திங்கள், 21 ஜூன், 2010

நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது......

செம்மொழி மாநாடால் கலைஞருக்கு வேண்டப்படாத புகழும், அரசியல் அனுகூலங்களும் கிடைக்கப் போவதென்பது உண்மை. கலைஞரை மட்டும் குறைசொல்லி ஏது பலன்? நாம எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் நாம் கொண்ட கொள்கைக்காகப் பிடறியில் குத்துவதில்லையா?! இன்று தமிழினம் என்றுமில்லாதாவாறு பிளவுபட்டுள்ளது. ஓற்றுமையே பலம்; அடம்பன் கொடியும் திரண்டால்தான் மிடுக்கு. கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தமிழுக்காகத் தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். ஓன்றுபட்டு தமிழினதும் தமிழர்களினதும் வளர்ச்சிக்கும் சளைக்காது உழைப்போம். சாதி, மத, மார்க்க, வர்க்க, நெறி, அரசியல், சித்தாந்த, கொள்கை, கருத்தியல் வேற்றுமைகளைக் களைந்து தாய்த்தமிழின் பெயரில் ஒன்றுபடுவோம். நாம் வீழ்ந்தாலும் தமிழ் வீழக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக