக்கு அண்மைய ஆண்டுகளில் பெரிதும் அதிகரித்துக் காணப்படுகிறது. சிறிலங்காவிற்கான வர்த்தகப் பங்குதாரராகவும் இராணுவ உதவிகளை வழங்கும் கூட்டாளியாகவும் மாத்திரம் தென்னாசிய நாடாகிய சீன விளங்கவில்லை. மாறாக, தென்கிழக்காசியாவில் அமைந்திருக்கும் சிறிலங்காவின் மீது மனித உரிமை போன்ற விடயங்களில் மேற்கு நாடுகளின் பிரயோகிக்கும் காத்திரமான அழுத்தங்களை எதிர்கொள்வதற்கும் சீனா உதவுகிறது. விடுதலைப் புலிகளைச் சிறிலங்கா அரச படையினர் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க, பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. தென்னாசியாவின் பல நாடுகளும் கருதுவதைப் போல, சீனாவின் ஒத்துழைப்பின்றிச் சிறிலங்கா இந்த வெற்றியினைத் தனதாக்கியிருக்க முடியாது. 'விடுதலைப் புலிகளுடனான போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுக்கான தேவை எழுந்த போதெல்லாம் சீனா பெரும் உதவிகளைச் செய்திருக்கிறது' என கொழும்பு பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரான கீதபொன்கலன் கூறுகிறார். இராசதந்திர ரீதியிலும் சீன மக்கள் குடியரசு சிறிலங்காவிற்கான தனது ஆதரவினை வழங்கி நிற்கிறது. சிறிலங்காவினது இன மோதல்களை அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பாக, குறிப்பாக போரின் இறுதி நாட்களின் போது அரச படையினர் நடந்துகொண்ட முறை தொடர்பாக மேற்கு நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தின. நாட்டினது மனித உரிமை நிலைமைகள் மேம்படவில்லை எனக்கூறி சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை ஐக்கிய அமெரிக்கா இடைநிறுத்தியது. ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் கொண்டுவர முற்பட்டபொழுது கொழும்புக்கு ஆதரவாகச் செயற்பட்ட பீஜிங் அந்தத் தீர்மானத்தைத் தடைசெய்தது. இதன் பின்னர் இந்த இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவு என்றுமில்லாதவாறு வலுவடைந்து காணப்பட்டது. சிறிலங்காவிற்கான தனது உதவிகளை எந்தவிதமான நிபந்தனைகளுமற்ற ரீதியில் வழங்குவதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவின் அடிப்படை என வல்லுநர்கள் கூறுகிறார்கள். 'உதவிகளை வழங்குவதற்கு நிபந்தனைகளை விதிக்கும் மேற்கு நாடுகள் மற்றும் உலகவங்கி, அனைத்துலக நாயண நிதியம் போன்ற நிறுவனங்களைப் போலல்லாமல், கேள்விகள் எதனையும் கேட்காமலேயே சீனா சிறிலங்காவிற்கான தனது உதவிகளை வழங்கிவருகிறது' என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கல்யானந்த கொடகே கூறுகிறார். சிறிலங்காவின் நெடுநாள் கூட்டு நாடாகிய இந்தியா சிறிலங்காவில் முன்னெடுக்கும் செயற்பாடுகளைச் சமப்படுத்துவம் வகையில் சீனா செயலாற்றுவதாலேயே சிறிலங்கா தனக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவினை மேம்படுத்த முனைகிறது என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா குறிப்பிடுகிறார். 'இந்தியாவினைப் பொறுத்தவரையில் கடந்தகாலத்தில் அதனது செயற்பாடுகள் சிறிலங்காவில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக இந்தியச் செல்வாக்கினைச் சமப்படுத்துவதற்காக, இந்தியாவின் பலத்திற்கு நிகரான இன்னொரு சக்தியினைச் சிறிலங்கா கொண்டிருக்க விரும்புகிறது' என்கிறார் அவர். சிறிலங்காவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காகச் சீனா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தினைக் கொடையாக வழங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கொழும்புக்கான அளவில் பெரிய வெளிநாட்டுக் கொடையாளர் எனத் தான் கொண்டிருந்த பெயரினை டோக்கியோ இழந்திருப்பதோடு பீஜிங் அதனைத் தனதாக்கியிருக்கிறது. 'சீனாவிடம் மிகப்பெரும் கடற்படை இருக்கிறது. புதிய வல்லரசாக மாறிவரும் சீனா மேற்கு நாடுகளிலும் தனது வர்த்தகச் செயற்படுகளை விரிவுபடுத்தியுள்ளது. நாங்கள் இந்துமா சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இருப்பதனால் சீனாவினது மேற்குக்கான ஏற்றுமதிகள் அனைத்தும் எங்களது நாட்டினைக் கடந்தே செல்கிறது. இது முதன்மையானதொரு அம்சம்' என முன்னாள் இராசதந்திரி கொடகே கூறுகிறார். சிறிலங்காவினைச் சேர்ந்தவர்களின் முக்கியமான வர்த்தகப் பங்காளியாக, வல்லரசாக வளர்ந்துவரும் சீனா இருந்துவருகிறது. முத்துக்கள், தங்க ஆபரணங்கள், தேயிலை மற்றும் இயற்கை இறப்பர் போன்ற அம்சங்களே இரண்டு நாடுகளது இருதரப்பு உறவுகள் மேலும் மேம்படுவதற்கு உதவுகிறது. 'முத்து வியாபாரம் முதிர்ச்சியடையக் கூடியதொரு வர்த்தகம். அதிக பணப் புழக்கமுள்ள செழிப்பான வர்த்தகம் இது. புதிய பல வாய்ப்புக்கள் வந்து சேருவதற்கு இது வழிவகுக்கும்' என கொழும்பிலுள்ள முன்னணி முத்து வியாபாரியான செசாட் கரீம் கூறுகிறார். சீனாவினது மனித உரிமை நிலைமைகள் தொடர்வில் அதன் மேற்குப் பங்குதாரர்கள் வேறுபட்ட கருத்தினைக் கொண்டிருக்கின்ற போதும், அது சீனாவின் உள்ளகப் பிணக்கு என சிறிலங்கா கருதுகிறது. 'சீனாவில் நிலவும் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக நாங்கள் கருத்திலெடுக்கப் போவதில்லை, அதனை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்' என்கிறார் கொடகே. 'எங்களது பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நலன்களுக்கு அனுகூலமாக அமையக்கூடிய இருதரப்பு உறவினை மேம்படுத்துவதற்கே நாம் விரும்புகிறோம். ஆதலினால் சீனாவுடனான எங்களது உறவுநிலை தொடர்பில் மகிழ்வடைகிறோம்' என்றார் அவர். இந்தப் புறநிலையில் பௌத்த நாடுகளான சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான 'பெறுமதிமிக்க' இந்த உறவினை குழப்புவதற்கோ அல்லது இழப்பதற்கோ சிறிலங்கா தயாராக இல்லை. அண்டையில் சிறிலங்காவினது இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் இந்தியாவில் தலாய்லாமைவினைச் சந்திப்பதற்கு முனைந்தபோது சிறிலங்கா அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எமது அரசியல். எமது இராஜதந்திரம்.


முள்ளிவாய்க்கால் பேரவலம் எமக்குக் கொடுத்துள்ள பாடங்கள் பல. இதற்குப் பின்னர் தான் நிறையப் பேருக்கு நிறையவே பேசவும் எழுதவும் தெரிகிறது. இறுதிப்போர் தீவிரமாக நடந்த காலங்களிலும் சரி, போராட்டம் தீவிரமாக நடந்த காலங்களிலும் சரி, எதுவுமே பேசாமல் மதில்மேல் பூனைகளாக இருந்தவர்கள் கூட, இப்போது விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பிக்கிறார்கள்.

சிங்கள மக்களுக்கோர் அன்பான வேண்டுகோள்....!


தமிழ் மக்கள் தங்கள் சொந்த பந்தங்களை இழந்து, சொத்து சுகங்களை இழந்து அகதிகள் முகாம்களிலும் வதை முகாம்களிலும் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல. தமிழ் மக்களின் துன்பத்தை, துயரத்தை போக்க குறிப்பிட்டு சொல்லக்கூடிய எந்த ஒரு முயற்சியும் இலங்கை ஆட்சியாளர்களால் இதுவரை எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் இளம் யுவதிகளையும் இளைஞர்களையும் கடத்துதல், கற்பழித்தல் தடுத்து வைத்தல் படுகொலை செய்தல் போன்ற மனித குலம் ஜீரணிக்க முடியாத கொடுமைகளை மென்மேலும் ராஜபக்ஷே குடும்பத்தினர் தலைமயிலான இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எம்மைப் போன்றே தமிழ் மக்களும்  இறைமை மிக்க தேசிய இனம். அவர்கள்  விரும்புவது சுய உரிமையுடன் கூடிய  வன்முறையற்ற அமைதியான வாழ்க்கை முறைமையே என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன்.

