வியாழன், 20 மே, 2010

”தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்!”


பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபல மான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச் னைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர். நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற நாடு கடந்த தமிழீழத் தேர்தலில், தேர்தல் குழுவின் முக்கிய உறுப்பினரான இவரது ஆலோசனையின் பேரில்தான் தேர்தலே நடைபெற்றது.

சிங்கள நினைவு தூபிகளையும், குடியேற்றங்களையும் அமைப்பது எந்த வகையில் நீதியானது?


தன்னுடைய படைகளை, ஆசுவாசப்படுத்துவதற்காக நினைவுச்சின்னங்களை எழுப்புவது தவறில்லை, ஆனால் அதை தமிழர்கள் பிரதேசத்தில் நிறுவுவது, தமிழர்களை மேலும் அவமானப்படுத்துவதாகவும் கேலிசெய்வதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறான நினைவுச்சின்னங்களை அமைத்து, தமிழ்ப்பிரதேசங்களையும் தமிழர்களையும் உல்லாசப்பயணிகளின் பார்வைக்குவைத்து நிதியீட்ட முனைகின்றார் என்பது வெளிச்சம்.
நாட்டின் நலத்திற்காக குருதி சிந்திய, உயிர்கொடை தந்த அந்த உத்தமர்களை நன்றியோடு நினைப்போம் தேசிய தலைவரின் தலைமைக்கு யாரெல்லாம் துரோகம் செய்கிறார்களோ, அவர்களை புறந்தள்ளுங்கள். தேசிய தலைவரின் தலைமையை, அவரின் கட்டளையை நிறைவேற்றுங்கள். தமிழீழத்தில் கரம் கோர்ப்போம். தரணியெங்கும் நிமிர்ந்து நிற்போம்.

முள்ளிவாய்க்கால்- தமிழரின் வரலாற்றில் என்றுமே மறக்கப்பட முடியாத மரணபூமி.

அப்பாவிப் பொதுமக்கள்- காயம்பட்ட, சரணடைந்த போராளிகள் என்று ஆயிரக்கணக்கானோரின் குருதி உறைந்து போன மண். அங்கு நடந்த கொடுமைகளும் கொடூரங்களும் உலகின் பார்வைக்கு இப்போது தான் வரத் தொடங்கியுள்ளன. சரணடைந்த போராளிகளை ஈவு இரக்கமின்றிச் சுட்டுக் கொல்லும் காட்சிகள் உலகத் தொலைக்காட்சிகளில் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. போராளிகளின் உயிரற்ற உடல்களை சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தி கேவலப்படுத்தும் காட்சிகளை புகைப்படங்கள் காண்பித்தன. இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படியும் மனிதர்களா- என்று உலகமே ஒரு கணம் வெட்கித் தலைகுனிந்தது. சிங்கள தேசத்தின் படைகள் போரிடும் வீரர்களைக் கொண்டதல்ல- மனித முகத்தோடு இரத்த வெறிகொண்டு அலையும் மிருகங்கள் என்பது நிரூபணமானது.

இயற்கை எனது நண்பன் ..............


ஓர் இனத்தின் வரலாறு தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்து, ஓராண்டு நிறைவெய்தி இருக்கிறது. கடந்த ஓராண்டிலே எத்தனையே விமர்சனங்கள் புதிது புதிதாக தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. விமர்சனங்களைப் பொறுத்தமட்டில் அதன் ஆளுமை மாந்த வாழ்வின் அடித்தளத்தை முன்னிருத்தியே அதன் நிலைத்தன்மை நீடித்திருக்கும். மார்க்சிய கோட்பாட்டின்படி இந்த மண்ணின் மேல் உள்ள எல்லா வகையானவையும் விமர்சனத்திற்குரியவை தான். ஆக,