திங்கள், 31 மே, 2010

நல்லிணக்கக் குழு மீது எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை – செல்வம் அடைக்கலநாதன்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கக் குழு மீது எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. இந்தக் குழுவால் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா என்பது சந்தேகமே.
போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசுக்கு இன்று ஏற்பட்டுள்ள சர்வதேசத்தின் அழுத்தங்களைத் தணிப்பதற்கான ஒரு தந்திரமாகவே இதனைப் பார்க்கிறோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (கேசரி வார வெளியீட்டுக்க ) வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துளார்

கரும்புலி

உலகின் தன்னார்வ கொடை என்பதற்கு பல முன் உதாரணங்களை நாம் முன் நிறுத்தலாம்.. ஆனால் அந்த கொடைகளின் பின் பலத்தில் ஏதோவொரு ஆதாய நோக்குக்ள் தங்கியிருப்பதை நாம் ஆராய்ந்து கண்டறிந்து விடலாம். ஆனால் எந்த வித ஆதாயங்களின்றி கொடை கொடுப்பவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்றால் அது உலகின் எங்கோ ஒரு தென் கோடியில் புள்ளியாக அமைந்திருக்கும் தமிழீழ திரு நாட்டில் பிறந்து மடிந்து இருக்கிறார்கள் என்றால் அது அந்த தெய்வீக கரும்புலிகள்தான்

வெலிக்கடை சிறைப் படுகொலைகள்!- மீளாய்வு


சிங்கள அரசு ஈழப் பகுதிகளில் கைது செய்யும் தமிழ்ப் போராட்ட வீரர்களைத் தமிழர் பகுதியிலுள்ள சிறைகளில் அடைக்காது சிங்களவர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைத்து வைப்பதே வாடிக்கை. இந்த நடவடிக்கை மிகவும் பாதுகாப்பானது என்றே அவர்கள் நினைத்திருக்க வேண்டும். பின்னாளில் இந்த நினைப்பு உண்மையாகவும் ஆனது.

இலங்கையின் மிகப் பெரிய சிறைச்சாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறையேயாகும். இங்கு சுமார் மூவாயிரம் கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி உண்டு. இச்சிறைக் கட்டடம் சிலுவை வடிவில் பிரிட்டிஷார் காலத்தில் (1843-இல்)கட்டப்பட்டதாகும்

தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்

தந்தை செல்வா தனது நாடாளுமன்றப் பதவியைவிட்டு விலகியதையொட்டி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி (காங்கேசன்துறை) இலங்கையில் 1918-இல் "இலங்கை தேசிய காங்கிரஸ்' எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து வைத்த சர்.பொன்னம்பலம் அருணாசலம், பின்னாளில் அதில் சிங்களவரின் ஆதிக்க வெறியை எதிர்த்து, "தமிழ் லீக்' (1924) என்னும் அமைப்பைக் கண்டார். இதன் நோக்கம் தமிழ் இனத்தின் தனித்துவம் காக்க "தனிநாடு' வேண்டும் என்பதாகும்

முள்ளிவாய்க்கால் மூட்டிய பெருந்தீ!

நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்!
பண்டார வன்னியன் ஆண்ட
வேங்கைகள் தேசம்!
சோழன் வலம் வந்த
ஈழதேசம்!
இது நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்...
புத்த தேசம்
புத்தி இழந்த வஞ்சக சிங்களம்!

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2010

பழிதீர்க்க உடைவாளை....





புத்தரை பூஜிக்கும்
லாமாக்களின் உதடுகள்
சரணம் சொல்லி
மகிழாமல் - தமிழரின்
மரணம் சொல்லி
மகிழ்ந்தது.


அசோகனின் சக்கரம்
அடக்க முடியாமல் சுழன்று
ஆயிரக்கணக்கான
தமிழர் உயிர்களை
குடித்தது

புதுயுகம் படைப்போம் !!

உலகெங்கும் விடுதலைக்கான போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. நமக்கு ஏன் விடுதலை வேண்டும்? என்ற கேள்வியிலிருந்துதான் விடுதலைக்கான போராட்டங்கள் தொடங்குகிறது. இந்த ஏன் என்ற கேள்வி தத்துவ ஞானி சாக்ரடீஸ் கற்றுத் தந்தது. ஏன் என்று கேட்கப் பழக வேண்டும். இதிலிருந்துதான் நமது வெற்றி தொடங்குகிறது. இயல்பாக நடைபெறுகின்ற ஓட்டப்பந்தயங்களில்கூட கடினமாக உடல் வலிமையை அனைத்தையும் ஒருங்கிணைத்து பின்னரே தமது இலக்கை அடைய முடிகிறது. அதை அடைந்த பின்னர் ஏற்படும் மகிழ்ச்சி தாம் இழந்த ஆற்றலை பன்மடங்கு கூட்டித் தருகிறது. சாதாரண ஒரு ஓட்டப்பந்தயத்தில் தனி நபருக்கான வெற்றியே அந்த நபரின் ஆற்றலை உயர்த்துகிறது என்றால், ஒரு இன விடுதலைக்கான வெற்றி எப்படி நம்மை உயர்த்தும் என்பதை நாம் உணரத் தொடங்கக் கூடிய காலநிலையில் இயங்கி வருகிறோம்

இன்று மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள்




‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான். இன்று மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் 


உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் World Health Organization உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. 1988ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் WHA 40.38 தீர்மானப்படி ஏப்ரல் 07ஆம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும்கூட, அதேயாண்டில் WHA 42.19 தீர்மானப்படி மே 31ஆம் திகதி அனுஸ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட மக்களை மீள்குடியேற்ற முடியாது


யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதிமுகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற முடியாது. அந்த மாவட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டமை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அவர்களை மீளக்குடியேற்ற முடியும் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ தெரிவததள்ளார்

எமது போராளிகள்..........??


நம் கண்கள் முன் நடமாடி நம் கண்களுக்கு தெரியாத ஓராயிரம் விடயங்களை மனதிற்குள் புதைத்துக் கொண்டு சிரித்து பேச மட்டுமே தெரிந்த விந்தை மனிதர்கள். உலகில் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவர்க்கும் இருக்கக் கூடிய அவ்வளவு ஆசாபாசங்களையும் கொண்டவர்கள் ஆனால் அதை எதையுமே உள்வாங்க மறுத்து தலைவர் காட்டிய பாதை மட்டுமே கர்மமாய் கொண்ட நடமாடும் தெய்வங்களே எமது தேசத்தின் போராளிகள்.

தமிழீழம் அதன் பிரதிநிதிகள் யார்?

தமிழீழம் அதன் பிரதிநிதிகள் யார்? காலத்திற்கு காலம் பலர் உரிமை கோரியிருக்கின்றார்கள். ஆனால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் யார்? எமது மக்கள் அறிந்த விடயம் உலகம் அறியத் தவறிய விடயம். அதுவே தமிழர்களின் பிரதிநிதிகள் யார் என்பதை! உண்மையிலேயே உலகம் அறியத் தவறிவிட்டது அல்லது தவிர்க்கப்பட்டது.


ஏன் தவிர்க்கப்பட்டது? தவிர்க்கப்பட்டதற்கும் காரணம்