திங்கள், 31 மே, 2010

கரும்புலி

உலகின் தன்னார்வ கொடை என்பதற்கு பல முன் உதாரணங்களை நாம் முன் நிறுத்தலாம்.. ஆனால் அந்த கொடைகளின் பின் பலத்தில் ஏதோவொரு ஆதாய நோக்குக்ள் தங்கியிருப்பதை நாம் ஆராய்ந்து கண்டறிந்து விடலாம். ஆனால் எந்த வித ஆதாயங்களின்றி கொடை கொடுப்பவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்றால் அது உலகின் எங்கோ ஒரு தென் கோடியில் புள்ளியாக அமைந்திருக்கும் தமிழீழ திரு நாட்டில் பிறந்து மடிந்து இருக்கிறார்கள் என்றால் அது அந்த தெய்வீக கரும்புலிகள்தான்
.

அவர்களின் ஆழ் மன என்னங்களை எவராலும் அறிந்துகொள்ளவும் முடியாது புரிந்துகொள்ளவும் முடியாது. தியாகத்தின் எல்லை அவர்கள் அவர்களை தாண்டிய தியாக உணர்வு உலகத்தில் வேறு எவர்க்கும் இருந்ததில்லை இருக்கப்போவதுமில்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் பாரிய இராணுவ முன்னெடுப்புகளாளும் வல்லரசுகளின் ஒத்துழைப்புக்களாளும் அடக்கி ஒடுக்கப்படும் போது...இரும்பு மனிதர்களாக மாறி தங்களைத் தந்து அந்த அடக்குமுறையை உடத்தெறியும் முறைமையை கண்டு பிடித்தவன், கரும்புலி கப்டன் மில்லர்..1987ல் மே 5ல்.... அவன் ஏற்றி வைத்த அந்த கந்தக உயிர் கொடை இன்று வரை நீண்டு கொண்டேதான் போகிறது...

எமது கரும்புலிகளின் தற்கொடைக்கு உலக நாடுகள் பல பல பெயர் வைத்தாலும்.. இதே உலக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இருந்து புறப்பட்ட விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ் அணியில் கூடத் தற்கொடைத் தாக்குதலாளிகள் இருந்து இராணுவ கவசவாகணங்களை தகர்த்து காவியமானவர்கள். ஆனால், அவர்கள் மீது அன்றைய உலக நாடுகள் அனுதாபத்துடன் ஆதரவை வழங்கி, நாடு விடுதலைக்கு அங்கீகாரம் வழங்கியது. ஆனால் தமிழீழ தற்கொடையாளர்களுக்கும் அவர்களது இலட்ச்சியங்களுக்கும் இன்றுவரை இந்த உலக அனுதாபமும் கிடைக்கவில்லை, அங்கீகாரமும் கிடைக்கவுமில்லை.

முதலில் இந்த உலகம் எமது இந்த தற்கொடையாளர்களின் ஆழப் பதிந்திருக்கும் புனித இலட்சியம் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சாதாரண மனிதர்களைப் போன்று எல்லா ஆசா பாசங்களுக்கும் ஆதிக்கப்பட்டவர்கள். அவர்களின் இந்த கொடையின் உன்னதம் என்னவென்று அறிய வேண்டுமென்றால், அதை சாதாரணமாக விவரித்து விடமுடியாது. எங்களால் இயலாத ஒன்றை அவர்கள் செய்து முடிக்கிறார்கள். அவர்களால் அது எப்படி முடிகிறது. அதனை அராய்ந்து யாராவது ஒரு குறை கூற முடிந்தால் கூறிப் பார்க்கட்டும்.

ஏனெனில் எந்த வித சுயவிருப்புக்கள் சுயனலங்கள், குடும்ப நலன், குடும்ப உறவு, அன்பு, பற்று, பாசம், பந்தம் எல்லாத்திற்கும் மேலான உன்மையான அந்த உயிறையே காற்றில் கரைத்துக் கொடுக்கும் அந்த கொடையின் மீது எந்த ஒரு அறிவாளனாளும், சரி புத்திஜீவிகளாளும் சரி ஏன் இந்த உலகை படைத்து இரட்சிக்கும் அந்த கடவுளாளும் சரி எப்படி ஆராய்ந்தும் எந்த ஒரு குறையும் கூறிவிட முடியாது.

ஏனெனில் தானத்தில் சிறந்த தானம். எதுவென்று கேட்டால் பலரும் பல காரணம் கூறுவார்கள். யாராவது உயிர்த்தானம் பெரிது என்று சொல்லமுடியுமா? முடியாது ஏனெனில் அதை யாராலும் செய்ய முடியாது... காலத்தின் கல்வெட்டுக்களாக பதிந்து போயிருக்கும் ஒவ்வொறு கரும்புலிகளின் முகங்களை ஒரு கணம் உங்கள் கண்முன் நிறுத்தி பாருங்கள்.

அவர்கள் வாழும் காலங்களில் வாழ்ந்த வாழ்வை எண்ணிப்பாருங்கள்..உங்களுக்கும் அவர்களுக்கும் இப்போது உள்ள வேறுபாடு என்னவென்று ஒரு விடை தேடுங்கள். அவர்களின் அந்த தற்கொடை எவ்வாறு பெறுமதி மிக்கது என்பது உடனடியாக ஒரு வினாடியில் உங்களுக்கும் புலப்படும். அதுவே எமது ஆறாவது அறிவிலும் ஆணித்தரமாக பதிந்துவிடும். அவர்களின் இறுதிக்காலங்களில் இலக்கு கிடைத்த பின்னும் இறுமாப்புடன் இருந்தாலும் தமது மக்களுக்காகவே என்று சிரித்த முகம் கொண்டுதான் சென்று மடிந்திருக்கிறார்கள். இதில் எந்த ஒரு கரும்புலிகளும் விதிவிலக்கல்ல.

எமது விடுதலைக்கான ஆணிவேராக விளங்கியவர்கள். தனித்தனி மனிதர்களாக சரித்திரம் படைத்தவர்கள். வெளியில் நின்று அறிய முடியா புதிர்கள். காற்றில் கலந்து எதிரியை தினறடிப்பார்கள். இவர்களின் உண்மையான தரிசனத்தை வீரமரணத்தின் பின்பேதான் நண்பர்களே அறிவார்கள். இரகசியமே இவர்களிடம் இரகசியம் காப்பதை அறிந்துகொள்ளும். பெற்ற தாய் முதல் உயிர் நண்பர்கள் வரை இவர்கள் யார் என்ன படையணி என்பது எவர்க்கும் தெரியாது.

ஆனால் எல்லா இடத்திலும் இவர்கள் இருப்பார்கள். இவர்களை அறியாதவர்கள் இருந்திருக்கமாட்டார்கள் ஆனால் கரும்புலிகளாக தெரிந்திருக்கமாட்டர்கள். மரணத்திற்கே நேரம் குறித்துக்கொடுப்பவர்கள். உயிர்வாழும் கடைசி விநாடிவரை தமிழீழமே தீர்வு என முழங்கியவர்கள். ஒழுக்கம் அஞ்சாமை கடமை கட்டுப்பாடுகள் என இறுதிவரை உறுதியானவர்கள். ஆயிரம் ஆயிரம் யானைகளின் பலத்தை மனதில் கொண்டவர்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளோடு போர் உக்கிரமாக நடைபெற்றாலும் கரும்புலிகளுக்கென எதிரியின் பல கண்கள் இமைமூடாது விழித்திருக்குமாம். பல கண்கள் பலநூறு கண்களான போதும் தடுக்கமுடியவில்லை கரும்புலிகளின் தாக்குதலை. வேகம் விவேகம் சீறிய பார்வை என இவர்களை கண்டாலே எதிரி கடும் குளிரிலும் வியர்வையில் நனைவான். கரும்புலிகளுக்கு பயந்து போரிடாமலே எதிரி இராணுவத்தைவிட்டு ஆயிரக்கணக்கில் ஓடியிருக்கிறான்.

பயமே இவர்களிடம் பாடம் படிக்கும். மேதும் அலைகளில் தென்றல் விளையாடும் கதிர்வயல்களில் என இவர்கள் தமிழீழம் முளுவதும் நிறைந்தே இருக்கின்றார்கள். தேசியத் தலைவரின் நெஞ்சினில் நிரந்தரமாக நிறைந்திருப்பவர்கள். அன்னை தேசம் காக்க கரும்புலியானவர்கள். விடைபெறும் போதும் பிறந்த குழந்தையின் சிரிப்போடு விடைகொடு எமது தமிழீழ நாடே என விடைபெறுவார்கள். அடிமைப்பட்ட எமது தேசத்தின் விடுதலைக்காக பிறந்த முதற்குழந்தைகள் இவர்கள்.

அண்ணன் கப்டன் மில்லரோடு துவங்கியது கரும்புலிகளின் சாதனைச்சரித்திரம் முள்ளிவாய்க்காள் பின்னும் தொடர்கிறது. இவர்கள் வெடித்துச் சாவதாகவே எதிரி நினைக்கின்றான் ஆனால் இவர்களால் ஆயிரம் போர் பிறப்பதை அவர்கள் அறியமாட்டர்கள். செயலாற்றல் நேர்த்தியான திட்டம் மிகச்சிறந்த பயிற்சி என மிகப்பொரிய மகான்களே இவர்களிடம் பாடம் கற்ற வேண்டும். அருச்சுனனுக்கு இலக்காய்த் தெரிந்த குருவியின் தலையைப்போல் இவர்களுக்கு இலக்காய்த் தெரிந்தது தமிழீழமே.

தாய் மண் காக்க நீ தாங்கும் சாவுதான் தமிழன் என்று உன்னைப் பறைசாற்றும் எனும் பாடல் வரிகளுக்கேற்ப கரும்புலிகளாய் எதிரியின் பாசறை தேடிப் புயலாய்ப் பறந்தவர்கள். உரிமையோடு நாம் வாழ தம்மையே ஆயுதமாக்கியவர்கள். ஆழவிருச்சமாக நாம் வாழ ஆழ்கடலில் வெடித்தவர்கள். எமது வாழ்வியளுக்காய் மரணவியல் பயின்றவர்கள்.

இந்த புணிதர்களின் அந்த தியாகத்தை சாதாரணமாக ஒரு பேனா மையால் விவரித்து விடலாம் என்றால் அது அந்த பேனாவின் மைகள் கூட கண்ணீராக மாறிவிடும்.

எம்மை மீட்பதற்காய் வீழ்ந்தவர்கள். இவர்களின் பாதையை இவர்கள் மட்டுமே அறிவார்கள். முடிவில்லா இவர்கள் தியாகம்போல் எல்லைகள் அற்றவர்கள் இவர்கள். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் சிரிப்பிலும் இருப்பார்கள் இந்த கரும்புலிமாவீரர்கள். ஒவ்வொரு உயிர்களிளும் ஆழ ஊடுருவியிருப்பார்கள். இவர்கள் மாண்டவர்கள் அல்லர் வையம் உள்ளவரை வாழப்போகின்றவர்கள் இவர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக