சனி, 17 ஜூலை, 2010

19 07 2007 இல் சிங்கள பேரினவாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கின் நிலை ...................

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு மாகாணம் சிங்களப்படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 
வாகரையில் மேற்கொள்ளப்பட்ட பெரும் எடுப்பிலான தாக்குதலில் னூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் இதனை தொடர்ந்து கொக்கொட்டிச்சோலை, வெல்லாவெளி, வவுணதீவு போன்ற புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மக்கள் மீதும் மிகக்கொடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட னர் சிங்களப்படையினர்.



இதன் போது விடுதலைப்புலிகள் அங்கிருந்து பின்வாங்கியிருந்தனர். இதனால் கிழக்கு சிங்களப்படையினரின் முழுமையான ஆக்கிரமிப்பிற்கு கொண்டு வரப்பட்டது. அன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் முற்றாக குடியேற்றப்படவில்லை. சில இடங்கள் முழுமையாக சிங்களப்படைகளினால் நிரந்தரமாகவே அபகரிக்கபட்டுள்ளது. மூதூர் கிழக்கு சம்பூர் என்ற தமிழரின் புராதன கிராமங்கள் முழுமையாக அபகரிக்கப்பட்டுள்ளன.


சுமார் 800 மக்களை கொலை செய்தும், 4000 மக்களை காயப்படுத்தியும், 45,000 மக்களை இடம்பெயர்த்தியும் நேற்கொள்ளப்ப்ட்ட சிங்களப்படையினரின் ஆக்கிரமிப்பு இன்னமும் தொடர்கின்றது.


வாகரைப்பகுதியில் இரண்டு கரையோர தமிழ் கிராமங்கள் சிங்கள கிராமங்களாக மற்றப்பட்டுள்ளன. மூதூர் சம்பூர் பிரதேசங்கள் நிரந்தரமாக மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன.


கூடவே திருகோணமலை நிலாவெளிப்பகுதிகளில் உள்ள தமிழர் வெற்று நிலங்கள் சிங்கள முதலீட்டாளர்களால் உல்லாச விடுதிகள் கட்டவென ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மற்றும் அம்பாரை பகுதிகளிலும் இதே நிலைதான் அண்மையில் அம்பாரை அறுகங்குடா பகுதிகளில் உள்ள காணிகள் சிங்கள முதலீட்டாளர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாணம் மீட்கபட்டதாக அரசாங்கம் கூறினாலும் அங்கு தனி மனிதர்களுக்கான பாதுகாப்பு இன்னமும் கேள்விக்குறியாகவேதான் உளது என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சுமார் 1000 இற்கு மேற்பட்ட இளைஞர்கள் கிழக்கில் அரச படையினரால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. கூடவே கிழக்கில் 30,000 மேற்பட்ட தமிழ் பெண்கள் விதவைகளாக உள்ளனர். இவர்களிற்கான உருப்படியான நட்ட ஈடுகளோ இதுவரை வழங்கப்படவில்லை.


ஜன நாயகம் ஏற்படுத்தப்பட்டதாக ஓர் பொம்மை மாகாண அரசு ஒன்றினை நிறுவிய மஹிந்த அரசு அதற்கு எந்தவித அதிகாரத்தினையும் வழங்காது தன்னுடைய சர்வாதிகாரத்தினையே செய்து வருகின்றது.


ஆக மொத்தத்தில் தமிழர்களுக்கு தமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்களவர்களுக்கு தாம் தமிழர்களை வென்று விட்டதாகவும் இருக்கின்றது தற்போதைய நிலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக