சனி, 18 செப்டம்பர், 2010

கதுறு கொடவாக மாறியது கந்தரோடை

யாழ்ப்பாணத் தமிழர்களின் பாரம்பரிய இடங்களின் பெயர்களை சிங்களமயமாக்கி பெயர்ப்பலகைகளைத் தொங்க விட்டுள்ள இராணுவமும் அரசாங்கமும் அம்மக்கள் மீது கலாச்சார மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. யாழ்ப்பாண வரலாற்றின் புரதான இடங்களில் ஒன்றான கந்தரோடை என்னும் வரலாற்று புகழ்மிக்க இடத்தினை தற்போது கதுறுகொடவாக மாற்றியுள்ளனர் பெரும்பான்மை இனத்தவர்கள்.
புத்த விகாரையி்ன் தோற்றத்தில் கந்தரோடையின் சில பகுதிகளில் கட்டிட வடிவமைப்புகள் காணப்படுகின்றன. தென்பகுதி சிங்கள சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து பார்த்துவிட்டு செல்லும் இடமான கந்தரோடை என்னும் இவ்வூரினை கதுறு கொடவாக மாற்றி பெயருடன் கூடியதான குறியீட்டு பலகை அங்கே பொருத்தப்பட்டுள்ளது. சிங்களத்திலும் தமிழிலும் இது காணப்படுகின்றது. சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு புரிவதற்காக எழுதப்பட்டிருந்தால் அதனை சிங்களத்தில் இவ்வாறு எழுதிவிட்டு தமிழில் கந்தரோடை என எழுதியிருக்கலாம். ஆனால் தமிழிலும் இவ்வாறு எழுதியுள்ளது அனைவரையும் சிந்திக்க வைக்கும் செயலாக அமைந்துள்ளது.  இதுதவிர சுன்னாகம் என்ற தமிழ்ப் பெயரை தொல்பொருள் திணைக்களமானது சிங்கள மயமாக்கி ஹுனுகம என்ற பெயரைக் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக