புதன், 2 ஜூன், 2010

இன்றைய செய்தித் துளிகள்..........



ஜனாதிபதியின் வருகைக்கு முன்னர் அரசியல் தீர்வுத் திட்டத்தை சமர்ப்பிக்க கூட்டமைப்பிடம் இந்தியா கோரிக்கை....தமிழ்க் கூட்டமைப்பை விரைவில் ஜனாதிபதி பேச்சுக்கு அழைப்பார் பீரிஸ் கூறுகிறார்...........பிரபாகரனின் பாடசாலை நண்பனை விடுதலை செய்யக் கோரி மனுத் தாக்கல்............
.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரைவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்து பேசவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வொன்றை எட்டும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தான் சந்திப்பொன்றை நடத்தியிருந்ததாகவும் பேராசிரியர் பீரிஸ் கூறினார்.


எனினும் இது பூர்வாங்க சந்திப்பொன்றாகவே இது அமைந்திருந்ததாகவும் தொடர்ந்தும் பேச்சுகளை முன்னெடுப்பது தொடர்பாக எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.சம்பந்தனுடன் ஒரு தடவை சந்தித்து பேசினேன்.இது ஒரு பூர்வாங்க சந்திப்பாகவே அமைந்திருந்தது.இந்த பேச்சுக்களை தொடர்ந்தும்


முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கிறோம்.ஜனாதிபதியும் அவர்களை சந்தித்து பேசவிருக்கிறார் என்று அமைச்சர் பீரிஸ் இதன்போது தெரிவித்தார். இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தலைவர்களுடன் பேசத் தயாராக இருப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே அதுபற்றி கேட்டபோது வெளிவிவகார அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.


வெளிவிவகார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுடன் உரையாடும் போதே அவர் இதைத் தெரிவித்தார். அத்துடன், சகல தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடனும் அரசாங்கம் விரைவில் பேச்சுகளை ஆரம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதேநேரம், அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சித் தலைவர்களுடன் பேசி கருத்துகளை பெறும் அரசாங்கத்தின் நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டி வரவேற்றிருப்பதாக ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.


ஜனாதிபதியின் வருகைக்கு முன்னர் அரசியல் தீர்வுத் திட்டத்தை சமர்ப்பிக்க கூட்டமைப்பிடம் இந்தியா கோரிக்கை
02.06.10
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வரும் முன்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தைச் சமர்ப்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி இந் தியாவுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன் னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.


சீனாவுடன் நடைபெற்று வரும் ஆதிக்கப் போட்டியில் கடும் போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ள இந்தியா, மகிந்தவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உடன்படிக்கையிலும் கைச்சாத்திடத் திட்டமிட்டுள்ளது. புதுடில்லி செல்லும் ஜனாதிபதி மகிந்த, இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது


பிரபாகரனின் பாடசாலை நண்பனை விடுதலை செய்யக் கோரி மனுத் தாக்கல் – விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்பு
02.06.10
விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பாடசாலை நண்பரான குணசுந்தரம் ஜெயசுந்தரம் என்பவரை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று மேல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


உயர் நீதிமன்ற நீதியரசர்களான சிராணி திலகரட்ண, கே.சிறிபவன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரண்டு வருடங்களும் 9 மாதங்களும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த குணசுந்தரம் ஜெயசுந்தரம் என்பவரை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஏ. விநாயகமூர்த்தி நீதிபதிகளிடம் கோரினார்.


இதற்கு அரச சட்டத்தரணி, குணசுந்தரம் ஜெயசுந்தரம் தொடர்பில் மேலதிக விசார ணைகள் நடத்தப்படவுள்ளமையினால் உடனடியாக விடுதலை செய்ய முடியாது எனத் தெரிவித்தார். அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் மலேசிய நிறுவனம் ஒன்றிலிருந்து கப்பல் ஒன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் யுத்த தளபாடங்களை இலங்கைக்கு அனுப்பியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.


அத்துடன் சம்பவங்கள் தொடர்பாக இரகசிய அறிக்கை ஒன்றை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கு மாறும் இதற்கமைய ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக