வியாழன், 13 மே, 2010

மீண்டும் இன்ரபோலின் தேடுவோர் பட்டியலில்


விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரனின் பெயர் மீண்டும் அனைத்துலக காவல்துறை பிரிவான இன்ரபோல் காவல்துறையின் தேடுவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவின் கட்டளை அதிகாரி பொட்டு அம்மான் கடந்த மே மாதம் முள்ளிவாய்கால் பகுதியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் இன்ரபோல் அமைப்பு தனது தேடுவோர் பட்டியலில் பொட்டு அம்மான் மற்றும் அவரின் இரண்டு உதவியாளர்கள் ஆகியோரின் பெயர்களை இணைத்து வெளியிட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை கொண்ட பகுதியில் அவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. எனவே இன்ரபோலின் இந்த அறிப்பானது சிறிலங்கா அரசின் முன்னைய கூற்றுக்களில் ஏற்பட்ட மாற்றமாகவே கருதப்படுகின்றது. பொட்டு அம்மானின் இறப்புச் சான்றிதழை சிறீலங்கா அரசு வழங்காததால் அது மீண்டும் இன்ரபோலின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த வருடம் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள போதும் அவரின் சடலம் கைப்பற்றப்படவில்லை. பொட்டு அம்மானின் பெயருடன் சாள்ஸ் மற்றும் நவரட்ணம் ஆகியோரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதனிடையே பொட்டு அம்மான் தனது தளபதிகளுடன் வேறு ஒரு நாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என நம்பப்படுவதாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக