செவ்வாய், 4 மே, 2010

நீதவானுக்கு இராணுவ பாதுகாப்பு

சாவகச்சேரி நீதவான் கே.பிரபாகரனுக்கு ஈ.பி.டி.பியினால் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து நீதவானுக்கும், நீதிமன்றத்திற்கும் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக நேற்றுமுதல் படையினரில் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க விடுத்துள்ளார். இதனடிப்படையில், சாவக்சேரி நீதிமன்றத்திற்கு படையினர் பாதுகாப்பளிக்கும் அதேநேரம், நீதவான் யாழ்ப்பாணத்திலிருந்து நீதிமன்றத்திற்கு செல்லும் போதும் திரும்பும் போதும் இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் தென்மராட்சி அமைப்பாளர் சார்ள்ஸ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேக நபரான யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதிமுதல்வர் ரீகன் தலைமறைவாகியுள்ளார். இவரை பாதுகாப்பாக வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புவதற்கு ஈ.பி.டி.பி தலைமைத்துவம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, 2000 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலையில் சம்பந்தப்பட்ட ஈ.பி.டி.பியின் தீவகப்பொறுப்பாளர் நெப்போலியனும் இந்தியாவிற்கு அனு;ப்பப்பட்டு அங்கிருந்து பின்னர் லண்டனுக்கு சென்று அரசியல் தஞ்சம் கோரியிருந்தமையை யாழ்ப்பாண தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக