சனி, 24 ஜூலை, 2010

எதிரணியின் யோசனைகளை மஹிந்த ஏற்கின்றார்..!

அதிகரித்து வரும் நெருக்கடிகளை சமாளிக்க எதிரணியினை சர்வதேசத்திற்கு முன் நிறுத்தி மஹிந்த காய்களை நகர்த்த ஆரம்பித்துக்கொண்டிருக்கின்றார். இது குறித்த பல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. மஹிந்த பல யோசனைகளை ஏற்றுக்கொண்டுள்ளாராம்.
எதிரணியினை உடையாமல் பார்ப்பதற்கும் ரணில் தன் பதவியினை காப்பாற்றுவதற்குமே மஹிந்தவுடனான இந்த நெருக்கம் என்று கூறுகின்றது ஜே.வி.பி.


அரசியல் யாப்பின் 17ஆவது திருத்தத்தை அமுல் செய்வது தொடர்பாக எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தூதுக்குழு ஒன்று நேற்று வெளிவிவகார அமைச்சர் பேரா சிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தியுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.


17வது திருத்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்த யோசனைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு வருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பை அடுத்தே ஐக்கிய தேசிய கட்சி தூதுக்குழுவினர் அமைச்சர் பீரிஸை சந்தித்தனர்.


ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருந்த யோசனைகளில் சிலவற்றை ஆராய்வதற்கு அரசாங்கம் காலஅவகாசம் கோரியிருந்ததால் அவை பற்றி பேசவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று திரு. மைக்கேல் பெரேரா மேலும் தெரிவித்தார்.


17வது திருத்தித்திற்கான அரசியல்யாப்பு மாற்றங்கள் தொடர்பான யோசனைகள் அமைச்சர் டியு குணசேகர தலைமையிலான குழுவொன்று பரிசீலனை செய்து வருகிறது. நாட்டின் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசியல்யாப்பின் 17வது திருத்தத்தை அமுல் செய்வது அவசியமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக