செவ்வாய், 4 மே, 2010

நிஜம் ...........எல்லோரும் தமிழனின் எதிரி ஆகிறார்கள் ,,,,,,!

வவுனியா வதை முகாம்களில் அடைபட்டுக்கிடந்த ஈழத் தமிழர்கள் தங்கள் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள 6 பெண்கள், 8 குழந்தைகள் உட்பட 75 பேர் கடந்த 19ஆம் தேதி சிறிய கப்பல் மூலம் அடைக்கலம் கொடுக்கும் நாட்டை நோக்கி புறப்பட்டனர். இவர்களது கப்பல் நடுக்கடலில் பழுதாகி நின்று விட்டது. இதைக் கண்ட மலேசிய கடற்படை, பினாங்கு கடல்கரைக்கு அழைத்துச் சென்றது. அங்கு இவர்களை கைது செய்யப் போவதாகவும், இலங்கைக்கு நாடு கடத்தப்போவதாகவும் மலேசிய அதிகாரிகள் கூறியதால் கப்பலை விட்டு இறங்க தமிழர்கள் மறுத்துவிட்டனர். இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தி பலன் இல்லாமல் போனது. அதன்பிறகு பினாங்கு துணை முதல்வர் ராமசாமி ஈழத்தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பவில்லை என்றும், பாதுகாப்பாக இங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுவீர்கள் என்றும் சொன்ன பிறகு கப்பலில் இருந்து 75 பேரும் இறங்கினர். அப்போதும் எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாட்டுக்கு அனுப்புங்கள் என்று கதறியும், மலேசிய அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இறக்கப்பட்ட அவர்கள் கையில் விலங்கு பூட்டப்பட்டு அங்குள்ள முகாம்களில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என தனித்தனியாக முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்குள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள முகாம்களில் ஆண்களையும், மற்றொரு முகாமில் பெண்களையும், வேறொரு முகாமில் குழந்தைகளையும் என தனித்தனியாக பிரித்து அடைத்து வைக்கப்பட்டுள்ளளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக