உலகில் அதிகளவு கைதிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை திகழ்வதாக ஜனநாயகத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதில் 8000 அரசியல் கைதிகள் அடங்குவதாக ஜனநாயகத்திற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார். சர்வதேச ஜூரிகள் பேரவையினால் இந்தப் புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவிதமான பிடிவிராந்தோ அல்லது வேறும் சட்ட ரீதியான பின்னணியோ இன்றி ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக