சனி, 14 ஆகஸ்ட், 2010

ஓடுங்கோ!... ஓடுங்கோ!... நில்லாதிங்கோ!... ஓடுங்கோ!...

கனவுபற்றிய ஆய்வுகள் நிறையவே உண்டு. உளவியலாளரான சிக்மன் புரொட்டின் கனவு பற்றிய கருத்துக்கள் மருத்துவ விஞ்ஞான ஆய்விற்குப் பேருதவி ஆயிற்று. எனினும் சில வகையான கனவுகளுக்கு காரணகாரியம் எதுவும் தெரியவில்லை.இப்படித்தான்.நேற்றிரவு ஆழ்ந்த தூக்கத்தில் ஒரு கனவு.கறுத்தக் கண்ணாடியும், வெள்ளைச்சாரம் நஷனலும் அணிந்த ஒருவர் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் விமானத்தால் இறங்கியதுதான் தாமதம் பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர். இதை பார்த்தபோது வந்தவர் உயர்ந்த பதவியில் இருப்பவர் என உணர்ந்து கொண்டேன். ஆனாலும் ஒரு அதிசயம். அவருடைய கையில் கயிறு இருந்தது.


செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை

 ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

யாழில் ஆயுதங்கள் மீட்பாம்.......

யாழ் குடா பகுதியான கொக்குவில் மற்றும் சங்கத்தானை பகுதியில்

இராணுவத்தின் 52 ம் படையணி படையினர் நடத்திய தேடுதலின் போது
47 கைக்குண்டுகள், c4 கண்ணிவெடிகள் , 22 ற்கு அதிகமான புதிய வகையான சீனா நாட்டில் தயாரிக்கபட்ட கைத்துப்பாக்கிகள் , மோட்டர் குண்டுகள் , தோட்டாக்கள் என்பன கைப்பேற்றபட்டுள்ளதாக இராணுவம் தனது நாளாந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.