விடுதலைப் புலிகள்  உட்பட தமிழர்கள்  சிங்கள மக்களை என்றுமே எதிரியாக பார்த்ததில்லை. அப்படியிருக்க  இவ்வளவு அழிவையும் சந்தித்த தமிழ் மக்கள் மீது ராஜபக்ஷே அரசாங்கத்திற்கு ஏன் இந்த வன்மம். ராஜபக்ஷே குடும்பத்தினரின் இந்த அவல ஆட்சியானது உலகம் முழுவதிலும் எதிர்ப்பையும் கண்டனங்களையுமே சம்பாதித்து வருகிறது. தமிழ்நாட்டில் மு. கருணாநிதியைப் போன்று, இந்தியாவில் காந்தி குடும்பத்தைப் போன்று ராஜபக்ஷே குடும்பமே இத்தீவினை ஆட்சி செய்ய விரும்பி அதற்க்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளார்.   ராஜபக்ஷே அரசின் பிற்போக்கு சிந்தனையும் தமிழர்கள் மீதான வெறியாட்டமும், செழிப்பும் அழகும் வாய்ந்த இச்சிறு இலங்கை  தீவினை  மீண்டும் இருளுக்குள் தள்ளி மீள முடியாது, ஏகாதிபத்திய  வல்லரசு நாடுகளிடம் எம் எல்லோரையும் அடிமைகளாக வாழ வைக்கவே வழி செய்யும். தங்கள் சுயலாபத்திற்காக  நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கவும் அடிமைப்படுத்தவுமே இவ்வலரசு நாடுகள் ராஜபக்ஷே அரசகங்கத்தின் கொடூர ஆட்ச்சிக்கு முண்டு கொடுத்து நிற்கின்றன. காய்களை நகர்த்த தருணம் பார்த்து நிற்கின்றன. அப்பொழுது தமிழர்கள் மட்டுமல்ல இச்சிறு தீவின் அனைத்து மக்களுமே தங்களின் சுய நிர்ணயத்தை இழந்து அடிமைப் படுத்தப் படுவர். இதை வரலாறு எமக்கு காட்டி நிற்கிறது. 

நாம் செய்ய வேண்டியது...

சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் எம் நாட்டைக் காக்க நாம் செய்ய வேண்டியது; அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை ஏற்ப்படுத்திக் கொடுப்பது. அநியாயமாக பலிஎடுக்கப் பட்ட, வேட்டையாடப்பட்ட சூறையாடப்பட்ட   தமிழ் உயிர்களுக்கு அதன் உறவுகளுக்கு  சட்டத்தின் முன் நீதியைப் பெற்றுக் கொடுப்பது. வீட்டின் ஒரு மூலையில் பிணமும்  ஒப்பாரியும் மறு மூலையில் கொண்டாட்டங்களும் எக்காலத்திலும் ஏட்புடையதன்று. அதற்க்கு சிங்கள மக்களாகிய நாம் முதலில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக,  போர்க்குற்றங்களுக்கு எதிராக  ஒன்றினைவோம். ராஜபக்ஷே அரசாங்கத்தின் வெறியாட்டத்திட்கெதிராக தமிழ் மக்களுடன் கை கோர்த்து போர்க்குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அவர்களுக்கு உறுதுணையாக குரல் கொடுப்போம். மக்களின் ஆணையை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களை ஆட்சி பீடத்திலிருந்து இறக்கி நாட்டை சுபீட்சம் பெற வைப்போம். இதுவே இச்சிறு தீவின் அமைதியான வாழ்விற்கும் நம் சந்ததியினர்க்கும் நாம் செய்யும் முழு முதற் கடமையாகும். இச்சந்தர்ப்பத்தை நாம் தவற விடுவோமாயின், தமிழர்களின் உரிமைகளை மறுப்போமாயின் நம் அனைவரது வாழ்க்கையில் அமைதியுடன் கூடிய வளர்ச்சி என்பது இல்லாது போகும் என்பது திண்ணம். 

-துஷார பெரேரா



இன்று முள்ளிவாய்க்காலின் மூச்சு அடங்க தொடங்கிய நாள்

இன்று முள்ளிவாய்க்காலின் இறுதி மூச்சு அடங்கி கொண்டு இருந்தது.முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் மரணக்குரல் , காப்பாற்றுமாறு உரத்து சத்தம் இட்ட அந்த அவலக்குரல் கூட மெல்ல மெல்ல அமைதியாக்கிக்கொண்டிருந்தது. கூடவே எம் இனத்தின் உரிமைகளும் தான் சிங்கள வெறியர்களால் புதைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. எஞ்சியவர்களுடன் முடிந்தால் தப்பி கொள்ளுங்கள் என காயப்பட்ட போராளிகளும், மக்களும் தமது சொந்தங்களுக்கு கூறி விடைபெற்றனர்.
நாம் இனத்துவேஷிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருத வில்லை. சிங்கள பண்பாட்டை கௌரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கொரவத்துடன் வாழ விரும்புகிறோம். என்ற தலைவரின் உண்மையான சிந்தனையின் வடிவத்தை சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் உணர வித்து எந்த இடர்வரினும் இலட்சியப் பயணத்தை தொடர்வோம்

லெப்டினன்ட் கேணல் மனோஜ்-பாலசிங்கம் வசந்தகுமார் -உப்பாறு, திருகோணமலை.

தலைநகர் உளற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 தினத்திலே உப்பாற்று மண்ணை காப்பதற்கு மட்டுமல்லாமல், தமிழீழ மண்ணை பாதுகாப்பதற்க்காக ஆண் மகன் ஒருவனை நொந்து சுமந்து ஈன்றெடுத்தாள் அன்னை இராசமணி. தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் இவனோ தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன.

திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன்

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை