வெள்ளி, 4 ஜூன், 2010

துரோகிகளை உருவாக்காதீர்கள்!

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்பு பலரும் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
எந்த ஒரு ஆதரமும் இல்லாமல் எடுத்தவனையெல்லாம் துரோகி,இலங்கை அரசுடன் சேர்ந்தியங்குகிறார்கள்,விலை போய்விட்டார்கள் என்ற ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு தேச விடுதலையை நேசிக்கும் மக்களை குழப்புவதையே சில தமிழ் இணையங்கள் தற்போது வேலையாக வைத்துள்ளது.






பேசி தீர்க்கவேண்டிய விடையங்களை இணையத்தில் எழுதி உங்கள் முகத்தில் நீங்களே காறித்துப்புவதாகவே இது உள்ளது.
தலைமையின் வெளிப்பாடு இல்லாத இந்த காலப்பொழுதில் மக்களை தேசிய உணர்வுள்ளவர்களே வழிநடத்தி ஒரு குடையின் கீழ் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.போர் குற்றங்களை உலக அளவில் நிருபிப்பதற்கு போராட வேண்டும்.
ஆனால் நாம் செய்வது தான் என்ன??
மக்களை ஒருகுடையின் கீழ் கொண்டுவர வேண்டியவர்களே மக்களை வேறு வேறு அணியில் பிரிப்பது போலான செயல்களில் ஈடுபட்டுவருவது தேசியத்திற்காக பல ஆண்டுகள் பாடுபடும் என்னைப்போல் உள்ளவர்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தியுள்ளது.
நாம் தற்போது உள்ள நிலமையை எண்ணி எமக்கு தேவையான பலத்தை திரட்டவேண்டிய நிலையில் இருக்கும் நாம் அவ்வாறா செய்கிறோம்?இல்லையே இன்னும் பல எதிரிகளை நாங்களே தற்போது உருவாக்கி வருகிறோம்.
உதாரணத்திற்கு இணையங்களை எடுத்துக்கொள்ளலாம்.
குழப்பமடைந்து இருக்கும் மக்களை ஒன்று படுத்துவதற்கு தற்போது எமக்கு உள்ள கருவி இணையங்களும் என்பது உண்மை.எனவே நாம் அனைத்து இணையங்களுடனும் கதைத்து அனைவரும் ஒரு குடையின் கீழ் நின்று செயற்படும் விதமாக எந்த முயற்சியையும் எடுக்காமல் அவன் துரோகி இவன் துரோகி என்று மட்டும் ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுவதால் எமக்கு அது பயன் படும் என்று கருதினால் அது எமது முட்டாள்தனமே.
இவ்வாறு நாம் செய்வதால் எதிரிகளை நாமே உருவாக்குகிறோம்,இணையங்களை நாமே எமது தேசியத்திற்கு எதிராக எழுதும் படி தூண்டுகிறோம் என்பதே உண்மையும் கூட.


பல இணையங்களுக்குள் தற்போது நடந்துவரும் பணிப்போர் தொடர்பாக எந்த வித தெளிவும் இல்லை,யார் பக்கம் நிற்பது யார் சொல்வது சரி என்று கூட தெரியாமல் தத்தளித்துக்கொண்டுள்ளனர்.இதனாலேயே தமிழ் இணையங்களில் மாறுபட்ட செய்திகளை,கட்டுரைகளை படிக்கக்கூடியதாக உள்ளது. இதனால் மக்கள் குழப்பமடைவதோடு யாரையும் நம்பமுடியாத நிலையில் உள்ளனர்.எனவே நான் மேல் குறிப்பிட்டதைப்போல் அனைத்து இணையங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து செயற்படுவதே ஆரோக்கியமானதாக இருக்கமுடியும்.


சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஊடகம் ஜரோப்பாவில் தேசியத்திற்கு எதிரான பல செய்திகளை வெளியிட்டு வந்தது.அதை முடக்குவதற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று தலைவரிடம் அனுமதி கேட்கப்பட்ட போது அவர் சொன்ன பதில் அந்த ஊடகத்தை எமக்கு ஆதரவாக மாற்றுவதற்கு முயற்சி எடுங்கள்,ஆனால் தடை செய்ய முயற்சி எடுக்க வேண்டாம் என்று தலைவர் தெரிவித்திருந்தார்.


தற்போது அந்த ஊடகம் தமிழர் சார் ஊடகமாகவே மாறியுள்ளது.


எனவே அன்பால் எதையும் வெல்ல முடியும்


அன்பான தமிழ் தேசிய ஊடகவியலாளர்களே தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டுவரும் இணையங்களுடன் அல்லது நடுநிலமையாக செயற்பட்டு வரும் ஊடகங்களுடன் கதைத்து ஒரு அணியில் இணைந்து செயற்படுங்கள் அதை விட்டுவிட்டு நான் பெரிது நீ பெரிதென்று அறிக்கைகளை விட்டு தேசியத்துக்கு தீங்கிளைக்காதீர்கள் நன்றி.
தேசப்பிரியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக