திங்கள், 31 மே, 2010

எமது போராளிகள்..........??


நம் கண்கள் முன் நடமாடி நம் கண்களுக்கு தெரியாத ஓராயிரம் விடயங்களை மனதிற்குள் புதைத்துக் கொண்டு சிரித்து பேச மட்டுமே தெரிந்த விந்தை மனிதர்கள். உலகில் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவர்க்கும் இருக்கக் கூடிய அவ்வளவு ஆசாபாசங்களையும் கொண்டவர்கள் ஆனால் அதை எதையுமே உள்வாங்க மறுத்து தலைவர் காட்டிய பாதை மட்டுமே கர்மமாய் கொண்ட நடமாடும் தெய்வங்களே எமது தேசத்தின் போராளிகள்.



இளவயது ஆரம்பித்தாலே மனதில் பட்டாம் பூச்சிகள் பறப்பதய் ஒவ்வெருவரும் உணர்ந்துகொள்வோம். ஆனால் போராளிகள் என்ற இந்த கடவுள்கள் ஒரு பட்டாம் பூச்சியை கனவில் கூட கண்டதில்லை. காரணம் கொள்கை உண்ணத இலட்சியம் கட்டுப்பாடுகள் இவை அனைத்திற்கும் மேலாக அவர்களுக்கே உரிய பண்பாடு. இவைகளை தாண்டி இவர்கள் எப்போதுமே வெளியே வந்ததில்லை வர நிணைப்பதும் இல்லை.


இவர்களின் இந்த தியாகம் இன்று இரும்பு முள்னம்பிகளுக்குள் சிக்குண்டு திக்கெது திசையெது என தெரியாமல் தவித்து நிற்பதை நாம் எல்லோரும் மறந்துவிடக்கூடாது. போராட்டங்களில் இவர்களது சேவை எம் எல்லோர்களாலும் மறந்திருக்க முடியாது.


ஒவ்வெரு போராளியும் தரைப்புலியென்று, கடற்புலியென்றும், வான்புலியென்றும், வேவுப்புலியென்றும் இப்படி பல பல பெயர்களை தாங்கி செய்தாற்றிய பணிகள் அளவிட முடியாதவைகள். கடற்புலியாய் இருந்தவர்கள் மழைகால கடலில் அவர்கள் ஆற்றிய பணிகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. அதுபோல் வேவு புலியாகி பறப்பட்டு போனவர்கள் சில மதாங்களுக்கு திரும்பி வரமுடியாத Åழலில் சிக்கி எதிரியின் வலயத்துக்குள்ளேயே பகலில் தூங்கி இரவில் வேவு பார்த்து அதனை தரவுபடுத்தி அதை பயன்பெறுமாறு தயார்படுத்தி கொண்டு வந்து சேர்க்கும் வரை அவர்கள் படும் வேதனைகள் வரலாற்றில் கூட நாம் படித்ததில்லை.


ஏழுகடல் தாண்டி ஏழுமலை ஏழுகாடுகள் தாண்டிப்போய் போர் புரிந்த கதை எம் ஆச்சி அப்புமார் கதையாக சொல்லுவார்கள். அப்படி போர் புரிந்த வீரர்கள் கூட எமது போராளிகள் முன்பு இரத்தினக்கற்கள் முன் கூலாங்கற்களாக தெரிவார்கள். வரலாறு எமக்கு முன்னர் நிகழவில்லை எம்மோடே நிகழ்ந்தது. இன்று நிர்கதியாகி நினைத்துக் பார்க்க முடியாத பரிதாபத்துக்குறியவர்களாக நிற்கின்றார்கள்.


எமது போராளிகள் செய்த தவறு என்ன எம்மைப்போல அப்போதே வெளிநாடு சென்று இப்போது வெளிநாட்டு பிரஜா உரிமை பெறாமல் போனதுதான் அவர்கள் செய்த தவறா? இல்லையென்றால்தன் கண்முன்னே தன் இனம் கொத்துகொத்தாக கருவறுக்கப்படுவதை பார்க்க சகிக்க முடியாமல் அதை தடுத்து நிறுத்த புறப்பட்டதுதான் தவறா? இன்று யாரும் பார்க்க கூட முடியாத ஓர் இருண்ட வலயத்திற்குள் கட்டுண்டு கிடப்பது என்ன ஒரு கொடுமை.


நாம் அறிந்த தெரிந்த உலக விடுதலைப்போராட்டங்கள் நடத்திய விடுதலை இயக்கங்களில் எமது போராளிகளே மிகவும் அர்ப்பணிப்பு தியாகம் கட்டுப்பாடுகளைக்கொண்ட போராளிகளாக இருந்தர்கள். எமது தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற விடுதலை இயக்கத்தை உலகம் வேறு எங்கும் கண்டிருக்காது. அதற்கு பல சான்றுகளை இங்கு பல கூறலாம்.


இன்றும் காலத்தின் கட்டளைக்காக காத்துக்கிடப்பவர்கள். நஞ்சை மாலையாக்கி துவக்குகளையே செங்கோலாக்கி வாழ்ந்தவர்கள். அன்பின் பிறப்பிடமாக வாழ்ந்தவர்கள். மறைந்துவாழ்ந்த காலத்திலும் தமக்கு கிடைக்கும் செற்பமான உணவைக்கூட தங்களை பார்க்க வருவோர்க்கு மனமாற கொடுத்துவிட்டு தண்ணீரிலேயே வயிற்றை நிறப்பிக்கொள்வார்கள்.


ஒரு முறை உணவுக்கூடம் நோக்கி கை நீட்டி வழி காட்டியதற்காக கர்ணனை தர்மம் காத்ததாக வரலாறுகள் கூறுகிறது. உலகத் தமிழர் வயிறு மட்டுமல்லாது உயிறும் காத்த எமது போராளிகளை மட்டும் ஏன் தர்மம் கைவிட்டது?. தர்மம் தன்னை Åது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் இதுவும் வரலாறுதான். வரலாற்றுக்கே வழிகாட்டியாக திகழ்ந்த எம் தலைவர் வழி வந்தவர்கள் எமது போராளிகள்.


மீண்டும் வரலாற்றை மாற்றி எழுத வருவார்கள். போராளிகள் பெயர்தான் போராளிகள் ஆனால் அனைவருக்கும் தாயாய் தந்தையாய் தமயனாய் தமக்கையாய் தம்பியாய் என உறவுகளாய் எமது மக்களுடன் வாழ்ந்தவர்கள். எமது போராளிகளுக்கு இருந்த திறமைகள் உலகின் வேறு எந்த விடுதலை இயக்கத்திலும் இருந்ததில்லை அதற்கும் பல சான்றுகள் உண்டு.


பல நூறு இராணுவத்தை ஒரு சில போராளிகள் தந்திரத்தால் விரட்டிய நிகழ்வும் உண்டு. ஓர் உயிர் கொடுத்து பல நூறு உயிர் காத்ததும் உண்டு. எமது உயிரான தமிழீழ விடுதலைக்கு தீயாகி எதிரியை பொசுக்கியவர்கள் எமது போராளிகள். இரவு பகல் என விழி மூடாது தமிழீழ காவல் தொய்வங்களாக இருந்தவர்கள். எதிரியின் கடும் சமரில் வித்தாகிப்போன எமது மாவீரர்களுக்கு தூண்களாக இருந்தவர்கள்.


தோழர்கள் தங்கள் கைகளிலேயே மடிவதைக்கண்டு தினம் தினம் நரகத்தின் கதவைத் தொட்டவர்கள் எமக்காக. இன்று ஒளியற்ற கதவுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் எதிரிகளாளும் துரோகிகளாளும் சர்வதேச நாசக்காரர்களாளும். எமது ஒவ்வொரு போராளிகளும் ஒவ்வொரு சகாப்தங்கள். அவர்களை தரம் நிறுத்திப்பார்ப்பதற்கு இந்த உலகில் எந்த ஒரு அளவுகோலும் கிடையாது.


காலத்தின் கொடுமையால் அவர்களை நாம் தொடர்பற்ற ஒர் இருள் உலகத்தில் வைத்துவிட்டோம். அவர்கள் அங்கிருந்து மீண்டு வர வேண்டும் எம் முண்னே காவல் தெய்வங்களாக மீண்டும் அவர்கள் உலா வர வேண்டும். அதற்கு நாம் நம்மாலான முழு முயற்சியையும் செய்து எமது பங்களிப்பை செலுத்த வேண்டும். வாருங்கள் தோழர்களே ஒன்றாய்ச் சேருங்கள் தோழர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக