திங்கள், 21 ஜூன், 2010

செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!


“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய
கருணாநிதி ஸ்ரீமச்சாசனம்
ஊர்வச சிரோபபிஷசேகரி…”


இச்செப்பேடு
செப்புவது யாதெனில்,


“காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!”
என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே
பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு
விடாது கடிதமெழுதியதோடு,

அபுதாபியின் கேட் கப்பிற்றல் (Gate-Capital) கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியின் பைசா என்ற சாய்ந்த கோபுரத்தை முறியடித்துள்ளது அபுதாபியின் நவீன கட்டடம். அதிகளவில் சாய்ந்திருக்கும் சாதனையில் இத்தாலியின் பைசா கோபுரத்தை அபுதாபியின் கேட் கப்பிற்றல் (Gate-Capital) கோபுரம் முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

பெண் போராளிகள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்!

சிறையில் உள்ள 400 பெண் போராளிகள் தென்பகுதிக்கு ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரியவென நேற்று அழைத்து செல்லபட்டுள்ளனர். வேலைவாய்ப்பிற்காகவே இவர்கள் அழைத்து செல்லப்பட்டதாக வவுனியா படை அதிகாரிகள் தெரிவித்துள்ளபோதும். இந்த விடயங்கள் தொடர்பில் குறித்த 400 பெண் போராளிகளினதும் பெற்றோர்கள் உறவினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது

லெப்டினன்ட் மலரவன்- ஒரு வேவுப்போராளியின் உண்மைக் கதை

ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன.

நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது......

செம்மொழி மாநாடால் கலைஞருக்கு வேண்டப்படாத புகழும், அரசியல் அனுகூலங்களும் கிடைக்கப் போவதென்பது உண்மை. கலைஞரை மட்டும் குறைசொல்லி ஏது பலன்? நாம எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் நாம் கொண்ட கொள்கைக்காகப் பிடறியில் குத்துவதில்லையா?! இன்று தமிழினம் என்றுமில்லாதாவாறு பிளவுபட்டுள்ளது. ஓற்றுமையே பலம்; அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு. கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தமிழுக்காகத் தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். ஓன்றுபட்டு தமிழினதும் தமிழர்களினதும் வளர்ச்சிக்கும் சளைக்காது உழைப்போம். சாதி, மத, மார்க்க, வர்க்க, நெறி, அரசியல், சித்தாந்த, கொள்கை, கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தாய்த்தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது.

கே.பி அவர்களுக்கு ஓர் திறந்தமடல் - சேரமான்


அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ...
தெரியவில்லை.


மாண்புமிக்கவரோ அல்லது மேன்மைதங்கியவரோ...
அறியவில்லை.


கே.பியோ, குமரன் பத்மநாதனோ அல்லது செல்வராசா பத்மநாதனோ...
புரியவில்லை.


எவராயிருப்பினும் தவறாக விளித்திருப்பின் மன்னித்தருள்க!

இலங்கை அரசின் போலி முகத்திரையைக் கிழிப்போம் !

சில தினங்களுக்கு முன்னர் புலம்பெயர் நாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்களும் மற்றும் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் என்பவரும் இணைந்து 9 பேர் கொண்ட ஒரு குழு அமைத்திருப்பதாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சண்டே ஒப்சேவர் பத்திரிகை செய்திவெளியிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இதன் பின்னணி என்ன, இதில் வெளிவராத செய்திகள் என்ன என்பதை ஆராய்வோம்.

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் இன் மடிக்கணனி நீதிமன்ற பாதுகாப்பில்!

வெள்ளைகொடியுடன் சரணடைய வந்த புலிகளின் முக்கியஸ்தர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச களமுனைத் தளபதி ஒருவருக்கு கட்டளையிட்டிருந்தார் என முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்தாக செய்தி வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் இன் மடிக்கணனி நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் கைது!

தமிழகத்தின் திருச்சி நகரில் விடுதலைப் புலிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக போலீசார் கூறுகின்றனர்.

பிரிவினைவாத உணர்வைத் தூண்டுகிறது ஜேவிபி

வடக்கு, கிழக்கு தமிழ்மக்களிடம் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் ஜேவிபி நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்விலேயே ஜேவிபி மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மீன்பிடிக்க சீனா போடும் தூண்டில்!

முல்லைத்தீவு நந்திக்கடலை மீன்பிடி அபிவிருத்தித் திட்டம் ஒன்றுக்காக சீன நிறுவனம் ஒன்றிடம் கையளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது. கடற்றொழில் அமைச்சர் ராஜித்தசேனா ரத்ன கடந்த வாரம் இதுபற்றிய தகவலை வெளியிட்டிருந்தார்.