சனி, 15 மே, 2010


வைகாசி வந்தாலே களைகட்டும் வைபவங்கள் மகிழ்ச்சி தரும் சேதிகள் இவைகளே தமிழன் நிகழ்வுகள் .......... இத்தனையும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நடந்தவைகள் வரலாறாய் மாறிநிற்கும் நிஜங்கள் ................. மேலே சொல்லப்பட்டவை இப்ப நினைத்தாலும் மனசு முழுக்க இறைக்கைகள் கட்டி உள்ளூர பறப்பதுபோல் ஒரு சுகமான மீட்டல்.............. இத்தனைக்கும் நடுவே மீட்ட முடியாத சோகங்கள் மட்டுமே சுமந்தபடி அவலங்கள் ஒன்றே இப்போது மீதமாக எங்கள் உறவுகள் ............... கலைந்துபோன மேகக்கூட்டம் அலைந்து திரிவதுபோல தொடரும் அகதிப்பயணம் ஒரு முகாம் விட்டு இன்னுமொரு முகாம் தேடி.............. உதிர்ந்துபோன உறவுகளின் வருகைக்காக ஒவ்வொரு படலையிலும் நம்பிக்கை மாறாமல் காய்ந்துபோன விழிகளுடன் நம் சொந்தங்கள் .............. கனத்த கவலைகளை உரத்தகுரலில் இன்னும்தான் கத்தித்தீர்க்க முடியாமல் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள் ............. இந்த வைகாசி மாதம் தமிழன் மறந்தால் இனிமேலும் எழுதுவதிலோ பேசுவதிலோ எந்தவொரு பயனுமில்லை................ ஆறின கஞ்சி பழங்கஞ்சி அதுபோலவே ஆகிநிற்குது தமிழர்களின் அனைத்துத்தேவைகளும் அவர்கள் அபிலாசைகளும் .................. மேடை போட்டு பேசியவர்கள் கிடைத்த வெற்றிகளோடு தடுமாறி தங்கள் நிலைகளை தக்கவைக்க தடம் புரண்டு தயாராகிறார்கள் ................ அள்ளிக்கொடுத்தும் அனைவரையும் அரவணைத்த சனமோ அவலமும் ரணமுமாக சிரிக்க மறந்த -வெறும் மனித சிலைகளாக மாறி நிற்கிறார்கள்.............. இழந்தவைதான் வேண்டாம் இருப்பதையாவது காப்பாத்த இவர்களுக்கு யாரிருக்கிறார்கள் இதயம் உணர்ந்து உதவுவதற்கு....................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக