செவ்வாய், 4 மே, 2010

11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்

இந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை, ஆகையால் அவசரகால சட்டம் தேவை இல்லை அத்துடன் 11ஆயிரம் தமிழ் இளைஞர்களும் விடப்படவேண்டும், அரசியல் தீர்வு காணவேண்டும். இவ்வாறு பாராளுமன்றில் சரத் பொன்சேகா கூறினார். முள்ளிவாய்க்காலில்

நிஜம் ...........எல்லோரும் தமிழனின் எதிரி ஆகிறார்கள் ,,,,,,!

வவுனியா வதை முகாம்களில் அடைபட்டுக்கிடந்த ஈழத் தமிழர்கள் தங்கள் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள 6 பெண்கள், 8 குழந்தைகள் உட்பட 75 பேர் கடந்த 19ஆம் தேதி சிறிய கப்பல் மூலம் அடைக்கலம் கொடுக்கும் நாட்டை நோக்கி புறப்பட்டனர். இவர்களது கப்பல் நடுக்கடலில் பழுதாகி நின்று விட்டது. இதைக் கண்ட மலேசிய கடற்படை, பினாங்கு கடல்கரைக்கு அழைத்துச் சென்றது. அங்கு இவர்களை கைது செய்யப் போவதாகவும், இலங்கைக்கு நாடு கடத்தப்போவதாகவும் மலேசிய அதிகாரிகள் கூறியதால் கப்பலை விட்டு இறங்க தமிழர்கள் மறுத்துவிட்டனர். இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தி பலன் இல்லாமல் போனது. அதன்பிறகு பினாங்கு துணை முதல்வர் ராமசாமி ஈழத்தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பவில்லை என்றும், பாதுகாப்பாக இங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுவீர்கள் என்றும் சொன்ன பிறகு கப்பலில் இருந்து 75 பேரும் இறங்கினர். அப்போதும் எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாட்டுக்கு அனுப்புங்கள் என்று கதறியும், மலேசிய அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இறக்கப்பட்ட அவர்கள் கையில் விலங்கு பூட்டப்பட்டு அங்குள்ள முகாம்களில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என தனித்தனியாக முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்குள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள முகாம்களில் ஆண்களையும், மற்றொரு முகாமில் பெண்களையும், வேறொரு முகாமில் குழந்தைகளையும் என தனித்தனியாக பிரித்து அடைத்து வைக்கப்பட்டுள்ளளனர்.

நீதவானுக்கு இராணுவ பாதுகாப்பு

சாவகச்சேரி நீதவான் கே.பிரபாகரனுக்கு ஈ.பி.டி.பியினால் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து நீதவானுக்கும், நீதிமன்றத்திற்கும் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக நேற்றுமுதல் படையினரில் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க விடுத்துள்ளார். இதனடிப்படையில், சாவக்சேரி நீதிமன்றத்திற்கு படையினர் பாதுகாப்பளிக்கும் அதேநேரம், நீதவான் யாழ்ப்பாணத்திலிருந்து நீதிமன்றத்திற்கு செல்லும் போதும் திரும்பும் போதும் இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் தென்மராட்சி அமைப்பாளர் சார்ள்ஸ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேக நபரான யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதிமுதல்வர் ரீகன் தலைமறைவாகியுள்ளார். இவரை பாதுகாப்பாக வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புவதற்கு ஈ.பி.டி.பி தலைமைத்துவம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, 2000 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலையில் சம்பந்தப்பட்ட ஈ.பி.டி.பியின் தீவகப்பொறுப்பாளர் நெப்போலியனும் இந்தியாவிற்கு அனு;ப்பப்பட்டு அங்கிருந்து பின்னர் லண்டனுக்கு சென்று அரசியல் தஞ்சம் கோரியிருந்தமையை யாழ்ப்பாண தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இயல்பு வாழ்க்கையும்,சுதந்திரமும் ,விடுதலையும் ...........


இவர்தான் நெல்லியடியில் சுட்டுக்கொல்லப்பட்ட சபேசன் இவர் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி எமது உருமறைப்பு போராளிகளையும் வன்னியின் யுத்த முடிவின் பின்னர் சரணடைந்த பல போராளிகளின் உயிரை குடித்த இவரை அழிந்து போனதாக சொல்லப்படும் விடுதலைப்புலிகள் தான் கொன்றதாக கூறி யாழில் படைத்தரப்பு தமது சோதனை சாவடிகளை திறந்துள்ளது . இவரைப் போல் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் இவர்களுக்கும் இதே கதி தான் என்பதை எப்போ இவர்கள் உணரப்போகிறார்கள் ? ராசுகுட்டி,பூபால்மாமா,மகிந்தன் ,இனியவன் (தூயவனுடன் சேர்ந்து செயற்பட்டவர் )அருள்,பிரபா,ஜேம்ஸ் ,மன்னவன்,சச்சி மாஸ்டர் ,குளறி ராசன் ,பாபு ,கிறிஸ்டி ,செவ்வாணன் ,கடலரசன் ,சுரேஷ் ,மாயவன் ,மதி ,நிலவன் ,புதுவேந்தன் ,மன்னன் , இவர்கள் வடமராட்சி ,வவுனியா ஜோசெப் ,உரேழு,அச்செழு ,யாழ்,மட்டக்களப்பு ,இராணுவ முகாம்களில் பொது தொண்டில் ஈடுபடுவதாக நினைத்து தம் தலயில் மண் போடுகிறார்கள்,

தாயை நேசிக்க மீசை முளைக்க தேவையில்லை

சமீப காலங்களில் தமிழ் தேசியத்திற்கு எதிரான எதிரிகள் மூலைக்கு மூலை முளைக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தமிழ் தேசியத்தின் அடையாளத்தை முடக்கிப்போட வேண்டும், அதற்கான முயற்சிகள் எதையும் செய்வதற்கு அவர்கள் தயார். களத்திற்கு வரமாட்டார்கள், தெருவுக்கு வரமாட்டார்கள், ஆனால்

பனை மரங்களே!

கண்டியிலிருந்து யாழ் செல்லும் சாலையில் “தமிழீழம் வரவேற்கிறது” இப்போது அகற்றப்பட்டிருக்கலாம். கிளிநொச்சி மத்தியில் இப்போது புலிக்கொடி பட்டொலிவீசிப் பறக்காதிருக்கலாம். ஆனால் கடந்து செல்லும் ஓவ்வொரு பிடி மண்ணிலும் எங்கள் சகோதரரின் செங்குருதி தோய்ந்திருக்கிறது. எங்கோ தொலைவில் எங்கள் காதுகளுக்கு கேட்காதபடி முனகல் ஒலிகள் இன்னமும் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது. பெருமூச்சும் கண்ணீரும் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை அடிமைக்குறி எம் முதுகில் ஆழப்பொறிப்பது பற்றியே சிங்களம் சிந்திக்கிறது. மகுடங்களின் மாயையில் மக்களை ஏமாற்றும் முயற்சியில் மட்டுமே எங்களில் சில மந்தி(ரி)கள் ஓற்றை வரியிலோ மேடைப்பேச்சிலோ கடந்த தசாப்தங்களை அப்படியே தின்றுவிட்டுப் போவதற்கு யாரையும் கடந்த தடவை மந்திரி ஆக்கவில்லை மறக்கவேண்டாம். மலர் மாலைகளை யாரும் யாருக்கும் எப்போதும் அணியலாம். ஒருபோதும் உறைவாளுக்கு ஓய்வென்றுவிட்டு துருப்பிடிக்க வைத்துவிடக்கூடாது. என் இனிய பனை மரங்களே! சதியால் துடிதுடிக்கும் ஈழக்கனவுகளை உயிர்ப்பிக்க இப்போது நம்கையில் வாக்குச் சீட்டு! கவனம்! இருப்பிருக்கும் சத்தையெல்லாம் தன் பாட்டில் சவட்டிக் குடிக்கும் “காக்கா” கொண்டு வந்து போட்ட குருவிச்சைகள் உங்களையும் தங்களைப் போல் வளைந்து போகும் படி பணிக்கும் உங்களுக்கும் ஒட்டி வாழக் கற்றுத்தரும் புதிதாய் ராஐதந்திரம் புகட்டும் எங்கள் தந்தையும் அண்ணனும் நட்டு வைத்த பனைமரங்களே! மறவாதீர்! எப்போதும் எதுவரினும் நிமிர்ந்து நிற்றலே எங்கள் அடையாளம் உங்கள் அருகிருக்கும் உறவுகட்கும் சொல்லுங்கள் வாழ்தலுக்கும் வீழ்தலுக்கும் அப்பால் வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பால் வளையாதிருத்தலே எங்கள் வாழ்வு நிமிர்ந்து நிற்றலே எங்கள் அடையாளம்.

பூமிக்கடியிலிருந்து சாம்பல், மண் துகள்களுடன் வெளியேறியது வெப்ப வாயு

பூமிக்கடியில் இருந்து சாம்பல், மண் துகள்களுடன் வெப்ப வாயு வெளியேறியது. பூகம்பம் ஏற்படும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால்

தாலிபான் தலைவர் மசூத் மிரட்டல்

அமெரிக்காவின் பல நகரங்களில் தங்கள் போராளிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தாலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் மிரட்டல் விடுத்துள்ளார். ஹக்கிமுல்லா மசூத், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்நிலையில் ஹக்கிமுல்லா அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து வீடியோவில் தோன்றி பேசிய கேசட் வெளியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்டதாக காட்டும் இந்த கேசட்டில், அவர் 9 நிமிடங்கள் பேசி இருக்கிறார். அதில், "இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அமெரிக்காவின் பல நகரங்களில் எங்கள் போராளிகள் தாக்குதல் நடத்துவார்கள். தாலிபான், அல் - காய்தா தலைவர்களை கொன்றதற்கு பழிக்குப்பழி வாங்குவோம். இதை உலகம் பார்க்கப்போகிறது" என்று கூறியுள்ளார்.